Wednesday, December 4, 2013

இதுவே பிரம்மானந்தம். இதை உணரமுடியும். விளக்க முடியாது.

அவனியில்  நடக்கும் ,நியாய அநியாய செயல்கள் ,

ஆனந்தங்கள் ,துன்பங்கள் ,வேதனைகள்,
விபத்துக்கள் ,விபரீதங்கள் ,

மாளிகை வாசிகள்,குடிசைவாசிகள்,நடைபாதை வாசிகள்,

ஆண்டிகள்,அரசபோக வாசிகள்,அனாதைகள்,சந்தான பாக்கியம் இல்லாதவர்கள், அனைத்து வசதிகள் இருந்தும் அனுபவிக்க இயலாதவர்கள்,
பசியால் வாடுபவர்கள், உணவிருந்தும் பலவித நோயால் வாடுபவர்கள்,
ஏதாவதொரு  மன உளைச்சல் ,.

இவைகள் ஆன்மீக மரம்   வளர்ச்சிக்கு  ஆணிவேராக வடவிருக்ஷமாகிறது.

இதுதான் இயற்கையின்  இறைவனின் தண்டனை. இதை எந்த அரசியல் தலைவர்களாலும் ,நீதிமன்றங்களாலும் ,சட்டங்களாலும் மாற்ற முடியாது கடல் அலைகள் போல. சந்திர சூரிய ஒளி போல ,விண்மீன்கள் மின்னுவது போல.

இருப்பினும் ஊழல் ,கருப்புப்பணம் ,பேராசை,ஆணவம் ,அதிகார அநியாயங்கள்  நடந்து கொண்டே இருக்கின்றன.வாக்களிக்கப் பணபலம் உதவு கிறது.
பதவி பெற பண பலம் உதவுகிறது.

நோய்களிலிருந்து சில நாள் வாழ பண பலம் உதவுகிறது.

ஆனால் மரணம் ,இயற்கையின் சீற்றம் ,இவைகளை எந்த அதிகார பலமும் ,
பணபலமும் ,ஊழலும் கறுப்புப் பணமும் ,பதவியும் உதவாது.
இது சத்தியம். இது உள்ளவரை ஆன்மிகம் இறைபக்தி வளரும்.

அன்பே சிரத்தையே ஆண்டவன் . இதுவே பிரம்மானந்தம். இதை உணரமுடியும். விளக்க முடியாது.





Tuesday, December 3, 2013

இல்லையேல் இன்னல் நிறைந்த துன்ப வாழ்க்கை.

உலகில்  இறைவன் என்ற எண்ணமே இல்லா ஆதிவாசிகள்உள்ளனர்.
உலகில் இறைவனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் முதல் நாடு பாரதம்.
ஆன்மீகத்திற்கு அளித்த முக்கியத்துவம் அறிவியலுக்கு அளிக்கப்படவில்லை.
ஆனால் ஆன்மீகத்தில் இருக்கும் அறிவியல் உண்மைகள் வியக்கவைக்கின்றன.
இந்த ஆன்மீக நாட்டில் கல்வி  அனைவருக்கும் அளிக்கப்படவில்லை.
தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
நாட்டை ஆட்சி செய்ய,நாட்டை பகைவர்களிடமிருந்து காக்க ஒரு சமுதாயம்,
அதற்கென பயிற்சிகள்,போர் முறைகள் ,கல்வியில் சிறந்தோர் நிறைந்த அமைச்சரவை,அரசவை.
ஆன்மீகம் தழைக்க வென்று ஒரு சமுதாயம்.

வாணிகம் தழைக்க ஒரு சமுதாயம்.
தொழில் வளம் சிறக்க ,விவசாயம் செய்ய என்ற ஒரு சமுதாயம்.
நாளடைவில் இந்த அமைப்பில் உயர்ந்த தாழ்ந்த என்ற நிலை உருவாகியது.

இதற்குக் கரணம் கல்வி அனைவருக்கும் இல்லை.

இந்த நிலைதான் அகிலத்தில் உள்ளது, காரணம் அனைவருக்கும் அறிவுத்திறன்  வேறுபட்டிருப்பதே.

படிக்கின்ற அறிவு  வேறு. அனுபவ அறிவு வேறு, பொருளீட்டும் அறிவு வேறு.
எவ்வளவு சம்பாத்தித்தாலும் ,சொத்துக்கள் எவ்வளவு வாங்கினாலும்
மனநிறைவடையாத  ஒரு கூட்டம்.
மற்றவர்களை ஏமாற்றியே வாழும் ஒரு கூட்டம்.
மற்றவர்களை அண்டிவாழும் கூட்டம்,
இன்றைய சாப்பாட்டிற்கே போதும் நாளை பார்க்கலாம் என்று ஒரு கூட்டம்.
வருமானம் அனைத்தையும் சேமித்துவைக்கவேண்டும் என்ற ஒரு கோட்டம்,
வருமானம் அனைத்தையும் சிலவு செய்யும் ஒரு கூட்டம்,
இவை தவிர மாற்றுத்திரனாளிகள்,சோம்பேறிகள் .

இப்படி இருக்கும் சமுதாயத்தில் தர்மமும் சத்தியமும் நேர்மையும் நிலைக்க இவைகளில் தவறினால் அமைதி கெடும்,நிம்மதி இருக்காது என்ற அச்சத்தை
உருவாக்க ஆன்மிகம்.
ஆன்மீகமும் பக்தி நெறிகளும் இல்லை என்றால் சமுதாயம் ஒழுக்கமற்ற,கட்டுப்பாடற்றதாக மாறிவிடும்.

ஆன்மீகமும் பக்தியுமே நியாய தர்ம சத்தியம் காக்கும். அதற்காகவே

ஆண்டவன் படித்தவை அகாலமரணம்,நோய்,மரணம்.முதுமை தளர்ச்சி,குழந்தை இன்மை ,நோயுள்ள குழந்தைகள்.பெற்றவர்கள் செய்யும் பாபங்களின் பலன் குழந்தைகளுக்கு வரும். நல்லவர்கள் நம் எதிரே துன்பப்படுவதும் இதனால் தான்..
இவைகளை  உணர்ந்து உள்ளன்போடு இறைவனைதுதித்தால் இன்னல் இல்லா  இன்பவாழ்க்கை .இல்லையேல் இன்னல் நிறைந்த துன்ப வாழ்க்கை.
பலரிடம் செல்வமிருந்தாலும் நிம்மதி இருக்காது.




छोड़ो मत नारा लगाना --"सत्य-मेव जयते

सत्य    की  विजय झूठ का हार निश्चित है?
क्या इस जग में लोकतंत्र शासन में या राज्य-तंत्र में  ,
महाभारत में ,रामायण में साध्य रहा यह तत्व.
कर्तव्य कर, फल की चिंता ईश्वर पर छोड़.
खेत में कठोर मेहनत कर,फल अपने मालिक पर छोड़.
खाना पका;दूसरों को खिला;खुद भूख सह;
भगवान की याद में रह;अलौकिक आनंद भोग;
लौकिकता केवल लौकिक भाग्यवानों के लिए;
सच्चे भक्त तो कुछ नहीं चाहता;आश्रम न बनवाता;
दीक्षा देने पैसे न लेता;
कर ताल भिक्षा;तरु तल्वासा रह जाता;
सोना-चांदी के लालच में नहीं पड़ता;
केवल कोपीन धारण कर चुप-चाप नाम-स्मरण जपता;
सदुपदेश  ;दीनावस्था में जीता;
उनकी वाणी का संग्रह करके  उनके शिष्य बनते मालामाल;
चित्रपट में उनकी कहानी बनता निर्माता मालामाल;
उन श्रेष्ठों के शोध ग्रब्थ लिखकर पाते उपाधियाँ;
उनके स्मारक बनाके.बनवाके चंदा इकठ्ठा करके 
बनता नामी सेवक.
पर कोई भी उन उपदेशों का पालन नहीं करता;
फिर भी सत्यमेव जयते का नारा गूंजता रहता समाज में;
चुनाव लड़ो;जीतो ;इस नारे को लेकर;
करो भ्रष्टाचार;जोड़ो काला-धन;
छोड़ो  मत  यह नारा "सत्य-मेव "जयते.
छोड़ो  मत महात्माओं के नाम  जय का नारा लगाना;
छोड़ो मत उन की शिलाएं ,बनाना,माला पहनाना;
जोड़ो  काला-धन ,पर मत छोड़ो नारा लगाना "सत्य मेव जयते;
कम से कम तेरे कुछ अनुयायी सत्य का अनुकरण करेंगे;
संसार में कुछ सद काम चलेंगे;
अच्छे एक होने पर होगी वर्षा;
धरती होगी हरा-भरा;
छोड़ो मत नारा लगाना --"सत्य-मेव जयते".

Monday, December 2, 2013

அந்த நிலையில் உணர்வதே பரமானந்தம்

அங்கு இங்கு எங்கு  என்று எங்கும் நிறைந்திருக்கும்
அருள்வள்ளல் ,அவனியை ஒரு புதிருக்குள்
அடக்கி,கேட்டவர்களுக்கு  கேட்ட வரும் தரும்
ஆண்டவன்,அசுரர்களுக்கும் வரமளித்து
அவர்களின் அதிகாரம் அவனியில் கோடி பறக்க
அவர்களை அழிப்பதற்கு முன் நல்லவர்களை
சோதிப்பது  தான் விந்தை.
உண்மையை நிலைநாட்ட ஹரிஷ்ச்சந்திரன் ;
அந்த உத்தமன் ஒருவனே சித்தம் கலங்காமல்

இறுதிவரை நாடிழந்து ,நட்பிழந்து,மனைவியை விற்று
மகனிழந்து சுடலை காத்து மனைவியின் தாலி கேட்டு
மனைவியையே திருட்டுப்பழி  பொய்யென்று அறிந்தும்
 வெட்டச் சென்ற சத்யவாதி.
இவனைப்போல் இருந்தவர்கள் அவனியில் இல்லை.

ராம-ராவண யுத்தம் ,குருக்ஷேத்திரப் போர்  இதில் சில அதர்மங்கள்
குற்றச்சாட்டுகள்,லௌகீக ஆசைகள்  ,வெற்றிக்கு குறுக்குவழிகள்

ஆனால் அரிச்சந்திர வரலாற்றில்  வாய்மை வெல்லும் என்ற

 ஒரே நிலையில்  இறுதிவரை உறுதிபட நின்ற ஒரே கதை அரிச்சந்திரன் கதை.

உத்தமர் காந்தியும் இறுதிவரை உண்மைக்கு  உறுதியாக  இருக்க பின்பற்றிய கதை.

அவனியில் எப்படி இவ்வளவு உறுதிபட உண்மைக்காக இருக்க முடியும்?

 இது சாத்தியமா? இது விந்தை உலகில் உயர் காட்சி.

இப்படிப்பட்ட உண்மை நிலையில் அந்த  ஆண்டவன் அருள்கிறான்.

உண்மையே இறைவன்.அந்த நிலையில் உணர்வதே பரமானந்தம்.

இது எத்தனை பேருக்கு சாத்தியம்?





Tuesday, November 26, 2013

நாமதேவர் இறைவனைக் கண்ட காட்சியை விவரித்து இறைவன் க்ருபை பெற "நாம " ஜெபத்தின் மகத்துவத்தை இவ்வாறு வர்ணிக்கிறார்.இறைவனின் நாம ஜபம் என்னைப்போன்றவர்களுக்கு ஆதாரம். குருடனுக்கு அவன் தடி உதவுவது போல்,பகவானின் நாம ஸ்மரணை ஒன்றே எனக்கு ஆதாரம்.இறைவனே!நீ தயை நிறைந்தவன்.
நீ தான வீரன்.நீ எனக்கு அக்கம் பக்கத்தில் அனைத்து இடங்களிலும் வியாபித்து இருக்கிறாய்.நீ தான் பணக்காரன்.இந்த அவனியில் கொடுக்கவும் ஏற்றுக்கொள்ளவும் உன்னைத்தவிர வேறு யாரும் இல்லை. நீ ஞாநி,அறிவுள்ளவன்,எதிர்காலத்தை நிர்ணயிப்பவன்.உன் செயலாற்றலையும் ,உன் சாமார்த்தியத்தையும் எப்படி வர்ணிக்க இயலும்?

ஹே சுவாமி! என் பரமேஸ்வரா!ஹே ஸ்ரீ ஹரி! அவனியில் அனைவரையும் நீ மட்டும் தான் க்ஷமிக்க (மன்னிக்க)முடியும்.அஸ்வமேத யாகம்,ஸ்வர்ண துலா தானம்,திரிவேணி ஸ்நானம்,இந்த கிரியைகள் எல்லாம் பகவானின் நாம சங்கீர்த்தனத்திற்கு
சமமாகாது.
ஹே சஞ்சலமான மனமே!நீ ஒரே ஈடுபாட்டுடன் பகவானை மட்டும் பஜனை செய்!
கயையில் சென்று பிண்ட தானம் செய்வது,காசியில் வசிப்பது,நான்கு வேதங்களைப் படிப்பது,மத சடங்குகளைச் செய்வது,இடைவிடாது ஆறுவித கர்மங்களில் மூழ்கி இருப்பது,சிவ -சக்தி சம்பாஷனை கேட்பது
இவை எல்லாம் வெளி வேஷம் .வீணானது.இதனால் ஆத்மா வளர்ச்சி அடையாது.மனதே!இந்த கிரிகைகளில் ஈடுபட பின் தொடராதே.
குரு அருளால் இந்திரியங்களைக் கட்டுப்படுத்து.ஐம்புலன் கட்டுப்பாடுதான்
மிகப்பெரிய கர்மம்.குரு உபதேசத்தாலும் தொடர்பாலும் புலன்களை வெல்வதால் இந்தப் பிறவிப் பயன் கிடைக்கும்.புலனடக்கத்துடன்
எல்லா வேறுபாடுகளையும் மறந்து கோவிந்தனை ஜபிக்கவும்.
இந்த உலகக் கடலில் இருந்து கரை சேர அகண்ட பாராயணமே வழியாகும்.
வெளி ஆடம்பர மற்ற நாம ஸ்மரணை தான் இறைவன் அருளுக்கு அவசியமானது.

Monday, November 25, 2013

கடவுள் நேர்காணல் --நாம்தேவ். 

அபங் புகழ்பெற்றது


.பண்டரிபுரம் விட்டலனின் பக்தர். நாம்தேவ்.


 ஒன்பது வயதில் திருமணம்.


எட்டு குழந்தைகள்


.நான்கு மகன்கள்.


நான்கு மகள்.


நான்கு மருமகள் என்று


 அவர் குடும்பம் பெருகினாலும் 


அவருக்கு விட்டலனின் மீது ,


இறைவன் மீது பக்தி ஜீவநதியாக பெருக்கெடுத்தது. 


இல்லறத்தில் பக்தி என்பதற்கு அவர் வாழ்க்கை எடுத்துக்காட்டு.


துறவறம் இன்றி இறைபக்தி .


அதிலும் பக்தியில் ஆடம்பரத்தை எதிர்த்தவர்.


 இறைவனை நேர்காண நாம ஜபம் போதும் என்ற விட்டல் பக்தர்.


அவர் தன் குடும்பத்தின் முழு பொறுப்பையும் விட்டலிடம் ஒப்படைத்து 


இறைவனின் கீர்த்தனையில் ஈடுபட்டவர்.


இவரின் மனம் ஒன்றுபட்ட கீர்த்தனையின் முன்


 விட்டல் நடன மாடுவார்


.இவரின் பக்தி மகாத்மியம் கேட்ட ஞானதேவர் 


இவருடன் இருக்க பண்டரிபுரம் வந்து சேர்ந்தார்.


இவர் மராட்டி ,ஹிந்தியில் பாடிய கீர்த்தனைகள்,


ஐம்பதுக்கும் பெறப்பட்ட கீர்த்தனைகள்


சீக்கிய மத  கிரந்த சாஹப்


பிலும் காணப்படுகின்றன
Recent



  1. நாமதேவர் இறைவனைக் கண்ட காட்சியை விவரித்து இறைவன் க்ருபை பெற "நாம " ஜெபத்தின் மகத்துவத்தை இவ்வாறு வர்ணிக்கிறார்.இறைவனின் நாம ஜபம் என்னைப்போன்றவர்களுக்கு ஆதாரம். குருடனுக்கு அவன் தடி உதவுவது போல்,பகவானின் நாம ஸ்மரணை ஒன்றே எனக்கு ஆதாரம்.இறைவனே!நீ தயை நிறைந்தவன்.
    நீ தான வீரன்.நீ எனக்கு அக்கம் பக்கத்தில் அனைத்து இடங்களிலும் வியாபித்து இருக்கிறாய்.நீ தான் பணக்காரன்.இந்த அவனியில் கொடுக்கவும் ஏற்றுக்கொள்ளவும் உன்னைத்தவிர வேறு யாரும் இல்லை. நீ ஞாநி,அறிவுள்ளவன்,எதிர்காலத்தை நிர்ணயிப்பவன்.உன் செயலாற்றலையும் ,உன் சாமார்த்தியத்தையும் எப்படி வர்ணிக்க இயலும்?

    ஹே சுவாமி! என் பரமேஸ்வரா!ஹே ஸ்ரீ ஹரி! அவனியில் அனைவரையும் நீ மட்டும் தான் க்ஷமிக்க (மன்னிக்க)முடியும்.அஸ்வமேத யாகம்,ஸ்வர்ண துலா தானம்,திரிவேணி ஸ்நானம்,இந்த கிரியைகள் எல்லாம் பகவானின் நாம சங்கீர்த்தனத்திற்கு
    சமமாகாது.
    ஹே சஞ்சலமான மனமே!நீ ஒரே ஈடுபாட்டுடன் பகவானை மட்டும் பஜனை செய்!
    கயையில் சென்று பிண்ட தானம் செய்வது,காசியில் வசிப்பது,நான்கு வேதங்களைப் படிப்பது,மத சடங்குகளைச் செய்வது,இடைவிடாது ஆறுவித கர்மங்களில் மூழ்கி இருப்பது,சிவ -சக்தி சம்பாஷனை கேட்பது
    இவை எல்லாம் வெளி வேஷம் .வீணானது.இதனால் ஆத்மா வளர்ச்சி அடையாது.மனதே!இந்த கிரிகைகளில் ஈடுபட பின் தொடராதே.
    குரு அருளால் இந்திரியங்களைக் கட்டுப்படுத்து.ஐம்புலன் கட்டுப்பாடுதான்
    மிகப்பெரிய கர்மம்.குரு உபதேசத்தாலும் தொடர்பாலும் புலன்களை வெல்வதால் இந்தப் பிறவிப் பயன் கிடைக்கும்.புலனடக்கத்துடன்
    எல்லா வேறுபாடுகளையும் மறந்து கோவிந்தனை ஜபிக்கவும்.
    இந்த உலகக் கடலில் இருந்து கரை சேர அகண்ட பாராயணமே வழியாகும்.
    வெளி ஆடம்பர மற்ற நாம ஸ்மரணை தான் இறைவன் அருளுக்கு அவசியமானது.

கடவுள் பற்றி பல எண்ணங்கள்.

கடவுள்  பற்றி  பல எண்ணங்கள்.

இருக்கிறார்  என்று சொல்பவர்களும்

 சோதனைகள்,தோல்விகள்,மரணங்கள் ஏற்பட்டால் 

 இருக்கிறானா என்று நாத்திகர்களாக மாறும்

 நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

இல்லை என்று கூறும் பலர்

 தங்கள் தனிப்பட்ட அனுபவத்தாலும் ,

உலகியல் நடப்பாலும்

 உறுதிவாய்ந்த ஆஸ்திகர்களாக மாறி உள்ளனர்.


தெய்வப்பணி  என்பதில் நம் முன்னோர்கள் உறுதிவாய்ந்த 

கொள்கைகள் கொண்டுள்ளனர்.

பாலங்கள்,அணைகள்,ஆலைகள் ,சாலைகள்  ,நிலாப்பயணம்  என்ற 

இந்த அறிவியல்  உலகில்  உலகம் முழுவதும்  இறை நம்பிக்கைகள் 

நிறைந்துதான்  காணப்படுகின்றன.


ஆலயங்கள்  ஆஸ்திகள் குவியும் இடங்களாக மாறுகின்றன.

அவை வணிகமையங்களாக  மாறி மக்களைக்கவரும் 

ஒரு சந்தையாக மாறிவருகின்றன . அது ஒரு மயக்கும் ஏமாற்றும் 

தொழில் மையங்களாக  மாறிவிட்டன என்ற குற்றச்சாட்டுகள் 

அண்மையில் அதிகரித்துவருகின்றன.

காரணம் ஆலயங்கள் அமைக்க பல கோடிகள் செலவாகின்றன.

சிலைகளின் உயரங்கள் இன்று  போட்டிபோடும் நிலையில் அதிகரிக்கின்றன.

வைரக்கிரீடம்,ஆபரணங்கள் ,உண்டியல் என சொத்துக்குவிப்பு மையங்களாக 

மாறி  உலக மாயைகளுக்கு வழிகாட்டுகின்றன.

அமைச்சர்கள் வழங்கும் தங்க கிரீடங்கள்  பாப விமோசனம்   என்றால் 

இறைவனின் திருவிளையாடல்கள் வியக்கவைக்கும்  நிலை.


இந்நிலையில் பத்திரகிரியாரின் மெய்ஞானப் புலம்பல் 

நான்  ஆரோ நீ ஆரோ நன்றாம் பரமான 
தான் ஆரோ என்றுணர்ந்து  தவம் முடிப்பது எக்காலம்.

எவ்றேவர்கள் எப்படிக்கண்டு எந்தப்படி நினைந்தார் 
அவ்ரவர்க்கப்படி நின்றான்  என்பது எக்காலம்.

உற்றுற்றுப் பார்க்க ஒளிதரும் ஆனந்தமதை
நெற்றிக்கு  நேர்கொண்டு நிலைபதினி எக்காலம்.

பொருளாசை பெண்ணாசை பூ ஆசை என்னும்
மருளாசை யாம்மாசை மாற்றித்-தெருள் ஞான 
வேந்தராய் வாழலாம் மெய்யன்பால் நன்னெஞ்சே 
பூந்தராய் நாதரை நீ போற்று.-------------------------------பட்டினத்தார்.

நல்ல நெஞ்சே ! பொருள் மீது கொள்ளும் பேராசை,
பெண் மீது கொள்ளும் காதல் ,
மண் மீது வைக்கும் அவா  என்ற மயக்கத்தை அளிக்கின்ற ஆசை எனப்படும் 
குற்றங்களை மாறும்படி செய்து தெளிவையுண்டாக்கும் 
ஞானபூமிகள் ஏழிற்கும் மன்னராய் வாழ்வதாகும். உண்மையான அன்பினால் பூந்தராய் என்னும் சீகாழி எழுந்தியிருக்கும் இறைவனை வணங்குவாயாக.