Tuesday, December 10, 2013

அறிவுபெற்ற மனிதன் ஞானம் பெறாததாலா

ஆண்டவன்  எங்கே? எங்கே?
ஆலயங்களிலா? ஆஷ்ரமங்களிலா?
ஆருடங்களிலா?ஜோதிட நிலையங்களிலா?
கிராமிய தேவதைகளிலா?
உடுக்கை சத்தத்திலா?
புல்லாங்குழலிலா?
வீணையிலா?
பஜனையிலா?
அஷ்டோத்திரத்திலா?
சஹஸ்ர  நாம அர்ச்சனையிலா?
யாகத்திலா?
 ஹோமத்திலா?
தபசிலா?
வேதத்திலா?
குரானிலா?
பைபிளிலா?

விரதத்திலா?
தீர்த்த யாத்திரையிலா?
பரிகாரங்களிலா?
தான தர்மத்திலா?
பல எண்ணங்கள்
பல தத்துவங்கள்
அத்வைத்துவம்
த்வைத்துவம்
விஷிஷ்டாத்வைதுவம்.
எத்தனை தத்துவங்கள்
உருவமா?அருவமா? இரண்டுமா?
அனைத்தும் ஏற்றுக்கொள்ள  கூட்டம்.
எதிர்க்கவும் ஒரு கூட்டம்,
மறுக்கவும் ஒரு கூட்டம்.
அனைத்திற்கும் கூட்டம்.
சாரயக்கடையிலும் கூட்டம்.
அகிலத்தில் அவனது ஆட்டம்.
அறிய முடியா அவன் லீலைகள்.
இறைவன் ஒருவனே ஏன் ஒரு முழக்கம்.
பல உருவங்களில் வழிபட்டாலும்
அடையும்  இடம் ஒன்றே.
வரமும் ஒன்றே.
விருப்பமும் ஒன்றே,
ஏன்  இந்த மத சாதிக்கலவரங்கள்?
அறிவுபெற்ற மனிதன் ஞானம் பெறாததாலா?
ஞானம் பெற்றபின்னும் உலக மாயை இருப்பதாலோ?




No comments: