ராவணனின் அவையில் மால்யவான் என்ற
அறிவுமிகுந்த அமைச்சர் இருந்தான்.
அவன் விபீசணனின் சொற்களைக் கேட்டு
மகிழ்ந்து சொன்னான் : --
அரசே! உங்கள் தம்பி விபீஷணன் நீதிவான்.
அவர் சொல்வதை ஏற்றுக்கொள்ளுங்கள்.
ராவணன் சொன்னான்: --
இந்த இருவரும் விரோதியை
புகழ்ந்துகொண்டிருக்கின்றனர் ,
யார் அங்கே! இவர்களை வெளியேற்றுங்கள்.
உடனே மால்யவான் வீட்டிற்குத் திரும்பி சென்றான்.
விபீஷணன் மறுபடியும் கைகூப்பி
வணங்கி சொன்னான் -:--
நல்ல அறிவு ,கெட்ட அறிவு,
எல்லோரின் மனதிலும் இருக்கிறது.
நல்ல அறிவு இருக்கும் இடத்தில்
எல்லாவித சுகங்களும் சொத்துக்களும் உள்ளன.
கெட்ட அறிவு உள்ள இடத்தில் துயரம்தான் இருக்கும்.
உங்கள் மனதில் தீய அறிவு வந்து அமர்ந்து விட்டது.
ஆகையால் நீங்கள் நன்மையை தீமையாகவும்
விரோதியை நண்பனாகவும் கருதுகிறீர்கள்.
அரக்கர்கள் குலத்திற்கு எமனாக இருக்கும்
சீதையின் மேல் உங்களுக்கு
அன்பு ஏற்பட்டுள்ளது.
அண்ணா! உங்கள் பாதங்களைப் பிடித்து வேண்டுகிறேன்: --
என்னுடைய வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளுங்கள்.
நீங்கள் தீமையில் இருந்து தப்பிக்க ,
காத்துக் கொள்ள சீதையை ராமரிடம் அனுப்பிவிடுங்கள்.
விபீஷணன் வேதங்கள் ,பண்டிதர்கள், புராணங்களில் இருந்து
பல நீதிகளை எடுத்து வர்ணித்தான்.
ஆனால் ராவணனுக்கு அவன் சொற்களைக் கேட்டு
மிகவும் கோபம் வந்துவிட்டது.
அவன் துஷ்டா! உனக்கு சாவு நெருங்கிவிட்டது என்றான்.
என் சாப்பாட்டை சாப்பிட்டு வாழ்பவன் நீ .
முட்டாளே! நீ விரோதியை விரும்புகிறாய்.
அவனைப் புகழ்கிறாய். அடே ,துஷ்டா!சொல்,
இந்த உலகில் நான் வெற்றி பெறாத சக்தி உண்டா ?
என் நகரத்தில் இருந்து கொண்டு
தபசிகளைப் புகழ்கிறாய்.
நேசிக்கிறாய்.
அவர்களிடம் சேர்ந்து அவர்களுக்கு நீதியைச் சொல்.
இப்படி சொல்லிவிட்டு ராவணன் அவனை உதைத்துவிட்டான். உதைத்தாலும் விபீஷணன் அவரின் கால்களைப் பிடித்துக் கெஞ்சினான்.
இந்த நிகழ்ச்சியைப் பார்த்து ,
சிவ பகவான் உமாவிடம் சொன்னான்--
உமா! சாதுக்களுக்கு உயர்ந்த குணமே இதுதான்.
இதுதான் அவர்கள் மகிமை.
தீங்கு விளைவித்தாலும் நல்லதே செய்வர்.
அங்கு விபீஷணன் ராவணனிடம் சொன்னான் :--
நீங்கள் என் தந்தையைப் போன்றவர்.
என்னை அடித்ததும் நல்லதே.
ஆனால் உங்களுக்கு ராம பஜனையில் தான் நலமுண்டாகும் .
பிறகு சத்தமாக சொன்னான்:--ஸ்ரீராமர் சத்தியமானவர்.
. ராவணா! உன்னுடைய சபை எமனின் வசத்தில் உள்ளது.
ஆகையால் நான் ராமரை சரணடைகிறேன்.
என்னைக் குறைகூறாதே
. பின்னர் தன் மந்திர்களுடன்
ஆகாய மார்க்கத்தில் ராமரிடம் சென்றான்.

No comments:
Post a Comment