Sunday, March 26, 2017

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் இறுதிப்பகுதி --தொண்ணூற்று நான்கு --

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் - இறுதிப்பகுதி --                 தொண்ணூற்று நான்கு --


  அரசர் தசரதர்  காதி மகன்  விஷ்வாமித்திரரை
 பல முறை வணங்கி   பலவிதத்திலும்    புகழ்ந்தார். சொன்னார்--
உங்களுடைய கிருபையால் நான் தன்யனானேன்.
அரண்மனையில் அனைவரும் ராணிகளும்
அவர் தேவை அறிந்து சேவை செய்ய
ஏற்ற இடத்தில் தங்கவைத்தார்.
பிறகு வசிஷ்டருக்கு பூஜை செய்து கௌரவித்தார்.
 மகன்கள் ,மருமகள்கள் ராணிகளும்
அடிக்கடி அவர்கள் காலில் விழுந்து
 வணங்கி ஆசி பெற்றனர்.
அனைவரும் ஆசிகள் வழங்கி
 ராமரை மனதில்  நினைத்துக்கொண்டே சென்றனர்.
ராஜா தன் சொத்துக்களையும் புத்திரர்களையும்
முனிவரின் முன் சமர்ப்பித்து
 ஏற்றுக்கொள்ளும் படி வேண்டினார்.
முனிவர் விருந்து உபசார பொருட்கள் மட்டும்
கேட்டு  அனைவருக்கும் ஆசிகள் வழங்கினார்.

  சீதையையும் ராமரையும்  மனதில் வைத்து
   மகிழ்ச்சியுடன்
வசிஷ்டர் தன் இருப்பிடம் சென்றார்.
அரசர் அனைத்து அந்தணப் பெண்களையும் அழைத்து அவர்களுக்கு அழகான ஆடைகள்,
நகைகளை தானமாகக் கொடுத்தார்.

உறவினர்கள்  திருமணப் பரிசுப்பொருள்கள் பெற்றுச் சென்றனர்.
அரசரும்  அவரவர்களுக்கு  பிடித்தமான பொருள்களைக் கொடுத்து  மன நிறைவடையச் செய்தார்.
அனைத்து விருந்தினர்களையும்  அரசர்  வணக்கத்திற்குறியவர்களாக  ஏற்று தக்க
மரியாதை செய்து அனுப்பினார்.
எல்லோருக்கும் தக்க மரியாதை செய்த பின்
அரசர் தன் புத்திரர்களையும் மருமகள்களையும்  அந்தப்புரத்தில்  சந்தித்து மகிழ்ந்தார்.
  ராணிகளிடம் , "  மருமகள்கள்  குழந்தைகள். இவர்களை கண் இமைகள் கண்களைக் காப்பதுபோல் கண்காணிக்க வேண்டும் என்றார்.  மகன்கள் களைத்துப் போய்விட்டனர். அவர்களை தூங்கவைக்கவேண்டும் என்றார்.
அரசனின் மென்மையான சொற்கள் கேட்டு ராணிகள் மிக மகிழ்ந்தனர்.
அழகான தலையணைகள் ,
அழகான ரத்தினங்கள் பதித்த விளக்கு,
மிகவும் அன்பாக  ஏற்பாடு செய்தனர்.
பெண்கள் மங்கலப்பாடல்கள் பாடினர்.
அடிக்கடி திருஷ்டி கழித்தனர்.
அனைவரும் ராமரின்  பெருமைகளைப் புகழ்ந்து பாடினர்.
 முனியின் கிருபையால் சகோதரர்கள் கல்வி பயின்றனர்.
யாகத்தைக் காத்தனர். பெரும் விபத்திலிருந்து காத்தனர்.
ராமர் பாதம் பட்டு அகல்யா முக்தி அடைந்தார்.
கல் பெண்ணாக மாறியது.
 ராமர் சிவதனுஷை  முறித்தார்.
மிகவும் உறுதிவாய்ந்த ஆமை முதுகு ஓடு போன்ற கடினம்,
வஜ்ரம் போன்ற உறுதி ,
 மலைபோன்ற கடினமான வில்லை
முறித்து  வையகப்  புகழ்   அடைந்து
 ஜானகியை  மணந்தார்.
இதற்கெல்லாம் காரணம்  முனிவர் விஷ்வாமித்திரர்.
ராமரின் அழகான சந்திர முகம் கண்டு
 பிறவிப்பயன் பெற்றோம்.
ராமர் தூங்கும்போது அழகான முகம்
மாலை நேர செந்தாமரை போன்று  உள்ளது என
மிகவும் புகழ்மாலை சூட்டி பாட்டுப்பாடினர்.
ராணிகள்  சொன்னார்கள்--- இரவு  மிக அழகாக இருக்கிறது.
அயோத்யா  நகரம் சிறப்பு பெற்று காட்சி அளிக்கிறது.
மாமியார்கள் தங்கள் அழகான மருமகள்களை ,
பாம்பு தன்  நாகமணியை இருதயத்தில் வைத்து
தூங்குவது போல் அழைத்து தூங்கிவிட்டனர்.
 காலையில்  பவித்திரமான சுப வேளையில் ராமர் எழுந்தார்.
சேவல் கூவியது.
பாடகர்கள், இசைபாடும் ஜாதியினர் ,நகர மக்கள்  ஆசிகள்
 வழங்கி  திருஷ்டி -சுத்திப்போட வந்துவிட்டனர்.
அந்தணர்கள், தேவதைகள் , குரு,
தாயார்கள் ,தந்தை அனைவரையும்
நான்கு சகோதரர்களும் வணங்கி
ஆசிகள் பெற்றனர்.
 தாயார்கள்  மிக அன்புடன் மகன்களைப்பார்த்தனர்.
 அதில் மரியாதையும் தென்பட்டது.
பிறகு அவர்கள் அரசனுடன் வாயிலுக்கு வந்தனர்.
  புனித குணமுடைய  நான்கு சகோதரர்களும் காலைக்கடன்கள் முடித்து சரயு நதியில் குளித்தனர்.
  காலை சந்தியா வந்தனங்களை
 முடித்துக்கொண்டு  தந்தைஇடம்  வந்தனர்.

 ராஜா அவர்களைப்   பார்த்ததுமே
ஆரத்தழுவி தன்  அன்பைக்காட்டினார்.
பிறகு வர்கள் தந்தையின் அனுமதி பெற்று  அமர்ந்தனர்.
ஸ்ரீ ராமரின் தரிசனம் பெற்று அனைவரும்  மகிழ்ந்தனர். எல்லோரின் மனமும் எல்லா தாபங்களில்  இருந்து விடுபட்டு மிகவும் குளிர்ந்தது.
 பிறகு முனிவரும் வசிஷ்டரும் வந்தனர்.
அவர்களை அரசர் தசரதர் அழகான ஆசனத்தில் அமரவைத்தார்.
புத்திரர்களுடன் சேர்ந்து அவர்களை வணங்கினார்.
இருவரும் குரு ராமரைப் பார்த்து மிகவும் அன்பால் மகிழ்ந்தனர்.
 வசிஷ்டர் தர்மத்தின் வரலாறு சொல்ல ராஜா, அந்தப்புரத்துவாசிகள் அனைவரும் கேட்டுக்கொண்டிருந்தனர்.
வசிஷ்டர்  விஷ்வாமித்தி ரரையும்
அவரது செயலையும் மிகவும் உள்ளன்போடு புகழ்ந்தார்.
வாமதேவர் சொன்னார்--"இவை எல்லாம் உண்மையே. விஷ்வாமித்திரரின் அழகான செயல்கள்
 மூவுலகிலும் பரவி  புகழ் பெற்று விளங்குகிறது.

 இதைக்கேட்டு எல்லோரும் மகிழ்ந்தனர்
. ராமர் -லக்ஷ்மணர் இதயத்தில் மிகவும்
உற்சாகமும் ஆனந்தமும் பரவியது.

  தினந்தோறும்  ஆனந்தோத்சவம்  நடைபெற்றது.
 ஆனந்தம் அதிகமாகிக்கொண்டே இருந்தது.
 நல்ல நாளில் கங்கணம் பிரிக்கப்பட்டது.
   அயோத்யா நகரம்  மங்கள நிகழ்ச்சியால்
 தேவர்கள் மகிழ்ந்தனர்.
 பிரம்மா விடம்   அயோத்தியாவில் பிறக்க யாசித்தனர்.

  விஷ்வாமித்திரர் ஆஷ்ராமத்திற்குத் திரும்ப
 விரும்பினாலும் ராமரின் அன்பினால்
பணிவினால் கட்டுண்டிருந்தார்.

 நாளுக்குநாள் குருவின் மீது   ராஜாவின்  அன்பு பல மடங்கு
வெளிப்பட்டதை முனிவர் மிகவும் புகழ்ந்தார்.
இறுதியில் விஷ்வாமித்திரர்   செல்லும் நேரம் வந்துவிட்டது.
அப்பொழுது அரசர் சொன்னார்-- நாதா ! இந்த அயோத்திய, சொத்து எல்லாம் உங்களுடையது. நானும் என் புத்திரர்களும்  உங்கள் தொண்டர்கள்.
 என் மகன்கள் மேல் எப்பொழுதும் அன்புடன் இருங்கள்.
எனக்கும் தர்சனம் கொடுங்கள்.
 இதைச்சொல்லி தசரதர்  ராணிகள் புத்திரர்களுடன்
 அவர் காலில் விழுந்து வணங்கினர்.
 அன்பின் அதிகரிப்பால் அவர்களால் பேச முடியவில்லை.
பிராமண விஷ்வாமித்திரர் பல வித ஆசிகள்
 அளித்து சென்றார்.
அன்புடன் ஸ்ரீ ராமர் அவருடன் சென்று
 பிரியா  விடை கொடுத்தார்.

காதி குலத்தின்  சந்திரர் விஷ்வாமித்திரர்
 மிக மகிழ்ச்சியுடன் ராமரின் அழகு ,
அரசர் தசரதரின்  பக்தி ,
 நான்கு சகோதரர்களின் திருமண  வைபவம் , உற்சாகம் , ஆனந்தத்தை புகழ்ந்துகொண்டே சென்றார்.

 வாமதேவரும்  ரகுகுல  குரு ஞானி  வசிஷ்டரும் விஷ்வாமித்திரரின் கதையை வர்ணித்தனர்.
 அனுமதிபெற்று அனைவரும் தங்கள் தங்கள் இருப்பிடம் சென்றனர்.  முனிவரின் புகழ் கேட்டு ராஜா தசரதர் மனதிற்குள் தன் புண்ணியத்தின் மகிமையை நினைத்து
புளகாங்கிதம் அடைந்தார்.
ராமரின் புகழ் பாடல் மூவுலகங்களிலும் பாடப்பட்டது.

 ராமர் திருமணமாகி வந்ததில் இருந்து
 அயோத்தியாவில் எல்லாவித செழிப்பும்
 ஆனந்தமும் அதிகரிக்கத் தொடங்கியது.
திருமண வைபவ ஆடம்பர ஆனந்த உற்சாகத்தை சரஸ்வதியோ சேஷனோ கூட வர்ணிப்பது கடினம்.

  தன்னுடைய சொல்லை புனிதமாக்க
துளசிதாசர் ராமரின் புகழைப் பாடியிருக்கிறார்.
ராமரின் புகழ் கதை கடல் போன்று.  ஆழம் காண முடியாதது. கவிஞர் எப்படி   வர்ணிக்க  முடியும்? .
ராமரின்  திருமண மங்கள உற்சவ வர்ணனையை  மரியாதையுடன்  கேட்பவர்கள் , பாடுபவர்கள்
ஸ்ரீ ராமர் மாறும் ஜானகியின் கிருபையினால்
எப்பொழுதும் சுகமாக வாழ்வார்கள்.
அவர்கள் எப்பொழுதும் ஆனந்தமாக உற்சாகமாக இருப்பார்கள். ராமரின் புகழ்  மங்களத்தின் இருப்பிடம்.
    கலியுகத்தில்  சகல பாவங்களையும்                   போக்கும்
        ஸ்ரீ ராமச்சந்திரரின்
     இந்த முதல் படி முடிந்தது. 

No comments: