Tuesday, December 3, 2013

இல்லையேல் இன்னல் நிறைந்த துன்ப வாழ்க்கை.

உலகில்  இறைவன் என்ற எண்ணமே இல்லா ஆதிவாசிகள்உள்ளனர்.
உலகில் இறைவனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் முதல் நாடு பாரதம்.
ஆன்மீகத்திற்கு அளித்த முக்கியத்துவம் அறிவியலுக்கு அளிக்கப்படவில்லை.
ஆனால் ஆன்மீகத்தில் இருக்கும் அறிவியல் உண்மைகள் வியக்கவைக்கின்றன.
இந்த ஆன்மீக நாட்டில் கல்வி  அனைவருக்கும் அளிக்கப்படவில்லை.
தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
நாட்டை ஆட்சி செய்ய,நாட்டை பகைவர்களிடமிருந்து காக்க ஒரு சமுதாயம்,
அதற்கென பயிற்சிகள்,போர் முறைகள் ,கல்வியில் சிறந்தோர் நிறைந்த அமைச்சரவை,அரசவை.
ஆன்மீகம் தழைக்க வென்று ஒரு சமுதாயம்.

வாணிகம் தழைக்க ஒரு சமுதாயம்.
தொழில் வளம் சிறக்க ,விவசாயம் செய்ய என்ற ஒரு சமுதாயம்.
நாளடைவில் இந்த அமைப்பில் உயர்ந்த தாழ்ந்த என்ற நிலை உருவாகியது.

இதற்குக் கரணம் கல்வி அனைவருக்கும் இல்லை.

இந்த நிலைதான் அகிலத்தில் உள்ளது, காரணம் அனைவருக்கும் அறிவுத்திறன்  வேறுபட்டிருப்பதே.

படிக்கின்ற அறிவு  வேறு. அனுபவ அறிவு வேறு, பொருளீட்டும் அறிவு வேறு.
எவ்வளவு சம்பாத்தித்தாலும் ,சொத்துக்கள் எவ்வளவு வாங்கினாலும்
மனநிறைவடையாத  ஒரு கூட்டம்.
மற்றவர்களை ஏமாற்றியே வாழும் ஒரு கூட்டம்.
மற்றவர்களை அண்டிவாழும் கூட்டம்,
இன்றைய சாப்பாட்டிற்கே போதும் நாளை பார்க்கலாம் என்று ஒரு கூட்டம்.
வருமானம் அனைத்தையும் சேமித்துவைக்கவேண்டும் என்ற ஒரு கோட்டம்,
வருமானம் அனைத்தையும் சிலவு செய்யும் ஒரு கூட்டம்,
இவை தவிர மாற்றுத்திரனாளிகள்,சோம்பேறிகள் .

இப்படி இருக்கும் சமுதாயத்தில் தர்மமும் சத்தியமும் நேர்மையும் நிலைக்க இவைகளில் தவறினால் அமைதி கெடும்,நிம்மதி இருக்காது என்ற அச்சத்தை
உருவாக்க ஆன்மிகம்.
ஆன்மீகமும் பக்தி நெறிகளும் இல்லை என்றால் சமுதாயம் ஒழுக்கமற்ற,கட்டுப்பாடற்றதாக மாறிவிடும்.

ஆன்மீகமும் பக்தியுமே நியாய தர்ம சத்தியம் காக்கும். அதற்காகவே

ஆண்டவன் படித்தவை அகாலமரணம்,நோய்,மரணம்.முதுமை தளர்ச்சி,குழந்தை இன்மை ,நோயுள்ள குழந்தைகள்.பெற்றவர்கள் செய்யும் பாபங்களின் பலன் குழந்தைகளுக்கு வரும். நல்லவர்கள் நம் எதிரே துன்பப்படுவதும் இதனால் தான்..
இவைகளை  உணர்ந்து உள்ளன்போடு இறைவனைதுதித்தால் இன்னல் இல்லா  இன்பவாழ்க்கை .இல்லையேல் இன்னல் நிறைந்த துன்ப வாழ்க்கை.
பலரிடம் செல்வமிருந்தாலும் நிம்மதி இருக்காது.




No comments: