கடவுள் பற்றி பல எண்ணங்கள்.
இருக்கிறார் என்று சொல்பவர்களும்
சோதனைகள்,தோல்விகள்,மரணங்கள் ஏற்பட்டால்
இருக்கிறானா என்று நாத்திகர்களாக மாறும்
நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
இல்லை என்று கூறும் பலர்
தங்கள் தனிப்பட்ட அனுபவத்தாலும் ,
உலகியல் நடப்பாலும்
உறுதிவாய்ந்த ஆஸ்திகர்களாக மாறி உள்ளனர்.
தெய்வப்பணி என்பதில் நம் முன்னோர்கள் உறுதிவாய்ந்த
கொள்கைகள் கொண்டுள்ளனர்.
பாலங்கள்,அணைகள்,ஆலைகள் ,சாலைகள் ,நிலாப்பயணம் என்ற
இந்த அறிவியல் உலகில் உலகம் முழுவதும் இறை நம்பிக்கைகள்
நிறைந்துதான் காணப்படுகின்றன.
ஆலயங்கள் ஆஸ்திகள் குவியும் இடங்களாக மாறுகின்றன.
அவை வணிகமையங்களாக மாறி மக்களைக்கவரும்
ஒரு சந்தையாக மாறிவருகின்றன . அது ஒரு மயக்கும் ஏமாற்றும்
தொழில் மையங்களாக மாறிவிட்டன என்ற குற்றச்சாட்டுகள்
அண்மையில் அதிகரித்துவருகின்றன.
காரணம் ஆலயங்கள் அமைக்க பல கோடிகள் செலவாகின்றன.
சிலைகளின் உயரங்கள் இன்று போட்டிபோடும் நிலையில் அதிகரிக்கின்றன.
வைரக்கிரீடம்,ஆபரணங்கள் ,உண்டியல் என சொத்துக்குவிப்பு மையங்களாக
மாறி உலக மாயைகளுக்கு வழிகாட்டுகின்றன.
அமைச்சர்கள் வழங்கும் தங்க கிரீடங்கள் பாப விமோசனம் என்றால்
இறைவனின் திருவிளையாடல்கள் வியக்கவைக்கும் நிலை.
இந்நிலையில் பத்திரகிரியாரின் மெய்ஞானப் புலம்பல்
நான் ஆரோ நீ ஆரோ நன்றாம் பரமான
தான் ஆரோ என்றுணர்ந்து தவம் முடிப்பது எக்காலம்.
எவ்றேவர்கள் எப்படிக்கண்டு எந்தப்படி நினைந்தார்
அவ்ரவர்க்கப்படி நின்றான் என்பது எக்காலம்.
உற்றுற்றுப் பார்க்க ஒளிதரும் ஆனந்தமதை
நெற்றிக்கு நேர்கொண்டு நிலைபதினி எக்காலம்.
பொருளாசை பெண்ணாசை பூ ஆசை என்னும்
மருளாசை யாம்மாசை மாற்றித்-தெருள் ஞான
வேந்தராய் வாழலாம் மெய்யன்பால் நன்னெஞ்சே
பூந்தராய் நாதரை நீ போற்று.-------------------------------பட்டினத்தார்.
நல்ல நெஞ்சே ! பொருள் மீது கொள்ளும் பேராசை,
பெண் மீது கொள்ளும் காதல் ,
மண் மீது வைக்கும் அவா என்ற மயக்கத்தை அளிக்கின்ற ஆசை எனப்படும்
குற்றங்களை மாறும்படி செய்து தெளிவையுண்டாக்கும்
ஞானபூமிகள் ஏழிற்கும் மன்னராய் வாழ்வதாகும். உண்மையான அன்பினால் பூந்தராய் என்னும் சீகாழி எழுந்தியிருக்கும் இறைவனை வணங்குவாயாக.
1 comment:
உணர வேண்டிய கருத்துக்கள் ஐயா...
Post a Comment