Wednesday, November 16, 2016

ஆன்மீக நாடு


ஆன்மீக நாடு
ஆலயங்கள் அதிகம்.
அன்றாட செய்தித்தாள்கள்
கற்பழிப்பு ,கொலை , கொள்ளை
ஊழல், கருப்புப்பணம் . 
நீதிபதிகள் தீர்ப்பே சரியில்லை -சொல்வது
ஒரு நீதிபதி.
தான் கொடுத்த தீர்ப்புக்கு தவறென்று கண்ணீர்.
மற்றொரு நீதிபதி தீர்ப்பு தவறு என்று வாதம்
என்னத்தைச் சொல்ல.
எண்ணத்தை பகர்கிறேன் .
ஊழலுக்கு எதிரான ௫௦௦,௧௫௦௦ ரூபாய்கள் செல்லாது என அறிவிப்பு.
மக்கள் விரும்புகின்றனர்.
ஆனால் மாயா, மம்தா, ஸ்டாலின் ,கனி,லாலு
ஒன்று சேரப்போகிறார்களாம்.
ஊழல் பேர்வழிகள்
இரண்டுஜி மூனுஜி என்னாச்சு?
காவேரி நீர் பிரச்சனை ஒன்று சேரா கட்சிகள்
கள்ள நோட்டு ஒழிப்பில் ஒன்று சேர்கின்ற தாம்.
நாற்பதாண்டு மாறி மாறி ஆட்சி என்ன ஆச்சு.
ஆன்மீக நாடு ஆலயங்கள் அதிகம்
ஊழலும் அதிகம்.
நீதிமன்றம் சரியில்லை .
சாமான்யன் சொல்லவில்லை
நீதிபதி சொல்லுகிறார்.
ஆன்மீக நாடு.
ஆலயங்கள் அதிகம்.
ஊழல்கள் அதிகம் .
ஆலயங்கள் தோறும்
ஏமாற்றுவோர் அதிகம்.
திருடர்கள் ஜாக்கிரதை.
மணிபர்ஸ் ஜாக்கிரதை
ஏமாற வேண்டாம் ஏமாறவேண்டாம்
நான் சொல்லவில்லை
ஒலிபெருக்கி கூவுகிறது.
ஆங்காங்கே எழுதி வைத்த
அறிவிப்புகள்
கூறுகின்றன.-நான் சொல்லவில்லை
நாளேடுகள்
சொல்கின்றன.
ஆன்மீக நாடு
ஆலயங்கள் அதிகம் .
ராவணர்களும் அதிகம்
பீஷ்ம பிதா மகன்களும் அதிகம்
சூர்ப்பனைகிகளும் அதிகம்
பெண்கள் கடத்தல் ,
மாற்றான் மனைவி கடத்தல்,
மாற்றான் கணவன் கடத்தல்
காவலர்கள் மோசம்
நான் சொல்லவில்லை
இந்த சின்னத்திரை
நாடகங்கள் சொல்கின்றது.
ஆன்மீக நாடு ஆலயங்கள் அதிகம்
ஊழல்கள் அதிகம்
லஞ்சங்கள் அதிகம்,
வைரக்கிரீடம் ,
தங்க கவசம் ஊழல் பணத்தில் வேள்வி
தேர்தல் வெற்றி, நீதிமன்ற தீர்ப்பு
எல்லாமே சாதகம் -நான்
சொல்லவில்லை நாடே சொல்லுது.
வாதங்கள் முடிந்தும்
தீர்ப்பு ஒத்திவைப்பு
அதற்குள்ளே ஒரு நாடகம்
நான் சொல்லவில்லை
நாடே பேசுது.
ஆன்மீக நாடு ஆலயங்கள் அதிகம்
உண்மை பேசினால் நாடு இழப்பாய் ,
மனைவி விற் பாய் ,
சுடுக்காட்டு காவலனாவாய் -எச்சரிக்கை
நான் சொல்லவில்லை
கதை சொல்லுது.
ஆன்மீக நாடு .
ஆலயங்கள் அதிகம்
ஊழல்கள் அதிகம் .
தமிழ்க்கடவுள்
சொக்காய் போட்ட வட இந்தியக் கடவுள்
மக்களுக்கு பொதுவான கடவுள் இல்லை
ஜாதிக்கு ஒரு கடவுள்
சாதிக்க கடவுள் இல்லை
கிரிஷ்ணனை வழிபடுவோருக்கு
கருப்பணசாமி பிடிக்காது.
கிருஷ்ணன் என்றால் கருப்பு
வடமொழி சொன்னால் கடவுள் கேட்கும்
தமிழ் மொழி சொன்னால்
நாலாயிர திவ்ய பிரபந்தம்
வடகலை தென்கலை கச்சேரிக்கு போகுது .
நாமம்   போடு வதில் சண்டை
நாமாவளி சொல்லுவதில் சண்டை
வடமொழி அர்ச்சனை
தென்மொழி அர்ச்சனை
தமிழில் அர்ச்சனை
ஆண்டவனுக்கு தெரிந்த மொழி எது?
சுப்பன் என்றால் தாழ்ந்த இனம்
சுப்பிரமணி என்றால் உயர்ந்த இனம் .
ஆலயங்கள் அதிகம்
ஆன்மிகம் அதிகம்
வேற்றுமைகள் அதிகம் .
இறைவா! ஆண்டவா! பகவானே! கடவுளே !
இந்த அழைப்பில் ஜாதி தெரியும்
மதம் தெரியும்.
இனம் தெரியும் .
வேற்றுமை தெரியும்.
ஆன்மீக நாடு,
ஆலயங்கள் அதிகம் .

No comments: