Sunday, April 30, 2017

रामचरित मानस ---ராமசரித மானஸ்--அயோத்யா காண்டம் --25

रामचरित मानस ---ராமசரித மானஸ்--அயோத்யா காண்டம் --25

                    சீதையின் மன நிலை அறிந்து,
 கிருபையுள்ள ராமர்    சீதையிடம் ,
"நீ கவலைப் படாதே. என்னுடன் காட்டிற்கு வந்து விடு. இப்பொழுது வேதனைப்படும் நேரம் அல்ல. 
 உடனே   கானகம் செல்ல   ஏற்பாடு செய். புறப்படு" என்றார்.

ஸ்ரீ ராமர் சீதைக்கு அன்புடன் அனைத்தையும்
 எடுத்துச் சொல்லி விளக்கினார்.
  பிறகு அம்மாவை வணங்கி
ஆசிகள் பெற்றார்.
 அன்னை  ராமரிடம் சீக்கிரம் வந்து
மக்களின் துன்பத்தையும் ,
அன்னைகளின்  துன்பத்தையும்
போக்கவேண்டும்  என்றார்.
  அன்னை இறைவனிடம்  வேண்டினாள்--
பகவானே!   என் இந்த நிலை மாறுமா?
என்  கண்களால்  மீண்டும்
 இந்த  அழகான ஜோடியைப் பார்ப்பேனா ?
  மகனே! உன்னை நான்  மீண்டும் பார்க்கும்
 நல்ல நேரம்  எப்பொழுது   வரும் .
நான்  உயிருடன் உன்னுடைய   நிலவு
போன்ற  முகத்தை  மறுபடியும் பார்ப்பேனா ?
என்று புலம்பினாள்.
மகனே!  செல்லமே !ரகுபதியே !ரகுவரனே!   என்று அழைத்து
அரவணைத்து    மகிழ்ச்சியுடன்   பார்ப்பேனா ?
       அம்மா அன்பின் மிகுதியால் மிகவும் கவலைப் படுகிறாள்.   அவளால் பேசவும் முடியவில்லை  என்றறிந்து   ராமர்
அம்மாவிற்கு மிகவும்  ஆறுதல் சொன்னார்.
 
  அப்பொழுது  சீதை  ,
மாமியாரின்  கால்களில் விழுந்து
 "அம்மா! நான் துர்பாக்கியசாலி.
 உங்களுக்கு பணிவிடை
செய்யும்    காலத்தில் என்னை
  இறைவன்  வனவாசம் செய்ய அனுப்பிவிட்டார்.
 என்னுடைய மன விருப்பம்  நிறைவேறவில்லை.
 அம்மா! வருத்தப் படாதீர்கள்.
 கர்மவினை மிகவும் கடினமானது .
  என்னுடைய   தவறு இதில் எதுவும்லை.
 சீதையின்  சொற்களால் கௌசல்யா தேவிக்கு
 மிகவும் கவலை.
  சீதையை  அணைத்து    தைரியமளித்து ,
 கங்கையும் யமுனையும்  வற்றாமல்  ஓடும் வரை ,
நீ சுமங்கலி யாகவே இருப்பாய்  என  ஆசிகள் வணங்கினார்.


No comments: