Saturday, November 23, 2013

அதுவே பூலோகத்தில் ஸ்வர்கீய சுகம் தரும் . மன அமைதி,மன நிறைவு தரும்.

அன்பு  என்றால் 

கொடுக்கல் மட்டும் தான்.

 வாங்களுக்காக "வாங்க" என்பது  அன்பாகாது.

தமிழுக்கும் ஹிந்திக்கும் உள்ளவேறுபாடு இந்த கொடுக்கல்-வாங்களில் தான்.

தமிழின் சிறப்பு இதில் தான்.

ஹிந்தியில்  லேன் -தேன் என்பார்கள்.

அதாவது வாங்கல் கொடுக்கல்.

தமிழில் கொடுக்கல் -வாங்கல்.


வாங்கிக்கொடுப்பதும் -கொடுத்து வாங்குவதிலும் 

அது உதவியாக  இருந்தாலும் சரி ,பணமாக இருந்தாலும் சரி ,

பெருந்தன்மை  கொடுப்பதில் தான்.

நான் கொடுத்தேன் என்பதில் பெருமையா?வாங்கினேன் என்பதிலா?

அவன் மிகவும் நல்லவன் .எல்லோருக்கும் கொடுத்து உதவுவான்.

அங்கு ஒரு கம்பீரம்.

அவன் வந்துவிட்டான்.
.அவன் வாங்கியே பிழைக்கிறான் .அதில் ஒரு தயக்க வாழ்க்கை.

கொடுப்பவனுக்கு  யார் கொடுப்பான்? உழைப்பு.

உழைப்பால் ஊதியம்.

கொடுக்கும்  குணம்.
 அது  ஆன்மீகத்தால் வருவதா? அறிவியலாலா ?

கொடுப்பதற்கேற்ற வரவு வர

 பகவான் மீது பக்தி தேவை,

கொடுக்கும் அன்பு தேவை.

கொடுத்து வாங்க வேண்டும்  என்ற 

அன்பு பக்தி    பக்தியா?

இறைவன் மீதுள்ள பக்தி -சிரத்தை ஒருவழிப்பாதையாக 
(one way traffic)
இருக்கவேண்டும்.

அந்த  கொடுக்கும் அன்பே

 வாங்காமல் பெரும் 

கலைமகள்,மலைமகள்,

அலைமகள் கிருபகடாக்ஷம்.

 அந்த அருள் பார்வை

 நமக்கு ஞானம் தரும்.

செல்வம் தரும்.

புகழ் தரும்.

உயர் குணம் தரும்.

.அனைத்தும் தரும்.

அதுவே பூலோகத்தில்

 ஸ்வர்கீய சுகம் தரும் .

மன அமைதி,மன நிறைவு தரும்.


No comments: