Monday, December 26, 2016

ராமசரிதமானஸ்- பாலகாண்டம் --இருபத்தி மூன்று

ராமசரிதமானஸ்- பாலகாண்டம் --இருபத்தி மூன்று
----------------------------------------------------------------------------------------------
  உமாதேவி சென்றதும்
தக்ஷனின் மகள் சதிக்கு நல்லது நடக்காது.
நான் விளக்கியும் சந்தேகம் நீங்கவில்லை  என்றால்
கடவுள் எதிர்மாறியாக உள்ளார்.

 இப்பொழுது உமாவிற்கு நலமில்லை.
 ராமர் எதை அமைத்து வைத்திருக்கிறாரோ
அதே , நடக்கும்.
தர்க்கம் செய்வதால் எதுவும் நடக்காது.
 இவ்வாறு சொல்லி சிவன்
ராமநாமத்தை ஜபிக்க ஆரம்பித்தார்.
 சதி ராமரின் இருப்பிடம் சென்றார்.
சதி தன் தோற்றத்தை சீதாவாக
 மாற்றிக்கொண்டு சென்றார்.
அவர் எண்ணப்படி மனிதர்களின்
மன்னன் ராமர் வந்துகொண்டிருக்கிறார்.
 சதியின் போலி  தோற்றம் கண்டு ,
லக்ஷ்மணன் பிரமித்துவிட்டார்.
அவர் மனதில் சீதை என்ற பிரமை உண்டாகிவிட்டது.
அவரால் எதுவும் செய்யமுடியவில்லை.
மிகவும் கம்பீரமாக நின்றார்.
அவருக்கு ராமரின் சக்தி தெரியும்.
 சகலமும் தெரிந்த  ,
அனைவரின் மனதையும் புரிந்த  ராமர்
சதியின் கபட நாடகத்தைத் தெரிந்துகொண்டார்.
அவரை தியானித்தாலே
அறியாமை போய்விடும்.
அதே அனைத்துஞானமும் கொண்ட ராமர்.
 அங்கும் சதி தன்னை மறைக்க முயன்றார்.
அது பெண்ணின் குணம்.
மாயையின் பலத்தை மனதில் வர்ணித்து ,
ராமர் சிரித்து மென்மையாக பேசினார் :-
முதலில் கைகள் கூப்பி சதியை வணங்கினார்.
 தன் தந்தைபெயருடன் தன் பெயரையும் சொன்னார்.
ரிஷபவாகனர் சிவன் எங்கே ?
இங்கே நீங்கள் காட்டில் தனியாக ஏன்
சுற்றிக்கொண்டிருக்கிரீர்கள். ?
ஸ்ரீ ராமரின் மென்மையான,
ரஹசியம் நிறைந்த விசாரிப்பாள்
 சதிக்கு நாணம் வந்துவிட்டது.
பயந்துகொண்டே பேசாமல் சிவனிடம் சென்றார்.
நான் சங்கரர் சொல்வதை ஏற்கவில்லை.
அறியாமையால் ராமர் மீது குற்றம் சாட்டினேன்.
இப்பொழுது சிவனுக்கு என்ன பதில் சொல்லுவேன்?
என்ற கவலை ஏற்பட்டது.
மனதில் பயங்கர எரிச்சல் உண்டாகியது.
ராமர் சதியின்  கவலையை தெரிந்து
தன் சக்தியைக் காட்டினார்.
ராமர் சீதை  லக்குமனனுடன்
முன்னே போய்க்கொண்டிரிந்தார்.
தன் சச்சிதானந்த உருவம் காட்ட ,
 பிரிவுத் துன்ப நிலை கற்பனை மாற்ற
இயற்கைநிலையாக  மாறினார்.
பின்னால் திரும்பி பார்த்தாலும்
சகோதரன்  லக்ஷ்மணனுடனும்
சீதையுடனும் அழகாக தென்பட்டார்.
எங்குபார்த்தாலும் ராமர் காட்சியளித்தார்.
நல்ல மேன்மையான சித்தர்களும் ,முனிவர்களும்
அவருக்கு சேவை செய்துகொண்டிருந்தனர்.

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் -௨௧ இருபத்திரண்டு.

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் -௨௧  இருபத்திரண்டு.

  இராவணன்  தன் மரணத்தை
 மனிதனின் கையால் தான் நிகழ வேண்டும்
 என வரம் கேட்டிருந்தான்.
 பிரம்மாவின் வாக்கை கடவுள்
 உண்மையாக்க விரும்பினார்.

சிவன்  நான் அருகில் இல்லை என்றால்
வருந்தவேண்டியிருக்கும் , எந்த
உபாயமும் தோன்றவில்லையே என்று
 எண்ணிக்கொண்டிருந்தார்.

இந்த  நேரத்தில் தான்  தாழ்ந்த எண்ணம் கொண்ட
ராவணன் மாரீசனை உடன் அழைத்துக்கொண்டு
அவனை   பொய் மானாக்கி,
ஏமாற்றி சீதையை கடத்திச் சென்றான்.
அவனுக்கு ராமனின் உண்மையான செல்வாக்கு
தெரியவில்லை.
மானைக்கொன்று விட்டு லக்ஷ்மனனுடன் குடிலுக்குத்
திரும்பினால்,  குடிலில் சீதை இல்லை.
ராமரின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.
ராமர்  மனிதனைப்போன்றே மனைவியைப் பிரிந்து
கவலைப்பட்டார்.  இரு சகோதரர்களும்  சீதையைத் தேடி
அலைந்து கொண்டிருந்தனர்.
இவர்கள் இவ்வாறு சேர்த்தல்-பிரிதலை அனுபவித்ததில்லை.
அவர்களுக்கு இந்த  நேரடியான பிரிவித் துன்பத்தை
சஹிக்க முடியவில்லை.
 ஸ்ரீ ரகுநாதரின் பா பாத்திரம் மிகவும் விசித்திரமானது.
அதை சிறந்த உயர்ந்த ஞானிகள் தான் அறிவார்கள்.
மந்த புத்தி உள்ளவர்கள் , மோகத்தின் வசத்தால்
மனதில் வேறுமாதிரியாகத்தான்  புரிந்து கொள்வார்கள்.
  சிவபகவான்  இந்த சந்தர்பத்தில்  ஸ்ரீ ராமரைப் பார்த்தார்.
மனதில் மிகவும் மகிழ்ந்தார்.
இந்த அழகுக் கடலான ராமரை
கண்கள் குளிர பார்த்தார்.
ஆனால் சந்தர்ப்பம் சரியில்லாததால்
 அறிமுகப் படுத்திக் கொள்ளவில்லை.

 காமதேவனையே அழித்த  சிவபகவான்
சச்சிதானந்தம் வாழ்க என்று  கூறிச் சென்றார்.
உடன் வந்த பார்வதி தேவிக்கு எதுவும் புரியவில்லை.
அவரின் ஆனந்தம் கண்டு உமாதேவியாருக்கு ஐயம் ஏற்பட்டது.
அவர் தன்  மனதில் நினைத்துக்கொண்டார் --
வையகம்  முழுவதும் சிவபகவானை வழிபடுகிறது.
அவர் உலகநாதன். தேவர்கள், முனிவர்கள், மனிதர்கள் ஆகிய
அனைவரும் வணங்குகின்றனர்.
அப்படிப்பட்டவர் ஒரு ராஜகுமாரனை
சச்சிதானந்த பரம தாம் என்று வணங்குகிறார்.
அவனின் அழகில் மயங்கி இதயத்தில்
 அன்பை தடுக்கமுடியமல் ஆனந்தத்தில் மூழ்கி இருக்கிறார்.
  அனைத்து இடங்களிலும் வியாபித்திருக்கின்ற,
மாயை இல்லாத, பிறவியில்லாத, ஆசையில்லாத ,
எந்த வேற்றுமையும் இல்லாத  இந்த பரம்பொருள் ,
வேதங்களாலும் அறியப்படாதவர்,
மனிதனாக அவதரித்துள்ளார்.
தேவர்களின்  நன்மைக்காக மனிதனாக அவதரித்த விஷ்ணு ,
சிவபகவானைப் போலவே , எல்லாமறிந்த ஞானி.
அவர் ஞானக் கிடங்கு, லக்ஷ்மியின் கணவர், அசுரர்களின் சத்துரு
விஷ்ணு அக்ஞானி போன்று மனைவியைத் தேடுவார்.
  சிவனின் வாக்கு ஒருபொழுதும் பொய்யாகாது.
சிவபகவானுக்கும் சகலமும் தெரியும்.
பார்வதியின் மனதில் இந்த பெரும் சந்தேகம் தோன்றியது.
அவருக்கு எந்த விதத்திலும் இதை அறியும் ஞானம் தொன்றவில்லை

 பவானி இந்த ஐயம் பற்றி எதுவும் வெளியடவில்லை.
ஆனால் பகவன் சிவன்  எல்லாம் அறிந்துகொண்டார்.
அவர் சாதியிடம்  சொன்னார்--உனக்கு பெண்ணின் குணம் உள்ளது.
இப்படிப்பட்ட ஐயத்தை  ஒருபொழுதும்
மனதில் வைத்துக்கொள்ளக் கூடாது.
 அகத்திய முனி  புகழ்ந்தவர் இவரே.
நானும் இவரின் பொருட்டு என் பக்தியை வெளிப்படுத்தினேன் .

இவர்தான் என் இஷ்ட தெய்வம்  ஸ்ரீ ரகுவீரர்.
அவருக்கு ஞானி-முனிகள் எப்பொழுதும் தொண்டாற்றுகின்றனர்.
 இவரின் புகழை ஞானிகள், முனிகள்,யோகிகள், சித்தர்கள்
இடைவிடாமல் பவித்திர மனத்தோடு அவர் புகழ் பாடுகின்றனர்.
வேதங்களும், புராணங்களும் , சாஸ்த்திரங்களும் அவர் புகழ்
பாடுகின்றன. அவர்தான் எங்கும் நிறைந்துள்ள ,
அனைத்து அண்டங்களுக்கும் ஸ்வாமியனவர்.
மாயாபதி, தினந்தோறும் மிகவும் சுதந்திரமானவர், பிரம்ம உருவமான பகவான் ஸ்ரீ ராமர்.  தன் பக்தர்களின் நன்மைக்காக , நலனுக்காக ,
ரகுகுல மணியாக அவதரித்துள்ளார்.
 பலமுறை விளக்கியபோதும் ,
உமாவின் மனதில் அவர் உபதேசம்  புரியவில்லை.
சிவனுக்கு பகவானின் மாயையின் வலிமை புரிந்தது.
அவர் புன்சிரிப்புடன் உமாவிடம் சொன்னார்--
உன்மனதில் சந்தேகம் அதிகமாக உள்ளது. நீயே போய் பரீக்ஷித்துப் பார்.
(சோதனை செய்துபார் ) நீ திரும்பும் வரை இந்த ஆல மரநிழலில்
அமர்ந்திருக்கிறேன்.
உன் அறியாமையால் ஏற்பட்ட ஐயம் போகவேண்டும்.
விவேகத்துடன் சிந்தித்து அதைச் செய்.
சிவனின் ஆக்ஞை பெற்று உமா சென்றார்.
எப்படி சோதிப்பது  என்று நினைக்கத் தொடங்கினார். 

ராமசரித மானஸ்-பாலகாண்டம் -இருபத்தொன்று -துளசிதாஸ் .

                                   ராமசரித மானஸ்-
               பாலகாண்டம் -இருபத்தொன்று -               துளசிதாஸ் 

            இந்த  நீரில்  தன்  இதயத்தை
            தூய்மைப் படுத்தாதவர்கள்  கோழைகள்.
            கலிகாலத்தின்  மூலம் ஏமாற்றப்பட்டவர்கள்.
             வஞ்சிக்கப்பட்டவர்கள்.

             தாகமான மான்  கானல் நீரை
             நீர் என்று நினைத்து
         குடிக்க ஓடி தண்ணீர் கிடைக்காமல்
           வேதனைப் படுவதுபோல் ,
       கலியுகத்தில் ஏமாற்றப் பட்டவர்கள்

       வேதனைப் படுவார்கள்.
             தன் அறிவுக்கு ஏற்றபடி
             இந்த அழகான

 மானசின்    பண்புகளை எண்ணி ,
அதில் தன் மனதை தூய்மைப் படுத்தி ,
பவானி சங்கரை தியானம் செய்து ,
கவி  துளசி தாசர்    இந்த
அழகான கதையை சொல்கிறார்.

  நான் இப்பொழுது ரகுநாதனின் சரண கமலங்களை  வணங்கி   இதயத்தில்  அமர்த்தி
அவர்களுடைய பிரசாதங்களைப் பெற்று ,
இரண்டு ஸ்ரேஷ்ட முனிவர்களது  சம்பாஷணையை  வர்ணிக்கிறேன்.
    பாரத்வாஜ முனி பிரயாகையில் வசிக்கிறார்,
அவருக்கு ராமரை மிகவும் பிடிக்கும். 

ராமரின் மேல் அதிக அன்பு உண்டு.
அவர் பெரிய தபஸ்வி.
 பற்றற்ற மனம் கொண்டவர்.
புலன்களை  வென்றவர்.  

 தயாவான். கடவுளின் வழியில்
  செல்லும் சமர்த்தர்.
மாசி மாத சூரியன்
மகர  ராசியில் வரும்போது
எல்லோரும் பிரயகைக்கு வருகிறார்கள்.
தேவர்கள், அசுரர்கள்,  கின் னர்கள் , மனிதர்கள்
அனைவரும் மிக சிரத்தையுடன் திரிவேணி சங்கமத்தில்  ஸ்நானம் செய்கின்றனர்.
ஸ்ரீ வேணிமாதவின் சரண
கமலங்களை பூஜிக்கிறார்கள் . 

அக்ஷய மரத்தைத் தொட்டு
அவருடைய உடலும் மனதும்  ஆனந்தமடைகின்றனர்.
பரத்வாஜரின் ஆஷ்ரமம்
மிகவும்  பவித்திரமானது.
மிகவும் அழகானது.
ஸ்ரேஷ்ட முனிகளின் மனதிற்குப் பிடித்தது.
கங்கையில் ஸ்நானம் செய்ய வருபவர்கள்
அனைவரும் முனிவரின் ஆஷ்ரமத்தில்
ஒன்று சேர்கிறார்கள்.
காலையில் ஸ்நானம் செய்து பகவானின்
புகழ் கதையை சொல்கிறார்கள்.
கடவுளை நிரூபித்தல், அறத்தின் இருப்பிடம் ,
தத்துவத் துறை  போன்றவற்றை வர்ணித்து 

விளக்குகிறார்கள்.  மாசிமாதம் முழுவதும் இவ்வாறு  பகவத் விஷயங்களைப் பேசுகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் இந்த சம்பவங்கள் நடக்கின்றன. மகர ராசியில் ஸ்நானம்  செய்து
தங்கள் ஆஷ்ரமத்திற்கு செல்கின்றனர்.
  ஒருமுறை அனைத்து ரிஷிகளும் சென்றவுடன்
பரத்வாஜர்  யாக்ய வல்கிய முனிவரின் சரணங்களைப்  பற்றி  தன்னுடன் வைத்துக்கொண்டார்.
 மரியாதையுடன் அவரின் பாதங்களை கழுவி பூஜித்து உயர்ந்த  ஆஷ்ரமத்தில்
உட்கார வைத்தார்.
முனிவரின் புகளை வர்ணித்தார். பின்னர்
மென்மையான குரலில் பேசினார்--
தலைவரே!  என் மாநாட்டில் மிகப்பெரிய ஐயம்
எழுந்துள்ளது. வேதங்களின்   தத்துவங்கள் எல்லாம்  உங்கள் கைப்பிடியில் உள்ளது. அந்த சந்தேகங்களை   கேட்கும் போதே ,எனக்கு பயமும் ,
வெட்கமும் வருகிறது. நீங்கள் தான் என் சந்தேகத்தைப் போக்க  வேண்டும்.
நீங்கள் நான் உங்களை பரீக்ஷ்ப்பதாக  நினைக்கக் கூடாது  என்பது பயம் . இத்தனை வயதாகியும்
ஐயத்துடனேயே இருக்கிறேனே என்று வெட்கப்படுகிறேன். தங்களிடம் நிவாரணம் கேட்கவில்லை என்றால்
அக்ஞானியாகவே இருந்து விடுவேன்.
குருவிடம் எதையுமே மறைக்காமல் இருக்கவேண்டும், மறைத்தால் குறையில்லா
ஞானம் கிடைக்காது  என்று வேதங்கள், புராணங்கள் , முனிவர்கள்  அனைத்தும்  சொல்கின்றன.
 இதை நினைத்துத் தான்  நான் என் அறியாமயை
சொல்கிறேன். தாங்கள் என் மீது கிருபைகாட்டி
என் ஐயத்தைப் போக்குங்கள்.
     நன்மையே செய்பவரும் ,குணநிதியுமான ,
 நிலையான  பகவான் சிவன் இடைவிடாமல் தொடர்ந்து ராம நாமத்தையே
ஜபித்துக்கொண்டே  இருக்கிறார்.
 உலகில் நான்கு ஜாதி மக்கள் இருக்கின்றனர்.
 காசியில் இறந்தால் அனைவருமே பரமபதம்
அடைகின்றனர்.
 முனிவர்களின் அரசே! அதுவும் ராமரின் மகிமைதான்.  சிவபகவானும் ராமநாமத்தைத் தான்  உபதேசிக்கிறார். இதனால் தான் பரமபதம் காசியில் மரணித்தால் கிட்டுகிறது.
 அந்த  ராமர்  யார் ?என்று உங்களிடம்  கேட்கிறேன்.
எனக்கு விளக்கிக் கூறுங்கள்.
 அவதநாட்டு அரசர் தசரதகுமாரரை  அனைவருக்கும்  தெரியும். அவர்  மனைவியின் பிரிவால் அதிக கஷ்டப்பட்டார். கோபப்பட்டு
போரில் ராவணனை வதம்  செய்தார்.
 ராமர் அவர் தானா ? அல்லது வேறு ஒரு  ராமர்  இருக்கிறாரா ?  சிவபகவான்  வழி படும்  ராமர்  யார் ? நீங்கள் உண்மையின் இருப்பிடம். அனைத்தும் அறிந்தவர்.  எனக்கு ஞானம் தர கூறுங்கள்.
  என்னுடைய மிகப்பெரிய பிரம்மை அகல இந்த இராமகதையை விளக்கமாகக் கூறுங்கள்.
 யாக்யவல்கியர்  புன்முறுவலுடன் இராமகதையை நீ அறிவாயா எனக் கேட்டார்.
   நீ மனம் ,வாக்கு மற்றும்  கர்மத்தால்  ராம  பக்தன்.  நீ ராமனின் ரஹசியமாயமான  குணத்தை  அறிய விரும்புகிறாய். ஆகையால் பெரிய மூடன் போன்று இப்படிப்பட்ட வினாவைக்
கேட்டிருக்கிறாய்.
  நீ மரியாதையுடன் கவனமாகக் கேள்.  நான்  ராமரின் அழகான கதையைக்கேள்.
மிகப்பெரிய  அக்ஞானம் மகிஷாசூரன் போன்றது.
ஸ்ரீ ராமரின்  கதை பயங்கரமான காளி போன்றது.

 ராமரின் கதை நிலவின் கதிர் போன்றது.  இதை சாதுக்களான சகோர  பறவைகள் எப்பொழுதும் பெற்றுக்கொண்டிருக்கின்றன.
இப்படிப்பட்ட சந்தேகத்தை பார்வதியும் கேட்டார்.
அப்பொழுது மகாதேவர் விஸ்தாரமான பதில் அளித்தார். இப்பொழுது  எனது அறிவின்படி சிவன் மற்றும் பார்வதியின் உரையாடலைச் சொல்கிறேன்.
முனிவரே! கேள். அந்தக்கதை எந்த காலத்தில்  எத்தன காரணமாக ஏற்பட்டது . கேட்டால் உன் துன்பங்கள் பறந்தோடும்.
  ஒருமுறை திரேதா யுகத்தில் சிவபகவான் அகஸ்த்த்ய முனிவரிடம் சென்றார்.  அவருடன் ஜகத்ஜனனி பவானியும் இருந்தார். ரிஷி அவர்களை   அனைத்து உலகிற்கும் கடவுள் என நினைத்து பூஜை செய்தார்.
அகஸ்த்திய முனிவர் இராமகதையை விஸ்தாரமாக  அவர்களுக்குக் கூறினார்.
அவர்களும் அதை மிக சுகமளிக்கும் கதை என
கவனமாகக் கேட்டனர்.  பிறகு முனிவர் சிவபகவானிடம்  அழகான ஹரி பக்தி பற்றி கேட்டார். சிவபகவானும் அவர் கேட்கத் தகுதி உள்ளவர் என அறிந்து பக்தியை நிரூபித்தார்.
ஸ்ரீ ராமரின் குணங்களின் கதையை சொல்லிக்கொண்டும்  கேட்டுக்கொண்டும்
சிவபகவான் அங்கிருந்தார், பிறகு முனிவரிடம் விடைபெற்று தேவி தக்ஷ குமாரியுடன் கைலாசம்  சென்றார்.
  அந்த தினங்களில் தான் ஸ்ரீ ஹரி உலகின் பாரத்தை சுமக்க ரகுவம்சத்தில் அவதரித்தார்.
அந்த அவினாஷி பகவான் அப்பாவின் வாக்கை நிறைவேற்ற தவ வேடத்தில் தண்டகாரண்ய வனத்தில்  வாழ்ந்துவந்தார்.
இறைவனின் தரிசனம் எப்படி கிடைக்கும் ?
அவரோ ரஹசியமாக  அவதரித்திருக்கிறார்.
நான் சென்றால் மக்கள் அறிந்து கொள்வார்களே என்று சிவபகவான் மனதில் எண்ணிக்கொண்டிருந்தார்.
 ஸ்ரீ சங்கரர் இந்த குழப்பத்தில் இருந்தார். பார்வதி தேவிக்கு இந்த ரஹசியம்  தெரியாது . சிவபகவானின்  மனதில் ஆவல் அதிகரித்துக்கொண்டிருந்தது.







   

           

Sunday, December 25, 2016

रामाचार्तितामानस बाल खांड -२०. ராமசரித மானஸ்-பாலகாண்டம் -௨௦ இருபது.

रामाचार्तितामानस बाल खांड  -२०.  ராமசரித  மானஸ்-பாலகாண்டம் -௨௦ இருபது.

  மூன்று  விதமான  கேட்பவர்களின்  சமுதாயம்  தான் ,

இந்த  நதியின்  கரைகளில்  அமைந்துள்ள
 சிற்றூர் , பேரூர் மற்றும் மாநகரங்கள்.

சாதுக்கள் -சந்நியாசிகளின் சபைகள் தான்
   வேர் . உவமைகூரமுடியாத  அயோத்யா நகரம்.

 அழகான  புகழ்  என்ற  சரயு  நதி ,
ராம  பக்தி  என்ற  கங்கையில் சேர்கிறது.
 இலக்குவனுடன்  போரிட்ட  ராமனின்
போரிட்ட புகழ் என்ற மகாநதி
சோன் அதில் வந்து  சந்திக்கிறது.
 இரண்டுக்கும்  இடையில் பக்தி என்ற  கங்கைநதியின்
ஞானம் , வைராக்கியத்துடன் ,அழகாக அலங்கரிக்கிறது.
 இப்படி  மூன்றுவித  தாபங்களையும்   அச்சுறுத்தும்
மூன்று முக நதி  ராமர் என்ற கடலின்  பக்கம் ஓடிக்கொண்டிருக்கின்றன.
 
புகழ் என்ற சர்யு நதி , ராமச்சரித்திரத்தின்  மூலம்.
இது ராமபக்தி  என்ற  கங்கையில்  சேர்கிறது.
இதனால்  இது கேட்கின்ற  நல்ல மனிதர்களின்
மனதை   பரிசுத்தமாக்கிவிடும்.
இதற்கு நடுவில் இருக்கின்ற வெவ்வேறு விதமான
விசித்திரக்  கதைகள் ,தான்  நதிக்கரையில்  உள்ள
வனங்களும் தோட்டங்களும் .

 ஸ்ரீ பார்வதி -சிவனின் திருமண மணமகன்  ஊர்வலத்தின்
இந்த  நதியில் மிகவும் அதிகமான
எண்ணற்ற ஜலராசிகள் ஜீவன்கள்  வாழ்கின்றன.
ஸ்ரீ ராமரின் பிறப்பினால் எழும் ஆனந்த  வாழ்த்து ஒலிகள்
இந்த  நதியின் வண்டுகள் மற்றும் அலைகளின்
அழககாகும்.
 இந்த  நான்கு  சகோதரர்களின்   மழலை  குணங்களின்
சித்திரம் வண்ண வண்ண  தாமரைகள்.
மகாராஜா  தசரதர்  மற்றும் ராணிகள் , குடும்பங்களின்
புண்ணிய காரியங்கள் தான்  வண்டுகளும் நீர்வாழ்  பறவைகளும்.
 சீதையின்  சுயவரத்தின்  அழகான
 கதைகள் தான் இந்த நதியின்
அழகான  காட்சிகள்.

அநேக அழகான எண்ணங்களின் வினாக்கள் தான்
இந்த  நதியின்  படகுகள்.
அதன் விவேகமுள்ள  பதில்கள் தான்
கெட்டிக்கார படகோட்டி குஹன் .
இந்த  கதையைக் கேட்டபின்
தங்களுக்குள் ஏற்படும்  சர்ச்சைகளால்  தான் ,
இந்த நதியின் உதவியால் கரையில்  செல்லும்
பயணிகள் சமுதாயம்  அழகு   பெற்றுத்கி திகழ்கிறது.

பரசுராமரின் கோபம் இந்த  நதியின் பயங்கர  வேகம்.
ஸ்ரீ  ராமரின் மென்மையான பேச்சுக்கள்
அழகாக  கட்டப்பட்ட  படித்துறைகள்.

 ஸ்ரீ ராமர் மற்றும் அவர் சகோதரர்களின்  திருமண வைபவங்கள் தான்

இந்த  நதியின்  மக்கள்  நலம் தரும் வெள்ளமாகும் .

அது  எல்லோருக்கும் சுகமளிக்கக் கூடியது.
இதைக் கேட்பதிலும் சொல்வதிலும்
ஆனந்தமடைபவர்கள்  புண்ணிய  ஆத்மாக்கள்.
அவர்கள் மகிழ்ச்சியாக இந்த  நதியில் ஸ்நானம் செய்கின்றனர்.
 ராமரின்  பட்டாபிஷேகத்தில்
  மங்களமான அலங்கரிக்கப்பட்ட   காட்சி ,
இந்த திருமணவிழாவில்  நதிக்கரையில் ஒன்றுசேர்ந்த
பயணிகளின்  கூட்டம்.
கைகேயியின்  தீய புத்தி  தான்
  இந்த  நதியின்  சேரும் சகதியுமாகும்.

அதனால்  தான் இந்த அழகு
 கதையில் பெரும்  விபத்து
ஏற்பட்டது.

 எல்லா எண்ண முடியா     துன்பங்களை போக்கும்
  சாந்தி தரும்   பரதனுடைய பாத்திரம் நதிக்கரையில்
செய்யப்படும் ஜபங்கள் , யாகங்கள்.
  கலியுகத்தின் பாபங்களையும் துஷ்டர்களின்
தீய குணங்களை வர்ணிப்பது தான் நதியின் சேரும்-சகதியும்
 கொக்குகளும் காகமும் ஆகும்.

 இந்த புகழ்  என்ற  நதி ஆறு  பருவகாலங்களிலும்  அழகானது.
எல்லா காலங்களிலும் மிகவும் சுகமும் மிகவும் புனிதத் தன்மையும்
அளிக்கக் கூடியவை. இதில்  சிவா-பார்வதியின்  திருமணம்
முன்பனிக்காலம் . ராமர் சீதையின் திருமணம் குளிர்காலம் .

 ஸ்ரீ ராமரின் திருமண சமுதாயக்கதைதான்
 ஆனந்தமும் மங்களமும்
 தரக்கூடிய  பருவங்களின்   அரசன் வசந்தகாலம் .
ராமரின் வனவாசம் சஹிக்க முடியாத கோடைகாலம்.
 வன -வழிக்கதைகள் தான் கடுமையான
வெய்யிலும் சூடான காற்றும்  ஆகும்.
  அரக்கர்களுடன் செய்த  அச்சுறுத்தும்
 போர்கள் தான்  மழை காலம்.
அவை தேவகுலம் என்ற  நெல்
 செடிகளுக்கு அழகான   நலன் செய்யக்கூடியவை.
ராமரின் ஆட்சி  காலத்தில் கிடைத்த
  சுகம் ,பணிவு, பெருமைகள்  தான்
களங்கமற்ற  புகழ்  தரும்  குளிர்காலம்.
 பதிவிரதை யில் மிக  மேன்மையான மணி  போன்ற
 சீதையின்  கதை   இந்த  நீரின் களங்கமற்ற
ஒப்பில்லா குணங்கள்.
பரதனின் குணம் நதியின் அழகான குளுமை .
அது  எப்பொழுதும் ஒன்றே போல் இருக்கும்.
 அதை  வர்ணிக்க  இயலாது.

நான்கு சகோதரர்கள் ஒருவருக்கு ஒருவர்  பார்ப்பது ,
பேசுவது , சந்திப்பது,  ஒருவர்  மற்றவரை  நேசிப்பது
சிரிப்பது , அழகான சகோதரத்துவம்
இந்த நீரின்  இனிமையும் மணமும்  ஆகும்.

என் மனக் கருத்து, பணிவு, எளிமை
 இந்த அழகான களங்கமற்ற  நீரின்
மென்மை குணமாகும்.
இந்த  நீர்  மிகவும் விசித்ரமானது.
கேட்டாலே குனமளிக்கக் கூடியது.
நம்பிக்கை என்ற தாகத்தை தணிக்கக் கூடியது.
மனதின்  அழுக்கை நீக்கக் கூடியது.
  இந்த  நீர்  ராமரின் அன்பான அழகின்  அன்பிற்கு
சத்து தரக்கூடியது.
கலியுகத்தின் எல்லா  பாவங்களையும்
அதனால் உண்டாகும் வெறுப்புக்களைப் போக்கவல்லது.
உலகின் பிறப்பு -இறப்பு  என்ற உழைப்பை  போக்கக் கூடியது.
திருப்திக்கே திருப்தி அளிக்கக் கூடியது.
பாவம்,தாபம், தரித்திரம் மற்றும்
குறைகளை போக்கும்
ஆற்றல் கொண்டது.
காமம் ,குரோதம், ஆணவம் ,மோகம் போன்றவற்றை
அழித்து புனித ஞானத்தையும் , வைராக்கியத்தையும்
அதிகரிக்கச் செய்யக் கூடியது.

இதில்  மரியாதையுடன்  குளிப்பதால் ,
இதை  அருந்துவதால் இதயத்தில் இருக்கின்ற
எல்லா பாவ-தாபங்கள் போய்விடுகின்றன.






























ராமசரித மானஸ்-பாலகாண்டம் --௧௯ பத்தொன்பது =துளசிதாசர்.

ராமசரித  மானஸ்-பாலகாண்டம் --௧௯ பத்தொன்பது =துளசிதாசர்.

        புண்ணியாத்மாக்கள் , சாதுக்கள்,
       ஸ்ரீ  ராமனின் குணங்களைப் புகழ்தல்   ஆகியவை
      விசித்திரமான நீர்வாழ் -பறவைகள்
      இந்த ராம சரோவரில்.
     சாதுக்கள் -சந்நியாசிகள்   போன்றோரின் சபையே
     நதியின் நாலபக்கங்களின் மாந்தோப்புகள்.
     சிரத்தையான  பக்தி  வசந்தகாலம்  என்று
      சொல்லப்பட்டிருக்கிறது.

      பலவித   பக்தியின்  நிருபணங்கள் ,
     மன்னிப்பு, தயை , புலனடக்கம்  இந்த  
     சரோவரில் (ஏரியில் )உள்ள   கோடி  
     மண்டபங்கள்.

     அதனுடைய  பூக்கள்  மனக்கட்டுப்பாடு,
      அஹிம்சை, வாய்மை , திருடாமை ,பிரம்மச்சரியம் ,
      சேர்த்துவைக்காமை  முதலியவை.
      காலைக்கடன் , திருப்தி, தவம், சுயபடிப்பு ,கடவுள்  தியானம்
     இவையும்  பூக்களே.
     இதன்  பலனாக  கிடைப்பது   ஞானம்.  

     வேதங்களில் சொல்லப்பட்டது ஹரியின்  சரணங்களில்  அன்பு
    காட்டுவது   ஞானப்பழத்தின்  ரசமாகும்.
     இந்த ராமசரித  மானசின்  சந்தர்பத்தில் கூறப்பட்ட
    துணைக்   கதைகள் கிளி , குயில்  போன்ற   வண்ணப்    பறவைகள்,

  கதையில்  வரும் திகில்   நிகழ்ச்சிகள்  தான்
    நந்தவனம், தோட்டம் மற்றும் வனம் ,

  மன மகிழ்ச்சி  என்பது   அழகான  பறவைகளின்  சஞ்சாரங்கள்.
 பரிசுத்தமான   மனம்  தான்  தோட்டக்காரன்.  மனம்  அன்பு  என்ற
  நீரால் அழகான கண்கள்  மூலமாக பாய்ச்சுகிறது.

   இந்த  ராமச்சரிததிரத்தை    மிகவும்
 
  எச்சரிக்கையுடன் பாடுபவர்கள்
   இந்த  ஏரியினகாவல் காரர்கள்.
  இந்த ராமகாதையை  கேட்கும்
  ஆண்களும்  பெண்களும்
  உத்தமமான   தேவதைகள்.

  இந்த  ராமகாதை  என்ற  ஏரியின்  அருகில் வராதவர்கள்
துஷ்டர்கள், போகிகள்,.துரதிர்ஷ்டசாலியான
கொக்குகள் ,காகங்கள் போன்றவர்கள்.
இங்கு நத்தைகள், தவளைகள் ,கடல்  பறவைகள்.
போன்ற  கதைகள் இல்லை.

ராமரின் அருளின்றி  இராமகதையை படிக்கமுடியாது.
அதனால்  காகம் ,கொக்கு  போன்ற கேளிக்கை விஷயப்பிரியர்கள்
இந்த கதையை ஏற்க மாட்டார்கள்.

பயங்கரமான  தீய சேர்க்கைதான்  , தீய  வழி.
அந்த தீய சேர்க்கைகளின்
 சொற்கள் புலி,சிங்கம்,மற்றும்  பாம்புகள்.

வீட்டு  வேலைகள், குடும்பஸ்தனின்
  வித-விதமான  கஷ்டங்கள்,
மிகவும்  ஏறிக் கடக்கமுடியாத
செல்லமுடியாத  மிகப்  பெரிய  மலைகள்.

ஆசைகள், மோகங்கள், மானம்  போன்றவை பயங்கரக்  காடுகள்.
பலவித  தீய  தர்க்கங்கள்  தான்  பயங்கரமான  நதிகள்.

சிரத்தை, சத்சங்கம் ,இறையன்பு   போன்றவை
இல்லாதவர்கள் இந்த இராமகதையை அறிய முடியாது.

மிகவும்  கஷ்டப்பட்டு அங்கு சென்றாலும் தூக்கம் வந்துவிடும்.
மனதில் முட்டாள் என்ற கடும் குளிர் வரத்துவங்கிவிடும்.
அங்கு சென்றாலும் அந்த அதிர்ஷ்டமில்லாதவன்
ராமர் கதை ஏரியில் குளிக்கமுடியாது.

அவன் அந்த  மானசரோவரில்
குளிக்கவோ குடிக்கவோ முடியாது.
அவன் கர்வத்துடன்  திரும்பிவிடுவான்.
 யாராவது அதைப்பற்றிகேட்டால் ,
அந்த இராமர்கதை என்ற ஏரியைத் திட்ட ஆரம்பித்துவிடுவான்.
   ராமரின் அழகான கிருபை என்றபார்வைக்கு ஆளானவர்கள்,
மிகவும்  மரியாதையுடன் இந்த கதை ஏரியில் குளிக்கிறான்.
பயங்கரமான மூன்று  தாபங்களில் எரியாமல் அருள் பெறுவான்.
    மனதில் ராமர்  மீது மிக அன்பு இருந்தால் ,
அவன்  ராமரை ஒருபொழுதும் விட்டுவிட மாட்டான்.
இந்த  ஏரியில் குளிக்கவிரும்பினால் ,
சத்சங்கத்தில்  ஈடுபடவேண்டும்.

  இப்படிப்பட்ட   ராமகதை என்ற ஏரியை
 இதயம் என்ற  கண்களால்  பார்த்து
அதில் மூழ்கியதால்  துளசிதாசர் என்ற
 கவியின் மனம் களங்கமற்றதாகியது.
இதயத்தில்  ஆனந்தமும் உற்சாகமும் நிரம்பியது.
அன்பு, ஆனந்தம் என்ற பிரவாஹம் பொங்கி  வழிந்தது.

 அதிலிருந்து இந்த அழகான  கவிதை என்ற  நதி புறப்பட்டது.
அதில் ராமரின் களங்கமற்ற  புகழ் என்ற நீர் நிறைத்தது.
இந்த  கவிதை என்ற  நதியின்  பெயர்  சர்யு.
அது  எல்லா மங்களகாரியங்களுக்கும்  வேர்.
மக்கள் கருத்தும் , வேதங்களின்  கருத்தும்
இதன்  இரண்டு  அழகான  கரைகள்.

இந்த அழகான  மானசரோவரின் கன்னி  சர்யு  நதி
மிகவும்   புனிதமானது.
கலியுகத்தின் சிறிய-பெரிய பாபங்களின் புல்-பூண்டு மற்றும்
மரங்களை  வேரோடு  பிடுங்கி எறியக்கூடியது.

பாலகாண்டம்-१८ பதினெட்டு -ராமசரிதமானஸ் -துளசிதாசர்.

பாலகாண்டம்-பதினேழு -ராமசரிதமானஸ் -துளசிதாசர்.

  துளசிதாசர்   சொல்கிறார் :--

           நான்   ராமசரித மானஸ்  இயற்றப்பட்ட காரணம்,
      அது  எத்தகைய  நூல் , இயற்றப்பட்ட காரணங்கள்

    முதலியவற்றை  ஸ்ரீ உமா -மகேஷ்வரரை  வணங்கி சொல்கிறேன்.

   சிவனின்  கிருபையால் நல்லறிவு பெற்று
   இந்த துளசிதாசர்

  "ராமசரிதமானஸ் "  என்ற  நூலின்
  கவிஞர் ஆகிவிட்டார்.
 என் அறிவுக்குத்தக்கபடி
 இதை அழகாக மனம்
  கவரும்படி எழுதியிருக்கிறேன்.

சத்  ஜனங்களே !
   அழகான மனதுடன் கேட்டு
    தங்களை  திருத்திக்கொள்ளுங்கள்.

     அழகான அறிவு  என்பது பூமி.
     இதயம்  என்பது  ஆழமான இடம்.
     வேத-புராணங்கள்  சமுத்திரம்.
     சாதுக்கள் -சந்நியாசிகள்  மேகங்கள்.
     அவர்கள் ராமர் என்ற புகழ்பெற்ற,
     அழகான இனிமையான,
   மனோஹரமான  நன்மை அளிக்கும்

     தண்ணீரை
   மழையாகப் பொழிகின்றனர்.
அவரின் லீலைகளை
விரிவாக வர்ணிக்கின்றனர்.
அதுதான்  ராமரின் புகழ் என்ற நீரின்
 நிர்மலத்தன்மை யாகும்.
அது களங்கத்தை அழித்துவிடும்.
அந்த நீர் இனிமை, அழகு மற்றும் குளிர்ச்சி
  கலந்த
பக்தியின் அன்பு.
இந்த நீர் நற்செயல்கள் என்ற
நெல்பயிருக்கு
பயனளிக்கக் கூடியது.
ராம பக்தர்களுக்கு வாழ்க்கை அளிக்கக் கூடியது,
அந்த பரிசுத்தமான ராமரின் புகழ் நீர்
அறிவு என்ற பூமியில்  விழுந்து குறுகி
 அழகான காத்து என்ற வழியில் ஓடியது.
மனம் என்ற உயரிய இடம் பெற்று அங்கேய வசிக்கிறது.
அங்கேயே பழமை அடைந்து அழகான ருசிகரமான
குளிர்ந்த சுகமளிக்கக் கூடியதக் அமர்ந்துவிடுகிறது.
 இந்த பரிசுத்தமான அழகான நதியின் நான்கு கரைகள்
 காக்புசுண்டி  கருடனுக்குக் கூறியது,
சிவன்  பார்வதிக்குக் கூறியது,
யாஞ்க்ய வல்கியர் பாரத்வாஜ முனிக்குக் கூறியது,
துளசிதாசர் மற்றும் சாது-சந்நியாசிகள் .
  ஏழு  காண்டங்கள் இந்த நதியின்
  அழகான ஏழு  படிகள்.
இதை அறிவுக்கண்ணால் பார்த்தாலே
 மனம் மகிழ்ச்சியடைகிறது
ராமரின் குணங்கள் பண்புகளை
  தடையில்லால் வர்ணிப்பதே
இந்த அழகான ராமகதை என்ற நதியில் அதிக ஆழமாகும்.

  ஸ்ரீ ராமச்சந்திரர் மற்றும் சீதையின்
புகழ் அமிர்தம் போன்ற தண்ணீர்.
 இதில் கொடுக்கப்பட்ட உவமைகள்
 அதே   அலைகளின் அழகான   கேளிக்கைகள்.
 அழகான  நாலடிகள்தான்
   இதில் அடர்ந்து பரந்திருக்கும்
      பெண்   தாமரைகள்.

கவிதையின்  யுக்திகள்  அழகான முத்துக்களை
உண்டாக்கும்    அழகான  சிப்பிகள்.
 இதில்  உள்ள சந்தங்கள், ஈரடிகள், எதிரீரடிகள் ,
இதில் அலங்கரிக்கும் பலவண்ண  தாமரைகள்.
ஒப்பிடமுடியாத  பொருள்கள், உயர்ந்த  பாவங்கள்,
அழகான  மொழிகள் தான்  மகரந்தங்களும் மணமும்.

புண்ணியங்களின் சக்திகள்
 வண்டுகளின்  வரிசைகள்.
ஞானம் ,வைராக்கியம்,
எண்ணங்கள் போன்றவை .
கவிதையின் ஓசை நயம்,
 குரல் ஒலி யுக்தி, குணம் ,ஜாதிகள்  போன்றவை
அநேக  விதமான அழகான  மீன்கள்.
 அறம்,பொருள், இன்பம் ,வீடு  போன்ற
 நான்கும்   ஞானம் ,
 அறிவியல் எண்ணங்கள் கூறுவது,
காவியத்தின்  ஒன்பது  ரசங்கள் ,
ஜபம் ,தபம், யோகம்,வைராக்கியம்  போன்றவைகள்
இந்த  அழகான நதியின்  நீர்வாழ் பிராணிகள்.



Wednesday, December 21, 2016

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் -பதினேழு -ராமசரிதமானஸ்.

          ராமசரிதமானஸ்  --பாலகாண்டம் -பதினேழு -ராமசரிதமானஸ்.


       சித்திரை மாதம்  நவமி  திதி செவ்வாயன்று
      அயோத்தியாவில் இந்த  ராமர்  தோன்றினார்.
      ராமர்  பிறந்தநாளன்று  அனைத்து  புனித   தீர்த்தங்களும்
      அயோத்தியாவிற்கு  வந்துவிடுகின்றன  என்று வேதங்கள் சொல்கின்றன.

            அசுரர்கள், நாக தேவதைகள், பறவைகள், மனிதர்கள்,
       முனிவர்கள் , ,தேவர்கள், எல்லோரும் அயோத்தியாவிற்கு வந்து
       ராம  ஜன்மதினத்தில் ரகுநாதருக்கு  சேவை  செய்கின்றனர்.
      புத்திசாலிகள்  ராமரின் பிறந்த நாளைக் கொண்டாடுகின்றனர்.
     ஸ்ரீ ராமரின் அழகான  புகழைப் பாடுகின்றனர்.

          நல்லவர்களின் மிகப்பெரிய  சமூகம்
  அயோத்தியாவின் சர்யு   நதிக்கரையில்  ஸ்நானம் செய்கின்றனர்.    இதயத்தில் அழகான ஷ்யாம்  வண்ண  (கருநீலவண்ண)
  ராமரை  ஜபிக்கின்றனர்.
  தியானம் செய்கின்றனர்.
    சரயு  நதியை  தர்ஷித்தல்,
   தீண்டுதல், குளித்தல், நீர் அருந்துதல்,
எல்லா பாவங்களையும் போக்கும்  என்று
  வேதங்கள்-புராணங்கள் சொல்கின்றன.
இந்த  நதி மிகவும் புனிதமானது.
இதன் மகிமை  முடிவற்றது.
களங்கமற்ற   அறிவுள்ள சரஸ்வதியும்
 இதன் மகிமையைக்  கூறமுடியாது.

இந்த  அழகுநிறைந்த அயோத்தியா புரி ,
 ராமச்சந்திரரின் ,
இறைவனின்  இருப்பிடம்.
அனைத்து  உலகங்களிலும் புகழ்  பெற்றது.
மிகவும்  பவித்திரமானது.
 உலகில் உள்ள  அனைத்து  ஜீவராசிகளும்
(முட்டையில் இருந்து தோன்றுபவை,
வியர்வையிலிருந்து  தோன்றுபவை,
பூமியிலிருந்து  தோன்றுபவை,
நீரிலிருந்து  தோன்றுபவை,
வெவ்வேறு யோனிகளிலிருந்து  தோன்றுபவை )
இந்த அயோத்யாநகரில்  வந்து உடலைத் தியாகம் செய்தால்
அவைகளுக்கு  மறுபிறவி  கிடையாது.
அவர்கள் ஸ்வர்கத்திலேயே
இறைவனின் இருப்பிடத்திலேயே வசிப்பார்கள்.

    எல்லாவிதத்திலும்  உயர்ந்த , அழகான ,
  எல்லா சித்திகளும் தருகின்ற ,
 எல்லா   நலன்களும்    தருகின்ற
அயோத்தியாநகரம்  என்றறிந்து
இந்த  புனித  கதையைத் துவங்குகிறேன்.
இந்தக்கதையைக்   கேட்பதால்,
காமம், ஆணவம் , கர்வம் போய்விடும்.
 இந்தக் கதையின்  பெயர் ராமசரிதமானஸ்.
இதைக்கேட்டாலே மன சாந்தி கிடைக்கும்.
மனம் என்ற யானை வையகஆசைகளின்
காட்டுத்தீயில் எரிந்துகொண்டிருக்கிறது.
இந்த  மனம் ராமசரிதமானஸ் என்ற  மானசரோவரில்
வந்துவிட்டால் சுகமடையும்.
இந்த  ராமசரிதமானஸ் முனிகளுக்குப் பிரியமானது.
இந்த அழகான புனிதநூலை சிவபகவான்  இயற்றினார்.
இது மூன்றுவித தோஷங்களைப்  போக்கவல்லது.
துன்பங்கள், தரித்திரங்கள், கலியுகத்தின் தீய நடத்தைகளை,
  கலியுகத்தின்    எல்லா  பாவங்களைப் போக்கிவிடும்.
  சிவபகவான்  இந்த நூலைப் படைத்து , நல்ல சந்தர்பத்தில்
பார்வதிதேவியிடம்  கூறினார்.
சிவபகவான்  மகிழ்ந்து  
 இதன் பெயரை "ராமசரிதமானஸ் "என்று வைத்தார்.

 நான் அந்த ' நலன் அளிக்கக்கூடிய ராமகதையைக் கூறுகிறேன்.
மரியாதையுடம்  மனம் ஈடுபட்டு இதைக்  கேளுங்கள். .




 
 

Tuesday, December 20, 2016

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் -பகுதி -பதினாறு.

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் -பகுதி -பதினாறு.

                    இந்த  ராமரின் கதையை  முதன் முதலாக
             கேட்பவர்கள்  ஆச்சரியப்படவேண்டாம்.
             உலகத்தில் ராம கதை முடிவற்றது.

                   ராமரின்  அவதாரம்
             பலவிதமாக  நிகழ்ந்துள்ளது.
              நூறு   கோடிக்குமேல்
             எண்ணிக்கையற்ற
             ராமாயணம்  உள்ளது.  
           உலகில் ராமகதைக்கு என
             ஒரு  வரைமுறை  இல்லை.
            ஹரியும்  ஹரியின் கதையும்
           முடிவற்றது.
            ஹரியின்  சரித்திரத்தை ,
         யுக  வேறுபாடுகளின்   படி ,
         முநீஸ்வரர்கள் அநேக  விதங்களில்
        பாடியுள்ளனர்.
        மனதில்  இந்தமாதிரியான  எண்ணங்களுடன்
         சந்தேகப் படாதீர்கள்.  
       மரியாதையுடனும்,அன்புடனும்
     இக்கதையைக்  கேளுங்கள்.
     ஸ்ரீ  ராமச்சந்திரர்  முடிவற்றவர்.
     அவருடைய  குணங்களும்  முடிவற்றது.
     அவரின் கதையின்  அளவும்
   வரையறைக்குள்  அடங்காதது.
    களங்கமற்ற  எண்ணம்  உள்ளவர்கள்
    இந்த   கதையைக் கேட்டு
     ஆச்சரியப்படமாட்டார்கள்.
   இவ்வாறு  எல்லா  சந்தேகங்களையும்  போக்கி குருவின்
   சரண கமலங்களில்   வணங்கு  கிறேன்.

     மீண்டும்  கை  கூப்பி , எல்லோரையும்  வணங்குகிறேன்.
      நான்  எழுதும் கதையின்  அமைப்பில்
     எந்த  குறையும் வரக்கூடாது.
   
   இப்பொழுது   மரியாதையுடன்
    சிவபகவானை  தலை   வணங்கி
  ஸ்ரீ ராமரின் குணமும்  பண்பும்  நிறைந்த
  பரிசுத்தமான  கதையைச் சொல்கிறேன்.

ஸ்ரீ  ஹரியின் சரணங்களில்   அடிபணிந்து  வணங்கி  வருடம்
௧௬௩௧ இல்  இக்கதையை  ஆரம்பிக்கிறேன். 

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் -பகுதி -பதினைந்து .

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் -பகுதி -பதினைந்து .

          யமதூதர்களின் முகத்தில் கரிபூச  ,
         இந்த    வையகத்தில்
         யமுனை போன்றது  ராமநாமம் ,
          ஜீவன்  களுக்கு முக்தி  அளிக்க
           காசிஎன்றே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
           ராமருக்கு பவித்திரமான
           துளசி  போன்று பிரியமானது.
           துளசி தாசருக்கு அவரின்
            தாயார் ஹுளசி போன்று பிரியமானது.
            நன்மை அளிக்கக்  கூடியது.

           இந்த ராமகதை சிவபகவானுக்கு
            நர்மதை போன்று பிரியமானது.
           அனைத்து சித்திகளும் ,சுகங்களும் ,
            செல்வங்களும் தரக்கூடியது.

            நல்ல குணமுள்ள தேவர்களை உண்டாக்கி
            வளர்க்கின்ற  அன்னை
            அதிதிக்கு  சமமானது.
             ராமரின்  பக்தி மற்றும் அன்பின்
              உயர்ந்த இறுதி எல்லை போன்றது.
              ராமகதை  மந்தாக்கினி  நதி  போன்றது.
             அழகான மனமுள்ள சித்திரக்கூடம்  போன்றது.
             அழகான அன்பே வனம்.
            அதில் சீதாராமர் சஞ்சரிக்கிறார்.

         ராமரின் குணம் அழகான சிந்தனை மணி .
         சாதுக்களுக்கு நல்லறிவு என்ற பெண்போன்று
         அழகான சிங்காரம்.
        ஸ்ரீ ராமரின்  நல்ல  குணங்கள்
        உலகிற்கு  நன்மை  அளிப்பவை.
        முக்தி  அளிப்பவை.
       செல்வமளிப்பவை .
       அறம்  அளிப்பவை.
        தெய்வீக  இடமளிப்பவை.

     ஞானம், வைராக்கியம், யோகம்  பெற
    சத்குரு  போன்றவை.
    உலகிலுள்ள அதி பயங்கர  நோய்களெல்லாம் தீர்க்கும்
    தேவவைத்தியர்  அஷ்வினி குமார் போன்றவை.

   ஸ்ரீ ராமரின் அன்பை உண்டாக்கும்
   அன்னை.தந்தை போன்றவை.
     எல்லா விரதங்கள், அறங்கள், நியமங்களின் விதைகள்.
     கதையின் குணமும்  பண்பும்
    பாவம் , துன்பம் , சோகம்  அனைத்தையும்
    அழிக்கக்கூடியவை.
   எண்ணங்கள்  செயல்பட ஞானம் தரும்
   அரசனின் சூரவீர அமைச்சர்  போன்றவை.
   கடக்க  முடியாத பேராசைக்கடலை
    வற்றவைக்கின்ற   அகஸ்த்திய முனி போன்றவை.
   பக்தர்களின்  மனம் என்ற வனத்தில்
    குடியமர்ந்திருக்கின்ற
  காம, குரோத,கலியுகத்தின் பாபங்களாகிய
 யானைகளை  வதம்  செய்யும் சிங்கக்குட்டிகள்.
 சிவனால் பூஜிக்கப்பட்ட  அன்பான விருந்தாளி.
தரித்திரம் என்ற காட்டுத்தீயை அணைக்கின்ற
விருப்பங்களை  நிறைவேற்றுகின்ற  மேகங்கள்.
 உலக மாயைகள் என்ற விஷயங்கள் என்ற  விஷத்தை
போக்குவதற்கான  மந்திரங்கள்.மகாமணிகள்.
 தலை எழுத்தை  தீயபலன்களை நீக்குகின்ற ஆற்றல் படித்தவை.
அறியாமை என்ற  இருளகற்றும் சூரியக்கதிர்கள்.
தொண்டன் என்ற நெல்வயலை பேணிக்காக்கும்
மேகங்கள்  போன்றவை.
 மனம்விரும்பும் பொருள்கள்  கொடுப்பதில்
கற்பகமரம் போன்றவை.
தொண்டாற்றுவதில் ஹரி மற்றும் எளியமுறையில்
சுகமளிப்பவை.
நல்ல கவியர்களின்  பனிக்கால மனம் என்ற ஆகாயத்தில்
அலங்கரிக்கின்ற நக்ஷத்திரங்களைப்  போன்றவை.
ஸ்ரீ  ராமரின் பக்தர்களுக்கு  வாழ்க்கைதனமே
ராமரின் ஸ்ரேஷ்ட  குணங்கள்.
அனைத்து புண்யங்களின் பலன்கள் தருபவை.
உலகத்திற்கு  வஞ்சனை-கபடமில்லா
யதார்த்த  நன்மைகள்  தரும் சாதுக்கள் போன்றவை.
தொண்டர்களின் மனம் என்ற  மானசரோவரில்  நீந்தும்
அன்னப் பறவைகள். பவித்திரமான  மனிதனை
ஆக்குவதில் கங்கையின் தொடர் அலைகள்  போன்றவை.

 ஸ்ரீ ராமரின்  குணங்கள்  என்ற சமூகம்
  தீயவளிகள், தீய  தர்க்கங்கள், ,
தீய நடத்தைகள் ,
கலியுக கபட நாடகங்கள் ,
கர்வங்கள், ஏமாற்றும் பக்திகள்
போன்ற விறகுகளுக்கு
 அக்னிபோன்றவை.

ராமரின்  குணங்கள் பௌர்ணமி  நிலவின்  கதிர்கள் போன்று
எல்லோருக்கும்  சுகமளிப்பவை.
நல்லவை என்ற அல்லிமலருக்கும் ,
சக்ரவாகப் பறவைக்கும் சிறப்பான உயர்ந்த
நன்மை  அளிக்கக் கூடியவை.

துளசிதாசர்  சிவனிடம் பார்வதி கேட்ட வினாவிற்கு
சிவபகவான் அளித்த  விரிவான  விளக்கத்தைக்
பாடிச் சொல்லுவார். 

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் -௧௪ பதினான்கு - பகுதி

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் -௧௪  பதினான்கு - பகுதி

 துளசிதாசர்  சொல்கிறார் :--

நான்  என் குணங்களின்  தவறு களை எல்லாம்  சொல்லி ,
எல்லோரையும்  சிரம் தாழ்த்தி  வணங்கி
ஸ்ரீ ரகுநாதரின் களங்கமற்ற புகழை
வர்ணிக்கிறேன்.
அவைகளைக் கேட்பதால் பாபங்கள்
 எல்லாம் அழிந்துவிடும்.
முனி  யாக்ய வல்கியர்  இந்தக்  கதையை
முனிவர்களில்  மேன்மையான
 பாரத்வாஜருக்குச் சொன்னார்.
அந்த  செய்தியை நான்  வர்ணிக்கிறேன்.
எல்லா நல்லவர்களும்  இன்பத்தை
அனுபவித்துக்கொண்டே அதைக்  கேளுங்கள்.

இந்த அழகான பாத்திரத்தின் குணங்களை
சிவ பகவான்   எழுதினார்.
பிறகு பார்வதியிடம் சொன்னார்.
அதே  பாத்திரத்தின்  சிறப்பை
 முனி காக்புசுண்டிக்குச்
சொன்னார்.
காக்புசுண்டிக்கு  ராமபக்தரென
அறிந்து சொன்னார்.

அதே  காக்புசுண்டி  மீண்டும் பாரத்வாஜரை சந்தித்து
அதே  கதையைப் பாடலாகப் பாடினார்.
அவர்கள்  இருவரும்  சொல்பவரும்  கேட்பவரும்
சமமான  நல்லோழுக்கசீலர்கள்.
சமநோக்கு உள்ளவர்கள்.
ஸ்ரீ  ஹரியின் லீலைகளை  நன்கு  அறிந்தவர்கள்.

அவர்கள்  தன் ஞானத்தால் முக்காலங்களையும்
உள்ளங்கை  நெல்லிக்கனி போன்றே  அறிவார்கள் .
அவர்கள்  பகவானின்  லீலைகளின் ரகசியங்களை
அறிந்து  பல விதங்களில் சொல்லுவதில்  வல்லவர்கள்.
பல விதங்களில் கேட்பவர்கள்.
அறிபவர்கள்.
அதே  கதையை நான் வராஹா க்ஷேத்திரத்தில்
என்  குருவிடம்  கேட்டேன்.
ஆனால்  குழந்தையாக  இருந்ததால்
நன்றாக  அறிந்துகொள்ளமுடியவில்லை.
ஸ்ரீ  ராமரின் ரகசியக் கதையை சொல்பவர்கள் ,
கேட்பவர்கள், இருவரும் அறிவுக்
கருவூலமாக இருப்பவர்கள்.
நான்  கலியுகத்தின் பாபங்களில்
பீடிக்கப்பட்ட மகாமூடர்கள் ,
ஜடங்கள், ஜீவன்கள், எப்படி அறிந்துகொள்ள முடியும்.
 ஆனால்  குருவானவர்  அடிக்கடி  அக்கதையைச்
சொன்னதால்  தெரிந்துகொள்ள முடிந்தது.
 அதே இந்த  மக்கள் மொழியில் எழுதப்படும்.
அதனால்   எனக்கு திருப்தி ஏற்படுகிறது.

எனக்குள் இருக்கும் சிற்றறிவால் ,
விவேக பலத்தால்
மனதில் உள்ள  ஹரியின்  தூண்டுதலால் ,
நான்  சொல்லுவேன்.
நான் என் சந்தேகம் , அறியாமை, ,
பிரமையால்  உண்டாகின்ற
கதையைச் சொல்கிறேன்.
அதைக்உ  கேட்பது  உலகம்  என்ற
 கடலைக்
கடக்க  படகாக உதவும்.
ராமகதை  பண்டிதர்களுக்கு
 ஓய்வு தரக்கூடியது.
எல்லோரையும்  மகிழ் விக்கக்  கூடியது.
கலியுகத்தின்  பாவங்களைப் போக்கவல்லது.

ராமகதை கலியுகம் என்ற
 பாம்புக்கு மயில் போன்றது.
அறிவென்ற அக்னியைப்
 கடைந்தெடுக்கும்  மத்தாகும்.
இந்தக் கதையால் ஞானம்  கிடைக்கிறது.

ராமகதை கலியுகத்தில்  எல்லா
 மனவிருப்பங்களையும்  நிறைவேற்றுகின்ற
காமதேனு   பசுஆகும்.
நல்லவர்களுக்கு  அழகான
சஞ்சீவினி   வேராகும்.
பூமியில்  இதுதாம் அமிர்த நதியாகும்.
பிறப்பு - இறப்பு   என்ற பயத்தைப் போக்கும் .
பிரமை என்ற தவளையைச்  சாப்பிடும்
பாம்பாகும்.

இந்த ராமகதை  அசுரர்களின்
சேனையைப் போன்ற  நரகத்தை  அழிக்கக் கூடியது.
சாதுக்கள் என்ற தேவர்களின்  குலத்தைக் காக்கின்ற
துர்கையாகும்.
சாதுக்களின் சமுதாயம்  என்ற பாற்கடலுக்கு
லக்ஷ்மிபோன்றது.
அகில உலகின் சுமை  சுமக்கின்ற அசையாத பூமி போன்றது.

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் ௧௩ துளசிதாஸ் .

                 ராமசரிதமானஸ் -பாலகாண்டம் ௧௩. துளசிதாஸ்

என்னுடைய பிரபு  ராமச்சந்திரர்  என்னுடைய  பக்தி  நிறைந்த

பாட்டைக்  கேட்டு , பார்த்து , மனம் என்ற
 கண்ணில் மேற்பார்வை  செய்து ,
என்னுடைய  பக்தியையும் , அறிவையும்
புகழ்ந்தார்.
என்னனை  நானே பகவானின்
சேவகன்  என்று சொல்கிறேன்.
இவ்வாருசொல்வதால் அவருக்கு கோபம் வரலாம்.
ஆனால்  இதயத்தில் நல்ல  எண்ணம் இருக்கவேண்டும்.
நான்  என்  மனதில் அவருடைய சேவகன் ஆவதற்கு
தகுதி  இல்லை  என்றே  நினைக்கிறேன்.
என்னை  நான்  பாவி   என்றும்
தீனன் என்றுமே  கருதுகிறேன்.

என்னுடைய  மனதின் தூய்மையையும்
நல்ல தன்மையையும் ராமர்  அறிந்து
என்நிலை  அறிந்து  என்னை விரும்புகிறார் .
என்னை   நேசிக்கிறார்.
 இறைவனின்  மனதில் பக்தர்களின்  தவறுகள்
நினைவில்  இருப்பதில்லை.
அவருடைய  இதயத்தில் 
 நல்லதே
அதிகமாக  ஞாபகத்தில் 
 வைத்துக்கொள்கிறார்.
வாலியின் எந்தபாபத்தால் அவனை
வேட்டைக்காரன்  போல்  கொன்றார் ,
அப்படியே  சுக்ரீவனிடம்  நடந்துகொண்டார்.
அதே  செயல்  விபீஷணனுடையது.

அதை  அவர்  கனவிலும்  நினைக்கவில்லை.
எதிர்மாறாக பரதனை சந்திக்கும் போது
ராமர்  அவரை கௌரவித்தார்.
அரசவையில்  அவனைப் புகழ்ந்தார்.
ராமர்  மரத்துக்குக்  கீழே ,
குரங்கு  கிளைகளின்  மேல்,
.
ராமர்  உயர்ந்தவர், ஆனால் வானரங்களை 
அவர்  தனக்கு  சமமாகக்  கருதினார்.
ராமர்  போன்று  ஒரு  குணசீலர் எங்குமே  இல்லை.
ராமரே!உங்களது  நல்ல  குணத்தால்
 எல்லோருக்குமே  நன்மையே  உண்டாகும்.
இந்த விஷயம் சாத்தியமானால் துளசிதாசருக்கும்
எப்பொழுதும்  நல்லதே  உண்டாகும்.




Sunday, December 18, 2016

रामाचारिथ्मानस --ராமசரிதமானஸ் -பாலகாண்டம் -௧௨ துளசிதாஸ்

   ராமசரிதமானஸ் -பாலகாண்டம் -௧௨ பன்னிரண்டு

இந்த  கலியுகத்தில்  இறைவனின்  நாம ஜபம் தான்
 கற்பகவிருக்ஷம் .
பெயரைச்  சொன்னதுமே
எல்லா சிக்கலையும் போக்கவல்லது.

கலியுகத்தில் இந்த ராமஜெபம்
மனம்  விரும்பும் அனைத்து
 பலன்களும் தரக்கூடியது.
 பரலோகத்தின் மிக  நன்மை தரக்கூடியது.
இந்த  உலகத்தின் அன்னையும் தந்தையுமாக
வளர்ப்பது  காப்பது
நாம ஜெபமே.

இந்த  ராமநாமம்  கலியுகத்தில்
 தெய்வீக இருப்பிடத்தைத் தருகிறது.
இவ்வுலகத்தில் தாய் தந்தையர்கள் போல்
எல்லாவிதமான பாதுகாப்பைத்தரக்கூடியது.

கலியுகத்தில்  அறம்  இல்லை.
பக்தி  இல்லை..
ஞானமும்  இல்லை
ராமநாமம் தான் ஒரே
ஆதாரமாக விளங்குகிறது.
கபடம் வஞ்சனையின் சுரங்கமான
கலியுகத்தில்  அதை  வெல்வதற்கு
ஒரே  வழி  ராமநாமம்  தான்.
அறிவுதரக்கூடியது.
ராமநாமம் ஸ்ரீ நரசிங்கப்பெருமாள்  போன்றது. 
கலியுகம்  ஹிரன்யகஷ்யபு போன்றது.
ஜபம்  செய்பவர்கள் பக்த  பிரகலாதனைப் போன்றவர்கள்.
இந்த  ராமநாமம் தேவர்களின் விரோதிகளைக்
கொன்று  ஜபம் செய்பவர்களைப்  பாதுகாக்கும்.
 அன்புடன்  நல்லுணர்வோடு ,
விரோத பாவத்தோடு ,
கோபத்தோடு ,
. சோம்பேறித்தனமாக
எந்த வித  மனோ பாவத்தோடும்
ராமநாமத்தை ஜபித்தால்
பத்து திக்குகளிலிருந்தும்
நன்மையே  நடக்கும்.
துளசிதாசராகிய  நான்
 ராமநாமத்தை  ஜபித்து
ரகுநாதரை வணங்கி
ராமனின் குணங்களின்
சிறப்பை வர்ணிக்கிறேன்.
அந்த  ராமர்  என்னை
 எல்லாவிதத்திலும்
  சீர்திருத்துவார்.
ராமர் புருஷோத்தமர்.
துளசியாகிய  நான்  மிகவும் கெட்ட சேவகன்.
இவ்வளவு  இருந்தும் அந்த தயாநிதியான ராமர்
என்மேல் கிருபை காட்டுவதில்
தயங்கமாட்டார்.
வேதங்களிலும்  உலக நடைமுறையிலும்
சிறந்த  கடவுள் இதே முறையால்  புகழ் பெற்றவர்கள் .
அவர்கள்  பிரார்த்தனையைக்  கேட்டதுமே
அறிந்துகொள்கிறார்கள்.
பணக்காரர்கள்  ஏழைகள்,
கிராமவாசி -நகரவாசி, பண்டிதன் -முட்டாள்
கெட்டவன்-புகழ்பெற்றவன்  எல்லோரையும்
அறிந்து  அதற்கேற்ப பலன்  அளிப்பதில் வல்லவர்.

நல்ல கவிஞர்கள், கெட்டகவிஞர்கள், 
எல்லா  ஆண்களும் பெண்களும்
தன் தன் அறிவுக்கு ஏற்றவாறு
அரசனைப்  புகழ்கின்றனர்.
சாதுக்கள், நல்லொழுக்கம் உள்ளவர்கள்,
 கடவுளின் அம்சமான கிருபை  நிறைந்த
அரசனாகிய  ராமச்சந்திரனை
வணங்குகின்றனர்.
எல்லோருடைய குரல், பிரார்த்தனை, பக்தி
 அனைத்தையும்   அறிந்து எல்லோருக்கும்
தகுத்த கௌரவத்தை அளிக்கிறார் ஆண்டவன்.
இந்த  குணம்  வையக அரசருடையது.
கோசலநாதனான  ராமர் மிகவும்  உயர்ந்தவர்.
ராமர்  தூய அன்பை நேசிக்கிறார்.
உலகில் என்னைப்போன்ற
மட்டமான முட்டாள் யாருமே இல்லை.
இருந்தபோதிலும் கிருபையுள்ள  ராமர்
என்னைப்போன்ற துஷ்ட சேவகர்களின்  மீது
அன்பு  செலுத்துகிறார்.
விரும்புகிறார்.
அவர் கல்லை கப்பலாகவும் ,
வானரம் கரடிகளை தன் அறிவுள்ள
மந்திரியாக்கியுள்ளார்.

என்னை எல்லோரும் ராமரின்
 பக்தனாகக் கருதுகிறார்கள்.
நானும் வெட்கம் தயக்கமின்றி என்னை ராம
பக்தன் என்று சொல்கிறேன்.
கிருபையுள்ள  ராமர் ,
 இந்த நிந்தனை செய்கின்ற என்னை
சகித்துக்கொள்கிறார்.
சீதாபதியான ராமர்  என்னைத்
 தன்  தொண்டனாக ஏற்றுள்ளார்.
என்னுடைய  குற்றங்கள்- குறைகளால் நரகத்தில் கூட
எனக்கு இடமளிக்கத் தயங்குவார்கள். என்
தவறுகளை  நினைத்து  பயந்துகொண்டிருக்கிறேன்.
ஆனால் பகவான் ராமர் என் தவறுகளை
கனவிலும்  சிந்திக்கவில்லை.










ராமசரிதமானஸ் -பாலகாண்டம் --௧௧. துளசிதாஸ்.

 ராமசரிதமானஸ் -பாலகாண்டம் --௧௧. துளசிதாஸ்.

இறைவனின்  நாமம்   பிரசாதமாக  ஏற்றதால்  சிவபகவன்

அழியாத  சக்தி பெற்றவர்.
சுடலை
   பொடி பூசி  அமங்கல வேஷதாரியும்
மங்களத்தின் நிதியானார். சுகமஹா ரிஷி , சனகர் போன்ற சித்தி பெற்ற யோகிகள் முனிவர்கள், யோகிகள்  பெயரின் பிரசாதத்தால்
ப்ரஹ்மானந்தத்தை  அனுபவிக்கிறார்கள்.
நாரதர் பெயரின்  பிரதாபத்தை
 அறிந்திருக்கிறார்.
ஹரி வையகத்தில் அனைவராலும்
அன்பு செலுத்தப்படுபவர்,

நாரதருக்கு ஹரியும்
 ஹரிநாமமும் பிரியமானவை.
பிரஹலாதனுக்கு  எவ்வித ஆதரவும் இல்லை.   ஆனால்
இறை நாமத்தை  ஜபித்தே
பக்தர்களின் சிரோமணி ஆனார்..
துருவன் சின்னம்மாவின்  கொடுமையால்
துன்பப்பட்டு   ஸ்ரீ  ஹரியின் பெயரை உச்சரித்து
ஜபித்து   தருவ நக்ஷத்திரமாகி
 திவ்ய இடத்தைப் பெற்றான்.
ஹனுமான் புனிதப்  பெயரை
  ஜபித்தே ராமரை  தன்வயப்படுத்தினார்.
 தாழ்ந்த அஜாமில், யானை , வேசி அனைவரும்
ராமநாமம்  ஜபித்தே முக்தி பெற்றனர்.
கலியுகத்தில்  ராம  நாமம்  கல்பக  விருக்ஷம் போன்றது.
நலமளிக்கக் கூடியது.
அவரை தியானித்த  துளசிதாசர்
அபின்போன்ர போதைச்செடியாக இருந்தவர்
புனித துளசிச் செடியானார்.
 கலியுகத்தில்  மட்டுமல்ல ,
நான்கு யுகங்களிலும் ,
 முக்காலங்களிலும் ,
 மூன்று  லோகங்களிலும்
 இறைவனின்  பெயரை  நாமத்தை ஜபித்தே
துன்பங்களில் இருந்து  விடுபட்டனர்.
வேதங்கள் ,புராணங்கள்,
சாதுக்கள்     அனைவரும் கூறுவது
 அனைத்து புண்ணிய பலன்களும்
 ராமநாமம்  ஜபித்தால்
கிடைத்துவிடும்  என்பதே

சத்ய  யுகத்தில் தியானத்தினாலும் ,
திரேதா யுகத்தில்  வேள்வியினாலும்
துவாபர யுகத்தில் பூஜை  செய்வதாலும்
இறைவனருள் கிட்டியது.  ஆனால்
கலியுகத்தில் பாவங்கள் மலிந்துள்ளது.
மனிதமனம்  பாவக்கடலில்  மீனாகி
நீந்துகிறது. அது பாவத்திலிருந்து
பிரிய விரும்பவில்லை.
ஆகையால் தியானம், யாகம் ,பூஜை செய்ய முடியாது.  

Saturday, December 17, 2016

ராமச்சரித மானஸ் --பலகாண்டம் --10 -துளசிதாசர்

ராமச்சரித மானஸ் --பலகாண்டம் --10 -துளசிதாசர்

    ஸ்ரீ  ராமர் கரடி மற்றும் வானரங்களின்
    சேனையை  ஒன்று திரட்டினார்.
   மேலும் சமுத்திரத்தில்  பாலம் கட்டியத்திற்கு
 கொஞ்சம் கூட உழைக்கவில்லை.
 ஆனால் பெயர் எடுத்ததுமே  உலகக்  கடல்
  காய்ந்துவிடுகிறது.

 இப்பொழுது  சிந்தியுங்கள்: --
ராமநாமம் ,ராமர்  இந்த இரண்டில்
  ராமநாமமே   உயர்ந்தது.
  ஸ்ரீ  ராமர்   ராவணனை
அவன்அ குடும்பத்துடன்
அழித்தார் .
அப்பொழுது  சீதையுடன் அயோத்தியாவில்  நுழைந்தார்.
ராமர்  அரசனானார் . அவதி  அவரின்  தலைநகர் ஆனது.
தேவர்கள் முனிவர்கள் அவரின்  குணங்களை புகழ்கிறார்கள்.
ஆனால்  ராமரின் பக்தர்கள் அன்புடன் பெயரை
நினைத்ததுமே  உழைக்காமல் மோகம்  என்ற சக்திசாலி
சேனையை  வென்று  ராமரின் மீது காதலில் மூழ்கினர்.
சுகத்தில் சஞ்சரித்தனர்.  எவ்வித கவலையும் அவர்களைத் துன்புறுத்தவில்லை.

அதனால் நிர்குண பிரம்மத்தைவிட
சகுண  பிரம்மத்தைவிட
 ராமநாமம்  பெரியது.
இந்த ராமநாமம்  வரமளிப்பவர்களுக்கே
வரமளிக்கக் கூடியது.
ஸ்ரீ சிவபகவான்  தன்   இதயபூர்வமாக
 இதை  அறிந்து தான்
நூறுகோடி ராமரின் சரித்திரத்தில்
 இந்த ராமநாமத்தையே
தேர்ந்தெடுத்தார்.



Friday, December 16, 2016

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் --பகுதி ஒன்பது.-9

ராமசரிதமானஸ்  --பாலகாண்டம் --பகுதி ஒன்பது.-9

    இறைவனின்  நான்கு வித  பக்தர்களுக்கும்
  இறைநாமமே   அனுக்ரஹத்திற்கு    ஆதாரமானது.
இந்த நான்கு   வகை   பக்தர்களில்
 ஞானமுள்ள  பக்தர்கள்  மீது  தான் இறைவனுக்கு
அன்பு  அதிகம்.
எந்தவித  ஆசையுமின்றி   ராம பக்தியில்
 ஈடுபட்டவர்கள் பக்தி ரசத்தில்  மூழ்குவர்.
இறையன்பு  என்ற அமிர்த   ஏரியில்   தன்
மனதை  மீனாக்கி வாழ்வார்கள். ஒரு நிமிடம் கூட
பிரிய   விரும்ப மாட்டார்கள்.

இறைவனின்  வடிவங்கள்  இரண்டு.
ஒன்று  உருவமற்றவை . மற்றொன்று  உருவமுள்ளவை.
இந்த  இரண்டுமே  வர்ணிக்க முடியாத,
ஆழமான, அநாதியானது ,அபூர்வமானது.
இந்த இருமுறையான  பக்தியில்  நாம ஜெபமே  மேலானது.
இந்த நாம ஜப  வலிமையால் துளசிதாசர்
இருவகை  பக்தியையும்
தன்  வசத்தில்  வைத்திருக்கிறார்.

நல்லவர்கள்  துளசிதாஸின்  இந்த   கூற்றை
அதிகப் பிரசங்கத் தனமாகவோ ,
காவ்யத்தின் ஒரு யுக்தியாகவோ
நினைக்கவேண்டாம்.
துளசிதாசர்  தன் நம்பிக்கையை, அன்பை,
தன் விருப்பத்தைக்  கூறுகிறார்.
நிர்குண ,சகுண பக்திகள்  இரண்டுமே அக்னிக்கு சமமானது.

நிர்குணம்  என்பது நீருபூத்த நெருப்பு போன்றது.
தென்படுவதில்லை.
சகுண  பக்தி எரியும் அக்னிபோன்றது .
வெளிப்படையாக  தெரிகிறது.
இரண்டு வித பக்தியும் ஒன்றே.
வெளிப்படும் தன்மையால்  வேறுபடுகிறது.
இரண்டுமே  அறிந்து கொள்வதில்   மிகக்  கடினமானது.
ஆனால்  நாம ஜபத்தால்  இருவித பக்தியும் எளிதாகிறது.
அதனால்  துளசிதாசர்  இறைவனின்  நாமத்தை
இருவித  பக்தியை  விட மிக  உயர்வானது என்றே கருதுகிறார்.
 (உருவமற்ற ,உருவமுள்ள)
இறைவன்  எல்லா  இடங்களிலும்  வியாபித்துள்ளார்.
இறைவன் ஒருவரே.
நிலையானவர்.
அதிகாரம், ஞானம் ,ஆனந்தம்  ஆகியவைகளின்
பரந்த  நிதியாக விளங்குகிறார்.

ஸ்ரீ ராம்சச்சந்திர மூர்த்தி  மனிதனாக  அவதரித்து
பலவித  கஷ்டங்களை  சஹித்துக்கொண்டு
சாதுக்களுக்கு   நன்மை  அளித்தார்.
ஆனால்  பக்தர்கள்  ,அன்புடன் பெயரை  ஜபித்து மிக
எளிதாக ஆனந்தத்தையும் நலத்தையும்  அடைகிறார்கள்.
 ஸ்ரீ ராமர்  நேரடியாக  கௌதமரின் மனைவி  அஹல்யாவைத்தான்
முக்தி  தந்தார். ஆனால் இறைவனின்  நாமம் கோடிக் கணக்கான
தீயவர்களின்  புத்தியைத் திருத்தியது.
ஸ்ரீ  ராமச்சந்திரன்  விஷ்வாமித்திர  முனிவரின்
நன்மைக்காக ஒரு சுகேது யக்ஷனின் மகள் தாடகையை
அவள்  குடும்பத்துடன்   வதம் செய்தார் ,
ஆனால்  பக்தர்களின்  குறைகளை, துன்பங்களை ,
 துராசைகளை சூரியன் இரவைப் போக்கி
  பிரகாசத்தைத்  தருவதுபோல்
  போக்குவது  நாம ஜபம்.
ஸ்ரீ ராமர்  தானே  சிவ தனுஷை முறித்தார்.
ஆனால் நாம மகிமை  உலகில் உள்ள அனைவரின்
அச்சத்தைப் போக்கி  ஆனந்தம் அளிக்கக்  கூடியது.

ஸ்ரீ ராமர்  தண்டகாரன்யத்தை மகிழ்வித்தார்.
ஆனால்  ராமநாமம்   எண்ணிக்கையில் அடங்கா,
மனங்களை  பவித்திரமாக்கும் திறன் கொண்டது.
ஸ்ரீ  ராமர்  அரக்கர்களின்  கூட்டத்தை ஒழித்தார்.
ஆனால்  ராமநாமம்  கலியுகத்தின்  பாவங்களைப்
போக்கக் கூடிய ஆற்றல் கொண்டது.
ஸ்ரீ ராமர் சபரி, ஜடாயு   போன்ற  உத்தம சேவகர்களுக்கு
முக்தி அளித்ததார். ஆனால்  அவர்  நாமம் எண்ணிக்கையில் அடங்கா
துஷ்டர்களை நல்லவர்களாக  உயர்த்தியது.
இறைவனின்  நாம  மகிமைக் கதைகள்  வேதங்களில் புகழ் பெற்றது.

  ராமர்  சுக்ரீவன், விபீஷணன்  இருவருக்குத்  தான்
  அடைக்கலம் கொடுத்து
தன்  அருகில்  வைத்துக்கொண்டார்.
இது அனைவரும்  அறிந்த ஒன்று.
ஆனால் நாம ஜபம் அநேக ஏழைகளை அருள் பாலித்துக் காக்கிறது.
வேதங்களில் சிறப்பாக  ராமநாமத்தின்  மகிமையை அழகாகச்
சித்தரிக்கப் பட்டுள்ளது. 

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் -௮ எட்டு

ராமசரிதமானஸ்  --பாலகாண்டம் -௮  எட்டு


                                                     ராமசரிதமானஸ் -பாலகாண்டம் --A---துளசிதாஸ் .


         
       பவித்திரமான   குணமுள்ள
       சரஸ்வதி  தேவியையும்
      கங்கா தேவியையும்
       வணங்குகிறேன்.
     கங்கையில்  குளிப்பதால் ,
      அதன்  நீரைப் பருகுவதால்
      பாபங்கள்  போகின்றன.
      சரஸ்வதி  தேவியின்
      குணம்  கேட்பதால்
     சொல்வதால்  
    அறிஞாமை  அகல்கிறது .


        நான் மகேஷ்வரரையும் ,
       பார்வதி தேவியையும்
       வணங்குகிறேன் .
       அவர்கள்  எனக்கு  குருவும் ,
     பெற்றோரும் ஆவர்.
      அவர்கள்   ஏழை பங்காளர்கள்,
      தினம் தோறும் தானம் அளிப்பவர்கள்.
     அவர்கள்  சீதையின்  கணவர்
     ஸ்ரீ ராமச்சந்திர பிரபுவின்
      சுவாமி,சேவகர்  மற்றும்  தோழர்.
    துளசிதாசராகிய  எனக்கு
   எல்லாவிதத்திலும் நன்மை
    அளிப்பவர்.
    உதவுபவர்.
   சிவ -பார்வதி இருவரும் ,
   கலியுகத்தைப் பார்த்து ,
 உலக  நன்மைக்காக ,
சாபர் மந்திரத்தை  எழுதினர்.
 அதன்  மந்திர எழுத்துக்கள்
ஒன்றுக்கொன்று  பொருந்தாது.
 பொருளும்  இருக்காது.
அவை ஜபிக்கப் படுவதும்  இல்லை.
 இருந்தாலும்
அதன் பிரபாவம்
(அதாவது  ஆற்றல் )
வெளிப்படையானது.

அந்த  உமாபதி
என்மேல்  மகிழ்ந்து ,
அருள்புரிந்து
இந்த  ஸ்ரீ ராமரின்  கதையை
ஆனந்தமுள்ளதாகவும்
மங்களங்களைக் கொடுக்கும்
மூலமாக  ஆக்கிவிடுவார்.

  பார்வதி -சிவபெருமான்
 இருவரையும்  துத்திது,
 அவர்களின் பிரசாதம்
 பெற்று மிகவிருப்பத்துடன்
முழு  மனதுடன்
 ஸ்ரீ ராமச்சந்திரரின்
 புகழை  வர்ணிக்கிறேன்.
சிவபகவானின்
  கிருபையால்  என்  கவிதை
நக்ஷத்திரங்களுடன்  கூடிய
 முழு  நிலவுகொண்ட இரவு
போல்  மிகவும் அழகாக இருக்கும்.
இந்தக் கதையை
அன்புடனும்  மிகவும்
எச்சரிக்கையுடனும்
சொல்பவர்களுக்கும்
கேட்பவர்களுக்கும்
கலியுகத்தின்
பாவங்களிலிருந்து
முக்தி  பெற்று
ஸ்ரீ ராமச்சந்திரரின்
அன்பும் அருளும்
 ஆசிகளும்  கிடைக்கும்.
   ஸ்ரீ  சிவபகவானும் ,பார்வதியும்
  கனவில் உண்மையில் மகிழ்ந்தாலும்
 என்னுடைய  இந்த மக்கள் மொழி கவிதை
 மிகவும்  மகிமை பெறும்.
அது மெய்யாகிவிடும்.
   நான் அதிகம்  புனிதமான
 அயோத்யாபுரி மற்றும்
கலியுகங்களின்
பாவங்கள்  போக்கும்
 ஸ்ரீ சர்யு நதியை  வணங்குகிறேன்.
ஸ்ரீ ராமச்சந்திரரின்
   அதிக  அன்புக்குப்
பாத்திரமான அவதபுரியின்
மக்களையும்  வணங்குகிறேன்.
அவர்கள்  சீதையை நிந்தித்த
 பாவக் கூட்டங்களை அழித்து
அவரை துன்பமின்றி  செய்து
  தன் உலகத்தில் குடியமர்த்திக் கொண்டார்.
நான்  கௌசல்யா வடிவமான
 கிழக்கு திசையையும்
வணங்குகிறேன்.
அவரின்  புகழ் உலகம்
முழுவதும் வியாபித்திருக்கிறது.


கிழக்கு திசையிலிருந்து
 உலகத்தினருக்காக  சுகமளிக்கவும்
துஷ்டர்களாகிய  தாமரைக்காக
 பனிபோல் ஸ்ரீ ராமச்சந்திரரின்
அழகான நிலவு  தோன்றியது.
   நான் வாக்காலும்
மனதாலும் செயலாலும்
புண்ணியமும் நல்லதை
உலகுக்கு செய்யும்
  மூர்த்தியாகக்   கருதி
அனைத்து ராணிகளுடன் சேர்த்து
 ராஜா  தசரதரை  வணங்குகிறேன்.
அவர் என்னை அவர்
 மகனின் சேவகன்  என்பதறிந்து
 அவரைப்படைத்த
பிரம்மாவும் பெருமை பெற்றதை
 அறிந்து என்னை
அருளட்டும்.
ராமரின்  பெற்றோர் என்பதால்
மகிமை எல்லைக்குள் அடங்காது.
  அவதநாட்டு மன்னன்
 தசரதரை  வணங்குகிறேன்.
மன்னருக்கு தன் மகன்
 ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் மேல்
உண்மையான  அன்பு  இருந்தது.
அவர் ராமரைப் பிரிந்ததுமே
தன் அன்பு உடலை
மிகத் துச்சமாகக் கருதி  துறந்தார்.
 நான்  என் குடும்பத்துடன்
 ராஜா ஜனகரை வணங்குகிறேன் .
அவருக்கு ஸ்ரீ ராமர் மேல்
அதிக அன்பு இருந்தது.
அதை தன் யோகத்தினாலும்
போகத்தினாலும் மறைத்துவைத்திருந்தார்.
ஆனால் ஸ்ரீ ராமரைக் கண்டதுமே
வெளிப்பட்டுவிட்டது.
  ஸ்ரீ ராமரின்  நான்கு  சகோதர்களில்
முதலில்  பரதனை வணங்குகிறேன்.
அவருடைய நியமங்கள் விரதங்களின்
மகிமையை வர்ணிப்பது அரிது.
பரதனின்  மனமாகிய  வண்டு எப்பொழுதும்
ராமரின்  பாத கமலங்கலையே சுற்றிசுற்றிவரும்.
ஒருபொழுதும்  அதைவிட்டு  அகலாது.
 குளிர்ச்சியும் ,அழகும் ,பக்தர்களுக்கு
 சுகமும் தருகின்ற
லக்ஷ்மணனின் பாத கமலங்களை
வணங்குகிறேன்.
ஸ்ரீ ராமச்சந்திரரின்   புகழ்க்கொடி
 பறக்க ஸ்ரீ லக்ஷ்மணன்
கொடிக்கம்பம் போல் விளங்கினார்.
  ஆயிரம்  தலைகொண்ட  பூமியைத்
 தாங்கக் கூடிய
சேஷ்பகவனின்  அவதாரமாக
 லக்ஷ்மணன்  பூலோகத்தின்
பயம்  போக்க  அவதரித்தார்.
.
அவர் குணச்சுரங்கம்,
கிருபைக்கடல் .
 நல்ல நண்பர்களுக்கு
ஆனந்தம்  வழங்கக் கூடியவர்,
எப்பொழுதும்  என்  மேல்
 மகிழ்ச்சியாக இருக்கட்டும்.
   மிகப்பெரிய  வீரரும் ,
நல்லொழுக்க சீலரும் ,
ஸ்ரீ பரதரைப் பின்
பற்றுவருமான
சத்துருக்னணன்
 பாத கமலங்களையும்
வணங்குகிறேன்.
ஸ்ரீ ராமச்சந்திரரே புகழ்ந்து   வர்ணித்த
ஸ்ரீ ஹனுமானை வணங்குகிறேன்.
ஸ்ரீ ஹனுமான்  துஷ்டர்கள்  என்ற
வனத்தை எரிக்கும் தீ.
ஆழ்ந்த  அறிவு  மிக்கவர்.
அவரின்  இதயம்  என்ற  கட்டிடத்தில்
வில்  அம்பு ஏந்திய ,
ஸ்ரீராமர்  அமர்ந்திருக்கிறார்.

தங்கள்   தாழ்ந்த பிறவியிலும்
 ஸ்ரீராமரின்  அருள்பெற்ற
 சுக்ரீவர்,கரடிகளின்  அரசர்  ஜாம்பவான் ,ராக்ஷசர்களின்   அரசன் விபீஷணன், அங்கதன் ,
மற்றும்  வானர சமுதாயம்,
அனைத்து
அழகான சரணங்களையும்
வணங்குகிறேன்.

ராமரின்  உபாசகர்களான
 மிருகங்கள், பறவைகள், தேவர்கள், அசுரர்கள்
 அனைவரையும்  வணங்குகிறேன் .
ஸ்ரீராமருடைய  பலன் எதிர்பாரா
சேவகர்கள் அனைவரையும்
 வணங்குகிறேன்.
  நாரதர் , சுக பிரம்மம் , சனகர் போன்ற
முனீஸ்வரர் களையும்  வணங்குகிறேன்.
  உங்கள்  எல்லோரும்
என்னை தாசானுதாசனாக
ஏற்று  வணங்குகிறேன்.
கிருபைகாட்டுங்கள்.
   களங்கமற்ற  தூய  அறிவு
 தருவதற்காக   ராஜா  ஜனகரின் புதல்வி

ஸ்ரீ  ராமச்சந்திரரின்   பிரியமானவள் ,
ஜானகி அவர்களின்
இரண்டு  தாமரைப் பாதங்களையும்
வணங்குகிறேன்.
  பிறகு நான்  மனதாலும்,
வாக்காலும் ,
செயலாலும்
 கமலக் கண்ணன் ,
வில்-அம்பு தாரி ,
பக்தர்களின் ஆபத்து -கஷ்டங்களைப்
போக்குகின்ற ,
பக்தர்களுக்கு நலமும்  சுகமும்  தருகின்ற ,
 ஸ்ரீ ராமரை ,
   எல்லா சாமார்த்தியமும்
வல்லமையும் கொண்டவரை ,
ராமச்சந்திரரை ,
அவரின் சரணகமலங்களை
 வணங்குகிறேன்.
 ஏழை  -துன்பப்பட்டவர்களின்  மீது
மிகவும்  அன்பான  ,
 சொல்.பொருள், வேறுபட்டாலும்
 தண்ணீர் மேலும்  தண்ணீரின்  அலைகள்  போன்று பிரிக்கமுடியாதவர். ஒன்றானவர்.

  ராம  நாமம்  பிரம்மா ,
விஷ்ணு,சிவன்  மூன்றும்
சேர்ந்தவடிவம் .
தீ, சூரியன் ,நிலவு   மூன்றும்
 சேர்ந்ததே  ராமநாமம்.
 ர.ஆ,ம  என்ற மூன்றேழுத்து   பீஜம். (மூலம்).
அந்த   நாமம்    வேதங்களுக்கு   உயிர்.
 நிற்குணம், ஒப்புமை இல்லாதது,
குணங்களின்   கிடங்கு.

 ராமநாமத்தின்  இந்த  மகாமந்திரத்தை
  சிவன் அவர்கள்  ஜபிக்கிறார்.
அதன்மூலமாக  ,
அதை  உபதேசித்ததின்  காரணமாக,
காசி  முக்திக்கு  காரணமாகும்.
அந்த ராம  நாம  மஹிமையை
கணேசர்  அறிவார்.
அதன்  மஹிமையால்  தான்
 எல்லா  இறைவனின் பூஜைக்கு  முன்னால்
    முதல்  தெய்வமாக  விநாயகர்
   பூஜிக்கப்படுகிறார்.

  ராம நாம  மகிமையை
 அறிந்த  ஆதி  கவி  வால்மீகி ,
 ராமநாமத்தின்  பிரதாபத்தை
அறிந்தவர்.
 அவர் ராமநாமத்தை " "மரா " என்று
 மாற்றி  ஜபித்தே
 பரிசுத்தமாகிவிட்டார்.

சிவா பகவான்
  ராம  நாமம்
  ஆயிரம்  பெயருக்கு  சமம்  என்கிறார்.
பார்வதி  எப்பொழுதும்
 தன் கணவரின்  நாம  ஜபத்துடன்
ராம நாம ஜபமும் செய்வது  வழக்கம்.
  பார்வதி தேவியின் நாம ஜப  ஈடுபாட்டால் ,
 ராம நாமத்தின்  அன்பால்  ,
அவரை பெண்களில் மிக  உயர்வாகக்  கருதி ,
தன் மனைவியாக்கிக் கொண்டார்.
ராமநாமத்தின்  மகிமையை சிவபெருமான்
அறிந்ததால்  தான்  ,
 விஷத்தை  அருந்திய  பின்னும்
அமிர்தத்தின்  பலனை அடைந்தார்.

ஸ்ரீ  ராமரின்  பக்தி
 மழைகாலம் போன்றது.
 உத்தமமான  சேவகர்கள்
  நெல் ,ராமநாமத்தின்
  ஈரெழுத்து க்கள்  ஆவணி-புரட்டாசி
என்ற  இரு  மாதங்கள்.
இரண்டு  எழுத்துக்களும் இனிமையானது .
அழகானது.
எழுத்துவரிசைகளில்
இரண்டு கண்கள்  போன்றது.
பக்தர்களுக்கு வாழ்க்கை போன்றது.
தியானம்  செய்ய  எல்லோருக்கும்  எளிதானது.
 சுகமளிக்கக்கூடியது.
  இந்த உலகத்தில்  லாபத்தையும்
பரலோகத்தில் நிர்வகிக்கவும்  வழிகாட்டுவது.
இறைவனின் தெய்வீக
இருப்பிடத்தில் ,
தெய்வீக  உடலுடன்
எப்பொழுதும்  இறைவனின்
 சேவையில்  நியமிக்க வல்லது.

 இந்தராம    நாமம்  சொல்லவும் ,
 கேட்கவும் ,
தியானிக்கவும் மிகவும்
அழகானது.
மிகவும்  இனிமையானது.
 ராமநாமமும்,
 ராமரும் ,
லக்ஷ்மணரும்
 துளசிதாசருக்குச்
  சமமான  அன்பானவர்கள்.
   இந்த இரண்டு  எழுத்துக்களுமே
 எப்பொழுதும் ஒரே  உருவமானது.
ஒரே  ரசமானது.
இந்த  இரண்டு  எழுத்துகளுமே
 நரனும்  நாராயணனும்
போன்று  அழகான  சகோதரர்கள்.
இவர்கள்  உலகத்தை  காக்கிறவர்கள் .
பக்த  ரக்ஷகர்கள்.
 பக்தி  உருவமான  அழகான
 பெண்களின் அழகான   காதணிகள்.
 உலக நன்மைக்கான
சூரியனும் சந்திரனுமாவார்கள்.
   இவர்கள்  மோக்ஷம்  வடிவமான
  அமிர்தத்தின்  ருசியும் ,
திருப்தியும் போன்றவர்கள்.
ஆமை,  ஆதி சேஷன்  போன்று
பூமியைத் தாங்கக்  கூடியவர்கள்.
பக்தர்களின்  மனமென்ற
அழகான  தாமரையில்
ரீங்காரமிடும்  வண்டுகள் போன்றவர்கள்.
நாக்கு  என்ற  யசோதைக்கு
ஸ்ரீ  கிருஷ்ணர்  பலராமன்  போன்று
   மிக பிரிய மானவைகள்.
"ராம"  என்ற ஈரெழுத் துக்கள்
ஒன்று  வெண்கொற்றக் குடை .
மற்றொன்று மணிமகுடம்.

   பெயரும் , பெயர் பெற்றவரும்
  ஒன்றானவர்கள்.
  இருவருக்குள்  , பரஸ்பரமான
   சுவாமி, சேவகன்  போன்ற அன்பு உண்டு.
 ராமநாமமும் , உருவமும் இரண்டுமே பட்டயங்கள்.
 இரண்டுமே  வர்ணிக்க இயலாதவை.
 முடிவற்றவை. மிகப் பழமையானவை.
  தூய அறிவால்தான்
இவைகளின் வடிவத்தை   அறிய முடியும்.
  பெயர்,வடிவம் இரண்டில் ஒன்றை
 பெரிது  ,ஒன்றை  சிறிது  என்பது  குற்றமாகும்.
வடிவம் பெயரின் ஆதிக்கத்தில் உள்ளது.
பெயரின்றி வடிவத்தின்  ஞானம் உண்டாகமுடியாது.
எந்த    சிறப்பு  வடிவமும்  அதன்  பெயரின்றி
உள்ளங்கையில்  வைத்தாலும் உணரமுடியாது.
உருவமின்றி  நாமத்தை  மட்டும்  ஜபித்தாலும்
 மிக விசேஷமான அன்புடன்
அந்த வடிவம்
இதயத்தில் வந்து விடும்.
 உருவம் பெயர் இரண்டின்
சிறப்பின்  கதை  சொல்லமுடியாது.
அதைப்புரிதல் ,அறிதல் ,தெளிதல்
சுகானுபவம் . சுகம் அளிக்கக் கூடியது.
ஆனால்  அதை  வர்ணிக்க  இயலாது.
உருவமற்ற உருவமுள்ள  இரண்டுக்கும்
இடையில்  சாக்ஷியாக  இருப்பது பெயரே.
இரண்டிற்கும் யதார்த்தமான ஞானத்தைக்
கொடுக்கக் கூடிய மிக கெட்டிக்கார
மொழிபெயர்ப்பாளர்.
    ராமநாமம்  மணிவிளக்கு போன்றது.
 நீ  உள்ளும் புறமும்
  வெளிச்சமான ஞானத்தை
அறிய விரும்பினால்,
 நாக்கில் "ராமநாமம்"  என்ற மணிவிளக்கை
ஏற்றிவிடு. அதாவது  ராமநாமம் நமக்கு
அக-புற அழுக்களில் இருந்து  நம்மைக்
காக்கும்  ஆற்றல்  பெற்றது.
பிரம்மாவினால்  படைக்கப்பட்ட
இந்த பிரபஞ்சத்தில்
நன்கு  விடுப்பட்ட  வைராக்கியர்களும்
சந்நியாசிகளும்
இந்த ராமநாம  ஜபத்தை
சொல்லிக்கொண்டே  எழுகிறார்கள்.
பெயரும் வடிவமும் இல்லாத
இணையற்ற  இறைவனை ,
உவமை இல்லாத  இறைவனை
வர்ணிக்க இயலாத
பெயரற்ற பிரம்மானந்தத்தை
அனுபவிக்கிறார்கள்.
  இறைவனின்  மறைந்த  ரஹசியத்தை
அறிய  விரும்புபவர்களும்
நாம  ஜபம்  செய்து  அறிந்து கொள்கிறார்கள்.
லௌகீக  சுகத்தை  விரும்புகின்ற சாதகர்களும்
நாம ஒளிதீபம்  ஏற்றி ஜபம் செய்து எண்வகை
சித்திகளைப்  பெறுகிறார்கள்.


அணிமா, கரீமா,மஹிமாபோன்ற
எண்வகை சித்திகளைப்  பெறுகிறார்கள்.

   துன்புற்ற ,தன சங்கடங்களால்  பயந்த
பக்தர்களும்  நாம ஜபம் செய்கிறார்கள்.
அதன் பலனாக  அவர்களது தீரா  கஷ்டங்களும்
பிணிகளும்  சூரியனைக் கண்ட
 பனிபோல்  விலகுகின்றன.
அவர்கள் சுகமுள்ளவர்களாக
ஆனந்தமடைகின்றனர்.
வையகத்தில்  நான்குவித
ராம  பக்தர்கள்  இருக்கிறார்கள்.
        ௧. செல்வம் லௌகீக சுகங்கள்  விரும்பும்  ராம பக்தர்கள்.
        ௨.  தன் சங்கடங்களைப் போக்க விரும்பும்  பக்தர்கள்,
        ௩. இறைவனை  அறியும்
             ஆசையால் விருப்பத்தால் உள்ள பக்தர்கள்
         ௪. இறை தத்துவம் உணர்ந்து  இயற்கையாக வே
              இறைவன் பால்   ஈடுபாடு  கொண்ட      பக்தர்கள்.

                    இந்த   நால்வருமே  புண்ணியாத்துமாக்கள்.
                    பாவமில்லாதவர்கள். 

Friday, December 9, 2016

பாலகாண்டம் --7 ராமசரிதமானஸ் -துளசிதாஸ் .

                             பாலகாண்டம் --7 ராமசரிதமானஸ் -துளசிதாஸ் .
------------------------------------------------------------------------------------------------------------------------

          ரத்தினங்கள், மாணிக்கங்கள் ,
          முத்துக்களின்  அழகு
        பாம்பு , மலை, யானைக்கு
       அழகு  கொடுக்காது,
      அவைகள்  அரசனின்  மகுடம்
                  அல்லது
           இளம் பெண்ணின்
     அணிகலன்களில்  சேர்ந்தால் தான்
     அதிகம் ஜொலித்து  அழகு  கூடும்.

       இவ்வாறே    சிறந்த  கவியின்  படைப்புகள்
       அவைகளுடைய  எண்ணம் , பிரச்சாரம்,
       அதில்  சொல்லப்பட்ட  ஆதர்சமான  கருத்துக்கள்
        ஏற்கப் படுவதாலும் , பின்பற்றப் படுவதாலும் , தான்

       கவிதையோ  காவியமோ  அழகு பெறுகிறது.

       எங்கோ எழுதப்பட்ட  கவிதை ,
      எங்கோ  புகழ்  பெறுகிறது.

        கவிஞன்  நினைத்ததுமே
      அவனின் பக்தியின்  காரணமாக
     பிரம்ம  லோகத்தை விட்டு விட்டு
    ஓடி  வந்துவிடுகிறாள் .

       சரஸ்வதி தேவி  ஓடி வந்த களைப்பு
      ராமச்சந்திரன் என்ற குளத்தில்
     அவரைக்  குளிப்பாட்டாமல்  
     பலகோடி  உபாயங்கள்  செய்தாலும் போகாது.

        கவிஞர்களும்  பண்டிதர்களும்  தன்  மனதில்
        இப்படி  நினைத்துத் தான்  கலியுகத்தின்
        பாபங்களை போக்கும்
      ஸ்ரீஹரியின் புகழைப் பாடுகிறார்கள்.
   
      உலகில்  உள்ள  மாந்தர்களைப் புகழ்வதால்
      சரஸ்வதிதேவி  மிகவும்  வருத்தப்படுவாள்.
     அறிவுள்ளவர்கள் இதயத்தை  சமுத்திரமாகவும் ,
    அறிவை   சிப்பியாகவும்   சரஸ்வதி  தேவியை
     சுவாதி நக்ஷத்திரம்      போன்றும் கருதுவார்கள்.
     இதில் மேன்மையான  எண்ணங்களின்
    மழை  பெய்தால்
   முத்து போன்று  அழகான  கவிதை உண்டாகிறது.
   அந்த கவிதை  என்ற  முத்துக்களில் ,  மிக  யுக்தியுடன் ,
   ராமரின்  குணங்கள்  என்ற நூலில் தொடுத்து ,
 தன்  களங்கமற்ற  இதயத்தில் தரித்துக் கொள்கிறார்கள்.
  அதனால்  அனுராகம் என்ற  அழகு உண்டாகிறது.

 அவர்கள்  அதிக அன்பைப்  பெறுகின்றனர்.

  இந்த  பயங்கர  கலியுகத்தில்  பிறந்தவர்கள் ,
 அவர்கள்  செயல்  காகம் போன்றது. ஆனால் அன்னத்தின்
  வேடம் போட்டிருப்பார்கள். அவர்கள் வேதமார்க்கத்தை
 விட்டுவிட்டு, தீய வழியில் செல்கிறார்கள்.
  அவர்கள் கபடத்தின் உருவமாகவும் ,
  கலியுகப் பாபங்களின்
 கிடங்காகவும்  உள்ளனர்.

அவர்கள்  ராமரின் பக்தன் என்று சொல்லப்படுவார்கள்.
அவர்கள்  மக்ககளை  வஞ்சிப்பார்கள்.
அவர்கள் செல்வம் ,கோபம்,காமத்தின்  அடிமைகள்.
அவர்கள்  குறும்புத்தனம்  செய்வார்கள்.
அறம் என்ற பொய்யான கொடி ஏற்றுவார்கள்,
கபடத்  தொழில் என்ற  சுமை  சுமப்பவர்கள்.
உலகின்  இப்படிப்பட்ட மக்களில் எல்லோருக்கும்
முதலில்  என்  பெயர்தான்  உள்ளது.
நான்  என்  கெட்ட  குணங்களைச் சொன்னால்
கதை மிகவும் அதிகரித்துவிடும்.
 என்னால்  வையகக் கடலை   கடக்கமுடியாது.
என்னுடைய கெட்ட  குணங்களில்
 மிகவும்  குறைந்ததைத்  தான்
வர்ணித்திருக்கிறேன்.
அறிவுள்ளவர்கள்  சுருக்கமாகச்
சொன்னாலே  புரிந்துகொள்வார்கள்.
என்னுடைய  பலவித வேண்டுதலைக் கேட்டு
யாரும் இந்தக் கதையைக்கேட்டு
குறை சொல்லமாட்டார்கள்.
இதைப் படித்து  சந்தேகப்படுபவர்கள்
 என்னைவிட மிகவும் முட்டாள்கள்
அறிவில் மிகவும்  வறியவர்கள்.

நான் கவிஞன் கிடையாது.
கெட்டிக்  காரன் என்று யாராலும்
 சொல்லப்படவில்லை.
என்  அறிவுக்குத் தெரிந்த அளவில்
 ஸ்ரீ ராமனின் புகழ் பாடுகிறேன்.
ராமரின் குணம்  அளவுகடந்தது.
என்   அறிவோ உலகப்பற்றுடன் இருக்கிறது.

சுமேரு மலையையே  பறக்கவைக்கும்

வேகமான காற்றுக்கு முன்னால்,பஞ்சு என்ன  ஆகும்.
ஸ்ரீராமரின்  எல்லையில்லா மகத்துவம் அறிந்து என்
மனம்  மிகவும்  தயங்குகிறது.
 சரஸ்வதி  தேவி, சிவன், பிரம்மா, வேதங்கள் ,புராணங்கள்,
இவை எல்லாமே எப்பொழுதும் அவரின் புகழை வர்ணிக்கின்றன.

ராமரின்  மஹிமை  வர்ணிக்கமுடியாது,
 என்பதை  அறிந்தும்  வர்ணிக்காமல் இருக்க முடியாது.
பஜனையின் மகிமை   பல விதங்களில் சொல்லப்பட்டிருக்கிறது,
இறைவனின்  புகழ்  விசித்திரமானது. அவரின்  புகழை

பலவிதங்களில் சாஸ்த்திரங்களில்   வர்ணிக்கப்படுகிறது.
 இறைவனின்  பஜனையை மனிதன் இயற்கையாக சிறிதளவு
சொன்னாலும் வையகக்  கடலை  கடக்க முடியும்.

 பரமேஷ்வர்  ஒருவரே. அவருக்கு என
எவ்வித  விருப்பமும்  இல்லை. உருவமும் இல்லை.
அவருக்குப் பிறவியும்  இல்லை.
அவர் சச்சிதானந்தர்.எல்லா இடத்திலும்
எல்லோருக்குள்ளும்  வியாபித்திருக்கிறார்.

அந்த பகவன் தெய்வீகப் பிறவி  எடுத்து
பலவித  சேவைகள் செய்திருக்கிறார்.
அந்த  லீலை பக்தர்களின் நன்மைக்காகவே.
அவர்  மிகவும் கிருபை காட்டுபவர் .
சரணடைந்தவர்களை மிகவும்  விரும்புபவர்.
அவருக்கு பக்த்தர்கள்  மீது  மிகுந்த  அன்பு  வைப்பவர்.
ஒருமுறை  அவர்  ஒருவர்  மீது  கிருபை காட்டினால்
பிறகு எப்போதும்  அவர்  கோபிக்கமாட்டார்.
பிரபு  ராமச்சந்திர  மூர்த்தி ஏழை பங்காளன்,
இழந்த பொருளை பெறும் சக்தி படைத்தவர்,
எளிய குணம்  உள்ளவர்.
எல்லோருக்கும் ஈசன்.

இதை அறிந்த புத்திசாலிகள் , ஞானிகள்
ஸ்ரீ  ஹரியின் புகழை வர்ணனை  செய்து
பரிசுத்தமான உத்தமமான பலன்  பெற
தியானிக்கின்றனர்.

அதேபோன்று   முனிகளின்  மார்க்கத்தைப்  பின்பற்றி
 பலம்  பெறும் ஸ்ரீ ராமச்சந்திரரின்
 சரணங்களில் தலைவணங்கி
ஸ்ரீ ரகுநாதன் அவர்களின் புகழ் கதையை சொல்லுவேன்.
முனிகளின்   மார்க்கம் , அவர்கள் பாடிய கீர்த்திப்பாடல்கள்
  ( வா ல்மீகி ,வியாசர்)  எனாக்காக எளிதாகும்.

 மிகப்பெரிய  நதிகள் ,அதைக்கடக்க
  அரசர்கள் பாலம்  கட்டுகின்றனர் .
அதைக்கடக்க எறும்பும் சிரமமின்றி செல்லும்.
 அவ்வாறே முனிவர்களின் ராம
காவியங்கள்  எனக்கு எளிதாகும்.
இவ்வாறு மனவலிமையுடன்  ராமகதை எழுதுவேன்.
வியாஸ் போன்ற ஸ்ரேஷ்ட  கவிகள்
மிகவும் மரியாதையுடன் ஸ்ரீ ஹரி
புகழை வர்ணித்துள்ளனர்.

நான் அந்த ஷ்ரேஷ்டகவிகளின்
சரண கமலங்களை  வணங்குகிறேன்.
அவர்கள் எனது மனவிருப்பத்தை பூர்த்திசெய்யட்டும்.
கலியுகத்தில்  அவர் புகழ் பாடிய
கவிஞர்களையும் வணங்குகிறேன்.

இயற்கையிலேயே ஞானம்  பெற்ற  கவிகள் ,
ஹரியின் புகழைப் பாடி இருக்கிறார்கள்,
நிகழ்காலத்திலும் கவிகள் இருக்கின்றனர்.
எதிர்காலத்திலும் பலர் தோன்றுவார்கள்
அந்த எல்லோருக்கும் எனது கபடம் வஞ்சனை எல்லாம்
விட்டுவிட்டு வணங்குகிறேன்.
அவர்கள்  எல்லோரும் எனக்கு  வரமளிக்கட்டும்.
சாதுக்கள் கூட்டத்தில் எனது  கவிதைக்கு
கௌரவம்  கிடைக்கட்டும்.
அறிவுள்ளவர்கள் கவிதைக்கு
 மரியாதை அளிக்கவில்லை
என்றால்  முட்டாள்  கவிஞர்கள் தான்
 வீணாக உழைக்கிறார்கள்  என்றே பொருள்.

புனித  கங்கா நதியினைப்போல்
எல்லோருக்கும்  நன்மை செய்பவர்கள்  தான்
புகழ், கவிதை, சொத்து  பெற  உத்தமர்கள்.
ஸ்ரீ  ராமரின்  புகழ்  உத்தம  மானது.
அழகானது. எல்லோருக்கும் நன்மை அளிக்கக் கூடியது.
எனது  கவலை என் கவிதை சிறந்ததல்ல என்பதே.
எனது மொழி ஓலையில் பட்டு தையல் போட்டதுபோலாகும்.
இருப்பினும் அழகாகத்தான் இருக்கும்.
 எளிமையான பொருள் நிறைந்த
  கவிதைகளைத்தான்
கெட்டிக்காரர்கள் புகழ்வார்கள்.
களங்கமற்ற  குணங்களின்
வர்ணனைகளை விரோதிகள்  கேட்டால்
விரோதத்தை  மறந்து   புகழைத் தொடங்குவார்கள்.

தூய மனமின்றி இப்படிப்பட்ட  கவிதை இயற்ற முடியாது.
எனது அறிவுத்திறன் மிகவும் வலிமையானதல்ல.
கவிஞர்களே!நீங்கள் அருள் புரியுங்கள்!
ஹரியின் புகழை நான் வர்ணிக்கும்  திறனளிக்க
உங்களிடம் வேண்டுகிறேன்.

கவிஞர்களே!பண்டிதர்களே!
நீங்கள் ராமச்சந்திரனின் புகழ்  என்ற மானசரோவரில்
நீந்தும்    அழகான  அன்னப்பறவைகள் . நீங்கள்
எனது  வேண்டுகோளைக்  கேட்டு
என் விருப்பத்தை நிறைவேற்ற
 கிருபைகாட்டுங்கள்.

 ராமாயணம்  இயற்றிய  வால்மீகி  முனிவரை வணங்குகிறேன்.
அவர் கரன் போன்ற    அரக்கர்களுடன்  இருந்தாலும்
 கரனுக்குஎதிரான   மென்மையான அழகான
 குணமுடையவர்..
குறைநிறைந்தவர்களுடன் இருந்தாலும்
குறையற்ற குணமுடையவர்.

உலகம் என்ற பெருங்கடலைக் கடக்க உதவும்
கப்பல்கள் போன்ற  நான்கு வேதங்களை
வணங்குகிறேன்.
அவைகளுக்கு ராமர் புகழ்பாட
கனவிலும் களைப்பு  ஏற்படாது.

  நான்  அந்த  பிரம்மாவை  வணங்குகிறேன்.
 அவர் வையகம் என்ற கடலை படைத்திருக்கிறார்.
அதில் ஒரு பக்கம் அமிர்தம் , அனைத்தும் வழங்கும் காமதேனு
போன்ற  உலக நல்லியல்புகளும்
மற்றொருபக்கம் தீயவர்கள்,  விஷம், மது போன்ற

மயக்கும் பொருள்களும்
  உருவாக்கி  இருக்கிறார்.

தேவர்கள், அந்தணர்கள், பண்டிதர்கள், கிரகங்கள்
ஆகிய  அனைத்தையும்  வணங்குகிறேன்.
அவர்கள் மகிழ்ந்து என் அனைத்து
  மனவிருப்புங்களையும்
முழுமையாக்கட்டும்.
















 







,

       

Wednesday, December 7, 2016

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் -- 6

                       பாலகாண்டம் -6-ராமசரிதமானஸ்

       நதிகள்  குளங்கள்  போன்று
 மனிதர்களும்
        எண்ணிக்கையில் அதிகம்.
         வெள்ளம் பெற்று குளங்கள் மகிழ்கின்றன.
        மனிதனும் தன்  முன்னேற்றத்தால்
        மகிழ்ச்சி அடைகின்றான்.

       சமுத்திரமானது   முழு  நிலவைக்கண்டு
        பொங்குகிறது. அப்படி  சமுத்திரம் போன்று
       மனிதர்கள்  எண்ணிக்கையில் குறைவு.
   
        என்னுடைய  பாக்கியம்  சிறிது, ஆனால்  விருப்பம்  மிகப் பெரிது,
        என் ராமனின் புகழ்  கேட்டு  நல்லவர்கள் சுகம் பெறுவார்கள்.
        துஷ்டர்கள்  பரிகசித்து  சிரிப்பார்கள்.

       துஷ்டர்கள்  சிரிப்பதால்  எனக்கு  நன்மையே  உண்டாகும்.
   
        இனிமையான  குரல் கொண்ட

        குயிலுக்கு காகத்தின்  குரல்  
      கர்ண கொடூரமாகத்தான்  இருக்கும்.
        கொக்கு அன்னப்பறவையையும் 
      தவளை  வானம் பாடி யையும் 
      பார்த்து சிரிக்கும்.
     அவ்வாறே இழிமனம்  படைத்தவர்கள்
     நல்லதைக்கேட்டு சிரிக்கிறார்கள்.

    கவிதைகளை  ரசிக்கத் தெரியாதவர்களுக்கும் ,
   ஸ்ரீ  ராமச்சந்திரன்  மேல்  அன்பு  இல்லாதவர்களுக்கும்
    இந்த  ராம கதை பரிகசிக்கத்தக்கதாக  இருக்கும்.
   இந்த  ராமகாதை மக்கள்  மொழியில் எழுதப்படுகிறது
   என்னுடைய  அறிவு ஒன்றும்  அறியாதது.
  இதனால் இது சிரிக்கத்  தகுதியானதுதான்.
   சிரிப்பதால் இதில் எதுவும்  தவறில்லை.
    இவர்களுக்கு இறைவனின்  திருவடிகளில் அன்பில்லை.
    நல்ல புத்தியும்  இல்லை.
   சிவனின்  -விஷ்ணுவின் மேல் பக்தி  உள்ளவர்களுக்கு
  இருவரிடத்திலும்  வேற்றுமை  காணாதவர்களுக்கு
  இந்த  ரகுநாதரின்  கதை இனிமையாக ரசிக்கத்தக்கதாக இருக்கும்.

  நல்லவர்கள் ஸ்ரீ ராமச்சந்திரன் மீதுள்ள  பக்தியால் ,
  அலங்கரிக்கப்பட்டதை  அறிந்து அழகான
   வார்த்தைகளால் புகழ்வதைக்   கேட்பார்கள்.
  நான்  கவிஞனுமில்லை.
  நல்ல இலக்கியப் படைப்பில்
    தேர்ந்தவனுமில்லை.
  எனக்கு  எல்லா கலைகளும் தெரியாது.
  கல்வியும் அதிகமாகக் கற்றதில்லை .
  பலவித  எழுத்துக்கள், சொற்கள், பொருள்கள்,
 அணிகள், சந்தங்கள், பாவங்கள், ரசங்கள் , அதன் வேறுபாடுகள்,
  கவிதைகளின்  வித விதமான குணங்கள் -குற்றங்கள்  உள்ளன.
 இவைகளில் கவிதை சம்பந்தமான ஒரு விஷயத்திலும் ஞானம் கிடையாது.

நான்  சத்தியமாக வெள்ளைக் காகிதத்தில்  கைவைத்து சொல்கிறேன்.
என்னுடைய படைப்பு எல்லா குணங்களும் இல்லாமல் இல்லை.
இதில் உலகப் புகழ் பெற்ற ஒரு குணம் இருக்கிறது.
அதை  எண்ணி நல்ல அறிவு  உள்ளவர்கள்,
  தூய ஞானம் உள்ளவர்கள்,  இந்தக் கதையைக் கேட்பார்கள்.

  இதில் ரகுநாதருடைய  உயர்ந்த பெயர் உள்ளது.
   அது மிகவும்  பவித்திரமானது.
   அதில்  வேதம் வேதங்கள் புராணங்களின் சாரம் உள்ளது.
   நல்லது செய்யும் பவனம் உள்ளது,
   அமங்கலங்களை  போக்கக்கூடியது,

   பார்வதியுடன் சேர்ந்து எப்பொழுதும்
    சிவனும் ஜபித்துக் கொண்டிருக்கும்   ராமநாமம் .
   நல்ல கவிஞர்கள் மூலம்  எழதப்பட்ட  அபூர்வமான
  கவிதைகளும்  ராமநாமமின்றி  சோபிக்காது.
  நிலவுபோன்ற முகமுடைய  அழகான பெண்ணும் ஆடையின்றி
   சோபிக்க மாட்டாள்.

  இதற்கு விபரீதமாக  தீய கவிஞர்கள்
 இயற்றிய கவிதைகளும் ராமநாமமும் ,ராமர்
  புகழும்  சேர்ந்தால்   அறிவுள்ளவர்களும்
  மரியாதையுடன்  பாடவும் கேட்கவும் செய்கிறார்கள்.

 நல்லவர்கள்  வண்டுகள் போல் நல்லவற்றை மட்டுமே ஏற்கிறார்கள்.
என்னுடைய இந்த படைப்பில் கவிதைகளின் எந்த ரசமும்  இல்லை.
ஆனால் இதில் ஸ்ரீ ராமருடைய பிரதாபம் உள்ளது.
 என் மனதில் இந்த நம்பிக்கைத் திடமாக உள்ளது. .
நல்லவர்களுடன்   சேர்ந்தால் நல்லதே நடக்கும்.
இதில் சிறப்பு ஏற்படும்.
  ஊதுபத்திப்  புகை மனம் பரப்பி
புகையின் எரிச்சலான குணத்தை  விட்டுவிடுகிறது.
அவ்வாறே என்னுடைய கவிதை  நிச்சயமாக அழகற்றது.
ஆனால் இதில் உலகத்திற்கு நல்லது செய்யும் ராமகதை
கருவாக வர்ணிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறந்தது.

இந்த ரகுநாதரின்  கதை நல்லது செய்து
  பாவங்களைப் போக்கக் கூடியது.
என்னுடைய  இந்த அழகற்ற கவிதை
கங்கை நதி போன்று  வளைந்து செல்கிறது.
ஸ்ரீ ராமச்சந்திரனின் பெயருடன் புகழ் பாடுவதால்
நல்லவர்களால் விரும்பப்படும்.
சுடுகாட்டின்  சாம்பல் மகாதேவனின்
உடலில் பூசுவதால் புனிதமாகிறது.
நினைத்தாலே புனிதத்தை உண்டாக்கக் கூடியது.
ராமரின்   புகழ்  பாடுவதால் எல்லோருக்கும்
மிகப்பிரியமான  நூலாகும். மலயபர்வதக் காற்றின் சேர்க்கையால்
சந்தன மரத்தில்   நறுமணம்  வீசுகிறது.
நறுமணம்  இருப்பதால்  அதை   கட்டை என்று யாரும் நினைப்பதில்லை.

 கருப்பான   பசு மாடு  வெண்மையான
 ருசியான  பால் தருவதுபோல்    நான்

கிராமிய மொழியில் ராம   நாமத்தின் புகழையே பாடுவதால் அதுவும்    அனைவருக்கும்  பிடிக்கும். பால்  போல்  நலமளிக்கும்.
பாமரர்கள்  மொழியில் எழுதிய ராமாயணமும் வித்வான்களாலும்
அறிவாளிகளாலும்  விருப்பமாக பாடப்படுகிறது.













     
       

பாலகாண்டம் --௫. 5 இராமச்சரிதமானசம்-துளசிதாஸ் பாகம் -5.

பாலகாண்டம் --௫. 5  இராமச்சரிதமானசம்-துளசிதாஸ் பாகம் -5.

      இறைவனால் படைக்கப்பட்ட
    தேவர்கள், அரக்கர்கள், மனிதர்கள், நாகங்கள்,
    பிரேதங்கள்,         முன்னோர்கள், கந்தர்வர்கள், கின்னர்கள்,
     மாயாவிகள்  அனைவரையும்  வணங்கு கிறேன்.
    இப்பொழுது  அனைவருமே என்மேல்  கிருபை காட்டுங்கள்.

   எண்பத்திநான்கு  லக்ஷம் யோனிகளில்
    தோன்றும் ஜீவராசிகள்
   வியர்வையிலிருந்தும், காற்றிலிருந்தும்,
    ஆகாயத்திலிருந்தும், தண்ணீரிலிருந்தும்  
    படைத்த அனைத்தும் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியால்.
   மனிதனிடம் தோன்றுபவை,
   முட்டையில் இருந்து  தோன்றுபவை,
    தானே  தோன்றுபவை அனைத்தும்
    இறைவனால் படைக்கப்பட்டதால்  வணங்குகிறேன்.

   ஸ்ரீ ராமச்சந்திரரின்   குணங்களை
   வர்ணனை செய்ய விரும்புகிறேன்.
  எனது அறிவு மிகவும்  சிறிது.
   பகவானின் குணமே அதிக  ஆழமானது.
   எனது  மனம்  ஏழை ஆனால் மனோரதம் ராஜா .
   எனக்கு எவ்வழியும் தோன்றவில்லை.

    எனது அறிவு  மிகவும் மட்டமானது.
   எனது  விருப்பம்  மிகவும்  உயர்ந்தது.
   அமிருதம் பெரும்  விருப்பம் .
  உலகுடன்  இணைந்த மோர் கூட இல்லை.
  நல்லவர்களே! என் அதிகப்பிரசங்கித்தனத்தை
  மன்னித்துவிடுங்கள்.
 என்னுடைய  மழலை வர்ணனையை  கேளுங்கள்.

   மழலைச் சொற்களை பெற்றோர்கள்
   மிகவும் ரசிப்பார்கள்.
 ஆனால்  கேட்ட எண்ணமுள்ளவர்கள்,கொடியவர்கள்,
  வஞ்சனைகள் செய்வோர்   மற்றவர்களின்  தவறுகளை
 தங்கள் நகைகளாக அணிவர்.    சிரிப்பார்கள்.

   ரசமோ /ரசமற்றதோ  தன்   கவிதைகள் எல்லோருக்கும் பிடிக்கும்.
மற்றவர்களின்  படைப்புகளைக்கேட்டு படித்து  ரசிப்பவர்கள்
 உத்தமமானவர்கள்  வையகத்தில் குறைவே.


.









.

       

         

Monday, December 5, 2016

 பாலகாண்டம் -.4

    துஷ்டர்கள்  மிகவும்  இரக்கமற்றவர்கள்.
   அவர்களுக்கு நன்மை செய்தவர்களுக்கும்
    தயங்காமல்  தீமை  செய்வார்கள்.
    அவர்கள் மற்றவர்களுக்கு   தீங்கு
    விளைவிப்பதையே   லாபமாகக்  கருதுபவர்கள்.
    பகவான்  விஷ்ணு ,  பகவான்  சங்கரர் இருவரின்
     புகழுக்கு    இடையூறு  உண்டுபண்ணுபவர்கள்.

    மற்றவர்களுக்கு  தீங்கு  விளைவிப்பதில்
    சஹாஸ்ரபாஹுவுக்கு  சமமானவர்கள்.
    மற்றவர்களின் தவறுகளை  ஆயிரம் கண்
      கொண்டு பார்ப்பவர்கள்.
      மற்றவர்களுக்கு  தீங்கு விளைவிக்க
     நெய்யில்  விழும்  ஈ  போன்றவர்கள்.
      மற்றவர்களை  எரிக்கின்ற  நெருப்பு போன்றவர்கள்.
     கோபத்தில்  எமனைப் போன்றவர்கள்.
      பாவம் மற்றும் தீய குணங்களின் செல்வந்தர்கள் .
      குபேரர்கள். இவர்களின்  வளர்ச்சி  மற்றவர்களின்
    நன்மையில் தீங்கு விளைவிக்கும்
    வால்   நக்ஷத்திரம்      போன்றவர்கள்.
  இவர்கள்  கும்பகர்ணன்  போன்று
   தூங்குவதில் தான்   நன்மை   இருக்கிறது.

   பனிமழை   வயலையும்  நஷ்டப்படுத்தி
    தானும் உருகிவிடுவதுபோல்
   தீயவர்கள்  மற்றவர்களுக்கு  தீங்கு  விளைவித்துத்
  தன்னையும்   மாய்த்துக் கொள்வார்கள்.
  நான்  துஷ்டர்களை  ஆதிசேஷன்  போன்று  வணங்குகிறேன்.

  இறைவனின் புகழைக்  கேட்க  ஆயிரம்  காதுகள்  கேட்ட

ராஜா ப்ருத்து  போன்று  அவர்களை  நினைத்து வணங்குகிறேன் .

அவர்களை  சுராபானம்  விரும்பும்
இந்திரன் போன்று  நினைத்து    வணங்குகிறேன்.

  துஷ்டர்கள்  தனது  நண்பர்களோ  விரோதியோ  நலமாக  இருந்தால்

பொறாமைப் படுவார்கள்.  இதை அறிந்தும்
 இவர்களை நான்  வணங்குகிறேன்.

இந்த  துஷ்டர்கள் தங்கள் தீய  குணத்தை  விடமாட்டார்கள்.

காகத்தை அன்புடன்  வளர்த்தாலும்  மாமிசம்  சாப்பிடுவதை  விடாது.

       நான்  சாதுக்கள் மற்றும்  சாதுக்கலல்லாத
     துஷ்டர்களையும்  வணங்குகிறேன்.
     இருவருமே  இன்னல்  அளிப்பவர்கள்.
     இந்த  இன்னலில்  வேறுபாடு  உள்ளது.
      சாதுக்களின்  பிரிவு  உயிர்  எடுப்பதுபோல் இருக்கும்.
      பிரிவுத் துன்பம்  உண்டாகும்.
      அசாதுக்கள் துஷ்டர்களின்  சேர்க்கை  சந்திப்பு  இன்னல் அளிக்கும்.

       நல்லவர்கள்  துஷ்டர்கள்  ஒரே  மாதிரிதான்  பிறக்கிறார்கள்.
       ஆனால் அவர்களின்  குணங்களில்   பெருத்த  வேறுபாடு காணப்படும்.

       நல்லவர்களின்  குணம்   தாமரை  மலர்  போன்றது.
       ஆனால்  தீயவர்கள் அட்டை  போன்றவர்கள்.
       உடலின்  ஸ்பர்ஷம்  பட்டதுமே  இரத்தத்தை  உறிஞ்சிவிடுவார்கள்.
      சாதுக்கள்  நல்லவர்கள்  அமிர்தம்  போன்றவர்கள்.
      மோகம் , அறியாமை , கொண்ட  மதுபோன்றவர்கள்.
     
     இருவருமே  உலகில்  பிறந்தாலும் குணத்தால்  வேறுபட்டவர்கள்.

     நல்லவர்கள்   கெட்டவர்கள்  இருவருமே
      தங்கள்  கர்மத்தின்  படி
     புகழையும்  இகழ்ச்சியும்  பெறுகிறார்கள்.
     அமிர்தம் ,நிலவு, கங்கை  போன்றவர்கள்   சாதுக்கள்.

     விஷம் ,நெருப்பு, கலியுகத்தின்  பாப  நதிகள்  போன்றவர்கள்   துஷ்டர்கள்.

   கர்மங்களை  நாசம்  செய்யும் கழுகு  போன்றவர்கள்  கெட்டவர்கள். .
 
   எதை  யார் விரும்புகிறார்களோ
   அது  அவர்களுக்கு மிகவும்  பிடித்தமானது.

  நல்லவன்  நல்லதையே  ஏற்றுக்கொள்கிறான்.

 தாழ்ந்தவன்   தாழ்ந்ததையே    விரும்புகிறான்.

அமிர்தம் புகழ்ந்து  அமரராக்குகிறது.

விஷம்  கொல்கிறது.

துஷ்டர்கள்  பாவச்செயளுக்கும் , தீய  குணங்களுக்கும்

புகழ்பெற்றவர்கள். இவர்களுக்கும்  கதைகள்  உண்டு.

 நல்லவர்கள்  புண்ணியாத்மாக்கள் .
 அவர்களுக்கும்  கதைகள்  உண்டு.

 நல்லவர்கள் ,தீயவர்கள்  இருவரையுமே  ஆண்டவன் படைக்கிறான் .
வேதங்கள், வரலாறுகள், புராணங்கள்  அனைத்துமே
 ஆண்டவன்  படைப்பில்  நற்குணம் -துற்குணம்  இரண்டுமே உள்ளன.

 பிரம்மாவின்  படைப்பில்  அனைத்துமே  இரட்டைப் பிறவிகள்.

 சுகம் -துன்பம், பாவம் -புண்ணியம், இரவு-பகல்,
 தேவர்கள் -அரக்கர்கள் ,
அமிர்த, -விஷம், மாயை-பிரம்மம், ஜீவன் -கடவுள்,
செல்வம் -தரித்திரம் ,
ஏழை -அரசன், காசி -மகதம்,
கங்கா-கர்ம்நாசா,மார்வாட்-மாளவ ,
அந்தணன் -கசாப்புக்கடைக்காரன்,
 சுவர்க்கம் -நரகம் ,இல்லறம் -துறவறம்.

வேத சாஸ்த்திரங்கள் அதன்
 நன்மை -தீமைகளைப் பிரித்துக்காட்டுகின்றன.

  இறவன்  இவ்வுலகத்தில் அசையும் பொருள் -அசையாப்பொருள்

 குணமுள்ளவை-குணமற்றவை  அனைத்தையும் படைத்துள்ளான்.

படைக்கிறான் .படைப்பான்.
 ஆனால்  நல்லவர்கள் -சாதுக்கள் நல்லதை ஏற்று
 அல்லதை  அன்னப்பறவைபோல்  விட்டுவிடுவார்கள்.
அன்னப்பறவை  பாலும் தண்ணீரும் கலந்த  கலவையில்
தண்ணீரைப் பிரித்து விட்டு  பாலை  மட்டும் அருந்தும்.
மகான்களும்  அப்படியே , நல்லதை  ஏற்று ,
தீயதை  விட்டுவிடுவார்கள்.
 கடவுள்  இவ்வாறு  பிரித்து  அறியும்
அறிவைக் கொடுத்துள்ளார்.

இருப்பினும்  காலம் ,சூழல், நட்பின்  வயப்பட்டு

நல்லவர்களும்  மாயையில் சிக்கி கட்டுண்டு
நல்லது செய்வதிலிருந்து  நழுவி  விடுவார்கள்.

இறையன்பர்கள் அந்த தவறுகளை உணர்ந்து அறிந்து  தெளிந்து

தங்களைத்  திருத்திக் கொள்கிறார்கள்.
துன்பம் -தவறுகள் போக்கி களங்கமற்ற
 புகழைத் தருகிறார்கள்.
துஷ்டர்களும் எப்பொழுதாவது
 நல்லவர்களின் சேர்க்கையால்
நல்லது செய்யத் துவங்குகின்றனர்.
ஆனாலும்   மாயையின் வசத்தால்
களங்கப்பட்டு தீயவை செய்வதை விடுவதில்லை.

 வேஷம் போட்டு ஏமாற்றும் மோசக்காரர்களைப் பார்த்து
  அவர்களின் கபடப் பேச்சில்  மயங்கி
  அவர்களை பூஜிக்கின்றனர்.
ஆனால்  ஒருநாள்  அவர்களின்  வேடமும்  கலைகிறது.

எடுத்துக்காட்டனவர்கள் -காலநேமி, ராவணன் , ராஹு போன்றவர்கள்.

 கெட்டவர்கள் வேஷம் போட்ட  ஹனுமான் ,ஜாம்பவானுக்கும்
   மரியாதையும் கவுரவமும்  கொடுக்கிறார்கள்.
 கெட்டவர்கள்  சேர்க்கையால்  தீமையும் ,
 நல்லவர்கள்  சேர்க்கையால்  நன்மையையும் உண்டாகின்றன.

  காற்றின் சேர்க்கையால் தூசியும் விண்ணைத் தொடுகின்றன.
    அதே தூசி தண்ணீருடன் சேர்ந்து சகதியுடன்  கலந்துவிடுகின்றன.

   சாதுக்களின் வீட்டிலுள்ள கிளியும் மைனாவும்
  ராமா , ராம  என்கின்றன.
தீயவர்கள் வீட்டில்  வளரும் கிளியும் மைனாவும்
திட்டும் மோசமான வார்த்தைகள்  பேசுகின்றன.

 கெட்டவற்றின்   சேர்க்கையால்  புகை கருப்பாகின்றது.
அதே புகையின்  கருப்பு புராணங்கள் எழுதப்  பயன்படுகிறது.
 அதே  புகை  தண்ணீர் ,நெருப்பு,காற்றுடன்
சேர்ந்து மேகமாகி உலகத்திற்கு
வாழ்க்கை அளிப்பதாக மாறுகிறது .

 கிரகங்கள், மருந்துகள், தண்ணீர் ,காற்று வஸ்த்திரங்கள் -
 இவை எல்லாமே, நல்லவைகள் -
கெட்டவைகளுடன்
 சேர்ந்து  உலகில்
நன்மை தீமைகளைச்
செய்கின்றன.
சிந்தனையாளர்களும் அறிவாளிகளும் கெட்டிக்காரர்களும் இந்த  விஷயத்தைத் தெரிந்து புரிந்து தெளிந்து
நடந்து கொள்கின்றனர்.

 பாதத்தின் இரண்டு பதினைந்து நாட்களிலும்
 இருட்டும்  வெளிச்சமும் சமமாகவே உண்டாகின்றன.
ஒன்றின் பெயர் சுக்லபக்ஷம். மற்றொன்றின் பெயர் கிருஷ்ண பக்ஷம்.
ஒன்று நிலவை பெரிதாக்குகிறது. மற்றொன்று குறைக்கிறது. ஒன்றிற்கு புகழும் மற்றதற்கு இகழ்வும் ஏற்படுகிறது.

 உலகில் இருக்கும் அனைத்து அசையா அசையும் படைப்புகளை
நல்லவை தீயவைகளை  இறைவனின் படைப்பு எனவே கருதி
வணங்குகிறேன்.









.