Thursday, May 4, 2017

ராமசரித மானஸ்--அயோத்யகாண்டம் --பக்கம் இருபத்தொன்பது

             ராமசரித மானஸ்--அயோத்யகாண்டம் --
                                பக்கம் இருபத்தொன்பது 
*********************************************
ஸ்ரீ ராமரின்  பக்தனைப் பெற்ற  தாயார் தான் புண்ணியவதி.
சத்புத்திரனைப்    பெற்றவள். அப்படி இல்லையென்றால்
ராமனைப் பிடிக்காத   மகனை தனக்கு  நல்லது என்று
நினைப்பதைவிட  மலடி யாக  இருப்பதே  நல்லது.
மிருகங்கள் குட்டி போடுவது  போல்  குழந்தையைப்
பெற்றெடுப்பது வீண்.

உன்னுடைய புண்ணியத்தால்  தான்  ராமர் கானகம் செல்கிறார். வேறு எந்த காரணுமும்    இல்லை.
சீதாராமரின் பாதாரவிந்தங்களில்  இயற்கையான அன்பு இருப்பதே எல்லா  புண்ணியங்களையும் விட பெரும்
புண்ணிய பலனாக  கிடைத்திருப்பதாகும்.
அன்பு  ,கோபம், பொறாமை, ஆணவம் ,  மோஹம்,
ஆகியவற்றிற்கு கனவிலும் வயப்படாதே.
எல்லாவித மான விகாரங்களை விட்டுவிட்டு ,
மனம் ,வாக்கு, செயலால் ஸ்ரீ ராமனுக்கு சேவை செய்.
உனக்கு வனத்தில்    எல்லாவித  சுகமும் கிடைக்கும்.
நான் உனக்குக் கூறும்  அறிவுரை  உன்னால்
ராமனும் சீதையும்  தாய்,தந்தை,அன்பான குடும்பம் ,
நகரம் போன்ற  நினைவுகளையும்  மறந்து  விட  வேண்டும்.
உன்னால் அந்த  இருவருக்குமே சுகமே கிடைக்கும் செயல்கள்  தான் செய்யப்படவேண்டும்.
சுமித்திரை இவ்வாறு அறிவுரைகள் கூறி லக்ஷ்மணனை
காட்டிற்குச் செல்ல  அனுமதி அளித்தாள்.
சீதை மற்றும் ராமரின் மேல்  உன்னுடைய
புனித அன்பு   ஆழ்ந்த  அன்பு தினந்தோறும் புதியதாகவே இருக்கட்டும் என்று ஆசிகள் வழங்கியதாக  துளசிதாசர் சொல்கிறார்.
அம்மாவின் அறிவுரையும் ஆசியும் பெற்று ,
வேறு எந்தவிதமானஅடிகளும் வரக்கூடாது என்று
எண்ணிய  இலக்குமணன்  வலையில் சிக்கிய மான்,
வலையை அறுத்தெறிந்தது ஓடுவதுபோல் ஓடினான். 

No comments: