Saturday, October 22, 2016

ராமசரித மானஸ்--சுந்தரகாண்டம் -௧௧,௧௨,௧௩,௧௪,௧௫,ப -3

  விசித்திரமான  மணிகள் பதிக்கப்பட்ட தங்க மதில்  சுவர்.

அதற்குள் அதிக அழகான  வீடுகள், , 

 நாற்சந்திகள்,கடைத்தெருக்கள்,

மிகவும்  அலங்கரிக்கப்பட்டு இருந்தன.

அங்கு  எண்ணிக்கையில்  அடங்கா  யானைகள்

,குதிரைகள், கோவேறிக்கழுதைகள்,  காலாட்படைகள்,தேர்கள்.

பலவடிவங்களில்  அரக்கர்   கூட்டங்கள்,

 பலம் பொருந்திய  படைகள் வர்ணிக்க முடியாத

 அளவிற்கு  காணப்பட்டன.

  வனங்கள், தோட்டங்கள்,பூந்தோட்டங்கள், குளங்கள் , கிணறுகள்,

 படிகளுள்ள கிணறுகள் ஆகியவை

மிகவும் அழகாக  காட்சி அளித்தன.

மனிதர்கள், நாகங்கள்,தேவதைகள்,கந்தர்வர்கள், முனிவர்களின்

மனங்களையும்    கவரும் அழகு.

மலையைப்போல் பெரிய  உடல் கொண்ட

மல்யுத்த வீரர்களின்  அறைகூவல்கள்.

 பெரிய  மைதானத்தில் மோதிக்கொண்டனர் .

    அச்சம்  தரும்  உடல்  அமைப்புள்ள  போர்வீரர்கள்

நகரின்  அனைத்து  திக்குகளையும்

மிகவும்  எச்சரிக்கையுடன் காவல் காத்துவந்தனர்.

சில பகுதிகளில்  கொடிய  அரக்கர்கள் ,

 எருமைகள், மனிதர்கள்,பசுக்கள், கழுதைகள்,ஆடுகள்  ஆகியவற்றை

 சாப்பிட்டுக்  கொண்டிருந்தனர்.

 ராமரின்  அம்புகள் இவர்களை வதம் செய்வதின் முன் அறிவிப்பாக

துளசிதாசர்  இவர்களைப்பற்றி  கூறுகிறார்.

  நகரின் அதிக  எண்ணிக்கையில் உள்ள  காவலர்களைக்கண்டதும்

ஹனுமான்  சிறியவடிவில்   இரவில்   நகரத்திற்குள்

 செல்ல  முடிவெடுத்தார்.

  ஹனுமான்  கொசு  போன்று சிறிய  வடிவுகொண்டு

ஸ்ரீ ராமரை தியானித்துக்கொண்டே  ஸ்ரீலங்கா  நகருக்குள்  சென்றார்.

  ஸ்ரீலங்கா   நகரின்  நுழைவாயிலில் லங்கிணி என்ற

 அரக்கி  காவலில்  இருந்தாள்.

அவள்  ஹனுமானைத்தடுத்து  ,

என்  அனுமதியின்றி  எங்கே செல்கிறாய்  என்று வினவினாள்.

சொன்னாள்--முட்டாளே!நீ  என்  ரகசியத்தை  அறியவில்லை.

திருடர்கள்  அனைவரும் எனக்கு  உணவுப்பொருள்கள்.

மகாவீரரான   ஹனுமான்  எதுவும்  பேசாமல்  ஒரு குத்துவிட்டார்.

அவள் இரத்தம்  கக்கிக்கொண்டே  கீழே விழுந்தாள்.

பிறகு  மீண்டும்  எழுந்தாள்.

பயந்துகொண்டே  கைகூப்பி வேண்டினாள்.

அவள்  சொன்னாள்--

ராவணனுக்கு  பிரம்மா  வரம் அளித்தபோது  சொன்னார்,

நீ ஒரு குரங்கால்  தாக்கப்பட்டு

 குழம்பும்  நாள்.


   அரக்கர்களுக்கு அழிவுநாள் என்று தெரிந்துகொள்.


நான் மிகவும்  புண்ணியம் செய்துள்ளதால்

ராமரின் தூதரை உங்களை பார்த்துவிட்டேன்.

  ஒரு   நொடிப்பொழுதில்  நல்லவர்களை

 சந்திக்கும்  சுகம்,மகிழ்ச்சியை  திராசின்   ஒருதட்டிலும்

சுவர்க்கம், மோக்ஷம்  இரண்டையும் ஒரு தட்டிலும்   வைத்தாலும்

 நல்லவர்கள் ஒரு  நொடி சந்திக்கும்

 மகிழ்ச்சிக்கு  மோக்ஷம்   சமமாகாது.

 அயோத்யாவின் அரசர் ஸ்ரீ  ரகுநாதரை மனதில்  வைத்து

நகருக்குள்  நுழைந்து  அனைத்து செயலையும்  செய்யுங்கள்.

அப்பொழுது  விஷமும்  அம்ருதமாகும்.

எதிரியும்  நண்பனாவான்.

கடலின்  ஆழம்   பசுவின்  குழம்பின் ஆழம் ஆகிவிடும்.

நெருப்பில்  குளிர்ச்சி  வந்துவிடும்.


மேலும்  கருடரே,
 ராமரின்   அருள்   பெற்றோருக்கு

  சுமேரு   மலை ஒரு தூசிபோல்  ஆகிவிடும்.

ஹனுமான்  மிகச்  சிறிய  வடிவெடுத்து  நகருக்குள்

நுழைந்தார்.

 அவர்  அங்குள்ள  ஒவ்வொரு மாளிகையிலும்    சீதையைத்   தேடினார்.

அங்கே  அதிக எண்ணிக்கையில்  போர்  வீரர்களைக்  கண்டார்.

பின்னர்  சொற்களால்   வர்ணிக்க  முடியா  அழகுள்ள

இராவணனின்  அரண்மனையை  அடைந்தார்.

   ஹனுமான்  இராவணன்  படுத்திருப்பதைப்  பார்த்தார்.

ஆனால்  அங்கு  சீதை  தென்படவில்லை.

பிறகு  ஒரு  மாளிகை தென்பட்டது.

அது  இறைவனின்  ஆலயமாகும்.

அங்கு  ஸ்ரீ ராமரின்  அம்பு-வில்  அடையாளங்கள் பொறிக்கப்பட்டிருந்தன.

அதன் அழகு வர்ணனைக்கு  அப்பால்  இருந்தன.

 புதிய  துளசிச் செடிகள்  அதிகமாக  இருப்பதைக்  கண்டார்.

குரங்கரசர்  ஹனுமான்  மிகவும் ஆனந்தமடைந்தார்.

  இலங்கை   அரக்கர்கள்  வாழும்  இடம் .

இங்கு  நல்லவன் எங்கே  வாழ்கிறான் ?

பலவித மன  சர்ச்சையில்  இருக்கும்  பொது

விபீஷணன்  எழுந்தார்.








रामचरित मानस .ராமசரித மானஸ்--சுந்தரகாண்டம் --௬,௭.,௮,௯,௧௦ ப-2

 
  தேவர்கள்    வாயு  புத்திரன்

 ஹனுமான்  செல்வதை  பார்த்தனர்.

    ஹனுமானின்  நுண்ணறிவு ,

  பலம்    போன்றவற்றை    அறியவும்

  சோதிக்கவும் ,

  சுரசா  என்ற    சர்ப்பங்களின்

 அம்மாவை அனுப்பினர்.

    சுரசா  ஹனுமானிடம்  கூறினார் :-

 இன்று தேவர்கள்  உணவுக்காக  உன்னை  உணவாக  அளித்துள்ளனர்.

  இதைக்  கேட்டதும்  வாயுபுத்திரனான   ஹனுமான் சொன்னார்:--

        நான்  சென்று  சீதையின்    இருக்குமிடம்  அறிந்து  ராமனுக்கு             அறிவித்துவிட்டு  திரும்பி வருகிறேன்,

  என்னை   சாப்பிட்டு பசி ஆற்றிக்கொள்   என்றார்.

நான்சத்தியம்  செய்கிறேன்.
 இப்பொழுது  என்னை  செல்ல  அனுமதி கொடு.
ஆனால் சுரசா  அனுமதி  தரவில்லை.

உடனே   ஹனுமான்  என்னை  சாப்பிடு  என்றார்.

பாம்பு  உடனே  நான்கு  மைல்  அகலத்திற்கு  வாயைத்   திறந்தது.


உடனே  ஆஞ்சநேயர்  தன்  உருவத்தை  எட்டு  மைல்

   அகலத்திற்கு
  உயர்த்திக்கொண்டார்.

  உடனே  சுரசாவின்  வாய்

  பதினாறு  மைல்  அகலத்திற்கு  மாறியது.

  ஆஞ்சநேயர்  முப்பத்திரண்டு   மைல்  உயரமாக  மாறினார்.

  சுராசாவின்  வாய்  அகலம்  அதிகமாக  அதிகமாக

  ஆஞ்சநேயரின் உயரமும்   அதற்கு  ஏற்றவாறு

   இரண்டு  மடங்காகியது.


    சுராசா  நூறுமைல்  அகலத்திற்கு  வாய்  திறந்ததும்

    ஹனுமான்  மிகச் சிறிய  உருவமெடுத்தார்.

அவர்  சுரசாவின்  வாயில்  நுழைந்து  வெளியே  வந்தார்.

பிறகு  வணங்கி   அனுமதி  கேட்டார்.

அப்பொழுது  சுரசா  சொன்னது ---

தேவர்கள் உங்கள் அறிவுத்  திறனையும்

பலத்தையும்  சோதிக்கவே  என்னை  அனுப்பினர்.

நீ ராமர்  கொடுத்த  காரியத்தை  செய்து  முடிததுவிடுவாய்.

நீ    அறிவிலும்  பலத்திலும்   மிகச் சிறந்தவன்.

பின்னர்  சுரசா  ஹனுமனுக்கு  ஆசி  வழங்கி  சென்று விட்டது.

ஹனுமானும்  மகிழ்ச்சியுடன்  புறப்பட்டார்.


 கடலில்  ஒரு ராக்ஷசி  வசித்து  வந்தாள்.

அவள்  தன் மாயா  சக்தியால்

பறக்கும்  பறவையின்  நிழலைப்  பற்றியே

ஆகாயத்தில்  பறக்கும் பறவைகளைப்  பிடித்து விடுவாள்.

இப்படியே  ஆகாயத்தில் பரப்பவைகளைப் பிடித்து

ஆகார மாக்கிக்  கொள்வாள்.

இப்பொழுது  ஹனுமானைப்பிடிக்கவும்

அதே  முறையை  கையாண்டாள்.

ஆனால் , ஹனுமான்  உடனே

அவளின்  வஞ்சனையைத்  தெரிந்துகொண்டார்.

 வாயு புத்திரன்  அறிவும் திறனும்  கொண்டவர்.

அந்த  ராக்ஷஸியை  வதம்  செய்தார்.

கடல்  கடந்து  சென்றார்.

அங்கு  சென்றதும்    வனத்தின்  அழகைக்  கண்டார்.

அங்குள்ள மலர்களில்  வண்டுகள்  ரீங்காரமிட்டுக்கொண்டிருந்தன.

பலவித  மரங்கள் பழங்கள் -பூக்களால்  பூத்துக்குளிங்கின.

அந்த  வனத்தின்  அழகு  கண்டு  ஆஞ்சநேயர்  மனமகிழ்ந்தார்.

எதிரில் ஒரு பெரிய  மலையைப்  பார்த்து  ஆஞ்சநேயர்

 அச்சத்தை விட்டு ஓடி அதன்  மேல்  ஏறினார்.

 இந்த  காட்சியைக்  கண்டு  சிவபகவான்   பார்வதியிடம்  சொன்னார் --

இதில்  வானரனான  ஆஞ்சநேயருக்கு  எந்த  சிறப்பும் இல்லை.

இதில்  கடவுளின்   பிராதபம்  உள்ளது.

அந்த சக்தி  எமனையும்  சாப்பிட்டுவிடும்.

  ஆஞ்சநேயர்  மலைமேல்  நின்று  ஸ்ரீ லங்காவைப்  பார்த்தார்.

 மிகப்பெரிய  கோட்டை. .

சொல்லால் விவரிக்க முடியாது.

அது மிக உயரமான மதில் சுவர் கொண்டது.

மதில் சுவர்கள் தங்கம்  போல்  மின்னின.













रामचरित मानस .ராமசரித மானஸ்--சுந்தரகாண்டம் --௬,௭.,௮,௯,௧௦ ப-2---A

 
  தேவர்கள்    வாயு  புத்திரன்

 ஹனுமான்  செல்வதை  பார்த்தனர்.

    ஹனுமானின்  நுண்ணறிவு ,

  பலம்    போன்றவற்றை    அறியவும்

  சோதிக்கவும் ,

  சுரசா  என்ற    சர்ப்பங்களின்

 அம்மாவை அனுப்பினர்.

    சுரசா  ஹனுமானிடம்  கூறினார் :-

 இன்று தேவர்கள்  உணவுக்காக  உன்னை  உணவாக  அளித்துள்ளனர்.

  இதைக்  கேட்டதும்  வாயுபுத்திரனான   ஹனுமான் சொன்னார்:--

        நான்  சென்று  சீதையின்    இருக்குமிடம்  அறிந்து  ராமனுக்கு             அறிவித்துவிட்டு  திரும்பி வருகிறேன்,

  என்னை   சாப்பிட்டு பசி ஆற்றிக்கொள்   என்றார்.

நான்சத்தியம்  செய்கிறேன்.
 இப்பொழுது  என்னை  செல்ல  அனுமதி கொடு.
ஆனால் சுரசா  அனுமதி  தரவில்லை.

உடனே   ஹனுமான்  என்னை  சாப்பிடு  என்றார்.

பாம்பு  உடனே  நான்கு  மைல்  அகலத்திற்கு  வாயைத்   திறந்தது.


உடனே  ஆஞ்சநேயர்  தன்  உருவத்தை  எட்டு  மைல்

   அகலத்திற்கு
  உயர்த்திக்கொண்டார்.

  உடனே  சுரசாவின்  வாய்

  பதினாறு  மைல்  அகலத்திற்கு  மாறியது.

  ஆஞ்சநேயர்  முப்பத்திரண்டு   மைல்  உயரமாக  மாறினார்.

  சுராசாவின்  வாய்  அகலம்  அதிகமாக  அதிகமாக

  ஆஞ்சநேயரின் உயரமும்   அதற்கு  ஏற்றவாறு

   இரண்டு  மடங்காகியது.


    சுராசா  நூறுமைல்  அகலத்திற்கு  வாய்  திறந்ததும்

    ஹனுமான்  மிகச் சிறிய  உருவமெடுத்தார்.

அவர்  சுரசாவின்  வாயில்  நுழைந்து  வெளியே  வந்தார்.

பிறகு  வணங்கி   அனுமதி  கேட்டார்.

அப்பொழுது  சுரசா  சொன்னது ---

தேவர்கள் உங்கள் அறிவுத்  திறனையும்

பலத்தையும்  சோதிக்கவே  என்னை  அனுப்பினர்.

நீ ராமர்  கொடுத்த  காரியத்தை  செய்து  முடிததுவிடுவாய்.

நீ    அறிவிலும்  பலத்திலும்   மிகச் சிறந்தவன்.

பின்னர்  சுரசா  ஹனுமனுக்கு  ஆசி  வழங்கி  சென்று விட்டது.

ஹனுமானும்  மகிழ்ச்சியுடன்  புறப்பட்டார்.


 கடலில்  ஒரு ராக்ஷசி  வசித்து  வந்தாள்.

அவள்  தன் மாயா  சக்தியால்

பறக்கும்  பறவையின்  நிழலைப்  பற்றியே

ஆகாயத்தில்  பறக்கும் பறவைகளைப்  பிடித்து விடுவாள்.

இப்படியே  ஆகாயத்தில் பறப்பவைகளைப் பிடித்து

ஆகார மாக்கிக்  கொள்வாள்.

இப்பொழுது  ஹனுமானைப்பிடிக்கவும்

அதே  முறையை  கையாண்டாள்.

ஆனால் , ஹனுமான்  உடனே

அவளின்  வஞ்சனையைத்  தெரிந்துகொண்டார்.

 வாயு புத்திரன்  அறிவும் திறனும்  கொண்டவர்.

அந்த  ராக்ஷஸியை  வதம்  செய்தார்.

கடல்  கடந்து  சென்றார்.

அங்கு  சென்றதும்    வனத்தின்  அழகைக்  கண்டார்.

அங்குள்ள மலர்களில்  வண்டுகள்  ரீங்காரமிட்டுக்கொண்டிருந்தன.

பலவித  மரங்கள் பழங்கள் -பூக்களால்  பூத்துக்குளிங்கின.

அந்த  வனத்தின்  அழகு  கண்டு  ஆஞ்சநேயர்  மனமகிழ்ந்தார்.

எதிரில் ஒரு பெரிய  மலையைப்  பார்த்து  ஆஞ்சநேயர்

 அச்சத்தை விட்டு ஓடி அதன்  மேல்  ஏறினார்.

 இந்த  காட்சியைக்  கண்டு  சிவபகவான்   பார்வதியிடம்  சொன்னார் --

இதில்  வானரனான  ஆஞ்சநேயருக்கு  எந்த  சிறப்பும் இல்லை.

இதில்  கடவுளின்   பிராதபம்  உள்ளது.

அந்த சக்தி  எமனையும்  சாப்பிட்டுவிடும்.

  ஆஞ்சநேயர்  மலைமேல்  நின்று  ஸ்ரீ லங்காவைப்  பார்த்தார்.

 மிகப்பெரிய  கோட்டை. .

சொல்லால் விவரிக்க முடியாது.

அது மிக உயரமான மதில் சுவர் கொண்டது.

மதில் சுவர்கள் தங்கம்  போல்  மின்னின.













Friday, October 21, 2016

ராமசரிதமானஸ் --சுந்தரகாண்டம் --2,௩, ௪, ௫, ப.1

       ஸ்ரீ  ரகுநாதரே !

      என்  மனதில்  எவ்வித   மற்றொரு   விருப்பமும் இல்லை ,

     நான்  சத்தியமாக  கூறுகிறேன்.

    நீங்கள்  அனைத்தும்  அறியும் அந்தராத்மா !

   நீங்கள்   ரகு  குலத்தில்  மேன்மையானவர்.

   உங்கள்மீது எனக்கு  பூர்ண  பக்தி(இறையன்பு)

      அளித்து   எனது  மனதை    காமம் (பெண் ஆசை )முதலிய

     குற்றங்கள் தவறுகள் (தோஷங்கள் ) இல்லாமல்    செய்யுங்கள்.


       ஈடில்லா ஒப்பீடு  இல்லா  பலம்  பொருந்தியவரே !

         தங்க  மலை போன்ற ஒளிமிக்க உடல் உடையவரே!

          அரக்கர்கள்  என்ற  வனத்தை அளிக்கும்  அக்னி உருவமே !

          ஞானமுள்ளவர்களில்  மூத்தோனே, நாதரே,

         சகல  குணங்களின்  இருப்பிடமே !

        வானரங்களின்  சுவாமி  ரகுநாதரின்  அன்புக்குரியவரே!

         வாயு புத்திரரான ஹனுமான்  அவர்களே !

         நான்  உங்களை  வணங்குகிறேன்.

***********************************************************************************

   ௪.    ஜாம்பவானின்  சொற்களைக்   கேட்டு

      ஹனுமான்ஜீக்கு மனதில் மிகவும்  பிடித்துவிட்டது.

    அவர்  ஜாம்பவானிடம்  சொன்னார் --சகோதரா!

      நீங்கள்  இன்னல்  பொறுத்துக்கொண்டு காட்டில்
   
    பழங்கள் கிழங்குகள்  சாப்பிட்டு

   நான்  சீதையைப் பார்த்து வரும்  வரை

   எனக்காக  காத்திருங்கள்.

   எனது  பணி கட்டாயம் முடிந்துவிடும்.

 எனது  மனதில்  மிக மகிழ்ச்சி  பொங்குகிறது .

  இவ்வாறு  கூறிய  ஹனுமான் ஜீ,

  மிக  மகிழ்ச்சியுடன்  அனைவரையும்  வணங்கிவிட்டு

 மனதில் ராமரை   தியானித்துக்கொண்டே  புறப்பட்டார்.



    சமுத்திரக் கரையில்  ஒரு  அழகான  மலை   இருந்தது.

   அதன் மீது விளையாட்டாக சர்வ  சாதாரணமாக  ஏறி

   அடிக்கடி ரகுநாதர ரை    நினைத்துக்கொண்டே

  மலை மேலிருந்து  மிக வேகமாக குதித்தார் ,

   ஹனுமான்  மலையிலிருந்து  குதித்ததுமே

 அந்த  மலை பாதாளத்துக்குள்  அமுங்கிவிட்டது.

 ஸ்ரீ ராமச்சந்திர  மூர்த்தியின்   குறிதவறா  அம்பு  போல் ,

 ஹனுமான்  ஜீ  புறப்பட்டார்.

 சமுத்திரமானது   மைனாக்  மலையிடம்  கூறியது --

 நீ  இவரை   உன்மீது  இளைப்பாற  விடு.

 இவரின்   களைப்பை  போக்கிவிடு.



 ஹனுமான்   அதை   கையால்  தொட்டு வணங்கிவிட்டு  சொன்னார் --

  ஸ்ரீ  ராமரின்   வேலையை  செய்து  முடிக்காமல்  எனக்கு   ஓய்வு  கிடையாது. .




 

           




 

   



ஓம்

ஸ்ரீ     கணபதியே  போற்றி.
ஸ்ரீ   கந்தா  போற்றி.

ஓம்  நமச்சிவாயா  போற்றி.

ஓம்  துர்க்கை அம்மனே போற்றி.

ஸ்ரீ  கருப்பண்ண ஸ்வாமியே  போற்றி.

ஸ்ரீ ஆஞ்சநேயா  போற்றி.

குருவே  போற்றி.
ஸ்ரீ துளசிதாசர்    போற்றி.

**********************************
சுந்தர காண்டம் .

சுலோகம்
அமைதி யின்   உருவமும் ,

நிலையானவரும் ,

சான்றுகளுக்கு  அப்பாற்பட்டவரும்

பாவங்களிஇல்லா  தவரும்,

அனைவருக்கும்   முக்தி  அளிப்பவரும்

பிரம்மா, சிவன் ,சேஷர் போன்றோரால்

இடைவிடாமல் பூஜிக்கப்படுபவரும்

வேதாந்தங்கள்  மூலமாக  அறியத்தக்கவரும்
அங்கு இங்கு எனாதபடி சகல லோகங்களிலும்
வியாபித்து  இருப்பவரும்

தேவர்களில் எல்லாம்  மிகவும்  உயர்ந்தவரும்

மாயையில்  மனிதவடிவில்  தென்படுபவரும்

அனைத்து பாவங்களை  போக்குபவரும்

அருள்  சுரங்கமாக  விளங்குபவரும்

ரகுகுலத்தில்  மேன்மையானவரும்
அரசர்களில்   siromaniyaanavarum


துளசிதாஸ் ---ராமச்சரிதமானஸ் --சுந்தரகாண்டம் . முன்னுரை ---1

          ராமாயணம்   பாரதத்தின்  தெய்வீக  நூல்.--


அனைத்து  மாநில  மொழிகளிலும்  ராமாயணம்
  மாநில  பண்பாட்டின்  படி
சற்றே  மாற்றி  எழுதப்பட்டுள்ளது.

       அந்த  அந்த  மாநில  மொழியின்

   ரா மாயணத்திற்கு   தனி சிறப்பு  உண்டு.
.
கம்பர்   கழகம்  ஒவ்வொரு   ஆண்டும்

  சிறப்பான   சொல் அரங்கம் ,

பட்டிமன்றம் , சொற்பொழிவுகள் , கவிதை அரங்கம்

  மிக  சிறப்பாக  நடத்திவருவது   அந்த  நூலின்  மாண்பாகும்.



  சிறப்பாக   நீதியரசர்   மு.மு,  இஸ்மாயிலின்  பற்று

 அளவிற்கரியதாக  இருந்தது.

       ஹிந்தியில்   துளசிதாசரின்  ராமாயணம்  சமஸ்கிருதம்

  மூல நூலை  விட  சிறப்பு பெற்று

 ஒவ்வொரு  வீட்டிலும்   பூஜை செய்யப்படுகிறது.

      ஹனுமான்  சாலீசா  படிப்பது அனைத்து

 இன்னல்களையும்  போக்கி

மனதிற்கு  சுகம்  அளிக்கக்கூடியது.

 மன நிறைவைத் தரக்கூடியது.

    பக்தர்களுக்கு  வரப்பிரசாதமாகும்.

           தமிழகத்தில் ராமருக்கு  எதிர்ப்பு  போல்

  வட  நாட்டிலும்  மூலக் கதை
 அடிப்படையில்  விமர்சனம்  செய்யப்பட்டாலும்
  அது மிகமிகக்  குறைவு.

        இன்று   முதல்   துளசி  இராமாயணத்தின்
      சுந்தரகாண்டத்த்தின்

    தமிழ்  மொழியாக்கம்  எழுதுகிறேன்.



  நான்  தமிழில்  புலமை  பெற்றதில்லை.


  பிழைகள்  இருந்தால்  சுட்டிக்காட்டவும்.

  தவறுகளையும்  சுட்டிக்காட்டவும்.

  இந்த  சுந்தரகாண்டம்   மொழிபெயர்ப்பு

   வெற்றிகரமாக   எழுதி  முடிக்க

   மூலப்பரம்பொருள்
   மூஷிகவாகனன்   அருள்  கடாக்ஷம்   வேண்டுகிறேன்.

          முருகப்பெருமானின்   அருளும்  சிவனருளும் துர்க்கை  அருளும்  வேண்டுகிறேன்.

  ராமதூதர்    ஒப்பில்லா  பலம்  வாய்ந்தவர்  ஸ்ரீ  ஹனுமான்  அருள்  கிடைக்கட்டும்.



  ஸ்ரீ ராமர்  கிருபையும்  வேண்டும்.
 துளசிதாஸ்  மானசீக  குருவாக  துதித்து துவங்குகிறேன்.

இது   கவிதைநடையில் புரியாநிலையில்  எழுதப்படவில்லை.

உரைநடையில்  அனைவரும்  புரியும் வண்ணம் எளிய தமிழில் எழுதப் பட்டுள்ளது.









Wednesday, October 19, 2016

அந்த வல்லமை பெற பிரார்த்திப்போம்.

    இறைவனின்  லீலைகள்  பலவிதம்.

   இவ்வுலகில்   நடப்பது  எல்லாம்  தெரிந்த ,

   எதிர்காலமும்  அறிந்த  பெரிய  ஞானிகள்

  சித்தபுருஷர்கள்   இல்லாமல்  இல்லை.

   தீமைகளால்  செல்வம்  வரும்.

அது  லௌகீக  இன்பமே.

நல்லவைகளால்    இன்பம்  வரும்

அது  அலௌகீகம் .


ஒன்று   சரீர மன  ஆரோக்கியம்  கெடுக்கக்கூடியது.

மற்றொன்று   ஆன்மீக  பலம்  தரக்கூடியது.

ஆத்மபலம்  தரக்கூடியது.

பிரம்மானந்தம்  தரவல்லது.

இந்த  இரண்டாவதுவகையில்  உள்ளவர்கள்  தெய்வ சக்தி  பெற்று

தெய்வமாகவே  வாழ்பவர்கள்.

இவ்வுலக நடப்புகளை   அறிந்தும்  விலகி இருப்பார்கள்.

அந்த  வல்லமை   பெற  பிரார்த்திப்போம்.