Tuesday, November 1, 2016

ராமசரித மானசம் ---சுந்தரகாண்டம் - பக்கம் பதினைந்து

கரடிகளுக்கு  நகங்கள்
  தான்  ஆயுதம்.

அவைகள்  தன்  விருப்பப்படி

தங்கு  தடையின்றி  ஆகாய  மார்க்கத்திலும்  தரை  மார்க்கத்திலும்   சிங்கம்  போல்  கர்ஜித்து  சென்றன, அதன்  ஆராவரத்தால்  பயந்த  யானைகள்
 அச்சத்தால்  பிளிறின.
நில நடுக்கம் வேறு.
மலைகள் அசைந்தன.
கடல்  கொந்தளித்தது.
 கந்தர்வர்கள், தேவதைகள்,முனிவர்கள், நாகங்கள்,கின்னரர்கள்,எல்லோருமே

தங்கள்  இன்னல்கள் நீங்கியதற்கு மகிழ்ந்தன.
அநேக  கோடி  வானர  பயங்கர போர்வீரர்கள்
ஆரவாரத்துடன் ஓடின.
அவர்கள்  கோஷங்கள்  எழுப்பினர்--
 "மிக  பலம்  வாய்ந்த  கோசல  அரசர் ராமர்  வாழ்க".

அனைத்தும்  தாங்கும்  ஷேசனாகமும்
சேனையும்  சுமையை   தாங்க  முடியாமல் தவித்தது.
மீண்டும் மீண்டும் ஆமையின்  கடின  ஓடுகளைக் கடித்தது,
அப்பொழுது  விழுந்த  கோடுகள்
ராமரின் அழகான போருக்கு  புறப்படும்  யாத்திரையை
ஆமையின்  முதுகின்  மேல்
எழுதுவதுபோல்    இருந்தது.

இவ்வாறு ஸ்ரீ ராமர்  சமுத்திரக் கரையை  அடைந்தார்.
அங்கங்கு  வானரங்களும்  கரடிகளும் பழங்களை  சாப்பிடத்துவங்கின.
வானரங்கள்  இலங்கையை எரித்துவிட்டு  சென்றதிலிருந்து
அரக்கர்கள்  அச்ச்சத்துடனும்  பீதியுடனும்  இருந்தனர்.
அனைவருமே  அரக்கற்குலத்துக்கு
பாது  காப்பு  கிடையாது.
தூதனின்  பலத்தையே  வர்ணிக்க  முடியவில்லை  என்றால்
அவரே நகருத்துக்குள்  வந்தால்
நிலை  மிகவும்  மோசமாகிவிடுமே என்று கலக்கமடைந்தனர்.
மண்டோதரி  தூதர்களின்  செய்தி  அறிந்து  மிகவும்  கவலை  அடைந்தார்.
 அவள்  தனிமையில் ராவணனின்  பாதங்களில்  விழுந்து  மன்றாடினாள்.
அன்பரே!ஸ்ரீ ஹரியின்  விரோதத்தை  விட்டு விடுங்கள்.
நான்  சொல்வது  மிகவும்  பயனளிக்கக்  கூடியது.
மனதில் சிந்தித்துப்பாருங்கள்.
அவன் தூதனின்  வீரத்தால்  பல அரக்கர்களின்  மனைவிகளின்  கற்பங்கள் களைந்தன.
நீங்கள்  நன்மையை  விரும்புபவரானால்
மந்திரிகளை  அழைத்து  அவர்களுடன்  சீதையை  அனுப்பிவிடுங்கள்.
சீதை  இங்கு உங்கள்  குலத்தின்  தாமரையை  அளிக்க  வந்த குளிர்  இரவு போல் வந்துள்ளாள். சிவன் ,பிரம்மா போன்றவர் களாலும்  சீதையை  அனுப்பாமல்
நன்மை  ஏற்படாது.

ராமரின்  பாணங்கள்  பாம்பு  கூட்டம்  போன்றது. அரக்கர்கள்  கூட்டம் தவளைகள்  போன்றது.
அவைகள் விழுங்கும்  முன்பே  பிடிவாதத்தை  விட்டுவிட்டு
ஒரு உபாயத்துடன்  காப்பாற்றுங்கள்.

மண்டோதரியின் வார்த்தைகளைக்  கேட்டு  முட்டாளும்  ஆணவத்திற்கும்  புகழ்பெற்ற  ராவணன்  நன்கு  சிரித்தான். கூறினான் :-
பெண்களின்  மனம் உண்மையில்  மிகவும்  கோழைத்தனமானது.
மங்களமான  நேரத்திலும்  பயப்படும்.
உன் மனம்  மிகவும் பயந்துள்ளது.

வானரப் படைகள்  வந்தால் , அரக்கர்கள்  அவைகளைச்  சாப்பிட்டு
வாழ்வார்கள். உலகத்தைக்
காப்பவனே  பயப்படும்
ராவணனின்  மனைவி  அஞ்சுவது
நகைப்புக்குரியது.
இதைச்  சொல்லி  அவளை  ஆலிங்கனம்  செய்து அன்பைக்காட்டிவிட்டு  சென்றுவிட்டான்.

கணவன்  சென்றதும்  மண்டோதரி
கடவுளே  கணவனுக்கு  எதிரி  ஆகிவிட்டான்  என்று மிகவும்  வருத்த முற்றாள்.
ராவணன்  தன தர்பாருக்கு சென்றதுமே  படைகள்  கடலின் அக்கரையில்  குவிந்துவிட்டன  என்ற செய்தியை  அறிந்தான்.
அவன்  அமைச்சர்களிடம்  தன் ஆலோசனையைக்  கேட்டான்.
அனைவரும்  சிரித்து பேசாமல்  இருங்கள். இதில் ஆலோசனை  என்ன இருக்கிறது?
நீங்கள்  தேவர்களையும்  அரக்கர்களையும்  வென்று விட்டீர்கள்.
அப்படியிருக்க மனிதர்களும்  வானரர்களும் எம்மாத்திரம் ?



No comments: