Sunday, September 13, 2026

விசர்ஜனம்

 

விநாயகர் அவமதிப்பு

எஸ். அனந்தகிருஷ்ணன், சென்னை, தமிழ்நாடு
13-09-2026

விநாயகர் சிலையை
விசர்ஜனம் செய்யும் காட்சி.

கலைஞனின் கலைத்திறமை,
உழைப்பு, அழகு அனைத்தையும்
ஒன்றிணைத்து உருவாக்கிய சிலை.

ஆண்டவனைப் பளுதூக்கியில்
தொங்கவிட்டு,
அவரது அங்கங்கள் சிதறும் வகையில்
சின்னாபின்னமாக்குகிறோம்.

ஒரு சிலையின் செலவு
ஐம்பதாயிரம் ரூபாய்!

இதை வேற்று மதத்தவர்
செய்திருந்தால்,
“இந்து மத விரோதி”
என்று கூறியிருப்போம்.

ஆனால்,
நாமே ஆண்டவனைச் சிதைக்க
முன்னோடியாக இருக்கிறோம்.

ஹிந்துக்கள் செய்யும்
இந்த விநாயகர் அவமதிப்பு வினை
நம்மையே அழிக்கும் அல்லவா?

சிந்திக்க வேண்டும்.

ஆண்டவனைப் போற்றி,
பக்தியுடன் வழிபட வேண்டிய நாம்,
அவரது உருவத்தை
சீரழித்து, சின்னாபின்னமாக்குவது
இந்து மத ஒற்றுமைக்கு
வழிவகுக்காது அல்லவா?

விநாயகர் விசர்ஜனத்திலும்
பக்தியும் மரியாதையும்
பாதுகாக்கப்பட வேண்டும்.

No comments: