Sunday, November 6, 2016

அதுதானே உன் நீதி

அனைவருக்கும்
காலை வணக்கம் .

இறைவா!
மறையும் மனிதனை நீ படித்தாலும்
எத்தனை குணங்களை நீ படைத்துள்ளாய் ?

உனக்கே நியாயமா ?
அவனியில் நடக்கும் அநியாய நியாயங்கள்.

நியாயங்களுக்குத்தானே சோதனை தருகிறாய் ? வேதனைகள் தருகிறாய்.
ஊழல் கூத்தாடுகிறது.
கையூட்டுப்பேய் இரக்கமற்று ஆடுகிறது.
ஆட்சியைப்பிடிக்க ஆயிரமாயிரம் கொடிகள்.கோடிகள்.
கோடிகள் இருந்தால் நீதிமன்ற தீர்ப்பு மாறும்.
கோடிகள் இருந்தால் அதிகாரம் இருந்தால்
தீர்ப்புகள் வரவே வராது.
அசத்திய சோதனை யாரும் எழுதவில்லை.
சத்திய சோதனைகளே எழுதப்பட்டுள்ளன.
சத்தியமான வழியில் சங்கடங்களே அதிகம்.
ஹரிச்சந்திரனுக்கு சோதனைகள்
ஹரிச்சந்திரனுக்கு எதிர்வீட்டுக்காரன்
என்றே பேச்சு .
நீதிமன்றங்கள்
நிதிக்கான மன்றங்கள் என்றே பேச்சு.

எங்கே நியாயம்?
நீதிமன்றம் செல்லாமல்
ஆக்கிரமிப்பு நிலங்கள் போகட்டும் என்ற
ஏழைகளின் கண்ணீர் உனக்குப் புரியாதோ ?
அறிந்தும் அறியாமல்
அநியாயங்களுக்கு
ஆண்டவன் /பகவான் /இறைவன் துணைபோகும்
வையகமாக இருக்கின்றது எதனால்.
நியாயங்கள் வாழ்ந்தாலும்
அநியாயங்கள் ஆர்பாட்டம்
அவனியினில்
எங்கும் உண்டு.
ஆண்டவா! இறைவா!பகவானே !தேவுடா!
என்றே வாழும் பக்தர்கள் கூட்டம் பெருகும்
கலிகாலம்.
ஆனால் பலகோடிகளுக்கு அதிபதியே
ஆட்சி மன்றம்.
மன்னர்காலத்திலும் ,
மக்களாட்சி காலத்திலும்
நிதிதானே பிரதானம் .
நீதிக்கு எங்கு அதிகாரம்.
மூவரைக்கவர்ந்த பீஷ்மர்
பிதாமகர் என்றே கூறும்.
நீதிகள் நியாயங்கள் என்றாலும்
நிதிகளின் அடிப்படையே வெல்லும்
அனைத்துக்கும்
உன் தண்டனை மரணமே நிச்சயம் .
கோடீஸ்வரன் ஆனாலும்
கோவண ஆண்டி ஆனாலும்
ஒருபிடி சாம்பல் அல்லது புழுக்களுக்கு இறை.
அழுகிய நாற்றம்
அரசனானாலும் ஆண்டியானாலும்
சவம் /பிணம் .
அதுதானே உன் நீதி.

No comments: