Wednesday, November 9, 2016

விதித்தவன் அவன் ; துதிப்பவர்கள் நாம் --பக்கம் இரண்டு.

நாடு   விடுதலை  பெற்றது.
நாட்டிற்காக  பாடுபட்டு

 சிறை  சென்றவர்கள் ,
எல்லாவற்றையும் நாட்டிற்காக
 அற்பணித்தவர்கள்.
குடும்பத்தை , மனைவியை
 குழந்தைகளை
சொத்து சுகம்  அனைத்தையும்
 துறந்தவர்கள்.
நாட்டின்  சுதந்திரம்  முன்னேற்றம்  தவிர
எந்த   சிந்தனையும்  இல்லாதவர்கள்.
ஆங்கில ஆட்சியின்  சம்பளம்  வாங்கி
நாட்டு பக்தர்களையே  அடித்த
நம்நாட்டு கைக்கூலிகள்.
சர் ,ராவ் பஹாதூர்  ,என்று பட்டம்  பதவி  வாங்கிய
பட்டதாரிகள்.
இவர்கள்  எல்லோரும்  படித்தாலும்
மேதையாக  இருந்தாலும்
ஜாதிகளால்  மக்களைப்  பிரிக்கவும்
  காரணமானவர்கள்.
இந்த  அறிவாளிகள்  மதி  வேலை செய்யவில்லை.
விதி  வேலை   செய்தது.
மதிவேலை  செய்யும்   போது
பட்டத்தை பதவியைத்   துறந்தனர்.
 இந்தியர்களின்  தலை எழுத்தை
மாற்றப் போராடிய தலைவர்கள் .

அப்பொழுதும்  மதம் , ஜாதிகள் , உயர் ஜாதிகள் ,
 தாழ்ந்த ஜாதிகள்   இவர்களுக்குள்
இருந்த  வேற்றுமைகள்   மதியை  இழக்கச்செய்தது.
அப்பொழுது தான்  காந்திஜீ,
 நாட்டின்  தலைவராக  உருவெடுத்தார்.
மக்களின்  ஒற்றுமைக்காக
 ஹரிஜனன் என்ற  பெயரை உபயோகித்தார்.
ஹரிஜன ஆலயப்பிரவேசம் .
ஜமன்லால்  பஜாஜ்  மூலம் மக்களின்
 மனம் மாற்றி
ஆலயப்பிரவேசம் .
விதி  என்று ஒதுங்கிய  ஜாதி

மதியை  விட  விதி  என்று
ஒதுக்கப்பட்ட  இனம்
சமுதாயத்தில்  அந்தஸ்தைப் பெற்றது.
நேரம்  காலம்  அனைத்தும்
பாரத  விடுதலைக்கு    ஏற்ற
 சூழல்  உண்டானாலும்
தீவிரவாதம் மிதவாதம்
என்று   விதி விளையாடியது.
ஒரு  கலெக்டர் இந்திய கூலிப்படை
இந்திய  தேசபக்த்தர்களை
சத்யாக்ராஹிகளை பிரம்பால்  அடித்தது.
சுதந்திரப்போராட்டத்தின்
ஒருபகுதி  "வந்தேமாதரம்  "என்று
பிரம்படி  பட்டே  இரத்தம்  சிந்தியது.
தீவிரவாதிகளை  ஆங்கிலேயர்களால்
சமாளிக்க  முடியவில்லை.
தண்டவாளங்கள்  தகர்க்கப்பட்டது.
தந்திக் கம்பங்கள் செயலிழந்தன.
பல  ஆங்கிலேய  உய்ர்பதவியினர்
உயிர் எடுத்தனர்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்  படை
 தாக்க தயாரானது. 
இங்குதான் பாரதத்தின்  மதி  மங்கி
நேருவை  தலைவராக்கியது.
விதி   நாட்டை முன்னேற்றினாலும்
பாரதீய  ஒற்றுமைக்கான தேசீயக் கல்விக் கொள்கை
 மாநிலக்கல்வியாக    மாறியது.
மாநிலக்கட்சிகள்  தோன்றின.
ஊழல்வாதிகள் நாட்டின்  முன்னேற்றத்தில்
இந்தியர்களின்  மொழிகள் , கலைகள்
பண்பாடு  மாறத் துவங்கின.
உணவு ,உடை  மாறத் தொடங்கின.
விவசாய  கிராமங்கள் காலியாகத்துவங்கி உள்ளன.
விளை  நிலங்கள்  வீட்டுமனைகளாக
பொறியியல்  கல்லூரிகளாக  மாறிவருகின்றன,
பல  ஏரிகள் , குளங்கள் , கண்மாய்கள்  நீளம் அகலம்
குறைந்தோ  அல்லது முற்றிலும்
காணாமலோ
 போய்விட்டன.
போய்க்கொண்டிருக்கின்றன.
கல்வி  வாணிகமாகிக் கொண்டிருக்கிறது.
ஆலயங்களின்  இயற்கை  பக்தி , அமைதி சூழல்கள்
மறைந்து
வணிகர்களின் வளாகங்களாக ,
பக்தியும்  வணிகக் கண்ணோட்டத்துடன்
மாறி வருகின்றன.
எத்தனை  வெளி ஆடம்பரங்கள்.
தங்கரதம் , வைரக்கிரீடம் ,வெள்ளிரதம்.
இறைவன்  அருள் பெற  இவைகளை  இழுக்கக்  கட்டணம்.
அதில்  ஒரேநாளில்  நூறுபேர்  பணம்  கட்டி  இழுப்பது
இப்படி  ஒரு பக்கம்  மதியின் தாக்கம்.
மறுபக்கம்  விதியின்  தாக்கம்
நமுட்டுச் சிற்றிப்புடன்  சந்தர்பம்
 எதிர்நோக்கிக் கொண்டுள்ளது.
இப்பொழுது  விதியா?  மதியா ? மாயையின்  மயக்கமா ?
மதி இருந்தும்  மதுக்கடை செல்வது விதி  என்றே ஏற்கவேண்டும்.
விதித்தவன்   அவன்; துதிப்பவர்கள்  நாம்.
தேச பக்தர்கள், தேச துரோகிகள் , ஊழல்வாதிகள்
இது விதித்தவன்  அவன்.
துதிப்பவர்கள்  நாம்.



No comments: