ராமசரித மானஸ்--பாலகாண்டம் -எண்பத்தாறு
தேவர்களுக்கு எல்லாம் சிவபகவான் சொன்னார்.
பிறகு தன்னுடைய சிறந்த நந்தீஸ்வரரை முன்னால்
ஓட்டினார். தசரதர் மிகவும் மகிழ்ச்சியுடன் செல்வதை தேவர்கள் பார்த்தனர். அவர்களுடன் வந்த அந்தணர்களும் ரிஷிகளும் எல்லா சுகங்களும் உடலவதாரம் எடுத்து சேவை செய்து கொண்டிருப்பதுபோல் இருந்தது. நான்கு புத்திரர்களும் எல்லா மோக்ஷங்களும் உடல் தரித்ததைப் போல் இருந்தனர்.
(சாலோக்கியம் , சாமிப்யம் ,சாரூபம் ,சாயுஜ்யம் )
மரகதமணி மற்றும் பொன்னிறமான ஜோடியைக்கண்டு தேவர்கள் மிக மகிழ்ந்தனர். ராமரைப்பார்த்து அதிகம் ஆனந்தமடைந்தனர். அவர்கள் மன்னன் மீதும் ராமர் மீதும்
பூமாரி பொழிந்தனர்.
பார்வதியும் சிவனும் உச்சிமுதல் பாதம் வரை உள்ள அழகைப் பார்த்து மிகவும் மகிழ்ந்தனர்.
ராமருடைய மயில் கழுத்துபோன்ற கருநீல வண்ண உடல் .
மின்னலையே அவமதிக்கும் ஒளிபொருந்திய அழகான
பட்டாடை ,வித விதமான திருமண நகைகள் ,
மிக நேர்த்தியாகத் தோன்றின.
குளிர்கால பௌர்ணமி நிலவு போன்று ராமரின் முகம்
தாமரை நாணும் படியான கண்கள்,ஒரு அலௌகீக அழகு
ராமரிடத்தில். தெய்வீக அழகு உணர மனதிற்குள்ளேயே
அன்பு செய்யத் தூண்டுவது.
அவருடன் வந்த அழகான சகோதரர்கள் , சஞ்சலமான
குதிரைகளை ஆட்டி வைத்துக்கொண்டு சவாரியில் வருகிறார்கள். அரச குமாரர்கள் குதிரைகளைக் காட்டிக்கொண்டு தன் வம்ச புகழைபாட் இன பாடகர்களும்
மற்றவர்களும் பாடிக்கொண்டு வந்தனர்.
ராமர் வந்த குதிரையின் நடை அழகு, கம்பீரத் தோற்றம்
வர்ணிப்பது கடினம். அதன் நடைபார்த்து கருடனும் நாணமடைந்தது.
ஸ்ரீ ராமரின் குதிரை காமதேவனே வேஷம்போட்டு குதிரை வேடத்தில் வந்துள்ளது போல இருந்தது.
அந்த குதிரை தன் வயது , பலம் ,அழகு குணம்,நடந்த விதத்திலும் அனைவரையும் கவர்ந்துகொண்டிருந்தது .
அழகான முத்து, மணிகள் ,மாணிக்கங்கள் பதித்த குதிரை பட்டயம் ஜொலி ஜொலித்துக்கொண்டிந்தது
அதனுடைய அழகான சலங்கை கட்டிய லகான் பார்த்து மனிதர்கள் ,தேவர்கள் மற்றும் முனிவர்கள் வியந்தனர்.
ராமச்சந்திர பிரபு வின் விருப்பப்படி நடக்கும் அந்த குதிரை
நக்ஷத்திரங்களாலும் மின்னலாலும் அலங்கரிக்கப்பட்ட
மேகம் அழகான மயிலை ஆட்டுவிப்பதுபோல் இருந்தது.
ராமரின் குதிரை ,சவாரி செய்யும் அழகு அதை வர்ணிப்பது
சரஸ்வதி தேவியலும் இயலாது. சங்கரர் ராமரின் அழகில் மிகவும் மயங்கி அதிக அன்பு செலுத்தினார்.
சிவன் தனக்கு இருக்கும் பதினைந்து கண்களும் போதாது என்று வருந்தினார். பிரம்மாவும் தனது எட்டு கண்கள் போதாது என்று நினைத்தார்.
பகவன் விஷ்ணுவும் ராமரின் அழகான உருவத்தைக் கண்டு
லட்சியம் லக்ஷ்மி பதியும் மோஹமடைந்தார்.
தேவர்களின் சேனாபதி கார்த்திகேயனும் இதயத்தில்
மிகவும் உற்சாகமடைந்தார் . கார்த்திகேயன் தன் பன்னிரண்டு கண்களால் ராமரின் அழகை ரசித்தார்.
இந்திரன் தன் ஆயிரம் கண்களால் ராமரின் அழகாய் ரசித்து கௌதமரின் சாபமும் நன்மைக்கே என்று அநினைத்தார்.
இந்திரன் தான் அழகு அவனுக்கு
இணையான அழகு யாரும் இல்லை என்று நினைத்த தேவர்கள் ராமரின் அழகுகண்டு மகிழ்ந்தனர்.
இரண்டு அரசர்களைச் சேர்ந்தவர்களும் மிகவும் மகிழ்ந்தனர்.
இரண்டு அரசர்களின் விரும்பிகளும் மிகவும் ஆனந்தமாக முரசொலி எழுப்பினர்.
தேவர்கள் மகிழ்ந்து "ரகுகுல மணி ஸ்ரீ ராமருக்கு ஜெய் ,
என்று பூமாலை பொழிந்தனர்.
மணமகன் வீட்டார் ஊர்வலமாகப் புறப்பட்டதும்
அநேகவிதமான மங்கள இசைக்கருவிகள் முழங்கின,
ராணி சுமங்களிப் பெண்களை அழைத்து வாசனை திரவியங்களால் அலங்கரிக்கப்பட்ட தாம்பூலத்தாம்பாளங்கள் ,
ஆரத்தி எடுக்க தாம்பாளங்கள்
அழைத்தாள்.
பெண்கள் ஆரத்தி அலங்கரித்து அனைத்து மங்கள திரவியங்களையும் அலங்கரித்து யானைபோல் அசைந்து
அணிவகுத்துச் சென்றனர்.
எல்லா பெண்களுமே நிலவு போன்ற முகமும் மான் விழி உடையவர்களாகவும் அழகாக இருந்தனர்.
எல்லோரின் அழகும் ரதியின் கர்வத்தை அளிக்கும்படியாக இருந்தது.
பல வண்ணங்களில் அழகான உடை உடுத்தி இருந்தனர்.
உடலில் பலவித அங்க அழகுக்கான ஆபரணங்கள் அணிந்து
மிக எழிலாக வந்தனர். வளையல் ,காப்பு ,கால் கொலுசு ஒலித்துக்கொண்டு மிகவும் நன்றாக மகிழ்ச்சியாக இருந்தனர்.
பலவித வாத்தியங்கள் வாசித்துக்கொண்டிருந்தனர்.
பவித்திர தேவலோக தெய்வங்கள் இந்திராணி, சரஸ்வதி,
லக்ஷ்மி ,பார்வதி, ஆகியோரும் வந்திருந்தனர்.
அவர்கள் அனைவரும் சாதாரண பெண்கள் போல் வேட மிட்டு அந்தப்புரத்தை அடைந்தனர்.
அழகான குரலில் மங்கள கீதங்கள் பாடினர்.
எல்லோரும் ஆனந்தமாக மெய்மறந்து இருந்ததால் இவர்களை யாரும் கண்டுகொள்ளவில்லை.
அனைவரும் மணமகனாக வந்துள்ள பரபிரம்ம ஸ்வரூபியான ராமரை புகழ்வதிலேயே இருந்தனர்.
எல்லோரும் மணமகன் தொடராப் பொழிவில்
தாமரைக் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வடிய
அழகான அங்கங்களில் ஆனந்தம் பொங்கியது.
சீதையின் தாயார் சுனயனாவின் ஆனந்தத்தை சரஸ்வதி ,ஆதிஷேசன் போன்றவர்களாலும் வர்ணிப்பது அரிதாக இருந்தது.
வர்ணிக்க பல யுகங்களாகும்.
ராணி ஆனந்தக்கண்ணீரை அடக்கிக் கொண்டு
வேதங்களில் கூறிய குல வழக்கப்படி நல்லமுறையில் நடந்துகொள்வதில் கவனமாக இருந்தனர்.
ஐந்து வகை இசைக்கருவிகள் முழங்கின.
மத்தளம் , வீணை போன்ற நரம்பு இசைகள், ஜால்ரா, முரசு ,
மிருதங்கம் போன்றவைகளில் மங்கள இசைகள் முழங்கின.
வேத முழக்கங்கள், வாழ்த்துக்களின் கோசங்கள், வெற்றி முழக்கங்கள், சங்கு முழக்கங்கள், மந்திர முழக்கங்கள்
என நகரமே மங்களமயமாக இருந்தது.
ராணி ஆரத்தி எடுத்து அர்க்கியம் விட்டபின் ,
ராமர் மண்டபத்தில் வருகை புரிந்தார்.
தசரதர் தன் குழுவினருடன் வந்தார்.
அவருடைய வைபவங்களைக்கண்டு
லோகபாலரே நாணமடைந்தார்.
அடிக்கடி தேவர்கள் பூ மாறி பொழிந்தனர்.
அந்தணர்கள் காலமறிந்து சாந்தி கழித்தனர்.
ஆகாயத்திலும் நகரத்திலும் மகிழ்ச்சி ஆராவாரங்கள் .
தன்னவன் -அயலவன் என்ற வேற்றுமை எங்குமே இல்லை.
ராமர் வந்ததும் அர்க்க்யம் செய்து ஆசனத்தில் அமரவைத்தனர்.
மணமகனுக்கு ஆரத்தி எடுத்து , பெண்கள் மங்கள கீதம் பாடினர். பிரம்மா போன்ற மேன்மை பொருந்தியவர்கள்
அந்தணர் வேடத்தில் வந்து ஆனந்தமாக பங்கேற்றனர்.
ரகுகுலம் என்ற தாமரையை மலரச்செய்கின்ற சூரியனான ஸ்ரீ ராமச்சந்திரரின் அழகை பார்த்து தன பிறவிப்பயனின்
வெற்றிக்களிப்பில் இருந்தனர்.
நாவிதர்கள், பணிப்பெண்கள், பாடகர்கள் , ராமரை வணங்கி ஆசிர்வதித்தனர்.
வேதங்களின் படியும் , லௌகீக பழக்க வழக்கப் படி ஜனகரும் தசரதரும் கடைப்பிடித்து அன்புடன் சந்தித்தனர் .
இருவரின் சந்திப்பை வர்ணிக்க கவிஞர்கள் சொற்களைத் தேடினர். அவர்கள் தக்க உவமைகளைத்தேடி கிடைக்காவில்லை. தங்களுடைய கவித் திறமையின் தோல்வியை ஒப்புக்கொண்டனர்.
சம்பந்திகளின் சந்திப்பைப் பார்த்து ,பரஸ்பர ஆனந்தமான
நிகழ்வுகளைப் பார்த்து , தேவதைகள் பூமாரி பொழிந்து
போற்றத்தொடங்கினர்.
நாங்கள் உலகத்தை பிரம்மா படைத் தத்தில் இருந்து பல திருமணங்கள் பார்த்திருக்கிறோம் . ஆனால் இந்த மாதிரியான சம - அந்தஸ்து, கௌரவம் , ஆஸ்திகள் , தெய்வீகம் கொண்ட சம்பதிகளை இன்றுதான் பார்க்கிறோம். என்று தேவர்கள் கூறினர் .
அழகான முறையில் அர்க்கியம் செய்து
ஜனகர் மிக மரியாதையுடன் தசரதரை விவாஹமண்டபத்திற்கு அழைத்து வந்தார்.
மண்டபத்தின் விசித்திர அமைப்பையும் அழகையும் கண்டு
முனிவர்கள் மனதில் மகிழ்ந்தனர். ஜனகர் தன கையாலேயே அனைவருக்கும் சிம்மாசனம் கொண்டுவந்து போட்டார்.
அவர் தன்னுடைய இஷ்ட தேவதை போன்ற வசிஷ்டருக்கு
பூஜை செய்து ஆசிகள் பெற்றார்.
விஷ்வாமித்திரருக்கு பூஜை செய்தி தனது அளவிட முடியா அன்பைக் காட்டினார்.
வாமதேவர் போன்ற ரிஷிகளுக்கும் பூஜை செய்தார்.
எல்லோருக்கும் தெய்வீக ஆசனம் அளித்து கௌரவித்தார்.
பிறகு தசரதருக்கு பூஜையை மகாதேவர் என்றே நினைத்து
பூஜை செய்தார். பிறகு தசரதருடனான சம்பந்தம் தன் பாக்கியம் எனப் புகழ்ந்தார். கைகூப்பி வணங்கி பெருமைப் படுத்தினார்.
எல்லா சம்பந்திகளுக்கும் ஜனகர் தசரதரைப்போலவே மரியாதையுடன் பூஜை செய்தார். எல்லோரையும் தகுந்த ஆசனத்தில் அமரவைத்தார். அவருடைய உற்சாகத்தை
எப்படி வர்ணிப்பது ?
அரசன் ஜனகர் தானம் , மானம் -கௌரவம் ,பணிவு ,உத்தமமான பேச்சு மூலம் எல்லா மணமகன் வீட்டாருக்கும்
மரியாதை செலுத்தினார். பிரம்மா, விஷ்ணு, சிவன் ,திக்குபாலகர்கள் , சூரியன் போன்றோர் ஸ்ரீ ரகுநாதரின் மகிமை அறிந்தோர் சாதாரண அந்தணர்கள் வேடத்தில்
வந்து காட்சிகளைக் கண்டு மகிழ்ந்துகொண்டிருந்தனர்.
ஜனகர் அவரை அறியாதபோதிலும் அவர்களுக்கும் தெய்வங்களுக்கு உரிய பூஜையும் ஆசனமும் அளித்து வணங்கினார்.
எல்லோரும் மகிழ்ச்சியால் தன்னையே மறந்து இருந்ததால் யார் என்று அறியாமலேயே இருந்தனர்.
ஸ்ரீ ராமர் தேவர்களைத் தெரிந்துகொண்டு அவர்களுக்கு மானசீக பூஜை செய்து மனதில் ஆசனம் அளித்தார்.
பிரபுவின் குணம் -ஒழுக்கம் கண்டு தேவர்கள் மிகவும் ஆனந்தம் அடைந்தனர்.
உரிய நேரத்தில் வஷிஸ்டர் சதானந்தரை மரியாதையுடன் அழைத்தார். அரசகுமாரியை அழைத்து வரும்படி கூறினார்.
புரோஹிதர் ராணியிடம் கூற அவர் அறிவு கூர்மையுடன்
தோழிகளுடன் மகிழ்ந்து அந்தணப் பெண்களும்
குலத்தைச் சேர்ந்த வயதான பெண்களும் அழைத்து
மங்களப்பாடல் பாடினார்கள்.
மேன்மை பொருந்திய தேவலோகப் பெண்களும் , அழகான மனித உருவத்தில் இருந்தனர். எல்லோருமே பதினாறு வயதுள்ள அழகான அப்சரஸ்கள்..அவர்களைப்பார்த்து
அந்தப்புரப் பெண்கள் அவர்களின் அறிமுகம் இன்றியே அவர்களை மிகவும் நேசித்தனர். அவர்களை பார்வதி, லக்ஷ்மி ,சரஸ்வதி என்றே நினைத்து ராணி அவர்களுக்கு
தகுந்த மரியாதை செலுத்தினார்.
அந்தப்புர தோழிகளும் பெண்களும் சீதையை நன்கு அலங்கரித்து மகிழ்ச்சியுடன் மணமேடைக்கு அழைத்துவந்தனர்.
எல்லா அழகிகளும் சரியாக அலங்கரித்துக்கொண்டு
மத யானை போல் நடப்பவர்கள். சலங்கை, கொலுசுகள்,அழகான கங்கணங்கள் ஆகியவற்றால்
தாளத்தின் கதிக்கேற்றவாறு இசைத்துக் கொண்டிருந்தனர்.
இயகையான பேரழுகு கொண்ட சீதை அழகான பெண்களுக்கு மத்தியில் அழகே உருவெடுத்து அமர்ந்திருந்ததுபோல் இருந்தார்.
அழகே உருவெடுத்த சீதையைக் கண்டு அனைவரும் மனதிற்குள்ளேயே வணங்கினர். ராஜா தசரதர் புத்திரர்களோடு மிக மகிழ்ந்தார். தேவர்கள் வணங்கி பூமாரி பொழிந்தனர். மங்களங்களுக்கு மூலமான முனிவர்களின் ஆசிர்வாதம் ஓசைகள், முரசொலி, கேட்டது. அனைவரும்
குதுகூலமடைந்து காணப்பட்டனர்.
சீதை மண்டபத்திற்கு வந்தார். முனிகள் ஆனந்தமடைந்து
சாந்தி மந்திரங்கள் ஓதினர். அந்த சந்தர்பத்தில் முறைப்படி குலவழக்கப்படி இரண்டு குல குருக்களும் ஆசார அனுஷ்டானங்களைச் செய்தனர்.

No comments:
Post a Comment