Monday, October 24, 2016

ராமசரிதமானஸ் --சுந்தரகாண்டம் பக்கம் ஆறு

   
    சீதை மனதில்   நினைத்தார்---

      கடவுளே    எதிரி  ஆகிவிட்டார்.

   நெருப்பு கிடைக்கவில்லை.

    மனக்கவலை போகவில்லை.

 
 ஆகாயத்தில்  நெருப்புக் கனல்  தெரிகிறது.

 பூமியில்  ஒரு  விண்மீனும் காணவில்லை.

              என்னை  துரதிர்ஷ்ட   சாலி  என்று

     அக்னிமயமான  நிலவும்

     நெருப்பை  பொழியவில்லை.


அசோக  மரமே!

 என்  வேண்டுகோளைக்  கேள்.

 நீ  சோகமற்றவன் என்றபெயரை

    என்  சோகத்தை  மாற்றி   சத்தியத்தைக்  காப்பாற்று.

உன்  புத்தம்  புது     மென்மையான  இலைகள்

 நெருப்பைப் போன்றவை.

  நெருப்பைக்  கொடு.
   எனது  பிரிவு  நோயை  போக்கு.

   சீதையின்  துன்பத்தைக்கண்ட

ஹனுமானுக்கு  அந்த ஒரு  நொடி

ஒரு  யுகம்  போனதுபோல்  தோன்றியது.

    அவர்  சிந்தித்து  சீதைக்கு  முன்னாள்
 அந்த  மோதிரத்தைப்(கணையாழி) போட்டார்.

சீதை   அதை  விறகு என  நினைத்து  கையில்  எடுத்தாள்.
அது ராமர்  பெயர் பொறுத்தப்பட்ட கணையாழி.
சீதை  அதை  மிக  வியப்போடு பார்த்தாள்.
மனதில்  வேதனை ஓடியது.
  ராமரை  யாரும்  வெற்றிகொள்ளமுடியாது.
மாயையால்   கணையாழியை  உருவாக்க  முடியாது.

இப்படி  பல  எண்ணங்களில்  சீதை  இருந்தாள்.

  அப்பொழுது    ஹனுமான்  இனிய  குரலில்  பேசினார்---

ராமரின்  புகழ் பாடினார்.

இதைக்கேட்ட  சீதை  மகிழ்ந்தாள் .

ஹனுமார்  ஆரம்பம்  முதல்  அனைத்து நிகழ்வுகளையும்  சொன்னார்.

  சீதை   அமிர்தம் போன்று  பேசும்  சகோதரா!என்  முன்னால் வரக்கூடாதா ?

 ஹனுமான்  முன்  தோன்றினார்.

சீதை  முகத்தைத்  திருப்பிக்கொண்டாள்.

அவருக்கு  மிக ஆச்சரியமாகியது.



No comments: