Wednesday, July 31, 2013

அதில் தான் உலகத்தின் அடக்கம்

இறைவன் யார்?
ஒருவரா?பலரா?
உருவம் உள்ளவரா ?இல்லையா?
இறைவனைக் காண முடியுமா?முடியாதா?
இதற்கு  விடைகள் ,விளக்கங்கள்,விவாதங்கள்.சண்டைகள்.
கடவுள் ஒருவரே.உருவமற்றவர்.
ஒளிமயமானவர்.ஜ்யோதி ஸ்வரூபி. உருவமற்றவர்.
கடவுளை உணரமுடியும் .காண முடியாது.
கடவுள் எங்கிருக்கிறார்?
ஒரே பதில் மேலோகத்தில்.
பூலோகம் தவிர ஒரு லோகம் உள்ளது.
கடவுள் மனித உருவத்தில் உதவுவார்.
உதவுபவர் கடவுள்.
உதவுபவருக்கு  நன்றி.வணக்கம்.
இந்த நன்றி,வணக்கத்திற்கு மேல் நன்றிகாட்ட மனிதன் 
பயன் படுத்துவது  அவன் உருவம்.
அவன் உருவம் கல்லால் செதுக்கப்பட்டது.
ஓவியங்களால் வரையப்பட்டது.
இன்று புகைப்படம்.
ஆக ஒரு உருவம் தேவைப்படுகிறது .
இறைவன் இல்லை என்பவர்கள் வீட்டில் 
இந்தக் கருத்தை நிலைநாட்டும் தலைவர் படம் இருக்கும்.
அவரது கொள்கைகள்,கோட்பாடுகள் தான் நூல் வடிவில் உள்ளதே.
படம் எதற்கு?என்று  அதைக் கழட்டி எறிந்தால் 
அது அந்தத் தலைவனுக்கு அவமானம்.
ஒருவரை கவுரவிக்க உருவம் தேவைப்படுகிறது.
ஒரு தலைவரை கவுரவிக்க 
முச்சந்தியிலும் ,நாற்சந்தி யிலும்  சிலைகள் வைக்கப்படுகின்றன.
இது அரசியல் தலைவர்கள் சிலைகள்.
கிட்டத் தட்ட ஒரு உருவ வழிபாடு.
பிறந்தநாள் மாலை அணிவிக்கிறார்கள்.
தேர்தல் நிற்கச் செல்லும் நாள் மாலை அணிவிக்கிறார்கள்.
தேர்தல் வெற்றி பெற்ற பின் மாலை அணிவிக்கிறார்கள்.
இந்த தலைவர் சிலைகளை அவரின்
 கொள்கைகள் ஏற்பவர்கள் மட்டும்  வழிபடுவார்கள்.
எதிரணியினர்  தங்கள் தலைவரை வழிபடுவர்.
இது உருவ வழிபாட்டில் வேற்றுமை.
இந்த அரசியல் தலைவர்கள் வழிபாட்டில் உள்ள ஒற்றுமை,வேற்றுமை,
புகழ்ச்சி,இகழ்ச்சி ,உடைத்தல்,செருப்புமாலை அணிவித்தல்,
அவமானப்படுத்தல்,இயற்கையால் சிதைந்துபோதல்,
பறவைகளின் எச்சம்  எப்படி எல்லாம் நடக்கின்றன.
ஆக இன்று நாம் ஒருவகையில் 
தலைவரை சிலை வைத்துவணங்குகிறோம்.
உருவ வழிபாடு பகுத்தறிவுப் பாசறைகளாலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
ஆனால் அது இறைவழி பாடல்ல.
இன்றைய சமுதாயத்தை வழிநடத்தியவர்;புரட்சி செய்தவர்,
சீர் திருத்தவாதி.நாட்டிற்கு நல்லது செய்பவர்.
அவரது சிறந்த கொள்கைகள் சமாதி ஆகக் கூடாது.
எதிர்காலத்தில் நினைவில் கொல்லவேண்டும.
பின்பற்றவேண்டும்.

இதையே மாற்றி சிந்தியுங்கள்.
மக்களை நெறிப்படுத்த,நல்ல ஒழுக்கங்கள்,உண்மை,நேர்மை,பரோபகாரம்,தானம்,தர்மம் ,அற்புத சக்தி 
தீயது தடுத்தல்,அன்பு,பண்பு,தன்னலம் கருதாநிலை,
தீய வற்றை பின்பற்றாமை,புலால் உண்ணாமை,
மனக்கட்டுப்பாடு,உடல் ஆரோக்கியம்,பிரமச்சரியம் 
மன அமைதி,கள்ளுண்ணாமை ,பிறன் மனை நோக்காமை 
பேரா ராசைப்படாமை, கோபப்படாமை ,
இதற்காக வழிகாட்டிய ஆன்மீகப்பெரியார்கள்
ஷங்கரர்,ராமானுஜர்,மத்துவாசாரியார், ராகவேந்திரர்,ஷீரடி சாய்பாபா,
புத்தர்,மகாவீரர்,ஏசுநாதர்,நபிகள்நாயகம்  போன்றவர்களை வழிபடுவது 
சிலைவைப்பது விக்கிரகங்கள் வைப்பது 
ஆன்மீக உருவ வழிபாடு.
இவர்கள் மனித நலனுக்காக,ஒற்றுமைக்காக 
உயரிய கொள்கைகள் பரப்பியவர்கள்.
பதவிக்காக அல்ல.ராஜ்யத்தை ஆள அல்ல.
அவர்களது உருவழிபாடு  காலத்தால் அழியாமல் காக்கப் படுகின்றன.
சுயநலத் தொண்டர்கள் இதை இரண்டாக உடைத்து மனித வேற்றுமை ஏற்படுத்துகிறார்கள்.

இப்படி உருவ வழிபாடு அரசியல் ஆன்மீகத்தில் ஏற்படுகின்றன.
இரண்டுமே மனித சமுதாய நன்மைக்கு. 
இரண்டுக்கும் உள்ள வேறு பாடு 
 ஒன்று நாட்டுக்குநாடு மாறுபடுகின்றன.
ஆன்மீகக் கோட்பாடுகள் மாறுபடுவதில்லை
.,கடமை,
சத்தியம்,நேர்மை,பரோபகாரம்,தியாகம் 
வையகம் வாழ்க போன்றவை .

இப்பொழுது சிலர் எங்களுக்கு உருவ வழிபாடு பிடிக்காது 
இயற்கையை வழிபடுவோம் என்கின்றனர்.
அதைத்தான் சனாதனதர்மம்  நவக்ரஹ வழிபாடகக்
கூறி ஆன்மிகம் என்ற பாதையில் பெரும் அறிவியல் புரட்சி செய்துள்ளது.

உருவ வழிபாடு அவசியமாகிறது.அதைப்படைத்தவன் மனிதன்.

இந்து மதம் இரண்டையும் ஏற்கிறது.
உருவமும் அருவமும் ஆனாய்  என்பது இந்து மதம்.
அதில் அனைத்து மதங்களும் சங்கமமாகி.
இந்துமதம் பெருங்கடலாகி 
பொறுமை,சகிப்புத்தன்மைக்கு எடுத்துக்காட்டி விளங்குகிறது.
அதனால் அது போற்றப்படுவதாக உள்ளது.

 இந்து மதம் தூற்று வோரைப்பற்றி எதிர்ப்பலை  வீசுவதில்லை.
இதில் பல ஆசாரிய மார்கங்கள் உள்ளன.
துவைதம்,அத்வைதம்,விசிஷ்டாத்வைதம்.
இராமலிங்க அடிகள் அருட்பெருஞ்சோதி,தனிப் பெருங் கருணை.
ஒளிவடிவம்,ஓங்கார ரூபம் ஒலிவடிவம்.
உருவமற்ற சிவலிங்கம்.அதில் தான் உலகத்தின் அடக்கம்.
ஓம் நமசிவாய.



.




Tuesday, July 30, 2013

இதையெல்லாம் சகித்து வாழும் இந்துமதம்.

 இறை வழிபாடு பற்றிய பல்வேறு கருத்துக்கள்,நம்பிக்கை ,அவநம்பிக்கை ,வுருவ அருவ வழிபாடுஎன  நமது  ஆன்மீக பூமி பாரதத்தில் இருப்பது போல் வேறு எங்கும் கிடையாது.காரணம் ,இங்கு வேலை இன்மை. மற்றொன்று சுலபமாக பொருளீட்டலாம் என்ற எண்ணம்.

விவேக்கின் பாவாடை சாமியார் , நாசர் சாமியார் ஆகி பணக்காரர் ஆவது,கோயில்  தேங்காய் உடைப்பு,
பராசக்தி வசனங்கள், இறைவன் படங்களில் செருப்படி,ஆலயங்களில் இறை எதிர்ப்பு வாசகங்கள்,
கடவுள் இல்லை,இல்லை இல்லவே இல்லை என்று ஆலயங்கள் முன் எழுதுவது,ஆலய மதில் சுவர் சுற்றி சிறுநீர் கழிப்பது,ஆலயங்களில் கழிப்பிடம் கட்ட எதிர்ப்பு, ஆலய அர்ச்சகர்கள் அவமதிப்பு,

அத்தனையயும் சகிக்கும்  ஒரே மதம் இந்துமதம்.

மற்ற மதங்களின் தேவாலயங்களில்  இருக்கும் தூய்மை,வழி பாட்டு நேரத்தில்   அமைதி,ஒழுக்கம்,
தூய்மை  இந்து கோயில்களில் உள்ளதா?

தேர்வு எண்கள் எழுதுவது, காதல் வசனம் எழுதுவது,எழுமலைவேங்கடேசா  ..பச்சைக்கொடி காட்டுராஜா எனப் பாடுவது,பக்தியுள்ள விநாயகரை நவீன கால விநாயகராக கிரிக்கட் பிள்ளையார்,கம்ப்யுடர் பிள்ளையார் என்று மாற்றி ரசிப்பது.

இதையெல்லாம் சகித்து வாழும் இந்துமதம்.

Monday, July 29, 2013

மெய்யன்பு காட்டுங்கள் . இறைவன் அருள் கிட்டும்.

இறைவன் வேறு ;மதம் வேறு; மத பேதம்  வேறு;

இறைவன்  உருவமும் அருவமும் ஆனவன்.

சனாதன தர்மத்தில்  தமிழ் பக்தி இலக்கியங்களில்

அருவம்  உருவம் பற்றி ஆழ்ந்த கருத்துகள் ,கோட்பாடுகள்

விளக்கப்பட்டுள்ளன.

சிவ  லிங்கம் உருவமற்றது. ஆதி  சிவன். இந்த உருவமற்ற
வழிபாடு  தான்  பின்னர் உருவ வழிபாடுகளாக மாறி உள்ளது.

மத என்றல்  கருத்து.  மத பேதம்  என்றால் கருத்து வேறுபாடு.

மதம்  என்றால் ஆணவம். இந்த கருத்து வேறு பாட்டால்
உருவானது மதம்.
மதம் என்பது  இறை தூதர்களால் ,மனிதர்களை நெறிப்படுத்த
அமைக்கப்பட்டது.
கருத்துக்கள் ,எண்ணங்கள்,சிந்தனைகள் காலத்திற்கேற்ப மாறுபடுபவை.
இயற்கையே மாறிக்கொண்டுதானே  இருக்கின்றன.

நான் குழந்தையாக இருந்தபோது இருந்த நீரின் சுவை இப்பொழுது இல்லை.

பழங்களின் மனமும் சுவையும் மாறி உள்ளன.
,வெண்பா,நாலடி   குறள்  என்பதெல்லாம் மாறி  ஹைக்கூ கவிதைகள் வெளிவந்துவிட்டன.

அதிகமாக எழுதி கதை கரு புரியவைக்காமல்,ஓரிரு வரிகளிலே சொல்லி
புரியும் அளவுக்கு அறிவுத் திறன்  இளைஞர்களிடம் வளர்ந்து உள்ளது.

காலை வணக்கம் என்பது ஆங்கிலேயர் வருகையால் வந்தது.தமிழில் ஆரம்ப காலங்களில்  காலை வணக்கம் .மாலைவணக்கம் ,மதிய வணக்கம் என்றெல்லாம் கூறுவது நமது கலாசாரம் மாறுவது போல் தோன்றினாலும்
இப்பொழுது காலை வணக்கம் ,இரவு வணக்கம் என்று பழகிவிட்டது.

உணவுவகைகளில் பெரும் மற்றம்.. நான் கொண்டுவா என்பது எதோ ஆணவத்தைக் கொண்டுவா என்பது போல் உள்ளது.

வறுத்த சாதம் fried rice ,pizza  bel poori,paani poori. கர்ட் ரைஸ்  எப்படி மாறிவிட்டோம்.
 இப்படி எல்லாமே மாறும் போது கருத்து வேறுபாடு தோன்றி மதம் பிடித்து
அறநெறி காட்டும் மதங்கள் பல  தோன்றின.

இன்னும் எளிய  விளக்கம்;  அண்ணாதுரை  பேரறிஞர் . அவர் தோற்றுவித்த தி.மு.க . திமுக வின் மூலம் தி.க . தி.க.வின் மூலம் நீதிக் கட்சி. justice party. இன்று  அண்ணாவின் கொள்கைகள் ஏற்று கருத்துவேறுபாட்டால் பிரிந்தது--
அ .தி.மு.க. ,ம.தி.மு.க.,தி. தே தி .மு.க.. ஒரே தலைவர் அண்ணா.ஆனால் இரு அண்ணாவின் நாமம் என்று  சொல்லி கலைஞர் புகழோ ,அம்மாவின் புகழோ
பேசப்படுகிறது. இருவரையும் இகழ்ந்து  பல கட்சிகள் தோன்றி தாயக மறுமலர்ச்சி  தோன்றி மறைந்தும் வாழ்ந்தும் வாழாமலும் இருக்கின்றன.
இதற்கெல்லாம் மூலமாக பெரியார் ,அண்ணா  வாழ்ந்தனர்.
இவ்வாறே மத பேதங்கள்  ஏற்பட்டன. இந்த ஆணவம்,ஒருவரை நேர்மை அற்றவர் என்று ஒருமுறை தூற்றுகிறது; அதே வாய் அவர்களைப் போற்றுகிறது.

இந்த எளிய அடிப்படை அரசியல்.

மதங்களும் அப்படியே ( மதபேதத்தால்)  கருத்து வேறுபாட்டால் தோன்றி ,
 வேறு படுத்தி  பக்தர்களின் மனதில் வெறுப்பு,கொலைவெறி ஏற்படுத்தி
மடாலயங்களில் வெள்ளியிலும் தங்கத்திலும் ,தங்க சிம்மாசனத்திலும் அமர்ந்து  மயக்கும் மொழிகளால் ,சித்துவிளையாட்டுகளால் கோடிக்கணக்கில் சேர்த்து சுக போக வாழ்க்கை வாழ்கிறார்கள்.
அவர்களுக்கு வேண்டியது காணிக்கை;அதற்காக அவர்கள் காட்டும் வேடிக்கை ஒரு சிறந்த இயக்கத்தில் சிறப்பாக காட்டப்படும் திரைப்படக் காட்சி போன்றது.

அதற்குத்தான் சித்தர்கள் பரதேசிகளாக ,பித்தர்காளாக வாழ்ந்து பாட்டுக்கள் பாடினர்
நட்ட கல்லும் பேசுமோ? என்று.

இந்த ஆடம்பரங்கள் தவிர்த்து  ஆன்பும் சிரத்தையும் பக்தியும் தான் இறைப்பற்று.

இறைவன்  வேறு. மக்களை நெறிப்படுத்தும் மதங்கள் வேறு. ஒன்று மெய்ஞானம் ; மற்றொன்று நீதி போதனை.

மெய்ஞானம் இறைவனை நேராகக் காண்பது.மதம் என்ற நீதி போதனை வழிகாட்டுவது.
வழிகாட்டி GUIDE  தன்  வருமானத்தில் குறியாக இருப்பான்.

தன்  குறிக்கோள் வழியில் செல்பவர்கள் கவனமாக செல்லவேண்டும்.

அதற்குத்தான்

அங்குஇங்கு  எனாதபடி ஆனந்த பூர்த்தியாகி  அருளோடு எங்கும் இருப்பவன் ஆண்டவன் என்று  குமரகுருபரர் பாடுகிறார்.

அன்பே ஆண்டவன். பக்தி நெறி காட்டும் மதாசாரியார்களிடம் கவனம் தேவை.
அவர்கள் மடத்தின் அதிபதிகள். மடாதிபதிகள். அதிபதி என்றால் செல்வம்.
அங்கு செல்வம் சேரும். செல்வோருக்கு இறை அருள் கிட்டுமா?
சிந்திப்பீர். கலியுகத்தில் மெய்யன்பு காட்டுங்கள் . இறைவன் அருள் கிட்டும்.
அன்பே ஆண்டவன்



பக்தர் ராதேஷ்யாம்.

பக்தி

  ஹிந்திக் கதையின் சுருக்கம்;

     ஒரு சிற்றூரில் ஒரு குடிசையில் ஒரு முதியவர் வாழ்ந்து வந்தார். குடிசைக்கு அருகில் ஒரு தேநீர் அங்காடி நடத்திவந்தார்.அவர்  எப்பொழுதும்

ராமாயணம் படிப்பார்.ஹனுமான் சாலிசா படிப்பார்.ஆனால் ராதேஷ்யாம் என்று கூறுவார். அவரை  அனைவரும் பக்தர் என்றே  நினைத்தனர்.

   அந்த ஊரில் கிருஷ்ணர் கோயில் திருவிழாக்கள் விமர்சையாக நடக்கும்

இவர் செல்ல மாட்டார்.  சிலர் இவரை ராம பக்தர் ;கிருஷ்ணரைப் பிடிக்காது என்றனர்; சிலர் ராதேஷ்யாம் என்று இவர் கூறுவதால் கிருஷ்ணா பக்தர்  என்றனர்.

இவர் கடையில் தேநீர் அருந்தி பணம் தராமல் செல்பவர்களும் உண்டு.அவர்களை அடிக்க தடி எடுத்துக்கொண்டு துரத்துவார்.ஆனால் அடிக்கமாட்டார். அந்த இளைஞர்கள்  ராதே ஷ்யாம் என்று சொல்லி ஓடுவார்கள்.இது அன்றாடம் நடக்கும் காட்சி.சிறுவர்களும் ராதேஷ்யாம் என்பார்கள்.

எப்பொழுதும் ராமாயணம் சத்தமாக பாராயணம் செய்வார்.

இவ்வாறு ௨௦ ஆண்டுகளாக இவரது குரல் அந்த ஊரில் ஒலித்துக் கொண்டிருந்தது.

திடீர் என்று அவரது குடிலில் இருந்து  பாராயண ஒலி வரவில்லை.இரண்டு மூன்று நாட்களாக வராததால் ஊர்ப் பெரியவர்கள் சென்று பார்த்தனர்.
அவர் உடல்நலம் சரில்லை;ஆனால் ராதேஷ்யாம் என்ற முனகல் மட்டும்.
அனைவரும் அவரை வைத்யரிடம் அழைத்துச் சென்றனர். முதுமையின்
காரணமாக  அவர் வுயிர் பிரிந்தது.
அனைவரும் அவர் பக்தியைப் பாராட்டினர்..செய்திதாளில் அவரைப் புகழ்த்து
செய்திகள் வந்தன. பக்தி மகான் என்று போற்றப்பட்டார்.

அவர் குடில் அவர் நினைவுச் சின்னமாகியது.

சில மாதங்களுக்குப் பின் ஒரு நடுத்தர வாலிபர் அவரைத் தேடி வந்தார்.
அவர் அந்த பெரியவரின் மகன். பெயர் ராதேஷ்யாம்.
அந்த மகனின் பெயரைத்தான் அந்த பெரியவர்  இறுதி  மூச்சுவரை
கூறிவந்தார்  என்பது பின்னர் தெரிந்தது.

பக்தர் ராதேஷ்யாம்.

Saturday, July 27, 2013

ஐயமில்லை.சிந்தித்துப்பாருங்கள்.

இறைவனை வழிபட  மந்திரங்கள் அறியவில்லை?
 பக்திப் பாடல்கள்  பாட இனிமையான குரல்வளம் இல்லை.
சுலோகங்கள் தெரியாது. யாரும் கற்றுத்தரவில்லை.
கோயிலுக்கு சென்றால் கூட்டம் அதிகம்.தள்ளுமுள்ளு வேறு.
பலவித கட்டண முக்கியஸ்தர்கள் தரிசனத்தால் ,
காலதாமதம் வேறு.
இன்னும் பல காரணங்கள்.

இறைவன் வழிபட
அன்பு,சிரத்தை,பக்தி போதும்.
நமக்கு ஸ்தோத்திரங்கள் தெரியவில்லை.
நியமங்கள் தெரியாது.
நான் வழிபட ஒரு வழிகாட்டி தேவை .
நான் இருக்கும் பகுதியில் ஆலயமும் கிடையாது.

புரோகிதர்களும் கிடையாது.

எல்லாம் விதிப்படி நடக்கும்.

என்று அலுத்துக்கொள்பவர்கள்  இருக்கிறார்கள்.

மந்திரங்கள் ,நியமங்கள் தெரிந்து ,வலைத்தளம் மூலம்
வழிபடுவோரும் உண்டு.
இப்பொழுது நாம் பக்தி வரலாற்றில்
நாம ஜபம் மட்டும் ஜபித்து புகழ்பெற்றவர்கள் பற்றி
சிந்தித்தால்  நமக்கு  இறைவனின் அருள் கிட்டும்.
கலியுகத்தில்  அறிவியல் ஆட்சி.
தொழில் என்பது குலத்தொழில் என்று மாறி
அனைவரும்  கல்வி என்ற உயர் நிலை.
இது சமுதாயப் புரட்சி.
வரவேற்கும் ஒன்று.
தொலைதூர வேலைவாய்ப்புகள்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்.
என்னதான் பிசி ஆக இருந்தாலும் ,
பொருளாதார தன்னிறைவு பெற்றாலும்
அறிவுத் திறன் அதிகமாக பெற்றாலும்
மனித சக்திக்கு   அப்பாற்பட்ட ஒரு சக்தி
மனிதர்களை ஆட்டிப்படைப்பதை உணராதவர்கள்
உலகில் இருக்க முடியாது.
ஆகையால் இன்னல் வரும் போது
இறைவனை வழிபட நாம ஸ்மரணை போதும்.
இதை சித்தர்களும் ,பலவித ஆன்மீகப் பெரியவர்களும்
கூறிஉள்ளனர்.
இன்றும் இந்த நாம ஜபத்தை  வலியுறுத்தி வருகின்றனர்.
 ஒரு வழிப்பறிக் கொள்ளைக்காரன் ரத்னாகர் ,ஒருமுனிவரின்
ம ரா என்று உபதேசித்த இரண்டு எழுத்து ராமா  என்ற
ராம ஜெபமாக  மாறி, அவன் வால்மீகி முனிவராக
புகழ் பெற்றது ராமாயணம்  எழதியது
அனைவரும் அறிந்த கதை.
இறைவன் அருளும் அதனால் மிகப் பெரிய சாதனைகள் செய்திட
இறை நாம ஜபம் போதும் என்பதே.
நாரத முனிவர் நாம ஸ்மரணை செய்பவர்.
துருவன் ,பிரஹ்லாதன் அனைவரும் நாம ஸ்மரணை செய்த பக்தர்கள்.
ரமண மஹர்ஷி  16 வயதில் மௌனமான சாதனை  ஆரம்பித்தவர்.
துளசிதாசர் ராம நாம ஜெபத்தின் மகிமை கூறும்போது
"ரா" என்ற எழுத்து சொல்லும் போது  பாபங்கள் வெளி ஏறி விடும்.
"ம் " சொல்லும் போது மீண்டும் பாபங்கள் வராது,
ராம்,ராம் என்றாலே இறைவனருள் கிட்டும் என்கிறார்.
புரந்தரதாசர் நாம மகிமை அறிந்து இறைவனின் கருணை பெற்ற பக்தர்.
இறைவனின் நாம ஜபம் உள்ளும் புறமும் ஒளி  தரும்
 என்பார் துளசிதாசர்.
கபீர்  ராமநாமத்தை உச்சரிப்பதை மேன்மையாக  கருதுபவர்.
அவர் ராமர் என்றாலே கடவுள் என்ற பொருள் கொண்டவர்.
அருணகிரிநாதர்  இறைவனால் தடுத்தாட் கொண்டு
சும்மா இரு என்ற உபதேசம் பெற்று 
ஐம்புலன்கள் அடக்கி தவம் செய்து
திருப்புகழ் அம்ருதம் படைத்தவர்.
நந்தனாரின் பக்தி.
மீரா ,ஆண்டாள் கண்ணப்பர்  போன்றோர் 
 பக்திமட்டும் தெரிந்தவர்கள் . எனவே
நாம ஜபம் கலியுகத்தில் இன்னல் 
களைந்து நன்மைதரும்.
     அடுத்து அனைவரின் மனதிலும் எந்த இறைவனை வழிபடுவது?
ஓம் கணேசாய நமஹ  என்பதா,முருகா என்பதா,சிவா என்பதா ,,ராமா என்பதா,,கிருஷ்ணா என்பதா,
அல்லா என்பதா,ஏசுவே என்பதா  என்ற பல கேள்விகள் எழும்.
அதற்கு விடை தேசப்பிதா மகாத்மாவின் சுதந்திரப்போராட்ட பஜனை
இறைவன் ஒருவனே என்பது.  ஈஸ்வர் அல்லா தேரே நாம் ,சப்கோ சன்மதி தே பகவான்  என்பது.இதை கபீர்தாசர் வலியுறுத்துகிறார்.
ஹரிஜன் என்ற சொல்லை முதலில் பயன் படுத்தியதும் கபீர் தான்.
அனைவரும் ஹரியின் மக்கள்  என்றார்.நாடும் சொத்தும் உயிரும் அளிப்பவர் இறைவன் என்றால் ,அந்த இறைவனை அளிப்பவர் ஹரிஜனம் என்பர்.
 நீங்கள் எளிய  முறையில் இறைவனின் நாமம் பெறலாம்.
முருகதாசன்,கண்ணதாசன், சக்தி தாசன் ,அம்பாள் அடியாள்,தொண்டரடிப்பொடியாழ்வார் ,
கருமாரிதாசன் ,காயத்திரி ஸ்வாமிகள்,எத்தனையோ அடியார்கள். ஹனுமத் தாசர்கள்,சாய் ராம்,அல்லா ,இயேசு.
இது எப்படி சாத்தியம்?
நீங்கள் நாம ஸ்மரணை  அல்லது இறைவன் பிராத்தனை  என்பதை ஆரம்பியுங்கள்.
ஒரு அதிர்வலை ஒரு குறிப்பிட்ட நாமம் ஜெபிக்கும் போது  வரும். அதை உங்கள் ஆழ்மனம் உணரும்.
உருவமற்ற இறை உணர்வும் அதிர்வலையை உண்டாக்கும்.
அந்த நாமத்தை  விடாது பற்றுங்கள்.
இது எப்படி சாத்தியம்?
அதுதான் பிரம்ம ரஹசியம்.
நீங்கள் சாய் பஜன் செல்கிறீர்கள்.
மாதா அம்ருதனந்தா கூட்டத்திற்கு செல்கிறீர்கள்.
ரவிசங்கர்,மேலும் பல புகழ் பெற்ற ஆஷ்ரமங்களுக்கு செல்கிறீர்கள்.
ஆனால் செல்பவர்கள் எல்லாம் அந்த அந்த இடத்தில் மனம் ஈடுபடாது.
ஒரு குறிப்பிட்ட வழிபாடு 
உங்கள் மனத்தைக் கவரும்.
ஸ்வாமி  விவேகானந்தர் நாத்திகத்திலிருந்து  விடுபட்டு குருவைத் தேடி அலைந்தார்.குரு நல்ல சிஷ்யனை எதிர்பார்த்து காத்திருந்தார்.
ஸ்ரீ ராம கிருஷ்ணா பரமஹம்சரிடம் அவர் மனம் ஒன்றியது. இதுதான் ஆழ்  மன உணர்வு.
அந்த உணர்வு ஏற்பட கலியுகத்தில் 
இருக்குமிடம் போதும்.
கபீர் கூறுகிறார்-
ஜபமாலை கையில் ,
வாயின் உச்சரிப்போ இறைநாமம். 
மனமோ உலகியல் எண்ணங்களால் பத்து
திக்கும் அலை பாய்ந்துகொண்டே இருக்கிறது.
பல ஆண்டு,பல யுகம் கழிந்துவிட்டது.
இறைவனருள் கிட்டவில்லை.
உண்மை பக்தி,சிரத்தை,மன ஒருமைப்பாடு சேர்ந்ததே நாம ஜபம்.
நீண்ட பஜனைப்பாடல் 
ராகம் ஆரோஹனம்,அவரோஹனம் என்று ஓடும்.
நாம ஜபம் அப்படி அல்ல.
அதை உறுதியாகப் பற்றி 
நாம ஜபம் 45 நாட்கள் செய்து பாருங்கள்.
இறைவனை உணரும் பிரம்மானந்த  உணர்வு வரும் ..
அதை வெளியில் வர்ணிக்க இயலாது.உணரத்தான் முடியும்.
உங்கள் எண்ணங்களில் ஒரு நிலைத்த தன்மை ஏற்படும்.
மன சஞ்சலம் ஏற்படாது.
இது தான் நாம ஜப  மகிமை.
இந்த நாட்கள் வெற்றியாக அமையவும் ஒரு கருணை வேண்டும்.
ஜபித்துப்பாருங்கள். உணர்ந்து மெய்சிலிர்த்து கண்ணீர் மல்கி  சாதனை செய்யுங்கள்.
அன்பே ஆண்டவன்.
கலியுகத்தில் ஆண்டவன் மூலம் நமக்கு அளித்த பணியை  நேர்மையுடன் செய்தாலே இறைவன் அருள் கிட்டும். நம் பணியையே நேர்மையாக கடமை உணர்வுடன் செய்வதிலேயே சிக்கல்.
மாயை .சஞ்சலம்.
இதிலிருந்து விடுபட நாம ஜெபத்தில் ஈடுபடுங்கள்.
இரு  கண்ணுக்குப் புலப்படாத துளிகளால்  உருவாகிய சரீரம் இது.
.சிந்தித்துப்பாருங்கள்.
களிமண்ணால் செய்த /கல்லால் செய்த உருவம் அல்ல.
கண்ணுக்குத்தெரியா  காதல் அணுக்களால் 
ஆனசரீரம்.
அது இறைவனால் படைக்கப்பட்டது.
ஐயமில்லை.
அன்பே ஆண்டவன்.








எல்லாம் சரிதான் அமைதி எங்கே?

இறைவன் இந்நில  உலகில்  இம்மையில் நன்மை அளிப்பவரே.

இறைவனின் அருள் பெற மந்திரங்கள்  தேவையா?

இன்றியமையா மந்திரங்கள் ,ஸ்தோத்திரங்கள் உண்டு -அவை

மறுப்பதற்கு இல்லை. அது ஏமாற்றத்திற்காகப் பயன்  படுத்தவரை;

அந்த மந்திரங்களே வணிக மூலதனமாகும் போது ,

சோம்பேறிகளும்,ஏமாற்று வாதிகளும் முளைத்து வளர்வது இயல்பே அன்றோ.

கிராமத்து அக்ரகாரங்கள் காணாமல் போகின்றன;
அங்கே சந்தியா வந்தனங்கள்  எங்கே என்றும் தேடும் நிலை.
சந்தியா மகளை அம்மா என்றால் பதவி கிடைக்கும்;
வந்தனங்களால்  வறுமை மிஞ்சும்  என ஏளனம். அதன் பலன்
வேதம் ஓதும் வேதியர்க்கு ஓர் மழை  இன்றி ,
வேதனை மிஞ்சும் வாழ்க்கை. இதை
கலியுக தர்மம் என்றே கூறுவோர். இந்நிலையிலும்
ஹோமத்தை மந்திரத்தை கேலி செய்தோர்  இன்று
ஆலயம் தோறும் அலையும் காட்சி;
யாகங்கள் ரகசியமாய் செய்யும் காட்சி.
சாயி பாதங்களில் விழுந்த காட்சி.
நாத்திகவாதம்  கண்ணதாசனாகி ,
அர்த்தமுள்ள ஹிந்துமதம் எழுதி,
கனகதார ஸ்தோத்திரம் தமிழில் வழங்கிய காட்சி,
கனகக் கலசங்களும் ,கொடிக்கம்பங்களும்
கனக ஆலயங்களும் பெருகும் காட்சி.
பக்தர்கள் கூட்டத்தால் ஆலயங்கள் பெருகி
வேதமந்திரங்கள் ,மந்திரகோஷங்கள் ,கோடி அர்ச்சனைகள்,
லக்ஷார்ச்சனைகள்  என  பெருகும் காட்சி.

எல்லாம் சரிதான்  அமைதி எங்கே?
மன நிறைவுதான் எங்கே? அது அங்கே ,
எங்கே உண்மை அன்பே அங்கே.






Friday, July 26, 2013

அதில் சஞ்சலம் கூடாது

அனுதினமும்  அங்கிங்கெனாதபடி  எங்கும் ,

தூணிலும் துரும்பிலும் இருக்கும்  இறைவன் ,

இன்னல் தீர்ப்பான் என்ற முடிவு இறுதியாக்கப்பட வேண்டும்.

ஆனால் அலைபாயும் மனம்  உறுதியாக இருப்பதில்லை.

அனைத்து மனித மனத்திலும் ஒரு உள்ளுணர்வு தோன்றும்.

ஒரு மகிழ்ச்சி தோன்றும்;
 அடிவயிற்றில்  ஒரு  கலக்கம் தோன்றும்.

ஒருவரைச் சந்திக்கச் செல்லும்  போது  ,
அவரால்  காரியம் நடக்குமா?நடக்காதா?என்ற
உணர்வு அவரைச்  சந்திக்கத் தூண்டும்  அல்லது தடுக்கும்.
சில செயல்களில் நம்மை யும்  அறியாமல்  பெரும் வெற்றி கிடைக்கும்.
சில செயல்களில்  பெரும் தோல்வி ஏற்படும்.
பெரும் முயற்சியால் தோல்வியும்,முயற்சியே இன்றி வெற்றியும்
எதிர்பாராமல் புதியவர்கள் உதவிசெய்வதும் ,
அதில் பெரும் வெற்றி அடைவதும்  ஆண்டவன் செயலாகும்.
கைம்மாறு கருதாமல் நம் வாழ்க்கையில் பலர் உதவுவார்கள்;
நாம் அவர்களுக்கு  முற்றிலும் அறிமுகமாகதவர்களாக இருப்போம்.
நம்மில் நம் முன்னேற்றத்தில் அதிக அக்கறை காட்டுவார்கள்.
நம் குறிக்கோளை அடையும் வரை உடன் இருப்பார்கள்.
பின்னர் நாம் அவர்களை நினைத்துப் போற்றிக்கொண்டே இருப்போம்.
சிலர் நம்மிடம் பயன் எதிர்பார்த்து நிபந்தனை இட்டு உதவி செய்வார்கள்.
சிலர் கையூட்டு வழங்கி வெற்றி பெற கரம் கொடுப்பார்கள் .
எப்படியோ ஒரு உதவிக்கரம் கிடைத்துக்கொண்டே இருக்கும்.
மருத்துவமனை செல்லும்போது திடீரென்று ஒருவர் இந்த மருத்துவரிடம் செல்வதைவிட
அந்த மருத்துவரிடம் சென்றால்  நல்லது என்பர். அதில் மிகப்பலன் இருக்கும்.
சிலர் வழிகாட்டுதல் தவறாகவும் இருக்கும்.
நண்பர்கள் பலவிதத்திலும் உதவுவார்கள்.
இது அனைவருக்கும் கிட்டுமா? என்றால் கேள்விக்குறிதான்.
நன்மையே செய்யும் உற்றார் ,உறவினர்கள் ,நண்பர்கள்,எதிர்பாரா அறிமுகமில்லாதவர்கள் உதவி
வெற்றி,பாராட்டு ,புகழ் ,மன நிறைவு  முற்றிலும் இறைவனை சரணடைந்தவர்களுக்கு
ஒதுங்கி இருந்தாலும் கிட்டும்.
ஆனால் மனம் ஒன்றுபட்டு மாற்று சிந்தனை இன்றி ,
லௌகீக பற்றின்றி ஆண்டவன் மேல் அன்பு,சிரத்தை ,பக்தி காட்டவேண்டும்.
அது குறைந்த பட்சம் நமது வட்டத்தில் ஒரு அங்கீகாரத்தைக் கொடுக்கும்.
இவன் என்ன செய்யப்போகின்றான் என்று அசடு வழிய நாம் இருந்தாலும்
நமது வட்டத்தில் ஒரு மதிப்பு உண்டாகும்.
அன்பே ஆண்டவன். அதில் சஞ்சலம் கூடாது.