ராமசரித மானஸ் --பாலகாண்டம் --எண்பத்தைந்து
அந்த லக்ன பத்திரிக்கையை பிரம்மா தயாரித்து நாரதர் மூலம் அனுப்பினார். ஜனகரின் ஜோதிடரும் அதே லக்னத்தைக் குறித்து வைத்திருந்தார். பின்னர் ஜனகபுரியில்
லக்னம் குறித்தவரும் பிரம்மாதான்.
குறிப்பிட்ட நல்ல நேரம் வந்ததும் பிரம்மா ஜனகரிடம்
சொன்னார். அரசர் ஜனகர் புரோகிதர் சதானந்தத்திடம் ஏன்
தாமதம் எனக் காரணம் கேட்டார்.
சதானந்தம் மந்திரிகளை அழைத்தார்.
அவர்கள் எல்லா மங்களப் பொருள்களையும் அலங்கரித்துக்
கொண்டுவந்தனர்.
சங்கு, முரசு மேலும் பல வாத்தியங்கள் அலங்கரிக்கப்பட்டன.
அழகான சுமங்கலிப் பெண்கள் பாட்டு பாடிக்கொண்டிருக்கின்றனர்.புனிதமான அந்தணர்கள்
வேதங்களை ஓடிக்கொண்டிருந்தனர்.
எல்லோரும் மணமகன் வீட்டாரை அழைக்கச் சென்றனர்.
அவதநாட்டு அதிபதி தசரதர் வைபவத்தைப் பார்த்து ஜனகருக்கு தேவராஜ் இந்திரனும் தாழ்ந்தே காணப் பட்டார்.
ஜனகர் தசரதரிடம் நேரமாகிவிட்டது ,வாருங்கள் என்று அழைத்தார். இதைக்கேட்டதும் முரசுகள் முழங்கின.
குரு வசிஷ்டரிடம் கேட்டு குல வழக்கப்படி அரசர் தசரதர் முனிவர்கள் மற்றும் சாதுக்களுடன் புறப்பட்டார்.
அவதநாட்டு மன்னர் தசரதரின் அதிர்ஷ்டத்தையும் வைபவத்தையும் பார்த்து தன் பிறப்பு வீணாகப் புரிந்து
தசரதரைப் பலவிதத்திலும் புகழத் தொடங்கினார்.
தேவர்கள் அழகான நல்ல நேரம் வந்ததை அறிந்து முரசு முழங்கி பூ மாரி பொழிந்தனர். சிவன், பிரம்மா, மற்றும் தேவர்கள் குழு குழுவாக விமானத்தில் ஏறினர்.
அன்புடன் ஆனந்தமாக மனதில் உற்சாகமாக ராமரின் விவாஹத்தைப் பார்க்க வந்தனர். தேவர்கள் ஜனகபுரியைப்
பார்த்து மிகவும் அதிசயித்தனர்.அவர்களுக்கு தேவபுரி
ஜனகபுரியைவிட தாழ்ந்ததாகத் தெரிந்தது.
விசித்திரமான திருமண மண்டபம் , பலவிதமான அலௌகீகமான படைப்புகள் பார்த்து ஆச்சரியமடைந்தனர்.
நகரித்தின் ஆண்களும் பெண்களும் அழகின் சேமிப்பாகவும்
அழகாகவும் மேன்மை பொருந்திய தர்மாத்மாக்களாகவும்
நல்லொழுக்கமாகவும் நல்லவர்களாகவும் இருந்தனர்.
அவர்களைப் பார்த்து எல்லா தேவர்களும் தேவலோகப் பெண்களும் நிலவின் வெளிச்சத்தில் நக்ஷத்திரங்கள் போன்று ஒளிமயங்கி இருந்தனர்.
பிரம்மாவுக்கும் விஷேச ஆச்சரியமாக இருந்தது.
ஏனென்றால் அவர் தன்னுடைய படைப்புகளை எங்கும் பார்க்கவில்லை .
அப்பொழுது சிவ-பகவான் கூறினார் ---
நீங்கள் ஆச்சரியப்பட்டு தவறு செய்துவிடாதீர்கள்.
இதயத்தில் தைரியத்துடன் எண்ணிப்பாருங்கள் .
இது சீதை- ராமர் திருமணம். ராமர் பகவான் . சீதை பகவானின் சக்தி.
அவர்கள் பெயரை நினைத்தாலே தீயவைகள் எல்லாம் போய்விடும். அறம்.பொருள் ,இன்பம் ,வீடு ஆகிய நான்கும்
நம் கைப்பிடியில் வந்துவிடும்.
இவர்கள் அவனிக்கு அன்னையும் தந்தையுமான ஸ்ரீ சீதாராமர். காமனின் விரோதி . சிவபகவான் அவர்களுக்கு விளக்கினார்.

No comments:
Post a Comment