ராமசரிதமானஸ்--அயோத்தியா காண்டம் --பக்கம்-நான்கு
நகரம் நன்கு அலங்கரிங்கப்பட்டிருப்பதை மந்தரை பார்த்தாள். அழகான மங்களம் நிறைந்த வாத்தியங்கள் வாசிக்கப்பட்டன.
அவள் மக்களிடம் கேட்டாள்---என்ன உற்சவம்?
ராமரின் ராஜ்யாபிஷேகம் என்ற செய்தி கேட்டதுமே ,
அவள் இதயம் எரிந்தது. கெட்ட புத்தியுள்ள தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த அந்த அடிமை
இந்த ராஜ்யாபிஷேகத்தை இரவோடு இரவாக
கெடுக்க நினைத்தாள். அவள் எண்ணம் கொடுமையான வேட்டைக்காரி தேன்கூட்டை கலைப்பதற்காக சந்தர்ப்பம் பார்ப்பதுபோல் இருந்தது.
அவள் மிக வருத்தமடைந்து பரதனின் அன்னை கைகேயியிடம் சென்றாள். கைகேயி, "நீ ஏன் வருத்தமாக உள்ளாய்? " என்று கைகேயி கேட்டாள்.
மந்தரை எவ்வித பதிலும் சொல்லாமல் , பெருமூச்சுவிட்டு
மாய அழுகைக் கண்ணீர் விட்டாள்.
கைகேயி --நீ அதிகம் பேசுபவள்.
லக்ஷ்மணன் உனக்கு ஏதேனும் தண்டனை கொடுத்தானா ? என்று மந்தரையிடம் கேட்டாள்.
அப்பொழுதும் அந்த பாவி தாசி கூனி எதுவும் பேசவில்லை.
கரு நாகப்பா ம்பு சீருவதுபோல் மூச்சு விட்டுக்கொண்டிருந்தாள்.
ராணி பயந்து , என்ன / சொல் !என்றாள். அரசர், ராமர் , லக்ஷ்மணர் , பரதன் , சத்துருகனன் எல்லோரும் நலமா ?
இதைக்கேட்டதும் மந்தரைக்கு மிகவும் மன வேதனை ஏற்பட்டது.
கூனி --அம்மா! எனக்கு யார் தண்டனை கொடுக்க முடியும்?
யாரின் பலத்தால் நான் அதிகம் பேச முடியும்.
ராமரைத்தவிர இன்று யாரும் நலமாக இல்லை. அவருக்கு யுவராஜ் பதவி கிடைக்கப்போகிறது. இன்று கடவுள் கௌசல்யாவிற்கு அனுகூலமாக இருக்கிறார். இந்த செய்தியால் அவருடைய இதயத்தில் , கர்வம் அதிகமாகிவிட்டது. எந்த காட்சிகளைப் பார்த்து எனக்கு வருத்தம் ஏற்பட்டதோ , அந்தக்காட்சிகளை நீங்கள் சென்று பாருங்கள்.
உன்னுடைய மகன் வெளிநாட்டில் இருக்கிறான். உனக்கு எவ்வித கவலையும் இல்லை. அரசர் நம் வசத்தில் இருக்கிறார். உனக்கு கட்டிலில் படுத்து தூங்குவதிலேயே ஆனந்தம்.
அரசரின் கபடம் நிறைந்த புத்திசாலித்தனம் உனக்குப் புரியவில்லை.
மந்தரையின் அன்பான சொற்கள் கேட்டாலும் ,
ராணிக்கு அவளின் மனதின் கபடம் தெரியும்.
ராணி அவளை மிரட்டி சொன்னாள்-- நீ வீட்டை இரண்டாக்குபவள். மறுபடியும் இப்படி செய்தால் உன் நாக்கைப் பிடித்து இழுத்துவிடுவேன் என்றார்.
ஒற்றைக்கண்ணன், நொண்டி, கூனி போன்றோரை கொடியவர்களாகவும், கெட்ட நடத்தையுள்ளவர்களாகவும் நினைக்க வேண்டும். அதிலும் முக்கியமாக பணிப்பெண் .
என்று சொல்லி கைகேயி சிரித்தாள்.
அன்பான சொற்கள் பேசும் மந்தாரையே! உன்மேல் எனக்கு எனக்கு கனவிலும் கோபம் கிடையாது. நீ சொல்வது உண்மை என்றால் அழகான மங்களம் தரும் நல்ல நாள் அதுவே ஆகும்.
சூரிய வம்சத்தின் பழக்கப்படி முறைப்படி அண்ணன் அரசனாவதும் தம்பி சேவகவனாவதும் தான் சரி. நாளை உண்மையிலேயே ராமருக்கு ராஜ்யாபிஷேகம் என்றால் சொல் , உன் மனம் விரும்பும் பொருள் தருகிறேன். ராமருக்கு கௌசல்யா போலவே மற்ற அன்னைகள் மீதும் சமமான அன்பு உண்டு. நான் அதை சோதித்தும் பார்த்துவிட்டேன். ராமர் போன்ற மகனும் சீதை போன்ற மகளும் கிடைப்பது ஆண்டவனின் மிகப்பெரிய கிருபை. ஸ்ரீ ராமர் எனக்கு உயிரைவிட அதிகமான அன்புடையவர். அவருடைய ராஜ்யாபிஷேகத்தால் எனக்கு எப்படி மனவேதனை வரும்.
இந்த மகிழ்ச்சியான நேரத்தில் துன்பம் ஏன்?
பரதன் மீது ஆணை. உண்மையைச் சொல்.

No comments:
Post a Comment