ராமசரிதமானஸ் -பாலகாண்டம் --எண்பத்தொன்பது
தசரத குமாரர்களுக்கும் ஜனக குமாரத்திகளும்
தன் தன் ஜோடிப்பொருத்தம் கண்டு மிக மகிழ்ந்தனர்.
கண்டவர்கள் அனைவரும் ஜோடிகளின் அழகைப்
புகழ்ந்தனர் . தேவர்கள் பூ மாரி பொழிந்தனர்.
நான்கு ஜோடிகளும் பிரம்மங்களில் ஐக்கியமாகும் நான்கு நிலைகளில் மிகவும் அழகாக காட்சி அளித்தனர்.
நான்கு நிலைகள்- விழிப்பு,கனவு,தூக்கம் ,ஐக்கியம்
நான்கு பிரம்மங்கள் ----உலகம்,ஒளி,ஞானம், பிரம்மம்
தசரத மகாராஜா நான்கு ஜோடிகளையும் பெற்று
நான்கு பயன்களைப் பெற்றவர் போல்
அதிக ஆனந்தம் அடைந்தனர்.
யாஹம் ,சிராத்தம் ,யோகம் , ஞானம் போன்றவை
செய்தால் கிட்டும்
அறம்,பொருள் ,இன்பம் வீடு ஆகிய
நான்கும் பெற்ற மகிழ்ச்சி. .
ராமருக்கு நடந்தது போன்றே சீர்வரிசைகள் வரதக்ஷிணை
மற்ற மூன்று சகோதரர்களுக்கும் நடந்தது.
அனைத்தும் ஸ்வர்ணமயமாக காட்சி அளித்தது.
அதிக கம்பளங்கள் , ஆடைகள், வித வித மான விசித்திர பட்டாடைகள் அனைத்தும் மிகமிக அதிக பக்ஷ விலை கொண்டவை.
யானைகள், குதிரைகள், தேர்கள் அடிமைகள் நகைகள் ,
அலங்கரிக்கப்பட்ட காமதேனு போன்ற பசுக்கள், போன்ற எண்ணிக்கையிலடங்கா சீதனங்கள், அவைகளை வர்ணிக்க முடியாது, தசரதரும் மகிழ்ச்சியுடன் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டார். அவர் அந்த சீர் வரிசைகளை யாசிப்பவர்களுக்கும் கொடுத்துவிட்டார். மீதமுள்ளவை சீர்வரிசைகளுடன் சேர்ந்துகொண்டன.
அனைத்து மணமகன் வீட்டாருக்கும் மரியாதையை செய்து ஜனகர் மிகவும் மேன்மையானா வார்த்தைகளால் மகிழச் செய்தார்.
பிறகு ஜனகர் தசரதரை வணங்கி , அரசே! உங்களுடன் சம்பந்தம் வைத்ததால் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். நாங்கள் உங்கள் சேவகர்கள் . ஜனகரின் பணிவான அன்பான மரியாதை யான மென்மையான வார்த்தைகள். அவர் தசரதரை அழைத்தமைக்கு மன்னிப்பு கேட்டார்.
மணமகன் விட்டாரை வலி அனுப்ப முரசு ஒலித்தது . வெற்றி முழக்கங்களும் , வேதகோஷங்களும் , மங்கள கீதங்களும்
மிக ரம்யமாக இருந்தன. தேவர்கள் பூ மாரி பொழிந்தனர்.
சீதை அடிக்கடி ராமரைப் பார்ப்பதும் வெட்கப்படுவதுமாக இருந்தாள்.அன்பின் தாகத்தால் சீதையின் கண்கள் மீன்கள் போன்று இருந்தன.

No comments:
Post a Comment