ராமசரிதமானஸ்--அயோத்தியாகாண்டம் -
பகுதி பக்கம் ஐந்து.
மந்தரை சொன்னாள்-- எல்லா நம்பிக்கைகளும் ஒரே முறை சொன்னதால் பூர்த்தியாகிவிட்டது. இப்பொழுது வேறு விதமாக சொல்கிறேன். நல்லது சொன்னாலும் உங்களுக்கு வருத்தம் ஏற்படுகிறது. என்னுடைய கபாலம் வெடிக்கவேண்டும்.
பொய்யை உண்மையாகப் பேசுபவர்கள் தான் உங்களுக்கு பிரியமானவர்கள். என்னுடைய பேச்சு உங்களுக்கு கசப்பாக இருக்கிறது. இப்பொழுது நானும் பார்த்ததைச் சொல்லுவேன் .
இல்லை என்றால் பேசாமல் இருப்பேன்.
கடவுள் என்னை அசிங்கமாகப் படைத்து அடிமை ஆக்கிவிட்டார். மற்றவர்களின் மேல் குறை சொல்லி என்ன பயன்?
விதைத்தவன் எதை விதைத்தானோ,
அதையே அறுவடை செய்வேன்.
எதைக்கொடுக்கிறோமோ அதையே பெறுவோம்.
அரசர் யாரானால் என்ன ?நான் வேலைக்காரி. நான் ராணி எப்படி ஆவேன்?
என் குணம் பொறாமைப்படத்தான்.ஏனென்றால் உன்னுடைய தீமை என்னால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
அதனால் நான் பேசினேன். நான் தவறு செய்து விட்டேன். மன்னிக்கவும்.
கைகேயி நிலையற்ற அறிவுடைய பெண்ணானதாலும்,
தேவர்களின் மாயையினாலும் தன் நிலை மறந்து கபடம் நிறைந்த மந்தரையின் அன்பான வார்த்தைகளைக்கேட்டு
கைகேயி மந்தரையை தன் நலம் விரும்பி என நினைத்து
நம்பிவிட்டாள்.
வேட்டைக்காரியின் பாட்டில் மான் மயங்கியதுபோல்
கைகேயி கூனி சொல்வதைக்கேட்டாள்.
கூனி தன் நாடகத்தின் வெற்றி அறிந்து மகிழ்ந்தாள்.
கைகேயி சொன்னாள்---நீ கேட்பதால் உண்மையைச் சொல்கிறேன். முதலிலேயே என்னுடைய பெயரை வீட்டை பிரிப்பவள் /குடும்பத்தை கலைப்பவள் என்று கெடுத்துவிட்டீர்கள். அயோத்தியாவிற்கு கூனி மூலம் ஏழரைச் சனி பிடித்தது போல் சொன்னாள்--
நீ சொன்னது சரி . எனக்கு சீதையும் ராமும் அன்பானவள்.
ராமனுக்கு உன் மேல் உண்மையான அன்பு இருக்கிறது.
ஆனால் இது முன்னாலேயே இருந்தது. அந்த நாட்கள் கழிந்துவிட்டன. காலம் மாறும்போது நண்பனும் விரோதி ஆகிவிடுவான்.
சூரியன் தாமரை குலத்தை வளர்ப்பவன். ஆனால் தண்ணீர் இல்லை என்றால் அதே சூரியன் அதை எரித்து பஸ்மம்
ஆக்கிவிடுவான். சக்களத்தி கௌசல்யா தங்களை வேரோடு சாய்க்க விரும்புகிறாள். ஆகையால் எப்படியாவது அதிலிருந்து தப்புங்கள். பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு உங்கள் சுமங்கலி பலம் புரியவில்லை.
அரசன் உங்கள் வசம் என நினைக்கிறீர்கள்.
ஆனால் அவர் பேச்சுதான் இனிமை. மனம் அழுக்கு.
உங்களுடைய குணம் நேரானது. உங்களுக்கு கபடம் தெரியாது. ராமரின் அன்னை கௌசல்யா மிகவும் கெட்டிக்காரி. அவர்கள் கம்பீரம் . அவர் மன ஆழத்தை யாராலும் அறிய முடியாது. அவள் நல்ல சந்தர்ப்பம் பார்த்து தன் விருப்பத்தை நிறைவேற்றுகிறாள். அரசர் பரதனை பாட்டிவீட்டுக்கு அனுப்பிவிட்டார். இதில் ராமனின் அன்னையின் ஆலோசனை தான்.
கௌசல்யா நினைக்கிறார் எல்லா சக்களத்திகளும் அவருக்கு நல்ல பணிவிடை செய்கிறார்கள். ஆனால் பரதனின் அம்மா கணவனின் அன்பால் பலத்தால் கர்வமாக உள்ளாள்.
கௌசல்யா கண்களின் உறுத்தலாக நீங்கள் இருக்கிறீர்கள்.
ஆனால் அவள் கபட நாடகத்தில் கெட்டிக்காரி. அதனால் அவள் மனதில் உள்ளதை அறிவது கடினம்.
அரசனுக்கு உன்மேல் அதிக அன்பு உள்ளது. சக்களத்தி கௌசல்யாவால் அதைப் பார்த்து சகித்துக்கொள்ள முடியவில்லை. அதனால் அவள் ராஜாவிற்கு வலை விரித்து
தன் வயப்படுத்தி ராமனின் ராஜ்யாபிஷேகத்திற்கு
முகூர்த்தம் குறித்துள்ளார்.
ராமருக்கு ராஜ திலகம் குலாசாரப்படி சரியே.
இது எல்லோருக்குமே பிடிக்கிறது. ஆனால் எனக்கு எதிர்காலத்தை எண்ணி பயமாக இருக்கிறது.
இவ்வாறு சுமித்திரை கைகேயிக்கு தவறாக பாடம் புகட்டினாள். நூற்றுக்கணக்கான சக்களத்திகளின் கதைகளைச் சொன்னாள்.
கூனியின் கெட்டிக்கார வார்த்தைகளால் , கைகேயின் மனதில் நம்பிக்கை வந்துவிட்டது.

No comments:
Post a Comment