ராமசரித மானஸ் --அயோத்யகாண்டம்--பக்கம் -பதினேழு .
இப்படி ஒரு கெட்ட செய்தி சொல்லியிருக்கிறார். எதைக்காட்டி ,எதைக் காட்ட விரும்புகிறார்.
ஒருவன் சொல்கிறார் ---"அரசன், கெட்ட கைகேயிக்கு சிந்தித்து வரம் தரவில்லை .
அரசன் செய்தது சரி இல்லை."
கைகேயியின் பிடிவாதத்தை ஏற்று அரசர்
தானே எல்லா துன்பங்களுக்கும் ஆளாகிவிட்டார். மனைவியின் கட்டுப்பாட்டில் , அன்பில் ,
அறிவையும் குணத்தையும் இழந்து விட்டார்.
ஆனால் அரச மரியாதை அறிந்தவர்கள் அறம் அறிந்தவர்கள் அரசனைக் குறைகூறவில்லை.
அவர்கள் சிபி, ததிசி , ஹரிஷ்ச்சந்திரன் போன்றோரின்
கதைகளைக் கூறி வம்சத்தின் சிறப்பை வர்ணித்தனர்.
சிலர் பரதனின் கோரிக்கையால் தான் இப்படி என்றனர்.
சிலர் வருத்தத்தால் எதுவும் பேசவில்லை.
சிலர் வியப்பில் காதுகளைப் பொத்திக்கொண்டு
இந்த செய்தி பொய் என்றனர்.
இப்படி சொன்னால் உன் புண்ணியம் போய் பாவம் வந்துவிடும் என்றனர்.
பரதனுக்கு தன் உயிரைவிட ராமர் அன்பானவர்.
நிலவு தன் குளிர்ச்சியை விட்டு விட்டு
நெருப்பைக் கக்கினாலும் கக்கலாம்.
அமிர்தம் விஷம் போல் மாறலாம் .
ஆனால் பரதன் கனவிலும் ஸ்ரீ ராமருக்கு
எதிராக எதுவும் செய்யமாட்டார்.
அங்கு சிலர் கடவுளை குறை கூறிக்கொண்டிருந்தனர். கடவுள் அமிர்தத்தைக் காட்டி ,விஷத்தைக் கொடுத்துவிட்டார். நகரம் முழுவதும் குழப்பம் ஏற்பட்டது.
எல்லோரும் கவலையில் மூழ்கினர்.
மனதில் சகிக்க முடியாத எரிச்சல் ஏற்பட்டது.
ஆனந்தமும் உற்சாகும் போய்விட்டது.
அந்தணர்களின் மனைவிகள், குலப் பெண்களில் வயதானவர்கள் , கைகேயிக்குப்
பிரிய மான வர்கள் ,அவளின் குணத்தைப் புகழ்ந்து கற்பிக்கத் தொடங்கினர்.
ஆனால் கைகேயிக்கு அவர்கள் சொல்வது
அம்புகள் தைப்பது போல் இருந்தன.
அவர்கள் அவளிடம் உனக்கு பரதனைவிட ராமர் மீதுதானே
அன்பு அதிகம். உலகத்திற்கே இதெல்லாம் தெரியும். . ஸ்ரீ ராமர் மீது உனக்கு இயற்கையான அன்பு உண்டு . இப்பொழுது அவர் செய்த குற்றம் என்ன?
எப்பொழுதுமே உனக்கு சக்களத்தி
பொறாமை இருந்ததில்லையே.
நாடு முழுவதுமே உன் அன்பும் நம்பிக்கையும் தெரிந்திருக்கிறது .
கௌசல்யா உனக்கு செய்த கொடுமை என்ன ?
எதனால் நகரம் முழுவதும் இடியை விழ வைத்தாய் ?
சீதை தன் கணவனை விட்டுவிடுவாளா ?
லக்ஷ்மணன் ராமனைப் பிரிந்து
இந்த அரண்மனையில் இருக்க முடியுமா ?
பரதன் ராமரின்றி அயோத்தியா நகரை ஆளமுடியுமா ? ராமரின்றி ராஜா உயிருடன் இருப்பாரா?
சீதை இங்கு இருக்கமாட்டார்.
லக்ஷ்மணன் இருக்கமாட்டான்.
பரதன் ஆட்சி செய்யமாட்டான்.
இதெல்லாம் எண்ணிப்பார்த்து
கோபத்தை விட்டுவிடு.
சோகமும் களங்கமும் உள்ளவளாக ஆகிவிடாதே.
பரதனுக்கு கட்டாயமாக இளவரசர் பதவி கொடுத்து விடு.
ஆனால் ராமரை காட்டிற்கு அனுப்பிவிடாதே. அவருக்கு காட்டில் வேலை என்ன ? ராமருக்கு நாடாளும் ஆசை இல்லை.
ராமர் அறத்தின் அச்சாக இருப்பவர்.
எந்தவித பற்றும் இல்லாதவர்.
ஆகையால் ராமர் பரதனின் ராஜ்ய
பரிபாலனத்திற்கு இடையூறாக இருக்கமாட்டார்.
இதற்கும் உன் மனம் ஒப்பாவிட்டால் ,
ராமனை ராஜமஹலை விட்டு விட்டு
குரு வீட்டில் இருக்கும் வரத்தைக் கேள்.
நாங்கள் சொல்லும்படி நடந்து கொண்டால்
உனக்கு எதுவும் தீங்கு வராது.
நீ கிண்டலாகச் சொல்லி இருந்தால்
வெளிப்படையாக சொல்லிவிடு.
ராமரைப் போன்ற மகன்
கானகம் செல்லும் யோக்யதை உள்ளவனா?
இதைக்கேட்டு மக்கள் என்ன சொல்லுவார்கள்.
சீக்கிரம் எழுந்திரு . இந்த சோகமும் களங்கமும் போக்க ஆவன செய். குலத்தைக் காப்பாற்று.
ராமரை காட்டுக்கு அனுப்பும் பிடிவாதத்தை விட்டு விடு.
நெருப்பு அனைத்தையும் எரித்து விடும்.
சமுத்திரத்தில் அனைத்தும் சேர்ந்து கலந்துவிடும்.
அபலை என்ற பெண் பலத்தில் குறைந்தவள் இல்லை. பெண்ணினம் அனைத்தையும் செய்ய முடியும்.
உலகில் எமன் ஒருவரையும் விட மாட்டான் .
அப்படியே தான் பெண்ணினம் பலம் வாய்ந்தது.
பகவான் எப்படிப்பட்ட நல்ல செய்தி சொல்லி , சமுத்திரத்தில் அனைத்தும் சேர்ந்து கலந்துவிடும்.

No comments:
Post a Comment