ராமசரிதமானஸ் --அயோத்யகாண்டம் --பன்னிரண்டு
தசரதர் மிகவும் கவலை அடைந்தார். அவர் உடல் முழுவதும் தளர்ந்து விட்டது. அவரின் நிலை யானை கற்பக விருக்ஷத்தை பிடுங்கி எரிந்ததுபோல் ஆயிற்று.
தொண்டை வறண்டு விட்டது. பேச முடியவில்லை. தண்ணீரின்றி பஹினா என்ற ஒருவகை மீன் துடிப்பது போல்
துடித்தார்.
கைகேயி மீண்டும் கசப்பான கடிமையான
சொல் அம்புகளை வீசினாள். அவை வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சியதுபோல் இருந்தன. சொன்னாள்--"கேள்.கேள், என்று ஏன் ? சொன்னீர்கள். இப்படித்தான் செய்யவேண்டும் என்றால் நீங்கள் என்னிடம் வரம் கேள் என்று ஏன் சொல்லவேண்டும்?
அரசே! அட்டகாசமா சிரிப்பதும் ,திட்டுவதும் ஒன்றாகச் செய்ய முடியுமா ?
வள்ளல் என்று சொல்ல வைப்பதும் ,கஞ்சத்தனம்
செய்வதும் முடியுமா ? போரில் வீரமும் காட்டவேண்டும்
அடியும் விழக்கூடாது இரண்டும் முடியுமா ?
ஒன்றால் நீங்கள் செய்த வாக்கை மீறுங்கள். அல்லது தைரியமாக இருங்கள். இவ்வாறு உதவியில்லா பெண்கள் போல் அழாதீர்கள்.
உண்மையை விரதமாகக் கொண்டவர்களுக்கு
உடல், உறவு, மனைவி, மகன்கள், செல்வம், பூமி எல்லாமே தூசி போன்றது என்று சொல்லப் பட்டிருக்கிறது.
கைகேயியின் இதயத்தைத் துளைக்கும் பேச்சால்
அரசர் சொன்னார் -"நீ எதை விரும்பினாலும் ,
உன்னுடைய தவறு எதுவும் இல்லை. எனக்கு எமன் பிசாசாகிப் பிடித்துக்கொண்டான். அதனால் தான் நீ இவ்வாறெல்லாம்
பேசுகிறாய்.
பரதன் தப்பித்தவறி கூட அரச பதவி விரும்ப மாட்டான்.
மிகத் திறமையாக உன்னுடைய நாக்கில் தீய அறிவு குடிபெயர்ந்து விட்டது. இதெல்லாம் என் பாவத்தின் பலன். அதனால் கெட்ட நேரத்தில் இறைவன் எதிராக செயல் படுகிறான்.
நீ பாழ் படுத்திய அயோத்தியாவை மீண்டும் ராமர் அழகு படுத்துவார். சர்வ நற்குணங்களும் கொண்ட ஸ்ரீ ராமர் ஆட்சி செய்வார். எல்லா சகோதரர்களும் அவருக்கு தொண்டாற்றுவார்கள். மூவுலகங்களிலும் ராமர் புகழ் பரவும்.
ஆனால் உன் மேல் ஏற்பட்ட களங்கம் என்னுடைய வருத்தம் இறந்தாலும் போகாது. நிலைத்துவிடும்.
இப்பொழுது நீ விரும்பியதைச் செய் .
என் முன்னால் நிற்காதே.
உன் முகத்தைக் காட்டாதே.
நான் கைகூப்பி வேண்டுகிறேன் நான் உயிரோடு இருக்கும்
வரை என்னிடம் பேசாதே. "
அடி துரதிர்ஷ்டசாலியே! நீ இறுதிவரை வருத்தப்படுவாய் .
நீ நரம்புக்காக பசுவை வதம் செய்கிறாய். நீ சர்வநாசம் செய்து கொண்டிருக்கிறாய். என்று சொல்லிக்கொண்டே
பூமியில் விழுந்துவிட்டார்.
அவள் மௌனமாக சுடுட்டில் பிரேத மந்திரம் சொல்வதுபோல் அமர்ந்திருந்தாள்.
தசரதர் இறக்கை இழந்த பறவைபோல் துடித்துக் கொண்டிருந்தார். ராமா!ராமா! என்றே புலம்பிக் கொண்டிருந்தார். அவர் விடியவே கூடாது என்று என்று வேண்டினார். ராமரிடம் யாரும் இந்த விஷயத்தை சொல்லக்கூடாது என்றே நினைத்தார்.
"ரகு குலத்தின் குருவே! சூரிய பகவானே! நீங்கள் உதிக்கவேண்டாம். அயோத்தியாவைப் பார்த்தால் உங்களுக்கு மனவேதனை ஏற்படும். அரசரின் அன்பு எல்லையையும்
கைகேயியின் கொடூரத்தின் எல்லையையும் படைத்து விட்டார்.

No comments:
Post a Comment