Wednesday, May 3, 2017

அயோத்யகாண்டம் ராமசரிதமானஸ் --பக்கம் இருபத்தேழு

அயோத்யகாண்டம்    ராமசரிதமானஸ் --பக்கம் இருபத்தேழு

       அன்பின் வசத்தால்   லக்ஷ்மணனால்
  எதுவும்  பேச முடியவில்லை.அவன்  மிகவும்  கவலை  அடைந்து   ராமரின் காலில்  விழுந்து  சொன்னான் ---

  நான்  உங்களுக்கு அடிமை. நீங்கள்  எனக்கு      சுவாமி.
நீங்கள் என்னை இங்கேயே விட்டுவிட்டு சென்றால்    நான்  என்ன  செய்ய  முடியும் ?

எனக்கு நல்ல உபதேசம் செய்துள்ளீர்கள் .  ஆனால் நான் கோழை . சாஸ்திரங்கள், நீதி இவை எல்லாம் மேன்மை பொருந்திய வீர தீரர்களுக்கே  உரிமையானவை. தர்மத்தின்  அச்சாணியாக  உள்ளவர்களுக்கே   உரியவை.
     நான் பிரபுவின்   அன்பில்    வளர்ந்த  சிறிய குழந்தை  நான்.

எங்காவது  அன்னப்பறவையால்,  மந்திரமலையையும் ,சுமேரு மலையையும்    தூக்க முடியுமா ?
எனக்கு உங்களைத்தவிர  குரு,    அன்னை, தந்தை, யாரையும்   தெரியாது.  எனக்கு எல்லாமே தாங்கள்  தான்.
அன்பின் சம்பந்தம்   ,    அன்பு , நம்பிக்கை   இவைகளைப் பற்றி   வேதங்களும் புகழ்ந்திருக்கின்றன.
புகழ்,  ஐஸ்வர்யங்கள், நற்கதி போன்றவை
 விரும்புவோர்களுக்குத்    தான்     அறம்   மற்றும்  நீதியின்
உபதேசங்கள்  வேண்டும்.     மனம், சொல், செயலால்
விரும்பும் ஒருவனை விட்டுவிடுவது  சரியா ?

    

No comments: