Tuesday, May 2, 2017

அயோத்யா காண்டம் --ராமசரிதமானஸ் -இருபத்தாறு

அயோத்யா காண்டம் --ராமசரிதமானஸ் -இருபத்தாறு

        மாமியார் கௌசல்யா   சீதைக்கு
  பலவகைகளில் ஆசியும்    உபதேசங்களையும்  வழங்கினார்.
  சீதை மிகவும் அன்புடன்  அடிக்கடி தலை  வணங்கி விட்டு
சென்றாள்.

        இலக்குமணன் செய்தியைக் கேட்டதுமே ,
மிகவும் கவலைப் பட்டு , வருத்தமான முகத்துடன் ஓடினான்.
அவர்   உடல்  நடுங்கியது. உடல் சிலிர்த்தது. கண்களில் கண்ணீர் பெருகியது.
அன்பினால்   ஓடிவந்து தைரியம் இழந்து    ஸ்ரீ ராமரின் கால்களைப் பிடித்துக்கொண்டான்.

     அவனால்     எதுவும் பேசமுடியவில்லை.
 தண்ணீரில் இருந்து எடுத்த     மீன்  போன்று துடித்தார்.

இறைவனே என்ன  நடக்கப்போகிறதோ ?
நம்முடைய  எல்லா புண்ணியமும்
 சுகமும் போய்விட்டதா ?

ஸ்ரீ   ரகுநாதர்   என்ன  சொல்வார்? உடன்  அழைத்துச் செல்வாரா  வீட்டில் விட்டுவிட்டுச் செல்வாரா ?
 இலக்குமணன்   கை கூப்பி  வீட்டையும் எல்லா உறவையும்   முறித்துக் கொண்டு நிற்பதை ராமர் பார்த்தார்.
நீதியில் நிபுணரும் ஒழுக்கம் , அன்பு ,  எளிமை , சுகத்தின்
சாகரமான  ஸ்ரீ ராமர் சொன்னார் ---தாய்,  தந்தை  ,குரு , சுவாமியின்     உபதேசத்தை   சிரமேற்கொண்டு பின்பற்றுபவர்கள்   பிறவிப்பயனைப்  பெறுவார்கள். இல்லையென்றால்   உலகில் பிறவிஎடுப்பது  வீணானதே.
பலனின்  ஆனந்தத்தை மனதில்  வைத்து அன்பின் வசத்தால் தைரியத்தை   இழந்து விடாதே.

              நீ இவ்வாறு அறிந்து தெளிந்து  நான் சொல்வதைக் கேள்.  தாய் -தந்தைக்கு பணிவிடை செய். பரதனும் சத்துருக்கனனும் வீட்டில்  இல்லை. மகாராஜா வயதானவர்.
அவர் எனக்காக  மிகவும் வருந்திக்கொண்டிருக்கிறார்.
 இந்நிலையில் நான்  உன்னை அழைத்துக்கொண்டு
காட்டிற்குச்  சென்றால்  அயோத்தியா அனைத்து விதங்களிலும்   அனாதையாகி   விடும் .
குரு,   தந்தை , அம்மா ,குடிமக்கள் .குடும்பம் அனைவருமே
சகிக்க முடியா துன்பத்தை  அடைவார்கள்.
ஆகையால்  நீ இங்கேயே  இரு . எல்லோரையும் மகிழ்வித்து
திருப்தி அடையச்  செய்.  அப்படி செய்யவில்லை என்றால்
பெரிய தோஷம் ஏற்படும்.
அன்புக் குடிமக்கள் , வருத்தப் படும்    நாட்டில்
அரசன் கட்டாயம் நரகத்தை அடைவான்.
இதை   எண்ணி நீ  வீட்டில்  இரு.  
இதைக்கேட்டதும்  லக்ஷ்மணனுக்கு  மிகவும் கவலை ஏற்பட்டது.   இந்த குளிர்ந்த அன்பான சொற்கள் கேட்டு அவர் முகம் வாடியது.
 தாமரை பனியால் வாடுவதுபோல் வாடினான்.


No comments: