--ராமசரிதமானஸ் -பாலகாண்டம் -௮௭ எண்பத்தேழு
குல வழக்கப்படி குரு அவர்கள் மகிழ்ந்து கௌரி பூஜை , விநாயகர் பூஜை ,அந்தணர்களுக்கு பூஜை என பூஜைகள் செய்யப்பட்டது. தேவர்கள் வெளிப்பட்டு பூஜை ஏற்றுக்கொண்டு ஆசிர்வாதம் செய்தனர். பாயாசம் போன்ற மங்கள பதார்த்தங்களை தங்கக் கோப்பைகளிலும் கலசங்களிலும் நிரப்பி தயாராக வைத்திருந்தனர்.
சூரிய பகவான் அன்புடன் தானே வந்து தன் குல வழக்கப்படி செய்யும் சடங்குகளைச் சொன்னார் . அதை மிகவும் மரியாதையுடன் செய்யத் தொடங்கினர்.
இவ்வாறு எல்லா பூஜைகள் முறைப்படி செய்து சீதை அமர அழகான அரியணை போட்டு அமரவைத்தனர்.
ராமரும் சீதையும் ஒருவர் மற்றவரைப்பார்த்து அவர்களின் அன்பை வர்ணிப்பது சொற்களால் அடங்காது.
அதை கவிஞர்கள் ஏன் வர்ணிக்க வேண்டும். ?
வேள்வியின் போது அக்னி தேவர் தோன்றி மிக சுகமாக
ஏற்றுக்கொண்டார் . எல்லா வேதங்களையும் அந்தணர் வடிவில் வந்து சொல்கிறார்.
ஜனகரின் உலகப்புகழ் பெற்ற பட்டத்து ராணி சீதையின் அம்மாவை புகழ் . செயல் , அழகு எல்லாவற்றையும் ஒன்று திரட்டி பிரம்மா படைத்திருந்தார்.
காலம் அறிந்து மேன்மை பொருந்திய முனிவர்கள் அவரை அழைத்தனர். சுமங்கலிப் பெண்ககள் மரியாதையுடன் அவரை அழைத்து வந்தனர். சீதையின் தாயார் சுநயனா ஜானகியின் இடதுபக்கம் மிகவும் அழகாக தென்பாட்டார்.
அவர் அழகு ஹிமச்சலத்துடன் அவர் மனைவி மைனா போன்று இருந்தது.
புனிதமான மணமுள்ள மங்கள ஜலத்தால் நிரப்பப்பட்ட தங்க கலசம் மணிகள் நிரம்பிய அழகான பெரிய தாம்பாளங்கள்
ராஜாவும் ராணியும் தாங்களே கொண்டு வந்து ராமரின் முன் வைத்தனர்.
முனிகள் மங்களமான குரலில் வேதங்கள் படித்துக்கொண்டிருக்கின்றனர்.
நல்ல நேரத்தில் ஆகாயத்தில் இருந்து பூமாரி பொழிந்தது.
மணமகனைப் பார்த்து அரசனும் அரசியும் அன்பில் மூழ்கினர். தங்கள் மாப்பிள்ளையின் புனித கால்களை
பார்க்கத் தொடங்கினர்.
அவர்களுக்கு மிக ஆனந்தமாக இருந்தது.
ஆகாயத்திலிருந்தும் நகரத்திலிருந்தும் பாட்டு,முரசு
மற்றும் வெற்றி முழக்கம் , வாழ்க கோசங்கள் நாலாபக்கங்களும் எதிரொலித்தன.
காம தேவனை எட்டி உதைத்த சிவனின் இதய சரோவரில் எப்பொழுதும் ராமனின் தாமரை பாதங்கள் ராமருடையது.
அந்த பாதங்களை நினைத்தாலே கலியுகத்தில் உள்ள எல்லா பாவங்களும் போய்விடும்.
இந்த ராமரின் பாதம் பட்டதால் கௌதமரின் மனைவி அஹல்யா பாவ விமோசனம் அடைந்தாள் . அந்த புனித பாதங்களை மிக அதிர்ஷ்டசாலியான ஜனகர் கழுவி பூஜை செய்யும் நிகழ்விற்கு வெற்றி முழக்கம் செய்தனர்.
இரண்டு குலங்களைச் சேர்ந்த குரு ஸ்ரேஷ்டர்கள் மணமகன் மணமகள் இருவரின் கரங்களைச் சேர்த்து முறைப்படி
திருமணச் சடங்கை முடித்தனர்.
அனைவரும் தேவர்களும் மிகவும் மகிழ்ந்தனர்.
ஹிமவான் பார்வதியை சிவனுக்கு மணமுடித்து வைத்ததுபோலவும் , சாகரமானது விஷ்ணுவிற்கு
லக்ஷிமியை மணமுடித்தது போலவும் ,
ஜனகர் ஜானகியை ராமருக்கு மனம் முடித்துவைத்தார்.
மங்கள இசைக்கருவிகள் முழங்கின .
நகரமெங்கும் மங்கள இசை, பாடல்கள் , ஆனந்தம் .

No comments:
Post a Comment