Friday, October 21, 2016




ஓம்

ஸ்ரீ     கணபதியே  போற்றி.
ஸ்ரீ   கந்தா  போற்றி.

ஓம்  நமச்சிவாயா  போற்றி.

ஓம்  துர்க்கை அம்மனே போற்றி.

ஸ்ரீ  கருப்பண்ண ஸ்வாமியே  போற்றி.

ஸ்ரீ ஆஞ்சநேயா  போற்றி.

குருவே  போற்றி.
ஸ்ரீ துளசிதாசர்    போற்றி.

**********************************
சுந்தர காண்டம் .

சுலோகம்
அமைதி யின்   உருவமும் ,

நிலையானவரும் ,

சான்றுகளுக்கு  அப்பாற்பட்டவரும்

பாவங்களிஇல்லா  தவரும்,

அனைவருக்கும்   முக்தி  அளிப்பவரும்

பிரம்மா, சிவன் ,சேஷர் போன்றோரால்

இடைவிடாமல் பூஜிக்கப்படுபவரும்

வேதாந்தங்கள்  மூலமாக  அறியத்தக்கவரும்
அங்கு இங்கு எனாதபடி சகல லோகங்களிலும்
வியாபித்து  இருப்பவரும்

தேவர்களில் எல்லாம்  மிகவும்  உயர்ந்தவரும்

மாயையில்  மனிதவடிவில்  தென்படுபவரும்

அனைத்து பாவங்களை  போக்குபவரும்

அருள்  சுரங்கமாக  விளங்குபவரும்

ரகுகுலத்தில்  மேன்மையானவரும்
அரசர்களில்   siromaniyaanavarum


துளசிதாஸ் ---ராமச்சரிதமானஸ் --சுந்தரகாண்டம் . முன்னுரை ---1

          ராமாயணம்   பாரதத்தின்  தெய்வீக  நூல்.--


அனைத்து  மாநில  மொழிகளிலும்  ராமாயணம்
  மாநில  பண்பாட்டின்  படி
சற்றே  மாற்றி  எழுதப்பட்டுள்ளது.

       அந்த  அந்த  மாநில  மொழியின்

   ரா மாயணத்திற்கு   தனி சிறப்பு  உண்டு.
.
கம்பர்   கழகம்  ஒவ்வொரு   ஆண்டும்

  சிறப்பான   சொல் அரங்கம் ,

பட்டிமன்றம் , சொற்பொழிவுகள் , கவிதை அரங்கம்

  மிக  சிறப்பாக  நடத்திவருவது   அந்த  நூலின்  மாண்பாகும்.



  சிறப்பாக   நீதியரசர்   மு.மு,  இஸ்மாயிலின்  பற்று

 அளவிற்கரியதாக  இருந்தது.

       ஹிந்தியில்   துளசிதாசரின்  ராமாயணம்  சமஸ்கிருதம்

  மூல நூலை  விட  சிறப்பு பெற்று

 ஒவ்வொரு  வீட்டிலும்   பூஜை செய்யப்படுகிறது.

      ஹனுமான்  சாலீசா  படிப்பது அனைத்து

 இன்னல்களையும்  போக்கி

மனதிற்கு  சுகம்  அளிக்கக்கூடியது.

 மன நிறைவைத் தரக்கூடியது.

    பக்தர்களுக்கு  வரப்பிரசாதமாகும்.

           தமிழகத்தில் ராமருக்கு  எதிர்ப்பு  போல்

  வட  நாட்டிலும்  மூலக் கதை
 அடிப்படையில்  விமர்சனம்  செய்யப்பட்டாலும்
  அது மிகமிகக்  குறைவு.

        இன்று   முதல்   துளசி  இராமாயணத்தின்
      சுந்தரகாண்டத்த்தின்

    தமிழ்  மொழியாக்கம்  எழுதுகிறேன்.



  நான்  தமிழில்  புலமை  பெற்றதில்லை.


  பிழைகள்  இருந்தால்  சுட்டிக்காட்டவும்.

  தவறுகளையும்  சுட்டிக்காட்டவும்.

  இந்த  சுந்தரகாண்டம்   மொழிபெயர்ப்பு

   வெற்றிகரமாக   எழுதி  முடிக்க

   மூலப்பரம்பொருள்
   மூஷிகவாகனன்   அருள்  கடாக்ஷம்   வேண்டுகிறேன்.

          முருகப்பெருமானின்   அருளும்  சிவனருளும் துர்க்கை  அருளும்  வேண்டுகிறேன்.

  ராமதூதர்    ஒப்பில்லா  பலம்  வாய்ந்தவர்  ஸ்ரீ  ஹனுமான்  அருள்  கிடைக்கட்டும்.



  ஸ்ரீ ராமர்  கிருபையும்  வேண்டும்.
 துளசிதாஸ்  மானசீக  குருவாக  துதித்து துவங்குகிறேன்.

இது   கவிதைநடையில் புரியாநிலையில்  எழுதப்படவில்லை.

உரைநடையில்  அனைவரும்  புரியும் வண்ணம் எளிய தமிழில் எழுதப் பட்டுள்ளது.









Wednesday, October 19, 2016

அந்த வல்லமை பெற பிரார்த்திப்போம்.

    இறைவனின்  லீலைகள்  பலவிதம்.

   இவ்வுலகில்   நடப்பது  எல்லாம்  தெரிந்த ,

   எதிர்காலமும்  அறிந்த  பெரிய  ஞானிகள்

  சித்தபுருஷர்கள்   இல்லாமல்  இல்லை.

   தீமைகளால்  செல்வம்  வரும்.

அது  லௌகீக  இன்பமே.

நல்லவைகளால்    இன்பம்  வரும்

அது  அலௌகீகம் .


ஒன்று   சரீர மன  ஆரோக்கியம்  கெடுக்கக்கூடியது.

மற்றொன்று   ஆன்மீக  பலம்  தரக்கூடியது.

ஆத்மபலம்  தரக்கூடியது.

பிரம்மானந்தம்  தரவல்லது.

இந்த  இரண்டாவதுவகையில்  உள்ளவர்கள்  தெய்வ சக்தி  பெற்று

தெய்வமாகவே  வாழ்பவர்கள்.

இவ்வுலக நடப்புகளை   அறிந்தும்  விலகி இருப்பார்கள்.

அந்த  வல்லமை   பெற  பிரார்த்திப்போம்.
  

Thursday, October 13, 2016

ஆண்டவன் அருள்

   


  நாளுக்கு  நாள்  நடைபெறும்     நிகழ்வுகள்,


   நான்மறையில்   எழுதிய  உண்மைகள்.


  யுகங்கள்  மாறுகின்றன,  நிகழ்வுகளில்  வடிவங்கள்  மாறுகின்றன,


அனைத்து  யுகங்களிலும்     யாருமே   நிம்மதியாக  இல்லை.


ஆனால்    ஆட்சி , புகழ், அசுர அராஜகங்கள்  இல்லா  யுகம்  இல்லை.


 ராமர்  வாழ்ந்த  காலத்திலும்  கடத்தல்,

தெய்வக்குழந்தைகள்   வளர்த்த  தசரதருக்கும் ,

அவரது  ராணிகள்   கைகேயி , கௌசல்யா , சுமித்திரை மூவரின்


கண்ணீர்க்கதைகள்.

குந்தியின்   மனதில்  நிம்மதியா ?

கண்ணனின்  வாழ்வில்  நிம்மதியா ?

யுகங்கள்  மாறுகின்றன .  காட்சிகள்  மாறுகின்றன.

அறிவியல்  கண்டுபிடிப்புகள்  மாறுகின்றன.

ஆனால்    மனிதர்கள் வாழ்வில்  நிம்மதி இல்லை.

உண்மையே  பேசிய  ஹரிஷ்ச்சந்திரன் ,

பொய்யாகவே   வாழ்ந்த  இந்திரன் ,

அரக்கர்களின் அட்டூழியம் .

இன்றைய  காட்சிகளிலும்  ஆள்பவருக்கு  மூன்று  துணைவியார்,

ஆள்பவர்களுக்கு  செல்வி  ,

  யுகங்கள் , நிகழ்வுகள்  புதிய  தோற்றப்  பொழிவோடு.

ஜானகி  ராமச்சந்திரன் ,   மாற்றான்  துணையோடு,

அன்று  ராவணன்   சீதை  கடத்தல்,

இன்றைய  ஜானகி  ஆட்சிபீடம் .

நிம்மதி  எங்கே ?  அமைதி  எங்கே?

யுகங்கள்  மாறினாலும்   காட்சிகள்  புதிய  கோலத்தோடு.

இதுவே  அன்பு  உலகம்.  ஆண்டவன்  ஏற்பாடு.

அன்று  சீதை , ஆண்டாள் , கபீர்  அனாதையாக.

இன்று  பல  தொட்டில்  குழந்தைகள்,
கடத்தி    தூங்கவைத்து   பிச்சைஎடுக்கும்  கும்பல்.

நாற்சந்தி யில்   சிறுவர்  பிச்சை .

 ஆலயங்களில்  இறைவன்  வேடத்தில்  பிச்சை.

ஆண்டவனையே  பிச்சை எடுக்கவைக்கும்  பூலோக வாசிகள்.

 எல்லாமே  அவன் செயல்.

Sunday, October 2, 2016

இன்றைய பக்தி

  இன்றைய பக்தி வெளி ஆடம்பரங்களாலும்
வெள்ளி தங்கம்  வைரங்களாலும்
மதிக்கப்படுகிறது என்றால்
ஆண்டவனும்  இவைகளுக்கு மயங்குவார்   என்றால்
நீதி நியாயம் தர்மம் நிலைக்குமா ?
 
அம்ருதம்   போன்ற உபதேசங்கள்
செந்தட்டி போன்ற தீயவைகள்
விஷம் போன்ற மாயை
இதை அறிந்து தெளிந்து புரிந்து
நடந்துகொள்ள வேண்டும் .
அப்பொழுது இரண்டு பார்வை
நம்மீது  விழும்.

   ஒன்று குரு பார்வை. தெய்வீகப்பார்வை.
மற்றது சைத்தான் சாத்தான் மாயை.
எந்த பார்வை நம்மீது படவேண்டும்.?
என்பது நம் நடத்தையைப் பொறுத்தது.

  

கலியுகம்


    பக்தி  என்பது   இறைவனின்  நினைவை  மட்டுமே


   முன்நிலைப்  படுத்தவேண்டும்.

ஆனால்   இன்றைய  நிலை  என்ன?

ஆடம்பரங்கள்  அதிகம்.

ஆலய  தரிசனங்கள்   செய்ய    குடும்பத்துடன்  செல்லும்  பக்தர்கள்


கூட்டமாகச்  செல்லும்  பக்தர்கள்  இறை நாமம்   மட்டுமே  இருக்கும்.

இன்று  எந்த  உணவு    விடுதியில்  சாப்பிடலாம் .
எந்த  தங்கும்  விடுதி ,
யாரின்  பரிந்துரையால்  துரித  தரிசனம்,

முக்கியஸ்தர்களின்  பரிந்துரை மட்டும்  சிறப்பு  அனுமதிச்  சீட்டு  கிட்டுமா ?

என்ற  லௌகீக   எண்ணங்கள் சர்ச்சைகள்  அதிகம்.

அரோஹரா,  கோவிந்தா  என்ற  முழக்கங்கள்  குறைவு.

 பக்தர்களின்  பொருளாதாரத்திற்கு   ஏற்ற   மிக அருகில் , சற்று  அருகில் ,
சற்று   தொலைவில் , மிக  தொலைவில்   அதுமட்டுமல்ல
கர்ப்பக்ரகத்தின்  முன்னால்  நிற்கும்  நேரமும்  தரத்திற்கு  ஏற்றவாறு.

  ஆகையால்  வேண்டுதல்   பணம்  பெற  என்ற  நிலையில்  மாறுகிறது.

ஆலயங்களில்  வணிகவளாகம்.  அதில் பொருளின் தரம் , விலை  அனைத்திலும்   ஏமாற்றம்.

 உள்ளே  தேங்காய்  உடைப்பு  வேறு.

இத்தனையும்  அறிந்தும் புரிந்தும்  தெளிந்தும்  செல்லும்  கூட்டம்.

இது  எதிர்கால  சமுதாயத்தில்  பணம் உள்ளோருக்கே  ஆலய தரிசனம்

என்ற  நிலைக்கு   மாறி  ஜாதி  போய்  பொருளாதாரம்

இறைவனுக்கு  முன்  எல்லோரும்  சமம்  என்ற  நிலையை

மாற்றுவதாகாதா?

 சிந்திப்பீர்.



Saturday, October 1, 2016

முதியோர் தின வாழ்த்துக்கள்.

இன்று முதியோர் தினம்.

அனைவருக்கும் முதியோர்
தின வாழ்த்துக்கள்.
________________________________________________________________________________________________________________________
உழைத்து, தன் வாரிசுகளை படிக்கவைத்து

தன்னலம்இல்லாமல் வாழ்ந்து வரும் முதியவர்கள்

அன்புகாட்டும் பிள்ளைகள், 
ஆதரவளிக்கும்பிள்ளைகளுக்கு வாழ்த்துக்கள்.

முதியோர் இல்லத்தில் விட்டு அடிக்கடி சென்றுபார்க்கும்

மருமகள்களுக்கு வாழ்த்துக்கள்.

பெற்றோரா? நானா? என்று மாமியார், மாமனாரை

பார்க்கத்தடுக்கும் மருமகள்களுக்கும் வாழ்த்துக்கள்.
மிக்க அன்பு/
 மிக்க வெறுப்பு/
 இரண்டுங்கெட்டான் நிலை
பணம்/ ஏழ்மை/ ஆரோக்கியமின்மை/
என்ற பல சூழலில் வாழும் முதியோர்கள்,
இறுதியில் இறைநாமமே ஜபித்து
இறை அருளலால் ஆரோக்கியமாக வாழ
இறைவனிடம் வேண்டுகோள்.
இறைவா! முதுமை தான் மனிதனுக்கு
அவன் செயல்களுக்கு கர்ம வினைகளுக்கு ஏற்ப
 இவ்வுலகம் சுவர்க்கம் நரகம்என்ற தண்டனை.
முதுமையில் தான் அதிக நாவடக்கம்

பேச்சிலும், சாப்பாட்டிலும் வேண்டும்.
இறைவன் மனிதர்களுக்கு கர்மவினகளுக்கு
ஏற்ப சந்தான பாக்கியம் அளிக்கிறார்.
ஒரே மகனைப் பெற்றவர்களுக்கு இந்த கலியுகத்தில்

அன்பு என்பது பண வசதி தான்.

ஒரே மகன் வெளிநாட்டில்.

கலியுகத்தின் வரம் வலைத்தளம்.

நேரில் பார்த்து பேசுவதுபோல்.

வானப்ப்ரஸ் த/ சந்நியாச நிலை.

நம்முன்னோர்களின் ஞானம்.

பிரம்மச்சர்யம்-க்ருஹச்தம்/ வானப்ரஸ்தம். சந்நியாசம்.
இதுவே யதார்த்தம்.

குழந்தைகளை வாழ்த்துங்கள்.

சில முதியவர்கள் சபிக்கிறார்கள்.
அது வேண்டாம்.
நமக்கு முதுமையில் ஆதரவு/ ஆதரவற்ற நிலை
நமக்கு ஆண்டவனருள்.
குழந்தையற்ற முதியவர் நிலை.
எந்த நிலையிலும்
நம் நிலை நம்மிலும் மெலியாரை விட உயர்ந்தது என்று

இறைவழிபாட்டுடன் அனைவரையும் வாழ்த்தி வாழ்வோம்.