Sunday, November 6, 2016

ராமசரித மானஸ்--துளசிதாஸ் --சுந்தரகாண்டம் --பக்கம் இருபத்து நான்கு

 
     தங்கள்  சஹோதரரின்  வழிகாட்டுதலினால்
    அவர்  சமுத்திரத்தினிடம்  வழி  கேட்டு

   பிரார்த்தனை  
செய்துகொண்டிருக்கிறார்.
 அவர்  மனதில்  சமுத்திர   ராஜனின்  மேல்  இரக்கம் உள்ளது.
 இல்லையெனில்  அதை  வரட்சியாக்க   தாமதிக்கமாட்டார்.

  தூதனின்    செய்தி  கேட்டு  ராவணன் சிரித்துக்கொண்டே  சொன்னான்--

  இப்படிப்பட்ட அறிவு  உள்ளதால் தான்
  வானரர்களை  உதவியாளனாக்கிஉள்ளான்.
    இயற்கையிலேயே  கோழையான  விபீஷணன்  சமுத்திரத்திடம் வேண்டச்சொல்லி  தன்    பயந்த
குணத்தை  நிரூபித்துள்ளான்.
 அட  முட்டாளே!  பொய்யான  புகழ்ச்சி ஏன்?   நான்  விரோதியின்  அறிவு மற்றும்  பலத்தின்  ஆழம் கண்டுகொண்டேன்.
விபீஷணனைப்  போன்று  கோழை மந்திரி  இருக்கும்போது
 உலகில்  வெற்றி  எங்கே? ஐஸ்வர்யம்  எப்படி கிடைக்கும் ?
  துஷ்ட  ராவணனின் சொல்  கேட்டு  , 

 தூதனுக்கு  கோபம்  அதிகரித்து விட்டது.
காலமறிந்து  தூதன்  லக்ஷ்மணன்  கொடுத்த  கடிதத்தைக்  கொடுத்தான்.
   தலைவா!ஸ்ரீ  ராமரின்    தம்பி  லக்ஷ்மணன்  இக்கடிதத்தைக்  கொடுத்தான்.  இதை  படித்து  உங்கள்  மனதை  குளிர்படுத்துங்கள்.

  இடதுகையால்  கடிதத்தை  வாங்கி  மந்திரியிடம்  படிக்கக்  கொடுத்தான்.
    கடிதத்தில்  எழுதி  இருந்தது---
அட  முட்டாளே!  வெறும்  பேச்சால்  மனதில் மகிழ்ந்து
உன்  குலத்தை நாசமாக்கிவிடாதே.
ஸ்ரீ  ராமரை  விரோதித்துக்கொண்டு  நீ  விஷ்ணு, பிரம்மா,  சிவன்  போன்ற
 மும்மூர்த்திகளை   சரணடைந்தாலும்
தப்பிக்க  முடியாது.
    நீ  உன்  ஆணவத்தை  விட்டுவிட்டு  ,
 உன்  தம்பி விபீஷணனைப் போல கடவுளின்
 பாத கமலங்களுக்கு  வண்டாகி  விடு.
அல்லது  துஷ்டனே! ராமரின் அம்புகளின்  நெருப்பிற்கு
 குடும்பத்துடன்    பலியாகி  விடு.
   கடிதத்தின்  செய்தி கேட்டதுமே  ராவணன்  மனதில்  பயந்துவிட்டான்.
 ஆனால்  முகத்தில்  பயத்தை  வெளிப்படுத்தாமல்  புன்சிரிப்புடன்
சத்தமாக  சொன்னான்--
பூமியில்  இருந்து  ஆகாயத்தை கையில்  பிடிக்க
 முயற்சிப்பதுபோல்  சின்ன தவசி வீணாக பேசுகிறான்.
   தூதன்  சொன்னான்--ஆணவப் பேச்சை விட்டு
 உண்மையை  புரிந்துகொள்ளுங்கள்.
கோபத்தை  விட்டு நான்  சொல்வதைக்  கேளுங்கள்.
ராமனுடனான  விரோதத்தை விட்டுவிடுங்கள்.
 ராமர்  அனைத்து  உலகங்களுக்கும்
கடவுள்.
ஆனால்  அவருடைய  குணம்  மிகவும்  மென்மை.
நீங்கள்  அவரை சந்திததுமே  கருணை  காட்டுவார்.
  உங்களுடைய எந்த குற்றத்தையும்  மனதில்  வைக்கமாட்டார்.
ஜானகி அவர்களை  ஸ்ரீ  ரகுநாதரிடம் ஒப்படையுங்கள்.  
நான்  சொல்லுவதை  செய்யுங்கள்.
ஜானகியை ஒப்படையுங்கள்  என்று
  சொன்னதுமே  துஷ்ட் ராவணன்  தூதனை   உதைத்துவிட்டான் ,

    தூதனும் விபீஷனனைப்போன்று
  ராமரை சிரம்  தாழ்த்தி வணங்கி  சரணடைந்தான்.
 தன்  கதையை  சொல்லி  ராமரின்  கிருபையால்
நற்கதி  அடைந்தான்.
  சிவபகவான்   இந்த நிகழ்ச்சியைக்  கண்டு
தன் மனைவி  பவானியிடம்  --
 ஹே பவானி!  அந்த  தூதன்  ஞானி.
 அகஸ்த்தியரின்  சாபத்தால்  அரக்கனாகிவிட்டான்.
  இப்பொழுது  மீண்டும்  முனிவராகி  ராமரை
மீண்டும் மீண்டும்  வணங்கி  தன்
ஆஷ்ரமத்திற்குச்  சென்றுவிட்டான்.
        இக்கரையில்  மூன்று  நாளாகியும்
  கர்வமுள்ள  சமுத்திரம்  ராமரின்  வேண்டுகோளை  ஏற்கவில்லை.
 ஸ்ரீ ராமர்  கோபத்துடன் லக்ஷ்மணனை
 அழைத்து அம்பையும்  வில்லையும்  எடுத்துவா,
  பயமின்றி  அன்பு  ஏற்படாது.
 நான்  அக்னி-பாணத்தால்   சமுத்திரத்தை
 வற்றச்செய்து  விடுகிறேன்.
 முட்டாளிடம்  பணிவு,  கொடியவனிடம்  அன்பு,
 கஞ்சனிடம்  தாராள  குணத்தை  உபதேசித்தல்  ,
 அன்பில்  கட்டுண்ட  மனிதனிடம் ,
 அறிவின்  கதை,  மிகவும்  பேராசைக்காரனிடம்   வைராக்கியம்,
 கோபமாக  உள்ளவனிடம்  அமைதி,
 காமம்  உள்ளவனிடம்  இறைவனின்  கதை  எல்லாம்  எடுபடாது.
   விளையாத  நிலத்தில்   விதை விதைத்தது  போலாகும்.
  வீண்.
இதை சொன்னதும்  ரகுநாதன் வில்  எடுத்து அம்பை எய்தினான்.
 ராமரின்  இந்த  செயல்  லக்குமணனுக்கு  மிகவும்  மகிழ்ச்சியைத்  தந்தது.
கடவுள்  பயங்கரமான  பாணத்தை  எய்தினார்.
 சமுத்திரத்தின் இதயத்துக்குள் தீ  ஜ்வாலை  பற்றியது.
  திமிங்கிலம்,  பாம்பு,  மீன்கள்  கவலைப்  பட்டன.
  சமுத்திரமானது  தன்  ஜீவராசிகள்  எரிவதைக்  கண்டு
தன்  ஆணவத்தை விட்டுவிட்டு
 அந்தணனின்  வடிவில்  தங்கத் தாம்பாளத்தில்
  ரத்தினங்களை  நிரப்பி கொண்டுவந்தது.

  இதைப்பார்த்து  காகபுசுண்டி  கருடனிடம்  சொன்னார் --

 கேளுங்கள். எத்தனை உபாயங்கள்  செய்தாலும்
 வாழை வெட்டினால் தான்  பழுக்கும்.
 தாழ்ந்தவன் வேண்டுகோளை  கேட்கமாட்டான் .
அவன்  மிரட்டினால்  தான்  பணிவான்.

  சமுத்திரம்  பயந்து  பிரபுவின்  கால்களைப்  பிடித்து  வேண்டியது :-
 என்  தவறை  மன்னித்துவிடுங்கள்.
ஆகாயம், வாயு,  அக்னி,நீர் , பூமி  அனைத்துமே  ஜடப்பொருள்கள்.
  உங்கள்  கிருபையால்  மாயை ஆனது இவைகளை  சிருஷ்டிக்காக படைத்திருக்கிறார்.
  எல்லா  நூல்களும்  இதையே  சொல்கின்றன.
 உங்களின் கட்டளைப்படி  இருப்பதிலேயே  இவைகளுக்கு ஆனந்தம்.
  எனக்கு  பிரபு  தண்டனை அளித்து  நல்லதே  செய்துள்ளார்.
 ஆனால்  ஜீவன் களின்  நல்ல  கெட்ட குணங்களையும்
 நீங்கள்தான்  அளித்துள்ளீர்கள்.
முரசு, நாகரீகமற்றவன் , சூத்திரன் .மிருகங்கள், பெண்கள்  ஆகியவை
 தண்டனைக்கு உரியவர்கள்.

   பிரபுவின்  பிரதாபத்தால் நான் வரண்டுவிடுவேன்.
 சேனை  கடந்து சென்றுவிடும்.
 எனக்கு பெருமை இருக்காது.
உங்கள்  கட்டளையை  மீற முடியாது.
 வேதங்கள்  உங்கள்  புகழை இப்படித்தான்  பாடுகின்றன.
   இப்பொழுது    நான்  உங்கள்  விருப்பபடி  நடந்துகொள்கிறேன்.
  சமுத்திரம்  சொன்னதைக்  கேட்டு
  ராமர்  புன்முறுவலுடன்  சொன்னார் :-
 வானர சேனை  கடப்பதற்கு  வழி  சொல்.
  சமுத்திரம்  சொன்னது --நாதா!  நீலன் ,நலன்  இருவரும்  வானர  சகோதரர்கள்.
 அவர்கள்  குழந்தையாக  இருக்கும்போது  ரிஷிகளின்  ஆசியைப்  பெற்றுள்ளனர்.
  அவர்கள்  ஸ்பர்சித்தால்  பெரிய பெரிய  மலைகள்  கூட
 சமுத்திரத்தில்  மிதக்கும்.
  நானும்  பிரபுவை  தியானம்  செய்து
 என்  சக்திக்கேற்ற  உதவி  செய்வேன்.
  நாதா!இவ்வாறு  சமுத்திரத்தைக்  கட்டுக்கு கொண்டுவந்தால்
  மூவுலகிலும்  உங்கள்  புகழ்  பாடப்படும்.
  இந்த பாணத்தால்  வடக்கு  திசையில்
  இருக்கிற  துஷ்ட  மனிதர்களை  வதம்  செய்யுங்கள்.
  கிருபாகரனும்  போரில் தீரனுமான  ராமர்
  சமுத்திரத்தின்  மனவேதனை  அறிந்து
 உடனே  துஷ்டர்களை  வதம்  செய்தார்.
 வேதனையை  போக்கினார்.

  ஸ்ரீ ராமரின் பெரும் வலிமையையும்

ஆண்மையையும்  கண்டு  சமுத்திரம்  மகிழ்ந்தது,
  அது  அந்த  துஷ்டர்களின்  எல்லா குணங்களையும்  சொன்னது.
 பிறகு  ராமரின்  பாதங்களை வணங்கி சென்றுவிட்டது.
   கடல்  தன்  வீட்டிற்குச்  சென்றுவிட்டது.
  ராமருக்கு கடலின்  ஆலோசனை  பிடித்து  விட்டது.
இந்த  குணம்  கலியுகத்தின்  பாவங்களை போக்கக் கூடியது.
இதை துளசிதாசர்  தன் அறிவிற்கு ஏற்றபடி  பாடியிருக்கிறார்,
  ஸ்ரீ ராமருடைய  குணம்  சுகத்தின்  இருப்பிடம்,
 சந்தேகத்தைப்  போக்கக் கூடியது, துன்பத்தைப்  போக்கக்  கூடியது.
  முட்டாள் மனமே!

  நீ  உலகின்  எல்லா  ஆசைகள் நம்பிக்கைகளை  விட்டுவிட்டு
  இடைவிடாமல் ராமரின்
  புகழைப் பாடு.   கேள்.

  ராமரின்  புகழ்  எல்லா  மங்களங்களையும்  தரக்கூடியது.
 இதை  மிக மரியாதையுடன்  கேட்பவர்கள் ,
 எந்தவித  கப்பலுமின்றி,
 பவசாகரத்தைக்  கடந்துவிடுவார்கள்.
      உலகின்  எல்லா  பாவங்களையும்  போக்கக்கூடிய  ராமச்சரிதமானசின் சுந்தரகாண்டம்  நிறைவுற்றது.

****************************************








 


No comments: