Saturday, November 5, 2016

ராமசரிதமானஸ் ---சுண்டரகாண்டம் --பக்கம் இருபது

  ஸ்ரீ  ராமர்  விபீஷணனிடம்  :-

தோழா!   கேள்.

 என்னுடைய  இயற்கை  குணம்

என்னை  சரணடைந்தவர்களைக்   காப்பது.

உலகத்தின் ஜடப்பொருள்-உணர்வுள்ள உயிர்ப்பொருள்

உலகத்துக்கே  துரோஹியாக  இருந்தாலும் ,

என்னை  சரணடைந்தால்  ,

ஆணவம் , மோகம் , ஏமாற்றுதல், வஞ்சனை  போன்ற

 தீய குணங்களை

விட்டுவிட்டால்,

நான்  அவர்களை  மிக விரைவில்  சாது ஆக்கிவிடுவேன்.

இந்த  என் உயரிய  குணத்தை

 காபுஷுண்டி, சிவன் . பார்வதி ஆகியோரும் அறிவர்.


அம்மா, அப்பா, சகோதரன் ,மகன் , மனைவி,
 உடல், வீடு, தனம்,நண்பர்கள், குடும்பம்   இந்த  அன்பு
 நூல்களை  ஒன்றாக  ஒரே  கயிறில்  கட்டி,
அதன்  மூலமாக  என்  சரணங்களை  கட்டுபவன்  சம தர்ஷீ.

அவர்கள்  மனதில்  எவ்வித  ஆசையும்  இருக்காது,
மகிழ்ச்சி ,சோகம் ,பயம்  எதுவும்  இருக்காது.

  இப்படிப்பட்டவன்  பேராசைக்காரனுக்கு

பணத்தின்  மீது  இருக்கும்

பேராசைபோல்,

 எனக்கு  அவர்கள்   மேல்  அன்பு  இருக்கும்.


உன்னைப்போன்ற  சாதுக்கள்  எனக்கு  மிகவும்  அன்பானவர்கள்.

நன்றிவயப்பட்டு   நானும்  யாரையும்   ஏற்கமாட்டேன்.


       உருவவழிபாடு  செய்பவர்கள்,

      மற்றவர்கள்  நன்மையில்  ஈடுபடுகொண்டவர்கள்,

       நீதி  நியமங்களில்  திடமானவர்கள்,

       அந்தணர்களை  விரும்பி அவர்கள்  பாதங்களில்  வணங்குபவர்கள்,

       எனக்கு  என்  உயிரைவிட  மேலானவர்கள்.


     இலங்கை  வேந்தே ! கேள்.

 உன்னிடம்  மேலே  சொல்லப்பட்ட  அனைத்து

குணங்களும்  உள்ளன.  

அதனால்  எனக்கு  நீ   மிகவும்  பிரியமானவன்.


  ஸ்ரீ ராமரின்  சொற்களைக்  கேட்டு

 வானரக் கூட்டம்  மிகவும்  மகிழ்ந்தன.

      ஸ்ரீ  ராமர்  பெயரைகூறி  ஜெய  ராம் !

    என்று  முழக்கமிட்டன.

      விபீஷணன்  ஸ்ரீ  ராமரின்  பாதங்களைப்  பிடித்து

  தன் எல்லையில்லா

அன்பை   காட்டினான்.

    தேவரீர்!

 உங்களைக்  கண்ட   மாத்திரத்திலேயே  என்  மனதில்

 எஞ்சி இருந்த  ஆசைகளும்  போய்விட்டன,

உங்கள்  அன்பு  நதி அவைகளை அடித்துச்  சென்று விட்டது.

    சிவனின் மனதில் எப்பொழுதும் இருக்கின்ற படி யான

தங்கள் புனித பக்தியை  எனக்கு அருளுங்கள்.

அப்படியே  ஆகட்டும்  என்று  கடல்  நீரைக்  கேட்டான்.

   தோழா!   என்னை  தரிசித்தவர்கள்  பலனற்று போகமாட்டார்கள்.
 இது  உலகின் நீதி.

  இப்படி சொல்லி   ஸ்ரீராமர்  விபீஷணனுக்கு  பட்டாபிஷேகம்  செய்தார்.

  ஆகாயத்திலிருந்து    அதிக  அளவில்  பூ மழை பொழிந்தது.



     ராவணனின்  கோபக்  கனலில்  இருந்து

ஸ்ரீராமர்  விபீஷணனைக்  காப்பாற்றினார்.
  அவனக்கு  அகண்ட ராஜ்யத்தை அளித்தார்.

      ராவணனுக்கு  சிவன்  அளித்த  சொத்துக்கள்

  அனைத்தையும்  ஸ்ரீராமர்

விபீஷணனுக்கு   அளித்தார்.
 ராவணன்  பத்து  தலைகளை

 பலி கொடுத்து சிவனிடம்  பெற்றான்.  விபீஷணன்   ராமரை  சரணடைந்து  பெற்றான்.


   கிருபை  நிறைந்த  இப்படிப்பட்ட  பக்தவத்சலரான

  ராமரை  வணங்காதவர்கள்    கொம்பும் வாலும்  இல்லா மிருகங்கள்.


விபீஷணனை   தன் சேவகனாக  இறைவன்  ஏற்றார்.

ஸ்ரீராமனின்  இந்த  குணம்    வானரங்களுக்கு  மிகவும்  மகிழ்வைத்  தந்தது.

       அனைத்தும்  அறிந்த,

 எல்லோரின்  மனதிலும்  இடம்பெற்று  வசிக்கின்ற ,

எல்லாவடிவங்களிலும்  வெளிப்பட்டு,   வெளிப்படாத  ஸ்ரீராமர்

 பக்தர்களின்  மேல்  கிருபை  காட்டவும் ,

 அரக்கர்கள்  குலத்தை  அழிக்கவும்

மனித உருவில்  அவதரித்தார்.

  பிறகு  ஸ்ரீ  லங்காதி பதி   விபீஷணனி டமும்  சுக்ரீவனிடமும்

  சமுத்திரத்தை எப்படி  கடப்பது  என்று  கேட்டார்.

   இதில் பலவித  முதலைகள், பாம்புகள்,  மீன்கள்   நிறைந்துள்ளன.
மிகவும் ஆழமான  கடலை    கடப்பது  மிகவும்  கடினம்.

  விபீஷணன்   சொன்னான் ---

ஸ்ரீ ரகுநாதா!  உங்கள்  அம்புகள்  கோடிக்கணக்கான
  கடல்களை வறட்சி  அடையச் செய்துவிடும்.

ஆனால்  அது  நியாயமில்லை.

 கடலிடமே  பிரார்த்திப்போம்.
 
 சமுத்திரம்  உங்கள்  குலத்தின்  முன்னோர்களில்  ஒன்று.

 அவர் சிந்தித்து வழி  சொல்லுவார்.
 அப்பொழுது  மிகவும்  சுலபமாக
கரடிகளும்  வானரங்களும்  கடல்  கடந்து சென்றுவிடும்.

     ராமர்  தோழா! நல்ல உபாயத்தைச்  சொன்னாய்.

இப்படியே  செய்யலாம்.
கடவுள்  துணை  புரிவார்.

இந்த  ஆலோசனை இலக்குமனனுக்குப் பிடிக்கவில்லை.

 ராமரின் சொல்  கேட்டு அவன்  வருந்தினான்.

 லக்ஷ்மணன்   சொன்னான் -- அண்ணா!
தேவர்களை  எப்படி  நம்புவது?
கோபத்துடன்  சமுத்திரத்தை  வறட்சி  அடையச் செய்யுங்கள்.


 இந்த தெய்வம்  என்பது  கோழை களுக்கு ஆறுதல்  அளிக்கும் வழி .

 சோம்பேறிகள்  தான்  தெய்வத்தை அழைப்பார்கள்.


   இதைக்கேட்டு  ராமர் சிரித்துவிட்டு,

  இப்படியே  செய்யலாம்   தைரியமாக  இரு  என்று

சொல்லி  ராமர்  கடலுக்கு அருகில்  சென்றார்.

     முதலில்  தலைவணங்கினார்.

. பிறகு  தர்ப்பை விரித்து ஆசனம் செய்து  அமர்ந்தார்.


  விபீஷணன் வந்ததுமே  ராவணன்

 தன் தூதர்களைஅனுப்பினான்.

  அந்த  தூதர்கள்   குரங்கு உருவத்தில்

 இங்கு  நடப்பது  அனைத்தையும்  கவனித்தன.


  அவர்கள்    ஸ்ரீராமரின்   குணம்  கண்டு  ,
அடைக்கலமாக  வந்தவனை  காப்பாற்றும்
 அருள்  அறிந்து  புகழ்ந்தனர்..
  பிறகு  வெளிப்படையாக

 ராமரின்  குணங்களைப்  புகழ  ஆரம்பித்தனர்.

அவன்  தன்  கபட  வேஷத்தை மறந்துவிட்டான்.

  வானரர்களுக்கு  இவன்   ரவாணனின்  தூதன்  என்று  தெரிந்துவிட்டது.

 அவனைக்  கட்டி சுக்ரீவனிடம்  அழைத்துச்  சென்றனர்.

சுக்ரீவன்  அந்த தூதர்களை  அங்கஹீனமாக்கி  அனுப்பும்படி  கூறினான்.

   இந்த  கட்டளை கேட்டதும் வானரப்படை  அவர்களை சூழ்ந்து  சுழற்றியது.



 




No comments: