ராமசரித மானஸ்-பாலகாண்டம் -தொண்ணூற்று மூன்று
தசரதர் நகரத்திற்குள் நுழைந்ததுமே ,
பல இசைக்கருவிகள் இசைக்கப்பட்டன.
மக்கள் அரசனை வணங்கினர்.
ஸ்ரீ ராமச்சந்திரனைப் பார்த்ததும் மக்கள் மிக மிக
ஆனந்தமடைந்தனர். கண்களில் ஆனந்தக்கண்ணீர் பெருக்கெடுத்தது.
நகரப்பெண்கள் மிக மகிழ்ச்சியுடன் ஆரத்தி எடுத்தனர்.
பல்லக்குகளின் திரையை விலக்கி, மணப்பெண்களைப்
பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.
அன்னைகள் மிக மகிழ்ந்து மகன்களுக்கும் மணமகள்களுக்கும் திருஷ்டி சுற்றிப் போட்டனர்.
அடிக்கடி ஆர்த்தி எடுத்தனர். அந்த அன்பையும் அளவில்லா
ஆனந்தத்தை வர்ணிக்க முடியாது. பலவித நகைகள், ரத்தினங்கள், அளவிடமுடியா ஆடைகள் எல்லாவற்றையும்
அன்பளிப்பாகக் கொடுத்தனர்.
அன்னைகள் மூவருமே ராமர் சீதை இருவரின் அழகைக்கண்டு உலகில் பிறந்த பிறவிப்பயன் அடைந்ததுபோல் மகிழ்ந்தனர்.
தோழிகள் சீதையின் முகத்தை அடிக்கடி பார்த்து ,
தாங்கள் செய்த புண்ணியத்தின் பலனை புகழ்ந்து பாடிக்கொண்டிருந்தனர்,
தேவர்கள் ஒவ்வொரு நொடியும் பூமாரி பொழிந்தும்,
பாடியும் ஆடியும் தன் தன் சேவையை சமர்ப்பித்தனர்.
நான்கு அழகான ஜோடிகளைப் பார்த்து ,சரஸ்வதிக்கு ஒப்பிட எந்த உவமையும் கிடைக்கவில்லை. எல்லா உவமைகளும் இந்த நான்கு ஜோடிகளுக்கு முன்
துச்சமாகவே தோன்றின. இறுதியில் சரஸ்வதி தேவி உவமை கிடைக்காமல் அந்த ஜோடிகளைக் கண் மூடாமல்
பார்த்துகொண்டிருந்தாள்.
அன்னைகள் வேத குல வழக்கப்படி அர்க்கியம் கொடுத்து மருமகள்களுக்கும் மகன்களுக்கும் திருஷ்டி சுற்றிப்போட்டு
அரண்மனைக்குள் அழைத்துச் சென்றனர்.
இயற்கையிலேயே அழகான நான்கு அரியணைகள் இருந்தன. அவை காமதேவனே
தானே செய்ததுபோல் இருந்தன.
அன்னைகள் அவர்களை அந்த அரியணைகளில் அமரவைத்து மரியாதையுடன் பவித்திர பாடங்களை கழுவினர்.
பிறகு வேத சாஸ்த்திர விதிகளின் படி தூப ஆராதனை செய்து நைவேத்தியம் படைத்து பூஜை செய்தனர். அன்னைகள் அடிக்கடி ஆர்த்தி எடுத்தனர். வரன் -வதுக்களின் தலைகளில்
அழகான இறகுகளில் சாமரம் வீசினர். யோகிக்கு பரம தத்துவம் கிடைத்தது போன்ற மகிழ்ச்சி அன்னைமார்களுக்கு.
தீராத நோயுடையவனுக்கு அமிர்தம் கிடைத்ததுபோல் மகிழ்ந்தனர். பிறவியிலேயே தரித்திரமாக உள்ளவன் தங்கம் கிடைத்தால் எப்படி மகிழ்வானோ அப்படி மகிழ்ச்சி தோன்றியது.
ஊமை பேச்சுத்திறனும் சரஸ்வதி அருளும் பெற்றதுபோல் மகிழ்ந்தனர்.
சூரவீரன் போரில் வெற்றி பெற்றதுபோல் மகிழ்ந்தனர்.
ராமனும் அவர் சகோ தரர்களும் திருமணம் முடிந்து அரண்மணை திரும்பியதும் மேலே சொன்ன ஆனந்தங்களை விட கோடி மடங்கு அதிக ஆனந்தம் அடைந்தனர்.
அவர்களுக்கு அரண்மனையில் அன்னைகள் உலக வழக்க-முறைகள் படி கேலி -கிண்டல் செய்ய மணமகன்கள் -மணமகன்கள் நாணத்துடன் நெளிந்தனர்.
இந்த ஆனந்த விநோதத்தைப் பார்த்து ராமர் மனதிற்குள்ளேயே புன்னகைத்தார்.
மனதின் எல்லா விருப்பங்களும் முழுமை அடைந்ததால்
தேவதைகளுக்கும் முன்னோர்களுக்கும் வழிபாடு செய்தனர். சகோதரர்களுடன் ராமன் நலமாக இருக்கவேண்டும் என்றே அன்னைகள் அனைவரின்
வேண்டுகோளாக இருந்தது.
தேவர்கள் விண்வெளியில் இருந்து ஆசிகள் வழங்கினர்.
அன்னைகள் ஆனந்தமாக முந்தானை விரித்து ஆசிகளைப் பெற்றனர். அதற்குப்பின் அரசர் மாப்பிள்ளை வீட்டார்களை அழைத்தார். அவர்களுக்கு அவர்களுக்கு ரத்தினங்கள் , துணிமணிகள், சவாரிகள் பொன்றவற்ற தானமாக அளித்தார். யாசகர்கள் எதைக்கேட்டாலும்
அதையே தானமாக அளித்தார்.
எல்லா பணியாளர்களுக்கும் இசைக் குழுவினர்களுக்கும்
பலவித தானங்களும் கௌரவமும் கொடுத்து
திருப்திப் படுத்தினார்.
எல்லோரும் வணங்கி ஆசிகள் வழங்கினர். புகழ்ந்து பாட்டுப் பாடினர். அப்பொழுது குருவும் அந்தணர்களும் அரசர்களும்
அரசன் தசரதரும் அரண்மனைக்குள் சென்றனர்.
வசிஷ்டர் சொன்னதை எல்லாம் அரசர் மரியாதையுடன்
செய்தார். அந்தணர்களின் கூட்டம் கண்டு ராணிகள் மிகவும் மகிழ்ந்தனர். எழுந்து மரியாதைகள் செய்தனர்.
அனைவரின் பாதங்களைக் கழுவி எல்லோரையும் ஸ்நானம் செய்வித்து நன்கு பூஜை செய்து விருந்தளித்தார். அவர்கள் மகிழ்ந்து மன நிறைவுடன் ஆசிகள் வழங்கிச் சென்றனர்.

No comments:
Post a Comment