Friday, September 7, 2018

சாது கபீர்தாஸ் -1

   சாது  கபீர் படிக்காத மா மேதை.
சொல்லின் சர்வாதிகாரி.
அவர் 120  ஆண்டுகள்  உயிர் வாழ்ந்து

பக்தியில் ஒரு புரட்சியும் சமுதாய முன்னேற்றத்தையும்
கொண்டுவந்தார். அவர் வாழ்ந்த காலம் 1398 முதல் 1518 வரை கி.மு.., விக்ரமி  வருடம் 1455 முதல் 1575 வரை.
அவரது காலத்தில் தான் இப்ராகிம் லோடியின் படை எடுப்பும்  ,அவனின் பயங்கர கொடுமையும் நடந்தது.
    சாது  கபீர்  விசித்திரமானவர். அவர் தன்  கொள்கையில்
மிகவும் உறுதிவாய்ந்தவர். எதற்கும் அஞ்சாதவர்.
அவர் பார்த்ததை  யதார்த்தமாக எழுதுபவர்.
அவர் எந்த நூலையும் படிக்காதவர். நல்லவர் சேர்க்கையால் ஞானம் பெற்றவர். சாது கபீர் மத வெறியர்களின் போலித்தனம் ,கொடுமைகள், மூட நம்பிக்கைகள்,
ஜாதி-சம்பிரதாய  வேறுபாடுகள் ,வெளி ஆடம்பர பக்தி.
ஆகியவற்றை அச்சமின்றி சமுதாயத்திற்கு எளிய மொழியில் எடுத்துரைத்தவர். ஆனால் கடவுளின் மேல் அதிக நம்பிக்கை கொண்டவர்.  அவர் ஹிந்து-இஸ்லாம் தர்மத்தின் மூடப்பழக்கவழக்கங்களை  எவ்வித அச்சமின்றி  எடுத்துரைப்பவர்.
 அழகான மசூதி கட்டி ,தொழுகை என்ற பெயரில்
அதிக சத்தத்துடன் குரான் படித்தால் ,இறைவன் செவிடாகி
எதையும் கேட்காமல் இருந்து விடுவார் என்பார்.
ஹிந்துக்களின்  மூட நம்பிக்கையை எதிர்த்து  உருவ வழிபாட்டைக் கண்டித்து "கல்லாலான சிலையைப்
பிரார் த்தித்தால் , இறைவனின் அருள் கிட்டுமென்றால்
நான் மலையையே பிராத்தனை செய்வேன்.
ஆட்டுக்கல்-திருகைக் கல்லால் மாவு கிடைக்கும்
என்பார்.
மொட்டை அடித்தால்  இறைவன் வரம் அளிப்பான்  என்றால்
வைகுண்டம் கிடைக்கும் என்றால் முதலில்  செம்மறி ஆட்டிற்குத்தான்  வைகுண்டம் கிடைக்கும். அதன் ரோமம்
கம்பளியாகப்  பயன்படும். அடிக்கடி அது முடி வழித்துக்கொள்கிறது  என்பார்.
 அவருடைய  பக்தர்களில் ஹிந்துக்கள் ,சைவர்கள் ,வைஷ்ணவர்கள், இஸ்லாமியர்கள் ,சீக்கியர்கள் என அனைவரும் இருந்தனர்.

Sunday, September 2, 2018

அபகரிக்கக் கூடாது

பக்தி என்பது உலகப் பற்று கொண்டு செய்ய முடியுமா ?
ஆன்மீக வழி துறவறம் என்பது தான் என்று கூறவில்லை.
ரிஷி பத்தினிகள் ,முனி பத்தினிகள் , தெய்வ பத்தினிகள் என்று கூறப்படுகிறது.
ஆலயங்களில் இல்லறம் இனிது அமைய
சிற்பங்கள் பாலியல் கல்வி இங்கொன்றுமாக அங்கொன்று மாக செதுக்கப் பட்டுள்ளது.
சித்தார்த்தர் வழியில் செல்வோர் ,
படைப்பிலேயே உலகை அன்பு வழியில்
அழைத்துச் செல்பவர்கள். தெய்வீக புருஷர்கள்.

உலகில் அநாச்சாரங்கள் , ஹிம்சை , மனிதர்களிடம் இரக்கமற்ற மிருக குணங்கள்
அதிகாரிக்கு ம் போது சங்கராச்சாரியார்,ராமானுஜாச்சாரியார் , வள்ளலார் ,ராமானந்தர் , கபீர் தாஸ் போன்ற ஆன்மீக மகான்கள் தோன்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி ஜாதி மத பேதமற்ற
சமத்துவ சமரச சன்மார்க்கம் அமையும்
கோட்பாடுகளை பரப்பினர்.
ஆனால் சுயநல அரசியல் மற்றும் மதத்தலைவர்கள் மனிதர்களுக்குள் பிளவுகள் ஏற்படுத்தி தங்களை உயர்ந்தவர்களாக காட்ட
முயற்சித்தனர்.
அதன் விளைவே ஆண்டவனை கூறு போட்டு
விற்று பணம் சேர்த்து வைத்து நாட்டிற்கும்
வீட்டிற்கு ம் யாருக்கும் பயன் படாமல்

பதுக்கி வைத்தல். அதை இன்று அரசியல் வாதிகள் அதிகாரி கள் கொள்ளை என்று

கூறுவதும் மசூதி, சர்ச் , ஆலய சொத்துக்கள் அரசு

அபகரிக்கக் கூடாது என்பது.

சாதுக்களின் பக்தியும் சமுதாய ஒற்றுமை உணர்வும்.

 
பதின்மூன்றாம் நூற்றாண்டில் சாதுக்கள் ,பக்தர்கள்
ஆன்மீகத்தில்  மிகப்பெரிய புரட்சியைச் செய்தனர்.
 தென்னிந்தியாவில் ராமானுஜர் என்றார் ,வட இந்தியாவில்
 ராமானந்தர்.  இவர்களைத் தொடர்ந்து  சாது கபீர்,ரைதாஸ் மலுக்தாஸ்  சதான  போன்றோர்  அதே தலைமுறையில்
பக்த வல்லபாச்சாரியார் ,பக்த விட்டல்நாத், பக்த கும்பனதாஸ்  ,பக்த சூரதாஸ் ,பாபா ஹரிதாஸ், ரஸ்கான்,
கோசுவாமி துளசிதாஸ் ஆகியோர்  .
இந்த சாதுக்களும் பக்தர்களும் ஜாதி வேறுபாட்டை ஏற்கவில்லை. மனிதர்களுக்கும் வேற்றுமை உணர்வை போக்கி ஒன்றுபட முயற்சித்தார்கள்   என்பதை  நாம் கவனித்ததில் வைத்திருக்க வேண்டும்.  சாதுக்கள்
ஜாதி வேறுபாட்டை எதிர்த்துப் போராடினர்.
இதில் சில சாதுக்கள் உயர் ஜாதியினருக்கும் தாழ்  ஜாதியினருக்கும்   ஏற்பட்ட உடலுறவால் பிறந்தவர்கள்.
மஹாபாரத விதுரன் போன்று. அவர்கள் புதிய சமுதாயம்
அமைக்க முயற்சித்தனர்.  இறை பக்தியில் சாதுக்களும்
பக்தர்களும் ஒரே நோக்கத்தில் தான் பக்தி மார்க்கத்தை
நடைமுறைப்படுத்தினார்கள் .
 12 ஆம் நூற்றாண்டில் இஸ்லாமியர்களின் தீவீரவாதத்தால் அச்சத்தால் சமுதாயத்தில்  விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும்
முயற்சியைத் துவங்கினர். மனித சமத்துவத்திற்கு நிலையான செய்தி அனுப்பினார்கள்.அவர்கள் எல்லா ஜாதியினரையும்  சேர்த்துக்கொண்டு புனித பயணம் செய்து அன்பையும் சமத்துவக்கொள்கைகளையும் பிரச்சாரம் செய்தனர். இஸ்லாமியர்கள் அகில பாரதீய அதிகாரத்தை ஆட்சியை  ஆக்ரா ,பதேஹ் புர் சிக்கிரி போன்ற இடங்களை  உத்திரப்பிரதேசத்தில்  மையமாக வைத்து செலுத்தினர் என்றால் காசி,மதுரா,பிருந்தாவன் ,பிரயாகை ஆகிய இடங்களை மையமாக வைத்து ஹிந்துக்கள் பக்தி புரட்சியைச் செய்தனர். இதற்கு வரலாறு சான்றாகக் காணப்படுகிறது. ராமானந்தர் போன்ற வேதம்  படித்த அந்தணர்களும் கபீர்,ரைதாஸ் போன்றவர்களைத் தன்
சீடர்களாக ஏற்று முக்கியத்துவம் அளித்தனர்.
ஜாதிபேதமற்ற சம்ரசமத்துவ சமுதாயம் அமைப்பதில் இவர்களின் பங்களிப்பு பாராட்டத்திற்கு உரியதாகும்.


   அவர்கள்  எந்த 
 சீர்திருத்தக் கருத்துக்களை
மக்கள் வழக்கு மொழியில் எழுதினார்கள் .
பரம்பரை பழக்கம் வழக்கமாக வந்த சம்ஸ்கிருதம் ,
மேல் ஜாதிகளுக்கான  முதலிடம்  இந்த எண்ணங்களை மாற்றி  சமத்துவம் கொண்டுவரவேண்டும்.அந்த போராட்டத்தில்   மன  உ றுதிவேண்டும்.
வெறுப்பு,விழிப்புணர்வு  என்ற மனநிலை,செயல்.
இந்த குணம் சொற்களிலும் வெளிப்படுகிறது.
 வெறுப்பில் மொழி கடுமையாகிறது. கடும்சுடும்  வசைச்சொல்  வெளிப்படுகிறது. தீய சொற்கள் வெளிப்படுகின்றன. சாதுக்களின் சொற்களில்
கல்விகற்காதவனின் மொழி ,அறியாத தன்மையை அறியச்செய்கிறது. எழுதும் சாஸ்திரங்களில்  பக்தர்களுக்கு
நம்பிக்கை ஏற்படுகிறது. சாதுக்களுக்கு நூலில் உள்ள
கருத்துக்களின் மேல் நம்பிக்கை இருப்பதில்லை.
நூலறிவு  பெற்று அஹங்காரத்தில் உள்ளவர்களைப்பார்த்து
கபீர்  எதிரில் தென்படுவதும் ,அனுபவத்தால் உணர்வதும்
தான்  மகத்துவம் நிறைந்தது.
அவர் சொல்கிறார் -"நீ  சொல்வது காகிதத்தில் எழுதியிருப்பது.  நான் சொல்வது கண்ணால் பார்த்து அனுபவத்தால்  உணர்ந்தது ."
   புரட்சிகரமான  மாற்றம் தான் சாதுக்களின் பக்தி. அவர்களை வெறுக்கும்  ஒதுக்கும் சக்தியோடு போராட்டம் .
ஜாதிவேறுபாடுகளுக்குள்  உண்டான  மனிதத்தன்மை அற்ற கொடுமையை  வெறுப்பை எதிர்ப்பது. இது பெரிய மகத்துவமி க்க புரட்சியின்   வெளிப்பாடு. இவர்கள் ஆயிரக்கணக்கில் தோன்றி  ஆன்மீகத் துணை கொண்டு
மிகக்  கடினமான       சமுதாயப்போரை நடத்தினர்.
 எல்லோருக்கும் சமமான கௌரவம் ,மரியாதை அளிப்பது
என்ற அடிப்படைக் கருத்துருவை  நிறுவுவதின்   முயற்சியில்
தொடர்ந்து  ஈடுபட்டனர்.



   

 

Saturday, September 1, 2018

ஹிந்து சமுதாயமும் மத உணர்வுகளும்

  வேதங்களின்  பாடல்களை மந்திரம் என்றே சொல்கிறார்கள்.இந்த வேதமந்திரங்களை
சரியாக உச்சரிக்கவில்லை என்றால்  தவறான பொருளால்
பாவங்கள் உண்டாகும். bavam /பாவம்  இரண்டுக்கும் அர்த்தத்தை அறிந்து உச்சரிக்கவேண்டும் .
இந்த சாதுக்கள் /பக்தர்கள் மக்களுக்கிடையில் உபன்யாசம் செய்து  பக்தி உணர்வை ஏற்படுத்தவேண்டும். பொதுமக்களுக்கு  சம்ஸ்கிருதம் தெரிய அறிய வாய்ப்பில்லை.அவர்களுக்கு சம்ஸ்கிருதம்  கற்பிக்க யாரும்
தயாராக இல்லை.
 இந்த சாதுக்களும்/பக்தர்களும்  தேவமொழியை   பயன் படுத்தாமல்  மக்கள் மொழியில் ஆன்மீக உபன்யாசங்கள் செய்தனர். அவர்கள் தங்கள் இலக்கியத்திற்கு வடமொழியைப் பயன்படுத்தவில்லை.அதிக மக்களின் வழக்கு மொழியில்  ஆன்மீக இலக்கியம் எழுதினார்.
அவர்கள் எளிய நடையில் தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் ,மராட்டி,குஜராத்தி ,போஜ்புரி, ஒரியா,அசாமி ,வங்காளம்,
போஜ்புரி ,அவதி ,விரஜ் ,ராஜஸ்தானி மொழிகளில்
இலக்கியம் படைத்து ஆன்மீக  அறிவைப் புரிய ,அறிய,தெளிய வைத்து  பக்தர்களின்  எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்தனர். வட்டாரமொழிகள்,பேச்சு மொழிகளில்,நாடோடிப்பாடல்களில்  பக்தி பாமரர்களை
பரவசமடையச்செய்தது. இவை அனைத்தும் ஹிந்து மதத்தத்துவங்கள் ,கோட்பாடுகள்,பக்தியின் சிறப்பு
ஆகியவைகளை அறிய  ஒளிவிளக்காகியது .
கபீர் தாசர்  சம்ஸ்கிருதத்தை கிணற்று மொழி என்கிறார்.
அதை எளிதாக எடுத்து அருந்தமுடியாது. வட்டாரமொழிகள்.பேச்சுமொழிகள்  ஆற்றுநீர் போன்றது.
அதை எளிதாக அருந்தி அறிவுபெறலாம் என்கிறார் .

ஹிந்து சமுதாயமும் சாதுக்களும் பக்தியும்


        பதிமூன்றாம் நூற்றாண்டில்    சாதுக்களும் பக்தர்களும்

பழைய  முறைகளை கண்டித்து எதிர்த்தனர். எண்ணங்களின் சுதந்திரங்கள்,கருத்துச்சுதந்திரம்  மனிதத்தன்மையற்ற தவறுகளை  எதிர்க்க ஆயிரக்கணக்கான சாதுக்களும் பக்தர்களும்  உருவாகினர் . இந்த எண்ணிக்கையில் தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த  சாதுக்கள் அதிகம்.
    கடவுளுக்கு முன் அனைவரும் சமம்  என்றால் ,பிறப்பின் அடிப்படையில்  வேற்றுமைப்படுத்துவது அநியாயம் என்றனர்.
   சாதுக்கள்   ஆலயங்கள்,உருவங்கள்,சாஸ்திரங்கள், சம்ஸ்கிருத மொழி ,அந்தணர்கள், கர்மகாண்டங்கள் ,
ஜாதி வேறுபாடுகள், முதலிய போலிகளை  எதிர்தது
சாதுக்கள்,கவிதைகள், சங்கீதம் போன்ற அஹிம்சை ஆயுதங்களால் "சொற்போர்"செய்கின்றனர்.
இந்த  சாதுக்கள்  நாட்டின் குறுகிய எண்ணங்கள்,
போலி  பொய்யான ஆடம்பரங்கள்,பொய்யான பரம்பரை மூடப் பழக்கங்கள் ஆகியவற்றை கடுமையாக எதிர்த்து
மனிதத்தன்மையான  மனிதநேயச் செய்திகளைப்
பரப்பினர். 
அருவ  வழிபாட்டு பக்தர்களின் மொழி ,மொழி நடை,
கருத்து வெளிப்பாட்டு முறைகள், பா வகைகள்,
எல்லாமே பாரதமுறையில் பாரத ஆசாரிகளின்
பங்களிப்பு.

 வேதங்களின்  பாடல்கள் மந்திரங்கள் என்று சொல்லப்படுகிறது.மந்திரங்களை சுத்தமாக
 பிழையின்றி உச்சரிக்க வேண்டும்  என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.மந்திரங்களின்
மொழி  சம்ஸ்கிருதம் . ஆனால் சாதுக்களின் மொழி மக்கள் பேசும் மொழி. இந்த மக்கள் மிகவும் அப்பாவிகள்.
எளியவர்கள். வேதங்களின் மொழி தெரியாதவர்கள்.
அவர்கள் ஆழ்மனதில் இருந்து பேசுபவர்கள்.










प्रातः कालीन नमस्कार।
भगवान की प्रार्थना
सर्वत्र विद्यमान भगवान
कई प्रकार से हमें परीक्षा देता है.
ज्ञान देने पर भी
मनुष्य को कई प्रकार
की चाहें देकर
उसे चैन से जीने नहीं देता।
पद ,पैसे ,स्त्री,लालच,लोभ,ईर्ष्या ,त्याग ,बुराइयों के विरुद्ध संग्राम ,
जाति ,भाषा,वर्ग ,मत, रंग,मित्रता,प्यार,रक्त -बंधन, नाते -रिश्ते की दुश्मनी ,
विवाह , विवाह से होनेवाले दुःख ,शिशु पालन ,
संतान हीन समस्या,
प्यार,झगड़ा, एक पक्षीय प्यार,टक्कर,
इन सबसे बचने ईश्वर है तो
धार्मिक ,मज़हबी भेद , असल धर्म ,
धार्मिक परिवर्तन ,नक़ल,
अल्ला सब के मालिक है तो
मज़हबी भेद ,
उनमें संघर्ष ,
ईसा उनके अनुयायियों के भेद ,संघर्ष ,
हिन्दू धर्म की शाखाएं ,उपा शाखाएं, संघर्ष ,
प्राकृतिक नाराज़ ,
विषैली जन्तुएं,
खूँख्वार जानवर ,
भूख ,प्यास, अकाल ,दुर्घटनाएँ ,
ज्ञान-विवेक ,बुद्धि प्राप्त करके भी ,
बेचैन जीवन ही मनुष्य जीवन ही है
இனி ய கா லை வணக்கம். प्रातः कालीन नमस्कार।
இறை வணக்கம். भगवान की प्रार्थना
எங்கும் நி றை ந் து ள்ள सर्वत्र विद्यमान भगवान
இறை வன் நம் மை
பல வகை யி லு ம் कई प्रकार से हमें परीक्षा देता है.
சோ தி க் கி றா ன்.
ம னி தர் க ளு க்கு
ஞா னம் அளி த் தா லு ம், ज्ञान देने पर भी
அவனு க் கு பல வி த मनुष्य को कई प्रकार
की चाहें देकर
उसे चैन से जीने नहीं देता।.
ஆசை களை
அளி த் து அவனை
நிம்மதியாக
ம கி ழ் ச் சி யா க
இரு க்க
வி டு வ தி ல் லை .
பதவி ஆசை,
பணத் தா சை,
பெ ண் ணா சை
பே ரா சை,
பொ றா மை
தி யா கம்,
தீ மை கள் எதி ர்த் து போ ரா ட்டம்,
இன, மொ ழி, சா தி, மதம்., நி ற வெ றி
நட்பு அன்பு, ரத்த பந்தம்,
பங்காளி பகை,
தி ரு மணம்.
அதனா ல் வ ரு ம்
இன் னல், து ன்பங்கள்,
கு ழந் தை வளர்ப்பு,
குழந்தை இன்மை,
கா தல், மோ தல்
ஒரு தலை க் கா தல்
மோதல்,
ஜா தி
இத்தனை மீ றி
இறை வன் தா ன்
என் றா ல்
இஸ்லாம்
இந்து
கி றி ஸ்தவர்
அசல், நகல், மதம் மா றி யவர்கள்,
அல்லா வே நன்மை த ரு வார் என்றால்
அதி ல் எத்தனை பி ரி வு கள்
இதனா ல் அதற் கு ள் போ ரா ட்டம் .असल
இயேசு அதன் பி ரி வு எள் போராட்டம்
ி ஹி ந் து மதம் உட் பி ரி வு கள்
போ ரா ட்டம்,
இயற்கை சீ ற்றங்கள்,
வி ஷ ஜந்து க்கள்,
வி லங் கு கள்
பஞ்சம், பசி, பிணி, விபத்து,
அறி வு பெற்று ம்
அமை தியற்ற வா ழ்க்கை யே
ம னி த வா ழ் க் கை. .
पद ,पैसे ,स्त्री,लालच,लोभ,ईर्ष्या ,त्याग ,बुराइयों के विरुद्ध संग्राम ,
जाति ,भाषा,वर्ग ,मत, रंग,मित्रता,प्यार,रक्त -बंधन, नाते -रिश्ते की दुश्मनी ,
विवाह , विवाह से होनेवाले दुःख ,शिशु पालन ,
संतान हीन समस्या,
प्यार,झगड़ा, एक पक्षीय प्यार,टक्कर,
इन सबसे बचने ईश्वर है तो
धार्मिक ,मज़हबी भेद , असल धर्म ,
धार्मिक परिवर्तन ,नक़ल,
अल्ला सब के मालिक है तो
मज़हबी भेद ,
उनमें संघर्ष ,
ईसा उनके अनुयायियों के भेद ,संघर्ष ,
हिन्दू धर्म की शाखाएं ,उपा शाखाएं, संघर्ष ,
प्राकृतिक नाराज़ ,
विषैली जन्तुएं,
खूँख्वार जानवर ,
भूख ,प्यास, अकाल ,दुर्घटनाएँ ,
ज्ञान-विवेक ,बुद्धि प्राप्त करके भी ,
बेचैन जीवन ही मनुष्य जीवन ही है.