Tuesday, November 1, 2016

ராமசரிதமானஸ் ---சுந்தரகாண்டம் பக்கம் பதினாறு

ஹனுமானின்   சொல்லைகேட்ட   சீதை ,

   மகனே!அந்த வானரங்கள்

உன்னைப்போலவே  இருப்பார்கள் .

அரக்கர்களோ  மிகவும்

பலம்  பொருந்தியவர்கள்.

 போர்வீரர்கள்.

அதனால்  என்  மனதில்  அதிகக்  கவலை  உண்டாகிறது.

நீங்கள்  எப்படி அரக்கர்களை  வெல்வீர்கள்.


இதைக்  கேட்டதும்

 ஆஞ்சநேயர் தன்  உண்மைத்  தோற்றத்தில்  தோன்றினார்.

  தங்கக்  குன்று  போன்ற   மிகப்  பெரிய   உடல்,

எதிரிகளை  பயமுறுத்தும்  தோற்றம்.

மிக அதிக  வீரம் ,பலம் நிறைந்த பெரிய  தோற்றம்.

  ஆஞ்சநேயரின்  தோற்றம்  கண்டு

சீதையின்  மனதில்   நம்பிக்கை  உண்டாகியது.

ஹனுமான்  மீண்டும்  சிறிய  உருவத்தை  அடைந்தார்.

  சொன்னார் ---
  அன்னையே!  வானரங்களுக்கு  பலம்  கிடையாது.

  அறிவு  கிடையாது.  ஆனால்

      ஸ்ரீ  ராமரின்   வீரத்தால்  மிகச்  சிறிய பாம்பு  கூட
      கருடனை  வீழ்த்த   முடியும்.

      வீரமும்  தீரமும்  விவேகமும்  பலமும்  பொருந்திய

    ஆஞ்சநேயர்  சொற்களைக்  கேட்ட
    சீதைக்கு  மன  நிறைவும்

  மன  மகிழ்ச்சியும்  ஏற்பட்டது.

   சீதை    ஆஞ்சநேயருக்கு   ஆசி  வழங்கினார்.

   நீ பலம் மற்றும்  வீரத்தின்  இருப்பிடமாவாய்.

  நீ எப்பொழுதும்  இளமையுடன்  இருப்பாய்.

  சிரஞ்சீவியாக  இருப்பாய்.

  பிரபு  கிருபை  செய்யட்டும்.

   அன்னையின்  ஆசியால்  ஆஞ்சநேயர்  அகமகிழ்ந்தார்.

No comments: