Wednesday, November 9, 2016

சரணம் !

காலை வணக்கம் .
இன்றைய நாள்
இனிய நாளாக ,
இறைவனின் அருள் பெறுகின்ற நாளாக

இதயம் இறைவனையே சரணடையும் நாளாக
அமைய வாழ்த்துக்கள்.
குருவாரம் குரு பகவான் அருள்,
சதி சாய் அருள்
ஆஞ்சநேயன் அருள்
நல்லதே , நா நயமானதே
நன்மை பயப்பதே,
நாடி வந்தோருக்கு உதவிகள் புரிந்தே,
நித்தமும் நின் கருணை உண்டென்று
நீயே எனக்கு கதி என்று
நெஞ்சில் உன்னைத்தவிர
வேறு நினைவின்றி
நேர்மை வழியில் செல்ல
எனக்கு அருள்வாய்
நொடிப் பொழுதிலும் உன்னை - மறவா
நோய் தந்தருள வேண்டுகிறேன்.
அன்பே சரணம் .
ஆறுதலே சரணம்
இறைவனே சரணம்
ஈகையே சரணம்
என்னருளே சரணம்
ஏற்றம் தருபவனே சரணம்
ஐயமின்றி உன்னடி சரணம்.
ஒப்பில்லா தூமணியே சரணம்.
ஓம் -ஓங்கார மூர்த்தியே சரணம்.
ஔசதமே சரணம் .
சரணம் !சரணம்! சரணம்!



No comments: