Saturday, November 5, 2016

ராமசரிதமானஸ் ---சுண்டரகாண்டம் --பக்கம் இருபது

  ஸ்ரீ  ராமர்  விபீஷணனிடம்  :-

தோழா!   கேள்.

 என்னுடைய  இயற்கை  குணம்

என்னை  சரணடைந்தவர்களைக்   காப்பது.

உலகத்தின் ஜடப்பொருள்-உணர்வுள்ள உயிர்ப்பொருள்

உலகத்துக்கே  துரோஹியாக  இருந்தாலும் ,

என்னை  சரணடைந்தால்  ,

ஆணவம் , மோகம் , ஏமாற்றுதல், வஞ்சனை  போன்ற

 தீய குணங்களை

விட்டுவிட்டால்,

நான்  அவர்களை  மிக விரைவில்  சாது ஆக்கிவிடுவேன்.

இந்த  என் உயரிய  குணத்தை

 காபுஷுண்டி, சிவன் . பார்வதி ஆகியோரும் அறிவர்.


அம்மா, அப்பா, சகோதரன் ,மகன் , மனைவி,
 உடல், வீடு, தனம்,நண்பர்கள், குடும்பம்   இந்த  அன்பு
 நூல்களை  ஒன்றாக  ஒரே  கயிறில்  கட்டி,
அதன்  மூலமாக  என்  சரணங்களை  கட்டுபவன்  சம தர்ஷீ.

அவர்கள்  மனதில்  எவ்வித  ஆசையும்  இருக்காது,
மகிழ்ச்சி ,சோகம் ,பயம்  எதுவும்  இருக்காது.

  இப்படிப்பட்டவன்  பேராசைக்காரனுக்கு

பணத்தின்  மீது  இருக்கும்

பேராசைபோல்,

 எனக்கு  அவர்கள்   மேல்  அன்பு  இருக்கும்.


உன்னைப்போன்ற  சாதுக்கள்  எனக்கு  மிகவும்  அன்பானவர்கள்.

நன்றிவயப்பட்டு   நானும்  யாரையும்   ஏற்கமாட்டேன்.


       உருவவழிபாடு  செய்பவர்கள்,

      மற்றவர்கள்  நன்மையில்  ஈடுபடுகொண்டவர்கள்,

       நீதி  நியமங்களில்  திடமானவர்கள்,

       அந்தணர்களை  விரும்பி அவர்கள்  பாதங்களில்  வணங்குபவர்கள்,

       எனக்கு  என்  உயிரைவிட  மேலானவர்கள்.


     இலங்கை  வேந்தே ! கேள்.

 உன்னிடம்  மேலே  சொல்லப்பட்ட  அனைத்து

குணங்களும்  உள்ளன.  

அதனால்  எனக்கு  நீ   மிகவும்  பிரியமானவன்.


  ஸ்ரீ ராமரின்  சொற்களைக்  கேட்டு

 வானரக் கூட்டம்  மிகவும்  மகிழ்ந்தன.

      ஸ்ரீ  ராமர்  பெயரைகூறி  ஜெய  ராம் !

    என்று  முழக்கமிட்டன.

      விபீஷணன்  ஸ்ரீ  ராமரின்  பாதங்களைப்  பிடித்து

  தன் எல்லையில்லா

அன்பை   காட்டினான்.

    தேவரீர்!

 உங்களைக்  கண்ட   மாத்திரத்திலேயே  என்  மனதில்

 எஞ்சி இருந்த  ஆசைகளும்  போய்விட்டன,

உங்கள்  அன்பு  நதி அவைகளை அடித்துச்  சென்று விட்டது.

    சிவனின் மனதில் எப்பொழுதும் இருக்கின்ற படி யான

தங்கள் புனித பக்தியை  எனக்கு அருளுங்கள்.

அப்படியே  ஆகட்டும்  என்று  கடல்  நீரைக்  கேட்டான்.

   தோழா!   என்னை  தரிசித்தவர்கள்  பலனற்று போகமாட்டார்கள்.
 இது  உலகின் நீதி.

  இப்படி சொல்லி   ஸ்ரீராமர்  விபீஷணனுக்கு  பட்டாபிஷேகம்  செய்தார்.

  ஆகாயத்திலிருந்து    அதிக  அளவில்  பூ மழை பொழிந்தது.



     ராவணனின்  கோபக்  கனலில்  இருந்து

ஸ்ரீராமர்  விபீஷணனைக்  காப்பாற்றினார்.
  அவனக்கு  அகண்ட ராஜ்யத்தை அளித்தார்.

      ராவணனுக்கு  சிவன்  அளித்த  சொத்துக்கள்

  அனைத்தையும்  ஸ்ரீராமர்

விபீஷணனுக்கு   அளித்தார்.
 ராவணன்  பத்து  தலைகளை

 பலி கொடுத்து சிவனிடம்  பெற்றான்.  விபீஷணன்   ராமரை  சரணடைந்து  பெற்றான்.


   கிருபை  நிறைந்த  இப்படிப்பட்ட  பக்தவத்சலரான

  ராமரை  வணங்காதவர்கள்    கொம்பும் வாலும்  இல்லா மிருகங்கள்.


விபீஷணனை   தன் சேவகனாக  இறைவன்  ஏற்றார்.

ஸ்ரீராமனின்  இந்த  குணம்    வானரங்களுக்கு  மிகவும்  மகிழ்வைத்  தந்தது.

       அனைத்தும்  அறிந்த,

 எல்லோரின்  மனதிலும்  இடம்பெற்று  வசிக்கின்ற ,

எல்லாவடிவங்களிலும்  வெளிப்பட்டு,   வெளிப்படாத  ஸ்ரீராமர்

 பக்தர்களின்  மேல்  கிருபை  காட்டவும் ,

 அரக்கர்கள்  குலத்தை  அழிக்கவும்

மனித உருவில்  அவதரித்தார்.

  பிறகு  ஸ்ரீ  லங்காதி பதி   விபீஷணனி டமும்  சுக்ரீவனிடமும்

  சமுத்திரத்தை எப்படி  கடப்பது  என்று  கேட்டார்.

   இதில் பலவித  முதலைகள், பாம்புகள்,  மீன்கள்   நிறைந்துள்ளன.
மிகவும் ஆழமான  கடலை    கடப்பது  மிகவும்  கடினம்.

  விபீஷணன்   சொன்னான் ---

ஸ்ரீ ரகுநாதா!  உங்கள்  அம்புகள்  கோடிக்கணக்கான
  கடல்களை வறட்சி  அடையச் செய்துவிடும்.

ஆனால்  அது  நியாயமில்லை.

 கடலிடமே  பிரார்த்திப்போம்.
 
 சமுத்திரம்  உங்கள்  குலத்தின்  முன்னோர்களில்  ஒன்று.

 அவர் சிந்தித்து வழி  சொல்லுவார்.
 அப்பொழுது  மிகவும்  சுலபமாக
கரடிகளும்  வானரங்களும்  கடல்  கடந்து சென்றுவிடும்.

     ராமர்  தோழா! நல்ல உபாயத்தைச்  சொன்னாய்.

இப்படியே  செய்யலாம்.
கடவுள்  துணை  புரிவார்.

இந்த  ஆலோசனை இலக்குமனனுக்குப் பிடிக்கவில்லை.

 ராமரின் சொல்  கேட்டு அவன்  வருந்தினான்.

 லக்ஷ்மணன்   சொன்னான் -- அண்ணா!
தேவர்களை  எப்படி  நம்புவது?
கோபத்துடன்  சமுத்திரத்தை  வறட்சி  அடையச் செய்யுங்கள்.


 இந்த தெய்வம்  என்பது  கோழை களுக்கு ஆறுதல்  அளிக்கும் வழி .

 சோம்பேறிகள்  தான்  தெய்வத்தை அழைப்பார்கள்.


   இதைக்கேட்டு  ராமர் சிரித்துவிட்டு,

  இப்படியே  செய்யலாம்   தைரியமாக  இரு  என்று

சொல்லி  ராமர்  கடலுக்கு அருகில்  சென்றார்.

     முதலில்  தலைவணங்கினார்.

. பிறகு  தர்ப்பை விரித்து ஆசனம் செய்து  அமர்ந்தார்.


  விபீஷணன் வந்ததுமே  ராவணன்

 தன் தூதர்களைஅனுப்பினான்.

  அந்த  தூதர்கள்   குரங்கு உருவத்தில்

 இங்கு  நடப்பது  அனைத்தையும்  கவனித்தன.


  அவர்கள்    ஸ்ரீராமரின்   குணம்  கண்டு  ,
அடைக்கலமாக  வந்தவனை  காப்பாற்றும்
 அருள்  அறிந்து  புகழ்ந்தனர்..
  பிறகு  வெளிப்படையாக

 ராமரின்  குணங்களைப்  புகழ  ஆரம்பித்தனர்.

அவன்  தன்  கபட  வேஷத்தை மறந்துவிட்டான்.

  வானரர்களுக்கு  இவன்   ரவாணனின்  தூதன்  என்று  தெரிந்துவிட்டது.

 அவனைக்  கட்டி சுக்ரீவனிடம்  அழைத்துச்  சென்றனர்.

சுக்ரீவன்  அந்த தூதர்களை  அங்கஹீனமாக்கி  அனுப்பும்படி  கூறினான்.

   இந்த  கட்டளை கேட்டதும் வானரப்படை  அவர்களை சூழ்ந்து  சுழற்றியது.



 




Thursday, November 3, 2016

அவனருள்

காலைவணக்கம் .
என்னையும்
உலகையும்
மற்ற அனைத்து ஜீவராசிகளின்
நல்லவை, அல்லவை,
தீயவை இனியவை , துன்பங்கள்
அனைத்திற்கும்
ஆதி மூலம்
சிவன்.விஷ்ணு பிரம்மா.
ஒரு மனிதனின்
மனதில் தோன்றும்
நல்ல தீய எண்ணங்களுக்கு
காரண கர்த்தர்கள்.
அவர்களுக்கும் சக்திகள் உண்டு.
ஞான சக்தி, இச்சா சக்தி ,க்ரியா சக்தி.
இதை கி.மு.வுக்கு பல ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்னரே
நமது சாஸ்த்திரங்கள்
ஆலயங்களில் தெய்வ வடிங்களாக
வடித்து வழிகாட்டின.
நாம் நமது உன்னத
ஆன்மீகங்களை
சாத்தான் /சைத்தான்/ மாயை என்று
அனைத்து மதங்கள் கூறும்
வெளி மாயை பின் செல்கிறோம்.
இறைவன் கர்பகிரஹத்தில் உள்ளார்.
ஆனால் ஆலயத்தில்
நுழைந்தால் நம் கண்ணில் படுவது
தூண், கோபுரம்.
அதில்
உலகின் படைப்புகளுக்கான பாடங்கள்.
இதெல்லாம் கடந்து மூலவர்.
நாம் நமது மனத்தை அடக்க
அருள் புரியும் சக்தி.
என்னே . சூட்சுமம்.
புலனடக்கம். இறை உணர்வு,
இறை அச்சம்.
இறை அன்பு.
இறைப்பற்று.
எல்லாமே அவன்.
ஆட்டி வைக்கிறான்.
நாம் ஆடுகிறோம் .
ஒவ்வொருக்கும் ஒருவகை ஆற்றல்.
சிலருக்கு குண்டூசி கையில்
எடுத்தாலே வலிக்கும்.
சிலர் பல மடங்கு எடை தூக்குவார்.
வேக நடை,
அன்ன நடை.
இனிய மொழி,
கர்ண கடூரம்.
தெய்வீகத் தோற்றம்.
ராக்ஷசத் தோற்றம்.
இனியகுரல் .
இனிய பார்வை.
இனிய வார்த்தைகள்.
எப்படித் தான்
மனிதன் தன் முயற்சியால் சாதிப்பான்
என்று நம்புகிறார்களோ
தெரியவில்லை.
சிலருக்குத் தன் மனைவியுடன்
வாழக்கூட முடியவில்லை.
கணவனைக் கவரத் தெரியவில்லை.
தன்
முயற்சி யால் குழந்தை கூட
பெற முடியா நிலை.
அறிவியல் வளர்ச்சி ,
ஆனால் சிலவு .
மருத்துவ விரயம்.
காலவிரயம்
காலன் பயம்.
மேதைகளும்
கோடீஸ்வரர்களும் ,
மாமன்னர்களும் இயலாமல்
இறைவனை சரணடையும் கதைகள்.
நேரம்
கருணாநிதியை கண்ணீர் சிந்த வைக்கிறது.
ஜெயலிதாவை கண்ணீர் சிந்த வைக்கிறது.
இருவரையும் ஒப்பற்ற தலைவர்கள்
என்றொரு கூட்டம்.
அவர்களுக்கும் ௪௦%+௩௦%நிரந்தர எதிர்ப்பு.
கூட்டணி கை கொடுக்கும்..
பெருந்தலைவர் காமராஜருக்குத் தோல்வி.
இந்திராவின் . மரணம்.
ராஜீவின் மரணம்.
அனைத்தும் அறிந்தும்,
தெரிந்தும் .
புரிந்தும் ,
தெளிந்தும்
இறைவனில்லை என்றொரு
ஈவேரா கூட்டம்.
அவரைப்பிரிந்த தி.மு.க,அ.தி.மு.க
இறைவனை வழிபடும் அன்றாட நிகழ்வுகள்
அ.வன் திருவிளையாடல் .
சிந்திப்பீர்.
இறைவன் இருக்கிறான்.
முயற்சியில் வெற்றிக்குப்பின்
அவன் அருள்.
தோல்விக்குப்பின்
அவன் அருள்.
நான் ஆண் என்று நிமிரும்
ஆண்களின் சந்தான பாக்கியத்திற்கும்
அவனருள்.
அறிவு ,ஆற்றல் ,
அறியாமை, திறமையின்மை
நல்ல பெயர்,
கெட்ட பெயர்,
பணம் செல்வாக்கு ,
பதவி அவப்பெயர் ,
புகழ் அனைத்திற்கும்
அவனருள்.
வள்ளுவர் போற்றுவோர்
இறைவனையும் போற்றுவார்கள்.
இல்லை என்றால் வள்ளுவம் சிரிக்கும்.
" தனக்குவமை இல்லாதான் தாள் செர்ந்தர்க்கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது. "
ஸ்ரீ கணேசாய நமஹ.
ஸ்ரீ கார்த்திகேயாய நமஹ
ஓம் நமச்சிவாய்
(இதில் சிவனுக்கு முன் ஸ்ரீ இல்லை.
எல்லாமே சுடலைப் பொடியாகும் நிலை. )
ஓம் துர்காயை நமஹ.

Wednesday, November 2, 2016

ராமசரித மானஸ்--சுந்தரகாண்டம் பக்கம் பத்தொன்பது

   விபீஷணன்  இவ்வாறு
  சொல்லி  சென்றதுமே
  அரக்கர்களின்  மரணம்
  நிச்சயிக்கப்பட்டுவிட்டது.

  சிவபகவான்   பவானியிடம்  சொன்னார் --
  ஒரு  சாதுவை நல்லவனை
  அவமானம்  செய்தால்
 உடனே  நடக்கக்கூடிய அனைத்து
 நலமும்  நாசமாகிவிடும்.

    விபீஷணன்  ராவணனை
  விட்டுவிட்டு  சென்றதுமே
 அவன் ஒரு  துரதிர்ஷ்டசாலி  ஆகிவிட்டான்.
 அவனுடைய  வைபவங்கள்
 எல்லாம்  போய் விட்டன.
     விபீஷணன்  மிக்க  மகிழ்ச்சியுடன்
    மனதின்  பலவித
  கனவுகளுடன்
  ஸ்ரீ ராமனிடம்  சென்றான்.

 விபீஷணன்   , ராமபகவானின்
 மென்மையான  சிவப்புவண்ண
அழகான  தாமரைக்கால்களை பார்ப்பேன்.
அதுதான்  தொண்டர்களுக்கு சுகம்  அளிக்கக்  கூடியது.

அந்த  பாதங்கள்  பட்டு
 கல்லான  அஹல்யாவிற்கு
 மோக்ஷம்  கிடைத்தது,
தண்டகாரன்யவனம் புனிதமாகியது .

சீதையின்  இதயத்தில்  இடம்
 பெற்ற  சரணங்கள் அவை.
 கபடமான  பொன்மானை  விரட்டிச்  சென்ற  பாதங்கள்  அவை.
 அந்த  தாமரை  சரணங்கள் சிவபகவான்  இதயத்தில்  இடம்பெற்றுள்ளன.
 என்  அதிர்ஷ்டம் அவரை  இன்று  தரிசனம்  செய்வேன்.
  பரதன்  தன்  மனதில்  இடமளித்த

பாதங்களை  இன்று
என்  கண்களால்  பார்ப்பேன்.
இவ்வாறு  நினைத்துக்கொண்டே
 மிக  விரைவாக  சமுத்திரத்தின்
அக்கரையை  அடைந்தான்.
வானரங்கள்  விபீஷணனைப்  பார்த்ததும்
அவனை எதிரியின்  தூதன்  என  நினைத்தன.

அவனை  காவலில்  வைத்துவிட்டு
சுக்ரீவனிடம்  செய்தி சொன்னார்கள்.
சுக்ரீவன்  ராமரிடம்
 ராவணன் தம்பி விபீஷணன் உங்களை  சந்திக்க
 வந்துள்ளான்  என்றான்.
   ராமன் சுக்ரீவனின்
 கருத்தைக்  கேட்டான்.
சுக்ரீவன் , மகாராஜா!
அரக்கர்களின்  மாயை
அறிய  முடியாது.
அவர்கள்  ஏமாற்றுக்காரர்கள்.
தங்கள் விருப்பப்படி  உருவத்தை  மாற்றிக் கொள்வார்கள்.
இவன்  வந்த காரணம்  தெரியவில்லை.
இந்த  முட்டாள்  நம் ரகசியத்தை  அறிய  வந்திருக்கிறான்.
 இவனைக் கட்டிவைப்பதுதான் சரியெனப் படுகிறது என்றான்.

    ராமர்,  நண்பரே!
  நீ  நன்றாகவே   எண்ணியுள்ளாய்.
 உன்னுடைய நீதி சரியே.
 ஆனால்  அடைக்கலம் வந்தவனின்
 பயத்தைப்  போக்கவேண்டும்.

  ஸ்ரீ  ராமரின்  சொல்லைக்கேட்டு
 ஹனுமான்  மிகவும்  மகிழ்ந்தார்.
கடவுள்  சரணாகத்வத்சலர்  .
அதாவது சரணடைந்தவரை
 விரும்பு பவர்.
  ராமர்  மேலும்  சொன்னார் :--
  தனக்கு  வரும்  தீமையை  யூகித்து
 அடைக்கலமாக  வந்தவனை 

 விட்டுவிடுபவன்  பாமரன்.
அவன்  பாவி.
 அவனைப் பார்த்தாலே  பாவம். தீங்குவரும்.
  ஆயிரக்கணக்கான   அந்தணர்களைக்
  கொன்று பாவியாகவந்தாலும் ,
 அடைக்கலம்  என்றுவந்தால்
 அவனை விடமாட்டேன்.
  எந்த ஜீவனும்  என் முன்
  வந்தால் அவனின்  கோடிக்கணக்கான
  ஜென்மங்களின்
 பாவமும் போகிவிடும்.
  பாவிக்கு  என்மேல்  பக்தி  ஏற்படாது.
 அது  அவர்களின்  இயற்கை  குணம்.
ராவணனின் சகோதரன்
 தீய  மனமுள்ளவனாக  இருந்தால்
என்  முன் வரமுடியுமா ?
 களங்கமற்ற புனித  மனமுள்ளவனுக்குத்தான்
  என்னைப்  பிடிக்கும்.
எனக்கு  கபடமும் வஞ்சனையும்
 உள்ளவனைப்  பிடிக்காது.
அவன்  ராவணனின் உளவாளியாக  வந்தாலும்
எனக்கு  எவ்வித  தீங்கும்  ஏற்படாது.
 தோழனே! சுக்ரீவா! உலகில்  எத்தனை  அரக்கர்கள்
 இருந்தாலும்  ஒரு நொடியில்  என் தம்பி
 இலக்குவன்  அழித்துவிடுவான் .
அவன்  பயந்து  என்னிடம்   அடைக்கலமாக
 வந்தால் அவனைக்  காப்பாற்றுவேன்.
என் உயிர் போல்  கருதுவேன்.
  அவன்  தூதனாக வந்தாலும்
 நண்பனாக  வந்தாலும்
 அழைத்துவா.
 ராமரின்  ஆலோசனை  கேட்டு
ஹனுமான், சுக்ரீவன் மற்றும் அங்கதன்  மூவரும்
 "கிருபை  காட்டும் ராமருக்கு  ஜய்"
 என்ற  முழக்கத்துடன்  புறப்பட்டனர்.

    வானரர்கள் மிக்க  மரியாதையுடன்
 விபீஷணனை  ஸ்ரீ ராமரிடம்  அழைத்துச்  சென்றனர்.
  விபீஷனான்  ராம லக்ஷ்மணரை
   தொலைவில்  இருந்தே   பார்த்து
 மிகவும்  மகிழ்ந்தான்.
  இருவருமே  கண்டதும் சுகமளிக்கும்
  தோற்றப்  பொலிவு உடையவர்கள்.

      அழகின்  இருப்பிடமான  ராமரைக்
   கண்மூடாமல்  பார்த்து ஸ்தம்பித்து நின்றான்.
பகவானின்  நீண்ட விசாலமான புஜங்கள்,
  செந்தாமரைக்  கண்கள்,
   அடைக்கலமாக  சரணடைந்தவர்களின்
  பயத்தைப் போக்கும்  கருநீலநிறமுடைய  உடல்.

   சிங்கத்தின்  தோள்கள் , அகன்ற  மார்பு ,எண்ண முடியா
  காமதேவர்களின் மனதை  கவரும்

 ( மோஹிக்கும் )  முகம்.

   இந்த  அழகிய  முகம்  கண்டு
   விபீஷணனின்  கண்களில்
  அன்பும்  ஆனந்தமும்  நிறைந்த  கண்ணீர்
   பொங்கி வழிந்தது .
  மிகவும்  ஆனந்தமடைந்தான்,
  பிறகு  மன தைரியத்துடன்  சொன்னான்--
  அரசே !  நான்  பத்துத்தலை  இராவணனின்   சகோதரன்.
  தேவர்களைக்  காக்கும்  நாதா!
    நான்  அரக்கர்கள்  குலத்தில்    பிறந்துள்ளேன்.
 நான்  தாமச குணமுள்ளவன்.  
 ஆந்தைக்கு இரவில்  இருட்டு  எப்படி
  இயற்கையாக  விருப்பமோ   அவ்வாறே
  எனக்கு    பாவச்செயல்  மிகவும்  விருப்பம்.

  நான்  உங்களின்  புகழ்  கேட்டு  வந்துள்ளேன்.
 நீங்கள் பிறப்பு -இறப்பு   பயம்  போக்குபவர் .
  துயரப்படுபவர்களின்   துயரம்  போக்குபவர்.
  அடைக்கலமாக  வந்தவரை  காப்பாற்றுபவர்.
  என்னை  ரக்ஷியுங்கள்.

 விபீஷணனின் பணிவும் அடக்கமும் ,
வேண்டுகோளும் ஸ்ரீ ராமருக்கு மிகவும்  பிடித்திருந்தது.
அவர்  தன  விஷாலமான
புஜங்களால்     ஆரத்  கொண்டார்.
தன்னை  அருகில்  அமரவைத்து பக்தர்களின்
 பயம்  போக்கும்  கருணைகாட்டி  சொன்னார்--
  ஸ்ரீ  லங்கேச்வரா !  குடும்பத்துடன்  உன்  நலத்தைக் கூறு.
   நீ  இருக்குமிடம் கெட்ட  இடம்.
  இரவும்  பகலும் துஷ்டர்களின்  கூட்டத்தில் உள்ளாய்.

 நீ  எப்படி அறத்தைக் காக்க  ,
 கடைபிடிக்க  முடியும்.
 எனக்கு  உன்னுடைய  பழக்கவழக்க
  ஆசாரங்கள்  தெரியும்.
 நீ  மிகப்பெரிய  நீதிமான்.
 உனக்கு  அநீதி  பிடிக்காது.
 மகனே!நரகத்தில் இருப்பது  துஷ்டர்களின்
 சேர்க்கையில் இருப்பதைவிட சிறந்தது.

 ஸ்ரீராமரிடம்  விபீஷணன்  கூறினான்: --
  உங்களை  தரிசித்து நலமாக உள்ளேன்.
   நீங்கள்  என்னை உங்களது தொண்டனாக
  ஏற்று  தயவு  காட்டியுள்ளீர்கள்.

      பெண்ணாசை ,மற்ற  ஆசைகளை விட்டு
   ஸ்ரீ ராமபிரானை   ஜெபிக்கவில்லை  என்றால்,
   அவர்களுக்கு  நலம்  இல்லை.
  கனவில்  கூட  மனதிற்கு   அமைதி கிடைக்காது.

   ஸ்ரீ ராம  பகவான்    கருணைக்காக  மனதில் ,
  இதயத்தில்  வசிக்கும்  வரை    பேராசை. பொறாமை,
 ஆணவம்,காமம்  போன்ற பல  துஷ்டர்கள்
  இதயத்தில்  இடம்  பெற்று  இருப்பார்கள்.
  ஆசை  என்பது   இருண்ட  இரவு ,
 அது அன்பு-வெறுப்பு  என்ற  ஆந்தைகளுக்கு
  மனதில்  இடம் அளிக்கும்.
 ராமரின்  சூர்யோதயம் மனதில்  உதிக்கும்  வரை ஆசை  இருக்கும்.

  ஸ்ரீ  ராமச்சந்த்ரரே ! உங்களைப் பார்த்தது
  முதல்  என்  அச்சம்  போய் விட்டது.
  அருள்  கடலே!  உங்கள்  அனுக்கிரஹம்  பெற்றவர்களுக்கு
 ஆன்மீக,ஆன்மீகமற்ற ,உலகியல்  பயங்கள்
 மூன்றும் இருக்காது.
     நான்  மிகவும்  தாழ்ந்த  குணமுள்ள  அரக்கன்.
  நான்  நல்லமுறையில்  நடந்துகொண்டதே இல்லை.  
நீங்கள்  முனிவர்களின்  மீது  கூட
  கவனத்தைக்  காட்டவில்லை.
 என்னைப்  பார்த்து  மகிழ்ந்து
ஆரத்  தழுவினீர்.
  இது  என்னுடைய  பாக்கியம்  தான்.

 சிவனால் பூஜிக்கப்பட்ட  சரணங்களை
  இன்று  தர்ஷித்தேன்.






   .

ராமசரிதமானஸ் --சுந்தரகாண்டம் - பக்கம் பதினெட்டு

      ராவணனின்  அவையில்  மால்யவான்  என்ற
  அறிவுமிகுந்த  அமைச்சர்  இருந்தான்.
   அவன்  விபீசணனின் சொற்களைக்  கேட்டு
  மகிழ்ந்து  சொன்னான் : --
 அரசே! உங்கள்  தம்பி  விபீஷணன்  நீதிவான்.
 அவர் சொல்வதை  ஏற்றுக்கொள்ளுங்கள்.

  ராவணன்  சொன்னான்: --
இந்த  இருவரும்   விரோதியை
புகழ்ந்துகொண்டிருக்கின்றனர் ,
யார்  அங்கே!  இவர்களை  வெளியேற்றுங்கள்.
உடனே  மால்யவான்  வீட்டிற்குத்  திரும்பி  சென்றான்.
   விபீஷணன்  மறுபடியும்  கைகூப்பி
வணங்கி    சொன்னான் -:--
 நல்ல  அறிவு ,கெட்ட  அறிவு,
எல்லோரின்  மனதிலும்  இருக்கிறது.
 நல்ல  அறிவு  இருக்கும்  இடத்தில்
எல்லாவித  சுகங்களும்  சொத்துக்களும்  உள்ளன.
 கெட்ட  அறிவு உள்ள  இடத்தில் துயரம்தான்  இருக்கும்.
  உங்கள்  மனதில்  தீய  அறிவு  வந்து  அமர்ந்து விட்டது.
ஆகையால் நீங்கள் நன்மையை  தீமையாகவும்
 விரோதியை நண்பனாகவும்  கருதுகிறீர்கள்.
அரக்கர்கள்  குலத்திற்கு  எமனாக இருக்கும்
சீதையின் மேல்  உங்களுக்கு
அன்பு  ஏற்பட்டுள்ளது.
அண்ணா!  உங்கள்  பாதங்களைப் பிடித்து  வேண்டுகிறேன்: --
என்னுடைய  வேண்டுகோளை  ஏற்றுக்கொள்ளுங்கள்.
 நீங்கள் தீமையில் இருந்து  தப்பிக்க ,
காத்துக் கொள்ள  சீதையை ராமரிடம்  அனுப்பிவிடுங்கள்.
  விபீஷணன்  வேதங்கள் ,பண்டிதர்கள், புராணங்களில்  இருந்து
 பல  நீதிகளை எடுத்து  வர்ணித்தான்.
ஆனால்  ராவணனுக்கு  அவன்  சொற்களைக்  கேட்டு
 மிகவும்  கோபம் வந்துவிட்டது.
அவன்  துஷ்டா! உனக்கு  சாவு  நெருங்கிவிட்டது  என்றான்.
  என்  சாப்பாட்டை சாப்பிட்டு  வாழ்பவன்  நீ .
முட்டாளே!  நீ  விரோதியை  விரும்புகிறாய்.
அவனைப் புகழ்கிறாய்.  அடே ,துஷ்டா!சொல்,
இந்த  உலகில்  நான்  வெற்றி பெறாத  சக்தி  உண்டா ?
என் நகரத்தில் இருந்து கொண்டு
தபசிகளைப்  புகழ்கிறாய்.
நேசிக்கிறாய்.
அவர்களிடம்  சேர்ந்து  அவர்களுக்கு  நீதியைச்  சொல்.
இப்படி  சொல்லிவிட்டு  ராவணன் அவனை  உதைத்துவிட்டான்.  உதைத்தாலும் விபீஷணன்  அவரின் கால்களைப் பிடித்துக்  கெஞ்சினான்.

    இந்த  நிகழ்ச்சியைப்  பார்த்து ,
 சிவ பகவான்  உமாவிடம்  சொன்னான்--
 உமா!  சாதுக்களுக்கு  உயர்ந்த  குணமே இதுதான்.
  இதுதான் அவர்கள்  மகிமை.
தீங்கு விளைவித்தாலும்  நல்லதே  செய்வர்.

  அங்கு  விபீஷணன் ராவணனிடம்  சொன்னான் :--
 நீங்கள்  என்  தந்தையைப்  போன்றவர்.
  என்னை  அடித்ததும்  நல்லதே.
 ஆனால் உங்களுக்கு  ராம பஜனையில் தான் நலமுண்டாகும் .

பிறகு  சத்தமாக  சொன்னான்:--ஸ்ரீராமர்   சத்தியமானவர்.
.   ராவணா! உன்னுடைய சபை  எமனின் வசத்தில்  உள்ளது.  
 ஆகையால் நான்  ராமரை சரணடைகிறேன்.
 என்னைக்  குறைகூறாதே
. பின்னர்  தன்  மந்திர்களுடன்
 ஆகாய  மார்க்கத்தில் ராமரிடம்  சென்றான். 

Tuesday, November 1, 2016

ராமசரிதமானஸ் --சுந்தரகாண்டம் -- பக்கம் --pathinelu

    துளசிதாசர்  கூறுகிறார் .

 அமைச்சர் ,மருத்துவர், குரு  மூவரும்
  அரசனை  மகிழ்விக்கவோ,
அரச கோபத்தில் இருந்து  பயந்து
தப்பிக்கவோ,  முகஸ்துதிக்காகவோ ,
தன் நலத்திற்காகவோ
 பொய்  பேசினால்  சீக்கிரமே
 மூவருக்கும்  நாசம்  ஏற்படும்.
அழிவிலிருந்து  தப்பிக்க   முடியாது.

    ராவணனுக்கும்  அதே  நிலை. 

அமைச்சர்கள்  அவனை புகழ்கிறார்கள் . 
 இது  நல்ல  சந்தர்ப்பம்  என்று 
 விபீஷணன்  வந்தார். 
அவன் ராவணனை  சிரம் தாழ்த்தி 
 வணங்கி தன்  ஆசனத்தில் 
 அமர்ந்து    அனுமதி பெற்று  கூறினார்:--

  நீங்கள்  என்னிடம்  கருத்து கேட்கிறீர்கள் .
 எனக்கு  அறிவிற்கு  தெரிந்த  உங்கள்  நன்மைக்கான  கருத்து  வெளியிடுகிறேன்.

     "மனிதர்கள்  தங்கள்  புகழ்,

நலம், நல்லறிவு , ஞானம் ,மோக்ஷம் 
 பெற  விரும்பினால் ,
 மற்றவனின்  மனைவிமேல்

  உள்ள  ஆசையை
விட்டுவிடவேண்டும்.

 நான்காம் பிறை கெடுதல்  என்று
 யாரும் பார்க்கமாட்டார்கள். 

அப்படியே நீங்களும்  மற்றவர்
  மனைவியின் முக  மோகத்தை
விட்டுவிட  வேண்டும்.
   நான்கு  புவனங்களின்  பேரரசனாக
  இருந்தாலும்
மற்ற  ஜீவன்களின் பகை கொண்டு வாழமுடியாமல்   அழிந்து விடுவான்.
எல்லா  குணங்களின்  கடலாக  இருந்தாலும்  கெட்டிக்காரத்தனமாக  இருந்தாலும்  ,
சிறிதளவு  பேராசை  கொண்டாலும்

 நன்மை  உண்டாகாது.
   காமம் ,குரோதம், பேராசை ,ஆணவம்  முதலிய    நான்கும்  நரகத்திற்கான  வழிகள் .
 இவைகளை விட்டுவிட்டு , நல்ல  புனிதர்கள்,  சாதுக்கள்  வழிபடும்
 இராமச்சந்திர  மூர்த்தியை
வழிபடுங்கள்.
  உயர்ந்தவரே !  ராமர் மனிதர்களுக்கு
அரசர்  அல்ல.
 அவர்  அனைத்து  உலகங்களுக்கும் அரசர்.
எமனுக்கே எமன்  அவர்.
அவர்  பகவான்.
எந்தவித  மாற்றமும்  இல்லாதவர்.
பிறவி இல்லாதவர்.
வெல்ல முடியாதவர்.
ஆரம்பமும்  முடிவும்  இல்லாதவர்.
அனைத்து  ஐஸ்வர்யங்கள், 

புகழ், செல்வம்,அறம், வைராக்கியம்  மேலும்  ஞானங்களின்  இருப்பிடம்.
சேமிப்புக்  கிடங்கு.
   அவர்  அனைவருக்கும்  நன்மை  செய்யவே  அவதரித்துள்ளார். 

இந்த  புவி, அந்தணர்கள், பசுக்கள்,தேவர்கள்  அனைவருக்கும் நன்மை  செய்பவர்.
சகோதரரே!   அவர்கள்  தேவர்களை

 மகிழ்விப்பவர். 
 தீயவர்களை  அழிப்பவர். 
 வேதங்களையும் அறத்தையும்  காப்பவர்.  அனைத்து  நல்லவைகளுக்கும்  ரக்ஷகர்.

 நீங்கள்  விரோதத்தை விட்டு  

அவரை  வணங்குங்கள். 
அவர்  சரணடைந்தவர்களை  காப்பவர்.
  துயரம் போக்குபவர்.

தலைவரே!  சீதாதேவியை  அவரிடம்  ஒப்படைத்து  அவரை வணங்குங்கள்.
  அகில உலகத்திற்கு  பாவம்  செய்தவர்களையும்  அவர்கள்  சரணடைந்தால்  காப்பவர்.
மூன்றுவித  தாபங்களையும்

  போக்குபவர்.
அந்த  சர்வேஸ்வரர் தான் .

 ராமனாக அவதரித்துள்ளார்.
 இதை  அறிந்து புரிந்துகொள்ளுங்கள்.

 பத்து சிரம்கொன்டவரே!
 உங்களை  மீண்டும் மீண்டும்  வணங்கி  அடிபணித்து  சொல்கிறேன் --
மானம் ,மரியாதை, ஆணவத்தை விட்டுவிட்டு
கோசலமன்னன்  ஸ்ரீ  ராமரை  பஜனை  செய்யுங்கள்..
  முனி  புலஸ்தியர்
  தன்  சீடன்  மூலம் அனுப்பிய
அறிவுரைதான்  இது.

 நல்ல சந்தர்பம்  அறிந்து 
 இந்த  விஷயத்தை 
 தங்களிடம் கூறிவிட்டேன்.

ராமசரிதமானஸ் ---சுந்தரகாண்டம் பக்கம் பதினாறு

ஹனுமானின்   சொல்லைகேட்ட   சீதை ,

   மகனே!அந்த வானரங்கள்

உன்னைப்போலவே  இருப்பார்கள் .

அரக்கர்களோ  மிகவும்

பலம்  பொருந்தியவர்கள்.

 போர்வீரர்கள்.

அதனால்  என்  மனதில்  அதிகக்  கவலை  உண்டாகிறது.

நீங்கள்  எப்படி அரக்கர்களை  வெல்வீர்கள்.


இதைக்  கேட்டதும்

 ஆஞ்சநேயர் தன்  உண்மைத்  தோற்றத்தில்  தோன்றினார்.

  தங்கக்  குன்று  போன்ற   மிகப்  பெரிய   உடல்,

எதிரிகளை  பயமுறுத்தும்  தோற்றம்.

மிக அதிக  வீரம் ,பலம் நிறைந்த பெரிய  தோற்றம்.

  ஆஞ்சநேயரின்  தோற்றம்  கண்டு

சீதையின்  மனதில்   நம்பிக்கை  உண்டாகியது.

ஹனுமான்  மீண்டும்  சிறிய  உருவத்தை  அடைந்தார்.

  சொன்னார் ---
  அன்னையே!  வானரங்களுக்கு  பலம்  கிடையாது.

  அறிவு  கிடையாது.  ஆனால்

      ஸ்ரீ  ராமரின்   வீரத்தால்  மிகச்  சிறிய பாம்பு  கூட
      கருடனை  வீழ்த்த   முடியும்.

      வீரமும்  தீரமும்  விவேகமும்  பலமும்  பொருந்திய

    ஆஞ்சநேயர்  சொற்களைக்  கேட்ட
    சீதைக்கு  மன  நிறைவும்

  மன  மகிழ்ச்சியும்  ஏற்பட்டது.

   சீதை    ஆஞ்சநேயருக்கு   ஆசி  வழங்கினார்.

   நீ பலம் மற்றும்  வீரத்தின்  இருப்பிடமாவாய்.

  நீ எப்பொழுதும்  இளமையுடன்  இருப்பாய்.

  சிரஞ்சீவியாக  இருப்பாய்.

  பிரபு  கிருபை  செய்யட்டும்.

   அன்னையின்  ஆசியால்  ஆஞ்சநேயர்  அகமகிழ்ந்தார்.

ராமசரித மானசம் ---சுந்தரகாண்டம் - பக்கம் பதினைந்து

கரடிகளுக்கு  நகங்கள்
  தான்  ஆயுதம்.

அவைகள்  தன்  விருப்பப்படி

தங்கு  தடையின்றி  ஆகாய  மார்க்கத்திலும்  தரை  மார்க்கத்திலும்   சிங்கம்  போல்  கர்ஜித்து  சென்றன, அதன்  ஆராவரத்தால்  பயந்த  யானைகள்
 அச்சத்தால்  பிளிறின.
நில நடுக்கம் வேறு.
மலைகள் அசைந்தன.
கடல்  கொந்தளித்தது.
 கந்தர்வர்கள், தேவதைகள்,முனிவர்கள், நாகங்கள்,கின்னரர்கள்,எல்லோருமே

தங்கள்  இன்னல்கள் நீங்கியதற்கு மகிழ்ந்தன.
அநேக  கோடி  வானர  பயங்கர போர்வீரர்கள்
ஆரவாரத்துடன் ஓடின.
அவர்கள்  கோஷங்கள்  எழுப்பினர்--
 "மிக  பலம்  வாய்ந்த  கோசல  அரசர் ராமர்  வாழ்க".

அனைத்தும்  தாங்கும்  ஷேசனாகமும்
சேனையும்  சுமையை   தாங்க  முடியாமல் தவித்தது.
மீண்டும் மீண்டும் ஆமையின்  கடின  ஓடுகளைக் கடித்தது,
அப்பொழுது  விழுந்த  கோடுகள்
ராமரின் அழகான போருக்கு  புறப்படும்  யாத்திரையை
ஆமையின்  முதுகின்  மேல்
எழுதுவதுபோல்    இருந்தது.

இவ்வாறு ஸ்ரீ ராமர்  சமுத்திரக் கரையை  அடைந்தார்.
அங்கங்கு  வானரங்களும்  கரடிகளும் பழங்களை  சாப்பிடத்துவங்கின.
வானரங்கள்  இலங்கையை எரித்துவிட்டு  சென்றதிலிருந்து
அரக்கர்கள்  அச்ச்சத்துடனும்  பீதியுடனும்  இருந்தனர்.
அனைவருமே  அரக்கற்குலத்துக்கு
பாது  காப்பு  கிடையாது.
தூதனின்  பலத்தையே  வர்ணிக்க  முடியவில்லை  என்றால்
அவரே நகருத்துக்குள்  வந்தால்
நிலை  மிகவும்  மோசமாகிவிடுமே என்று கலக்கமடைந்தனர்.
மண்டோதரி  தூதர்களின்  செய்தி  அறிந்து  மிகவும்  கவலை  அடைந்தார்.
 அவள்  தனிமையில் ராவணனின்  பாதங்களில்  விழுந்து  மன்றாடினாள்.
அன்பரே!ஸ்ரீ ஹரியின்  விரோதத்தை  விட்டு விடுங்கள்.
நான்  சொல்வது  மிகவும்  பயனளிக்கக்  கூடியது.
மனதில் சிந்தித்துப்பாருங்கள்.
அவன் தூதனின்  வீரத்தால்  பல அரக்கர்களின்  மனைவிகளின்  கற்பங்கள் களைந்தன.
நீங்கள்  நன்மையை  விரும்புபவரானால்
மந்திரிகளை  அழைத்து  அவர்களுடன்  சீதையை  அனுப்பிவிடுங்கள்.
சீதை  இங்கு உங்கள்  குலத்தின்  தாமரையை  அளிக்க  வந்த குளிர்  இரவு போல் வந்துள்ளாள். சிவன் ,பிரம்மா போன்றவர் களாலும்  சீதையை  அனுப்பாமல்
நன்மை  ஏற்படாது.

ராமரின்  பாணங்கள்  பாம்பு  கூட்டம்  போன்றது. அரக்கர்கள்  கூட்டம் தவளைகள்  போன்றது.
அவைகள் விழுங்கும்  முன்பே  பிடிவாதத்தை  விட்டுவிட்டு
ஒரு உபாயத்துடன்  காப்பாற்றுங்கள்.

மண்டோதரியின் வார்த்தைகளைக்  கேட்டு  முட்டாளும்  ஆணவத்திற்கும்  புகழ்பெற்ற  ராவணன்  நன்கு  சிரித்தான். கூறினான் :-
பெண்களின்  மனம் உண்மையில்  மிகவும்  கோழைத்தனமானது.
மங்களமான  நேரத்திலும்  பயப்படும்.
உன் மனம்  மிகவும் பயந்துள்ளது.

வானரப் படைகள்  வந்தால் , அரக்கர்கள்  அவைகளைச்  சாப்பிட்டு
வாழ்வார்கள். உலகத்தைக்
காப்பவனே  பயப்படும்
ராவணனின்  மனைவி  அஞ்சுவது
நகைப்புக்குரியது.
இதைச்  சொல்லி  அவளை  ஆலிங்கனம்  செய்து அன்பைக்காட்டிவிட்டு  சென்றுவிட்டான்.

கணவன்  சென்றதும்  மண்டோதரி
கடவுளே  கணவனுக்கு  எதிரி  ஆகிவிட்டான்  என்று மிகவும்  வருத்த முற்றாள்.
ராவணன்  தன தர்பாருக்கு சென்றதுமே  படைகள்  கடலின் அக்கரையில்  குவிந்துவிட்டன  என்ற செய்தியை  அறிந்தான்.
அவன்  அமைச்சர்களிடம்  தன் ஆலோசனையைக்  கேட்டான்.
அனைவரும்  சிரித்து பேசாமல்  இருங்கள். இதில் ஆலோசனை  என்ன இருக்கிறது?
நீங்கள்  தேவர்களையும்  அரக்கர்களையும்  வென்று விட்டீர்கள்.
அப்படியிருக்க மனிதர்களும்  வானரர்களும் எம்மாத்திரம் ?