Friday, November 11, 2016

பாரத மொழிகள்

kaalai  வணக்கம் .
கா லை  வணக்கம்.
கொஞ்சும்  தமிழ்
இறைவன் வளர்த்த மொழிகள்
பிடித்த  மொழிகள்
ஆதிமொழிகள்
தமிழும்  சமஸ்கிருதமும்.

திருக்குறள் உலகப் பொதுமறை .

இறைவனின்  சிறப்பைத்   திருக்குறள்

குறிப்பிட்ட நாமாவளி இன்றி
யாதும்  ஊரே  யாவரும்  கேளீர் --என்றும்
வையகம் வாழ்க என்றும்
கூறும்  பாரத  மொழிகள்.
அனைத்து மொழிகளிலும்
வரகவிகள் , தெய்வீக ஒழுக்க நெறி  வாழ்க்கை .
வள்ளுவர் எவ்வளவு  எளிதாக விளக்குகிறார் :-
ஆமை  போல்  ஐந்தடக்கல்  ஆற்றின் ,
எழுமையும்  ஏமாப்புடைத்து.
 
ஐந்து உணர்வு உறுப்புகள்  இவைதான்
அனைத்து நன்மை தீமைகளுக்குக்
களுக்கும்   மூலமாக    ஆண்டவன்  படைத்துள்ளான்.
நல்லதைப்   பார்த்தால்   நினைவில்
நிற்பது     மிகக்  கடினம் .
தீயவை  மறக்காது .
ஒரு   திருக்குறளை   ஆபாசமாக  
நண்பன்  எழுதிக்
கொடுத்தால் ,  எட்டுவயதில்  கேட்டது 
என்பதுவயதிலும்  மறக்காது.
அதே   வள்ளுவர் குறள்  மறந்து விடுகிறது.
திரைப்பட     பாடல்  நினைவு  இருப்பது போல்
கடவுள்  வாழ்த்துக்கள்  நினைவில் இருக்காது.
கடவுள் உருவம் கண்களில்  பதியாது .
கட்டழகிகளின்  உருவும் கண்ணை விட்டு விலகாது.

அதற்குத்தான்  கபீர்  ,
கருவிழியை   கட்டிலாக்கி ,
அதில்  ஆண்டவனை  படுக்கவைத்து,
கண்     இமையை  என்ற கதவால் மூடி
வெளியேறவிடாமல்
தியானிப்பதே   தியானம். என்கிறார்.
வடமொழி, கடினமான தமிழ் மொழி
அதைவிட எளிய கிச்சடி மொழி. இது     படிக்காத
கபீரின்  உபதேசம் .

திருக்குறள்
மலர்    மிசை ஏகினான்  மானடி சேர்ந்தார்  நிலமிசை  நீடு  வாழ்வார்.

கபீர் சொல்கீறார் --
கெட்டட்டவனைப்  பார்க்கச்  சென்றேன் ,
கேட்டவன்   உலகில் யாரும்  இல்லை.
என்   மனதில்  தேடுகின்றேன்  என்னைப்போல்
கெட்டவன்  யாரும் இல்லை.
இதை  வெளிநாட்டு அறிஞன் சொல்கிறான் என்றால்  அவன்  அறிவாளி
உன்னையே
  நீ
  அறிவாய்..

அவனுக்கு  முன்பே  வள்ளுவர் ,
ஏதிலார் குற்றம்  போல்  தன் குற்றம் காணின்
தீதில்லை மண்ணும் உயிருக்கு. .

தெய்வீகப்புலவர்   வள்ளுவர்.

படிக்காத  குரு  பக்தியால் உயர்ந்தவர் கபீர்.

இந்திய   மொழிகள்  அனைத்திலும்  தெய்வீக சிந்தனைகள்.
ஆனால் நாம்  ஆங்கில மோகத்தால்
அரிய  ஒழுக்கம்  நேர்மை தரும் இலக்கியங்களை
கேட்பதில்லை .
விளைவு     காதல், பெற்றோரை  மதியாமை,
தனியாக    வாழ்தல் , நிம்மதி இன்மை,
தலாக் , திருமணமின்றி சேர்ந்து வாழ்தல்.
தற்கொலை , சேர்ந்து தற்கொலை , ஆணவக்கொலை, கள்ளக் காதலால் மனைவி கொலை. கணவன் கொலை, குழந்தை கொலை, குழந்தைகளால் பெற்றோர்  கொலை.

  முதலில் ஒழுக்கம். ஆனால்  இன்று சுட்டி டி வி யில்
அம்மா அப்பாவை அடித்தார் . திட்டினார், கல்லூரி சென்றால் காதலிப்பேன் பாய் பிரண்டு  என்று
பிஞ்சு   மனதில் நஞ்சைக்  கலக்கும்
தொகுப்பாளர் . ரசிக்கும்  பெற்றோர்கள் . சமுதாயம்.
சிந்திப்பீர்.
இந்திய மொழிகள் -வடமொழி , தமிழ்  மிகப் பழமையான மொழிகள்.
அவைகளில்   இருந்து தோன்றிய வடமொழிகள்,
தென்   மொழிகள்
அறிய    தெய்வீக  நூல்கள் கொண்டவை.
அறிவோம் .  படிப்போம். பின்பற்றுவோம் .

" ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.

No comments: