Saturday, December 27, 2014

இறை அருளார் கூறும் அறவுரை.

உள்ளம்  உலகியலுக்கே தரும் முதலிடம்.-அவனியில் 

உள்ள தெல்லாம் உண்மையல்ல---அதில் 

உள்ளப்போராட்டம் ,உள்சுழல் ,வெளிசுழல் 

சுழலில் சுழன்று சூக்ஷமம்  மறந்து --சுகம் 

சுற்றமும் நட்பும் என்றே  உழன்று மெய் 

மறந்து முறை மறந்து  காலம் மறந்து 

காலன் வரும் நேரத்தில் கண் கலங்கி என்ன பயன் ?

அசாஸ்வத உலகை சாஸ்வதம் என நினைத்து 

அசாத்ய சாதனைகள்  பல புரிய 

அன்றாடம் உழைத்து அலுத்து அலைந்து 

அவனை சிவனை உலகநாதனை மறந்து ,
ஆஸ்திகள் சேர்த்து ஓய்ந்த காலம் ,
உற்றார் -சுற்றத்தார் வெறுக்கும் நேரம் 
உலகநாதனை உள்ளத்தில் அமர்த்தி என்ன பயன்?

ஊரார் போற்றும்  வினைகள் பல செய்தாலும் 

உலகம் போற்றும் உத்தமர் ஆனாலும் ,

உலகை விட்டு உயிர் பிரியும் காலம் வரும்,-அதனால் 

வேதங்களும் ஆன்மீகப் பெரியோரும் 

மதங்களும் இறையாளர்களும் கூறும் அறிவுரை:-

மன்னில் இருக்கும் மனிதர்கள் மற்றவை படைக்கும் 

பகவானை அறியுங்கள் ;

பகவானை பிரார்த்தனைசெய்யுங்கள்,

பாரினில்  அமைதி ,மனநிறைவு ,இன்னலின்றி 

மன உறுதி வாழ்க்கை -இதெல்லாம் 

இறைப்பற்று ,தியானம்  ஒன்றே.

இதை மீண்டும் மீண்டும் சொல்வதே 

இன்றைய இளம் தலைமுறைக்கு உகந்ததென்றே 

இறை அருளார் கூறும் அறவுரை.








           







Saturday, December 20, 2014

மனசாந்தி அடைவான் அன்பன்

 ॐ शरवणभव.


ஷண்முகம் சத்குணம் ஷைவம் குமாரம் குலபூஷணம்

தேவசேனாம் பதிம் வந்தேசர்வ  கார்யார்த்த சித்தயே;

அனைத்திலும் வெற்றி பெற அவனியில் 

அவதரித்த அருட் தெய்வமவன் ஆறுமுகம் .

அழகின் அவதாரம் அபிஷேகப்பிரியனவன்.

அறுபடைவீடுகளில் அவன் அருளாடல் 

அன்பர்களுக்கருளும் திருவிளையாடல்.

ஆண்டிவேடம் பூண்டு அலங்காரப்பிரியனாகி 

அரசாலங்காரத்தில்அத்புத அருளாளன் அவன்.

அவனடி பணிந்து அடைக்கலமடைந்தோருக்கு

அருள்மழை பொழிந்து இன்னல்தீர்க்கும் இனியவனவன்.

யானைமுகத்தம்பியவன் ",யாமிருக்க பயம் ஏன்?"என்றே 

யாவரையும் காக்கும்  யம பயம் நீக்கும் ப்ரத்யக்ஷமவன்.

பிரார்த்தனை   செய்தோர் பிரகாரம் செய்வோர் 

பலன்கள் பெரும் அதிசயம் புரியும் பழநிமலைவாசன்.

அவனடிசரணடைந்து மனமகிழ்ச்சி மனசாந்தி அடைவான் அன்பன்.







Friday, December 19, 2014

அவனியின் அமைதியும் உண்டு /

சனாதன தர்மம் ,
அதில்  சகலமும் சங்கமம்.

ஞானமும் உண்டு ,
பிரேமையும் உண்டு ,
அருவமும் உண்டு .
உருவமும் உண்டு .
உள்ளத்தில் உறவும் உண்டு ,
எண்ணத்தில் ஏற்றம் உண்டு -

அன்பிற்கும் அஹிம்சைக்கும்

மார்க்கம் உண்டு.

வையகம் வாழ ,

வையகம் ஒரு குடும்பம்  என்ற

அவனியின் ஒற்றுமைக்கும்

வாசகங்கள்  பல உண்டு.

வள்ளலாரின்  வாக்கியம்

அருட்பெருஞ்சோதி ,
அருட்பெருஞ்சோதி
தனிப்பெரும் கருணை  என்ற
வாசம் உண்டு.
சிந்துவை ஹிந்து என்று
அயல் நாட்டினர் கொடுத்த சொல்லே
மதமானது என்றால்
அதன் சாகர சங்கமத்தில்
சைவமும் உண்டு .
வைணமும் உண்டு.
அறிஞர் பலர் ,ஞானிகள் பலர் . அதனால்

சைவத்திலும் வைணவத்திலும்

பல பேதங்கள் உண்டு.

கிரமதேவதைகள் உண்டு.

ராமாயணம் ,மகாபாரதமும்

நாடோடிப்பாடலிலும் உண்டு.

நாட்டு நலம் மட்டுமல்ல
சர்வஜனோ சுகிநோபவந்து என்ற
உலக மக்கள் நலமாக வாழும்
பிரார்த்தனைகளும்  உண்டு.
கன்னப்பருக்கும் பெருமை உண்டு .
நந்தனாருக்கும் நற்புகழும் உண்டு.
சனாதன தர்மத்தில் சாகர சங்கமும்
அவனியின் அமைதியும் உண்டு /.









,

கடவுள்

  இறைவன்
 இரைஅளிப்பவன்.

இகபர சுகம் அளிப்பவன்.

சத்தியமும் அசத்தியமும்

ஜகத்தினில்  காட்டுபவன்.

அஹிம்சையும் ஹிம்சையும்

அவனியில் காட்டி ,

மனதில் ஈவு இரக்கம் கொடுத்தவன்

ஈஸ்வரன்.

ஈஷ்வரனின்  லீலை .
அதி அற்புதம் ;
அதி  அதிசயம்
அதி  ரகசியம்.
அவன் உணர்வு ,
அவன் தியானம்- அதி
பேரானந்தம்.
சிவ-சிவ- என்று சொல்
சித்தம்  சிதறாது.
சிவகுமரனின் ஆராதனை
சிக்கலைத் தீர்க்கும் .
சித்தி விநாயகரின் ஆராதனை பல
சித்திகள் தரும்.









Thursday, December 18, 2014

அக அமைதி அக மகிழ்ச்சி பெறுவோம்.






ஆறுமுகம்  நாம்  காணும் ஆசைமுகம்

அன்புமுகம் ;அருள்முகம்;

அறுபடை வீட்டினில் ஆறுமுகம்

அன்பருக்கு அருளும் நன் நெஞ்சம்.

வடக்கே இருந்து வந்து ,

தென்னகம் காக்கும்  கலியுக தெய்வம்.

தேனும் தினைமாவும் விரும்பும் பிரசாதம் ,

பஞ்சாமிர்தம் அவனுக்கு  பிடிக்கும் .

பாலாபீஷேகப் பிரியனவன் ,

பாலமுருகனவன்  பழனியிலே.

தகப்பன் ஸ்வாமியவன் சுவாமி மலையினிலே.

அருணகிரி பிழைபொறுத்து

திருப்புகழ்  படவைத்த தமிழன்பன்.

தாயைப்பாட மறுத்த பொய்யாமொழியை
முட்டையைப்  பாடவைத்த முருகனவன்.

கிருபானந்தவாரியாரின் அருட் கடவுள்,

பாம்பன் சுவாமிகளுக்கு காட்சி

அளித்த  மயூரநாதன் .

அவனியில் அவன் லீலை சூர சம்ஹாரம்.

அவன் மெய்ப்பதம் போற்றுவோம் ,

அக அமைதி அக மகிழ்ச்சி பெறுவோம்.



யானைமுகன் அருளவேண்டும்.




முருகா , முருகா ,முருகா -என்றே 

நெஞ்சுருக  நேசமிக்க நாம ஜபம் 

நாளும்  ஆழ்மனம் வைத்து செப்பினால்- நாம் 

விரும்பும் பலன்கள் பெற வித்தாகும்.

வித்தாகி விருக்ஷமுமாகி  பூவாகி 

காயாகி ,கனியாகி ,சுவையாகி 

தித்திக்கும்  வாழ்க்கையது.

ஜன்மப் பகை நீங்கும் ,
ஜனன தோஷம் நீங்கும் 
ஜகத்தினில் பாவம் போகும் ,
ஜாமம் எட்டிலும் பயம் போகும்.

ஜாக்கிரதை என்றசொல்லுக்கு இடமில்லை,
சரவணன் சடுதில் வந்து காப்பான்.

சத்தியம் வேண்டும் ,
ஒருமை மனம் வேண்டும் ,
மனதினில் நேர்மை வேண்டும் ,
மனம் முழுதும் முருகனின் 
மூலம் வேண்டும்;
வேல் வேண்டும் ;அவன்
 கொடி சேவல் வேண்டும்.
மயில் வாஹனம் வேண்டும் .
அகம் முழுதும் ஆறுமுகன் 
எண்ணம் வேண்டும்.
சித்தம் முழுதும்  சிங்கார வேலன் 

சிந்தனை வேண்டும்.
அலைபாயும் ஆசைகளை 
அடக்கவே வேண்டும் .
ஆறுமுகம் கருணை பெற 
யானைமுகன் அருளவேண்டும்.




Saturday, December 13, 2014

அவன்விதி ஆண்டவன் அசைவில்.

 பாரினில் பகவான்  இல்லை என்றும் 

உள்ளான் என்றும் 

தர்மம் அதர்மம்  இதில் 

தர்மம் தவித்தலும் 

அதர்மத்தின்  ஆராவாரமும் 

அனுதினமும்  பார்க்கும் காட்சிகள்.

நீதிமன்றதீர்ப்புக்குப்பின்னும் 

தீர்ப்பு ஏற்கா மக்கள் கூட்டம்.
இது  இன்றா ,நேற்றா 

புராண காலம்  முதல் இன்றுவரை,
ஹரிச்சந்திரன் காலம் ,
பிரஹலாதனின் காலம் 
ஏகலவ்யனின் கதை 
என்றெல்லாம் நாம் படித்து அறிந்தும் 

தெளிவு பெறாதது யார் குற்றம்?

பணம்  குவிக்க அதர்மம் ,
அதர்மத்தை தர்மமாகக 
தான தர்மம்.
விந்தையிலும் விந்தை மனிதன்.
விதியையே மதியால் மாற்றும் 

அதி புத்திசாலி.
ஆனால் 

அவன்விதி ஆண்டவன் அசைவில்.