रामचरित मानस --ராமசரித மானஸ்-- அயோத்யா காண்டம் --பக்கம் இருபத்திநான்கு.
*************************************
அன்பான கணவரின் மென்மையான அழகான சொற்களைக் கேட்டு சீதையின் அழகான கண்களில்
*************************************
அன்பான கணவரின் மென்மையான அழகான சொற்களைக் கேட்டு சீதையின் அழகான கண்களில்
இருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது. ஸ்ரீ ராமரின் இந்த குளிர்ச்சியான உபதேசங்கள் எப்படி எரிச்சலை உண்டாக்குவதாக இருந்தது?
ஜானகிக்கு எதுவும் பதில் சொல்ல முடியவில்லை.
என்னுடைய பவித்திரமான, அன்புக் கணவர் ,என்னை விட்டுவிட்டு செல்ல விரும்புகிறாரே என்பதை
நினைத்து கவலைப் பட்டார்.
கண்ணீரை மிகவும் கஷ்டப்பட்டு நிறுத்தி ,
பூமியின் புத்திரியான சீதை தன்னை தைரியப்
படுத்திக் கொண்டு , மாமியாரின் பாதங்களில்
விழுந்து கைகூப்பி வேண்டினாள்:--
தேவி! என்னுடைய இந்த பயங்கர அதிகப்பிரசங்கித்தனமான

வேண்டுகோளைக் கேட்டு
மன்னித்து விடுங்கள் .
என் பிராண பதி எனக்கு மிகவும் நன்மை தரும்
அறிவுரை கூறியுள்ளார்.
ஆனால் கணவனின் பிரிவைப் போல்
உலகில் மிகப் பெரிய துயரம் வேறெதுவும்
இல்லை என்பதை தெரிந்துகொண்டேன்.
மன்னித்து விடுங்கள் .
என் பிராண பதி எனக்கு மிகவும் நன்மை தரும்
அறிவுரை கூறியுள்ளார்.
ஆனால் கணவனின் பிரிவைப் போல்
உலகில் மிகப் பெரிய துயரம் வேறெதுவும்
இல்லை என்பதை தெரிந்துகொண்டேன்.
என் பிராண நாதா!இரக்கத்தின் வாசமே!அழகே!
சுகம் அளிப்பவனே! அன்பரே!
ரகுகுலம் என்ற அல்லிமலரை
மலரச் செய்யும் நிலவே!
நீங்கள் இல்லாமல் எனக்கு சுவர்க்கமும் நரகமே.
அன்னை, தந்தை , சகோதரி , அன்பு சகோதரன் , குடும்பம் ,
நண்பர்கள் , மாமனார் , மாமியார், உற்றார்-உறவினர்கள்,
உதவியாளர்கள், அழகானவர்கள், நல்லொழுக்கமும் அன்பும் உள்ள சந்தானங்கள் , எத்தனை பேர் இருந்தாலும்
கணவன் அருகில் இல்லை என்றால் எல்லோருமே
சூரியனைவிட அதிகமாக சுட்டு எரிப்பவர்களே.
உடல், செல்வம், வீடு , பூமி, நகரம் , ராஜ்ஜியம் எல்லாமே
கணவன் இன்றி ஒரு பெண்ணுக்கு சோகத்தின் கூட்டமே.
போகம் நோயிக்கு சமம்.
நகை வீண் சுமை,
உலகமே நகரத்தின் துன்பம் போன்றது.
பிராண நாதா! நீங்களின்றி உலகில் எனக்கு எங்குமே எதுவுமே சுகம் தரக்கூடியது.
உயிரற்ற உடல், நீரில்லா ஆறு,எப்படியோ அப்படியே
கணவனில்லா மனைவி.
உங்களுடன் இருந்து உங்கள் முழு நிலவு போன்ற
முகத்தைப் பார்ப்பதால் எனக்கு எல்லா சுகங்களும்
கிடைத்துவிடும்.
நாதா! உங்களுடன் இருக்கும்போது பறவைகள் மிருகங்கள் என்னுடைய குடும்பங்கள் ஆகிவிடும். வனம் நகரமாகிவிடும்.
மரங்களின் பட்டைகள் தூய ஆடைகள் ஆகிவிடும்.
குடிசை சுவர்கத்தின் சுகங்களுக்கு மூலமாகி விடும்.
தாராள இதயமுள்ள வனதேவிகளும்,தேவதைகளும் மாமனார் மாமியார் போன்று என்னை காப்பவர்கள்
ஆகிவிடுவார்கள். தர்ப்பைப் புற்களும் இலை களும்
அழகான படுக்கை விரிப்புகளாகும்.
பிரபுவுடன் இருப்பது காமதேவனின் அழகான உள்ளாடைகளாகிவிடும்.
கிழங்கு ,வேர்,பழங்களே அமிர்தம் போன்ற ஆகாரமாகும் .
காட்டில் உள்ள மலைகள் அயோத்தியாவின் நூற்றுக்கணக்கான அரண்மனைகளாகும்.
ஒவ்வொரு நொடியும் பிரபுவின் சரண கமலங்களைப்
பார்த்து பகலில் சக்வா பறவைகள் போன்று ஆனந்தமடைவேன்.
நீங்கள் வனத்தின் அநேக துன்பங்களைப் பற்றியும்
பயங்கள் பற்றியும் , இன்னல்கள் பற்றியும்
சொல்லியிருக்கிறீர்கள்.
ஆனால் கிருபையின் இருப்பிடமான
உங்களைப் பிரிந்து
இருப்பதை நினைக்கும்போது
அவை எல்லாம் ஒன்றுமே இல்லை.
இதை மனதில் அறிந்து அன்பின் மணியான நீங்கள்
என்னை உடன் அழைத்துச் செல்லுங்கள்.
இங்கே விட்டுவிட்டு செல்லாதீர்கள்.
நான் உங்களிடம் அதிகமாக எதுவும் வேண்டப்போவதில்லை.
நீங்கள் கருணாமூர்த்தி.
அனைவரைப் பற்றியும் அறிவீர்கள்.
ஏழை பங்காளர் நீங்கள். அனைவருக்கும் சுகம் அளிப்பவர்.
ஒழுக்கம் மற்றும் அன்பின் களஞ்சியம்.
நீங்கள் பதிநான்கு ஆண்டுகள் அயோத்தியாவில் விட்டுவிட்டு சென்றால் என் உயிர் இருக்காது என்பதை
அறிந்துகொள்ளுங்கள்.
ஒவ்வொரு நொடியும் உங்கள் பாத கமலன்களைப்
பார்த்தாலே எனக்கு களைப்பு போய்விடும்.
அன்பானவரே! நான் தங்களுக்கு அனைத்து விதத்திலும்
பணிவிடை செய்வேன்.
வழியில் நடை
பயணத்தால் உண்டாகும் அனைத்து
சிரமங்களையும் போக்கிவிடுவேன்.
உங்கள் பாதங்களைக் கழுவி ,
மரங்களின் நிழலில் உட்கார்ந்து
மனதில் மகிழ்ந்து விசிறிவிடுவேன்.
வியர்வைத் துளிகளுடன் உங்கள் கருமேனி கண்டு
பிராண நாதரை தர்சித்துக் கொண்டே
இருக்கும் போது வருத்தப்பட நேரமே இருக்காது.
சமதள பூமியில் புல் மற்றும் மரங்களின் இலைகளைப் பரப்பி இரவு முழுவதும் உங்கள் கால்களை
பிடித்துவிட்டுக் கொண்டே இருப்பேன்.
உங்களின் மென்மையான உருவத்தைப்
பார்த்துக்கொண்டே இருந்தால்
எனக்கு வெப்பக் காற்றும் கூட வராது.
நீங்கள் உடன் இருக்கும் போது என்னை நிமிர்ந்து பார்க்கும் துணிச்சல் உள்ளவர்கள் யார் இருக்கிறார்கள்.
சிங்கத்தின் பெண் சிங்கத்தை முயலும் நரியும் பார்க்க முடியுமா ?
நான் சுகுமாரி என்றால் எனது
நாதர் காட்டிற்குச் செல்ல தகுதியானவரா ?
உங்களுக்கு தவம் உசிதமென்றால்
எனக்கு மட்டும் உலக மகிழ்ச்சி தேவையா?
இப்படிப்பட்ட கடுமையான சொற்களைக் கேட்டும்
என் இதயம் வெடிக்கவில்லை என்றால்
இந்த அபலை உங்கள் பிரிவின் பயங்கர
துன்பத்தை சகிக்குமா?
இவ்வாறு சொல்லிய சீதை மிகவும் வருத்தப்பட்டாள்.
சீதையால் பிரிவு என்ற சொல்லையே தாங்கிக்கொள்ள முடியவில்லை.
அவளின் இந்த நிலை கண்டு ,
பிடிவாதமாக சீதையை விட்டுச் சென்றால் ,
உயிரோடு இருக்கமாட்டாள் என்பதை
ராமர் புரிந்து கொண்டார்.

No comments:
Post a Comment