Sunday, April 9, 2017

ராமசரித மானஸ்---அயோத்யா காண்டம பக்கம் பதிமூன்று

ராமசரித மானஸ்---அயோத்யா காண்டம  பக்கம் பதிமூன்று

     
 அழுது புலம்பிக்கொண்டே இருக்க  விடிந்துவிட்டது.

அரண்மனை வாயிலில்  
வீணை ,புல்லாங்குழல் , சங்கு போன்ற இசைக்கருவிகள்  இசைக்கத் துவங்கின.  பாட் இன பாடகர்களும் மற்ற பாடகர்களும் பாடிக்கொண்டிருந்தனர். அரசவையில் இந்த மங்கள நிகழ்ச்சிகள்    அரசருக்கு மகிழ்வைத் தருபவை.
ராமரைப் பார்க்க  ஆவலுடனும் உற்சாகத்துடனும்
மக்கள் தூங்காமல் இருந்தனர் .

  அரண்மனைவாயிலில்    அமைச்சர்கள் மற்றும் சேவகர்கள்

கூட்டம்    கூடியது.  அனைவருக்கும்   தசரதர் ஏன்  இன்னும்  
எழுந்திருக்கவில்லை  . சூரியோதயம் ஆகிவிட்டது. அப்படி
முக்கிய காரணம் எதுவாக இருக்கும்   என்று பேச  ஆரம்பித்தனர்.
தினந்தோறும்    எழுந்துவிடும்  அரசர்  எழுந்து வராமல்
இருப்பது   எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது.

   அரசனை   எழுப்பி அழைத்துவர ஆணையிடப்பட்டது.
சுமந்திரர் அரண்மனைக்குள்  சென்றார். அனால் அரண்மனையே பயங்கர துன்ப சூழலில் மூழ்கியிருந்தது.

அச்சூழலைக்  கண்டு  அமைச்சர் பயந்துவிட்டார்.

அங்கு துன்பம்    மற்றும்  ஆபத்தின்   கூடாரம் போடப்பட்டு இருந்தது  போல் காணப்பட்டது. அங்குள்ளவர்கள்  யாரும்
பதில் சொல்லவில்லை. அவர்     கைகேயி  இருக்கும் இடத்திற்குச் சென்றார். அரசரை வணங்கிஅமர்ந்தார்.
அரசரின் நிலைகண்டு   வருந்தினார்.
அரசர் கவலையே    உருவெடுத்ததுபோல்  இருந்தார்.
முகம் வெளிறிவிட்டது. தாமரை வாடியதுபோல் வேதனையால்   வாடி  இருந்தார். பயத்தின் காரணமாக அரசர்   எதுவும்  பேசவில்லை.  அப்பொழுது தீமையால் நிறைந்த  நலமே இல்லாமல்  கைகேயி  பேசினாள்.
அரசருக்கு  இரவு  முழுவதும் தூக்கம் வரவில்லை.
கடவுளுக்குத்   தான் காரணம்  தெரியும்.
அவர் "ராம்,"ராம்" என்று     புலம்பியே   இரவைக் கழித்தார்.
விடிந்து    விட்டது.  ஆனால் இதன்   ரஹசியத்தை  அரசர் யாரிடமும்    சொல்லவில்லை.
  நீ சீக்கிரம்  ராமனை  அழைத்துவா . பிறகு விவரம் கேட்கவும்.
 மந்திரி   ராணியின் ஏதோ    சூழ்ச்சிதான் இருக்கும் என்று
அனுமானித்துக்    கொண்டே    சென்றார். மந்திரிக்கு அதிக கவலை . அவரால் சரியாக  நடக்க    முடியவில்லை.
ராமரை அழைத்து   அரசர் என்ன சொல்லப் போகிறார்?
அவர் தன்னை திடப்படுத்திக் கொண்டு   வாயிலை அடைந்தார்.   அவரை அனைவரும் மிக வேதனையோடு
வருவதைப்  பார்த்தனர் .

  எல்லோரையும்   சமாதானப்  படுத்திவிட்டு    ராமரின் இருப்பிடம்    சென்றார்.   ராமர் அவரைத் தன தந்தையாகக்
கருதி மரியாதையுடன் வரவேற்றார்.
அமைச்சர்   ராமரிடம்  அரச  கட்டளையைக்    கூறி  அழைத்துச் சென்றார்.  ராமர் செல்லும்   காட்சி    மக்களுக்கு
மிக மன  வேதனை  அளித்தது.
 ரகுவம்ச    திலகமான    அரசர் மிக மோசமான நிலையில்  இருந்தார்.    பெண்  சிங்கத்தைப்  பார்த்து   ஒரு   கிழவேழம்  பயந்து விழுந்து இருப்பதுபோல்   இருந்தார்.



No comments: