வணக்கம்.
சே. அனந்த கிருஷ்ணன்
இமைக்குள் நின்றவளே
------------+------_------------+-
இமைக்குள் நின்றவளே!/1
இதயத்தில் அமர்ந்தவளே/2
என் பார்வையில் எங்குமே நீ/3
மறைக்க மறுக்க முடியாத நிலை/4
மனத்திலே பேரலை சிற்றலையாக உருவம்/5
உன்னையே சிந்தித்து
வரும் கவிதைகள்/6
காவியத்தில் படித்ததுண்டு
நேரில் உணர்கிறேன்/7
உண்மையில் காதல்
ஒருதலையாக வேண்டாம்/8
ஒருவனாக சுற்ற வைக்க வேண்டாம்/9
இராமனாக நான்
பொன்மான் ஓட்டமா?10
மாயமான்
மயக்கம் வராது என காப்பேன்/11
இன்புற்று வாழ இல்லறத்தில் வருவாயா?/12.
சே. அனந்த கிருஷ்ணன்.
நினைவே விலகிடு.
11-9-26.
கனவில் வந்த அழகான காரிகை,
இனம் புரியாத அலைபாயும் மனது.
தூக்கம் கலைய
அவளின் சிந்தனை.
யாரோஎங்கேயோ
பெயர் என்னவோ?
அறியாத பெண்
தெரியாத ஊர்.
வீண் கவலைகள்
மதிப்பது ஏனோ.
காணாத கன்னியின்
நினைவே விலகிவிடு.
No comments:
Post a Comment