அயோத்யா காண்டம் --ராமசரிதமானஸ் --பக்கம் பதினான்கு.
அரசனின் உதடுகள் காய்ந்து கொண்டிருக்கின்றன. அவர் உடல் முழுவதும் எரிச்சலாக இருந்தது. மணி இல்லாமல் பாம்பு வருந்துவதுபோல் இருந்தார். அருகிலேயே கோபத்தின் அவதாரமாக கைகேயியைப் பார்த்தார். அவள் நிற்பது நேரடியாக மரணமே அருகில் உட்கார்ந்து இருப்பதுபோல் இருந்தாள். தசரதரின் மரண நேரம் நெருங்குவதுபோல் இருந்தது.
ராமரின் குணம் மென்மையாகவும் கருணை மயமாக இருந்தது. அவர் தன் வாழ்க்கையில் முதல் முறையாக வருத்தமான காட்சி இது. இதற்கு முன் அவருக்கு துன்பம் என்பதே தெரியாது. இருந்தபோதிலும் மிகவும் தைரியத்தை வரவழைத்து மிக இனிய குரலில் கைகேயியிடம் கேட்டார்-"அம்மா! எனக்கு அப்பாவின் மனத்துன்பத் திற்கான காரணத்தைச் சொல்லவும். நான் அவர் துன்பத்தைப் போக்க முயல்கிறேன்.
இதற்கெல்லாம் காரணம் உன் அப்பாவிற்கு உன்மீதுள்ள அதிக அன்பேயாகும்.
அவர் எனக்கு இரண்டு வரங்கள் கொடுப்பதாகக் வாக்களித்தார். எனக்குப்பிடித்த வரங்களைக் கேட்டேன்.
அதைக்கேட்டதும்
அரசரின் மனதில் கவலை ஏற்பட்டுவிட்டது. காரணம் அவர் உன்னைப் பிரிய விரும்பவில்லை. அவருக்கு இப்பொழுது
மகனின் அன்புக்கும் எனக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றவும் முடியாமல் தர்மசங்கடத்தில் உள்ளார்.
உன்னால் முடிந்தால் அரசகட்டளையை ஏற்று அவரின் மனத்
துன்பத்தை போக்கிவிடு. கைகேயி கசப்பான வார்த்தைகளைப் பேசினாள். நாக்கு வில் போன்றும் ,சொற்கள் அம்புகளாகவும் குறி அரசர் மீதும் இருந்தது. கடுமை சிறந்த வீரனாகி வில்வித்தை கற்றுக்கொண்டிருப்பதுபோல் இருந்தது. ராமரிடம் அனைத்தையும் கூறி கொடுமையே உரு எடுத்ததுபோல்
அமர்ந்திருந்தாள்.

No comments:
Post a Comment