Monday, December 2, 2013

அந்த நிலையில் உணர்வதே பரமானந்தம்

அங்கு இங்கு எங்கு  என்று எங்கும் நிறைந்திருக்கும்
அருள்வள்ளல் ,அவனியை ஒரு புதிருக்குள்
அடக்கி,கேட்டவர்களுக்கு  கேட்ட வரும் தரும்
ஆண்டவன்,அசுரர்களுக்கும் வரமளித்து
அவர்களின் அதிகாரம் அவனியில் கோடி பறக்க
அவர்களை அழிப்பதற்கு முன் நல்லவர்களை
சோதிப்பது  தான் விந்தை.
உண்மையை நிலைநாட்ட ஹரிஷ்ச்சந்திரன் ;
அந்த உத்தமன் ஒருவனே சித்தம் கலங்காமல்

இறுதிவரை நாடிழந்து ,நட்பிழந்து,மனைவியை விற்று
மகனிழந்து சுடலை காத்து மனைவியின் தாலி கேட்டு
மனைவியையே திருட்டுப்பழி  பொய்யென்று அறிந்தும்
 வெட்டச் சென்ற சத்யவாதி.
இவனைப்போல் இருந்தவர்கள் அவனியில் இல்லை.

ராம-ராவண யுத்தம் ,குருக்ஷேத்திரப் போர்  இதில் சில அதர்மங்கள்
குற்றச்சாட்டுகள்,லௌகீக ஆசைகள்  ,வெற்றிக்கு குறுக்குவழிகள்

ஆனால் அரிச்சந்திர வரலாற்றில்  வாய்மை வெல்லும் என்ற

 ஒரே நிலையில்  இறுதிவரை உறுதிபட நின்ற ஒரே கதை அரிச்சந்திரன் கதை.

உத்தமர் காந்தியும் இறுதிவரை உண்மைக்கு  உறுதியாக  இருக்க பின்பற்றிய கதை.

அவனியில் எப்படி இவ்வளவு உறுதிபட உண்மைக்காக இருக்க முடியும்?

 இது சாத்தியமா? இது விந்தை உலகில் உயர் காட்சி.

இப்படிப்பட்ட உண்மை நிலையில் அந்த  ஆண்டவன் அருள்கிறான்.

உண்மையே இறைவன்.அந்த நிலையில் உணர்வதே பரமானந்தம்.

இது எத்தனை பேருக்கு சாத்தியம்?





No comments: