Monday, April 24, 2017

ராமசரிதமானஸ் --அயோத்யா காண்டம் --பக்கம் இருபத்திரண்டு.

ராமசரிதமானஸ் --அயோத்யா காண்டம் 
-பக்கம் இருபத்திரண்டு.

 சீதை ராமரின்  வனவாசம்  பற்றி 
 பல விதத்தில்  சிந்தித்தார்.
 எனது பிராணநாதர் காட்டிற்குப்
 போக  விரும்புகிறார்.
 எந்த புண்ணியவான் அவருடன் செல்வார்
 என்று பார்க்கலாம்.
உடலும் உயிரும்   இரண்டும்   உடன் செல்லும்.
அல்லது உயிர் மட்டும் போகுமா ?
கடவுளின் செயல் எதுவும் 
அறிந்து கொள்ள முடியவில்லை.

சீதை  அழகான கால் நகங்களால்
  பூமியை  கீரிக்கொண்டிருந்தாள்.
 இப்படி செய்யும்   போது   கால் கொலுசுகள்    சத்தம் .   அன்பின் வசத்தால் சீதை கொலுசுகளைத் துறந்துவிடக்கூடாது என்று
சலங்கைகள் வேண்டுவது  போல்
  இருப்பதாக கவிஞர் வர்ணிக்கிறார் .

சீதையின் அழகான கண்களில் இருந்து
 கண்ணீர் பெருக்கெடுத்தது.
 அவளின் இந்நிலை   கண்டு  ஸ்ரீ ராமரின் தாயார் கௌசல்யா சொன்னாள்:---
மகனே!  சீதை மிகவும் இளம் பெண்.
 மாமியார் ,மாமனார்
மற்றும் குடும்ப உறவினர்களுக்கு
  மிகவும் அன்பானவள்.
இவருடைய  தந்தை அரசர்களுக்கு அரசர்.
மாமனார் சூரிய  குல  சூரியர்.
கணவர் சூரிய குலம  என்ற   அல்லி  மலரை
மலரச் செய்யும் நிலவு    போன்றவர்.
அழகு   மற்றும் குணக் குன்று.
  குணக்களஞ்சியம்.
நான்   அழகும் , குணமும் ,ஒழுக்கமும் நிறைந்த
அன்பான மருமகளைப் பெற்றுள்ளேன்.
இவளை  கண்ணின் மணியாகக்
 கருதி  நேசித்து  வருகிறேன்.
என்னுயிரையே இவளிடத்தில் வைத்துள்ளேன்.
இவளைக்  கற்பகக்  கொடியைப்  போல்
மிகவும் நேசித்து  அன்பு நீர் பாய்ச்சி வளர்த்திருக்கிறேன்.
இப்பொழுது இந்தக்கொடி பூத்து  குலுங்கும் நேரம்.
கடவுளின் செயல் .
அதனால்   பலன்  என்னவாக  
முடியும் என்று  தெரியவில்லை.
 சீதை  கட்டிலில் ,மடியில் , ஊஞ்சலில் ,   தான் காலடி வைத்துள்ளாள். நான் இவளை சஞ்சீவினி
மூலிகை போல்  மிக எச்சரிக்கையுடன் வளர்த்துவருகிறேன்.
பாதுகாத்துவருகிறேன். நான் விளக்கின் திரி அகற்றும்  வேலை கூட  அவளுக்குத் தருவதில்லை.
அதே சீதை  இன்று  உன்னுடன்  காட்டிற்கு வர விரும்புகிறாள்.
ரகுநாதா!  அவளுக்கு உன் ஆணை என்ன ?நிலவின் கதிரில் ஆனந்தத்தை விரும்புபவள்  ,சக்ரவாகப் பறவைபோல்  சூரியனை எப்படி   பார்க்க முடியும் ?

காட்டில்  யானை, சிங்கம் , புலி என்ற துஷ்ட மிருகங்கள் வாழ்கின்றன. நடமாடுகின்றன.
மகனே! விஷத்தின் தோட்டத்தில் ,
அழகான சஞ்சீவினி மூலிகை அழகு பெற முடியுமா ?
காட்டில் வாழ்வதற்காகவே
வேடர் குலப்  பெண்களையும்
கோல் இனப்     பெண்களையும்
 கடவுள்  படைத்துள்ளார்.

அவர்களுக்கு  கல்லில் உள்ள புழு போன்ற
கடினமான குணம் உண்டு.
 அவர்களுக்கு   காட்டில் துன்பமே    இருக்காது.

அல்லது
தபசிகளின் மனைவிமார்கள்  
வாழத்  தகுதியானவர்கள்.
அவர்கள் தவத்திற்காக எல்லா வற்றையும் தியாகம் செய்தவர்கள்.
மகனே! படத்தில் இருக்கும்  குரங்கைப்
பார்த்தே  பயப்படும்  சீதை யால்
 காட்டில் எப்படி இருக்க முடியும் .
தேவசரோவரில்  தாமரை வனத்தில் வாழ்கின்ற அன்னப்பறவை  காட்டுக்    குளங்களில்
வசிக்கத்தகுதி உண்டா?
அம்மா  சொல்கிறாள் ---
சீதை வீட்டில் இருந்தால்    எனக்கு  உதவியாக  இருப்பாள்.
ஒழுக்கமும்    அமிர்தமும்  கலந்தது   போன்ற
அம்மாவின் சொற்களைக்  கேட்டு
  அறிவுமிகுந்த  அன்பான  சொற்களால்
ராமர்   அன்னை   மகிழும்படியும் 
  
 மன நிறைவு    அடையும்   படியும்  பேசினார்.
பிறகு  காட்டின் குணங்கள் தோஷங்கள்  பற்றி
சீதைக்கு விளக்கினார்.

No comments: