ஆழ்ந்த தத்துவம்,வேதாந்தம் ,ஆழ்ந்த ஞானம் பெற்றால் தான்
இறைவனைக் காணலாம். இறைவன் ஞான ஸ்வரூபி. அவனை தரிசிக்க
தவம் செய்ய வேண்டும். அவன் அருள் பெற்று சம்சார சாகரத்திலிருந்து முக்தி பெற ,பாவ விமோசனம் பெற ,முக்தி பெற ,அறம் பொருள்,இன்பம் .வீடுபேறு பெற யாகங்கள்,வேதபாராயணங்கள் ,பிரயாஷ்சித்தங்கள் செய்யவேண்டும்.
குரு தீக்ஷை பெற வேண்டும்.விரதங்கள் இருக்கவேண்டும்.
சத்யம்,நேர்மை,கடமை, ஆத்ம திருப்தி,பரோபகாரம்,சஹானுபூதி .சொன்னசொல் தவறாமை,போன்ற ஆதர்ஷ குணங்கள் வேண்டும்.
உலகப்பற்று அற்ற பற்றுள்ள சேவை செய்ய வேண்டும் .
இது ஒருவகையான ஞான மார்க்கம்.சனாதன தர்மத்தில் இவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றன. ஆலயம் செல்லவேண்டும்.
அழகு பொருந்திய ஆண்டவனை தரிசிக்கவேண்டும்.ஆண்டவன் அலங்கார அபிஷேகப்பிரியன்.அவன் நாம ஜெபத்திலே,அஷ்டோத்திரத்திலே,சஹஸ்ரநாமத்திலே,ஸ்லோகங்களிலே தனி ஆனந்தம். அதுவே மெய்ஞானம் என்கிறது.
ஆச்சரியம் என்ன வென்றால் இப்படிப்பட்ட வேதஞான அறிவுபெற்றோர்கள் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் இவைகளை எல்லாம் அறிந்து,தெரிந்து,தெளிந்து,கடைப்பிடித்து வாழவேண்டும் என்ற அவா அனைவரின் மனதிலும் எழுகிறது. நடைமுறையில் இது சாத்தியமில்லாமல் போகிறது.
உலகியல் பொருளியல் அடிப்படை.ஒவ்வொரு தேவைக்கும் பணம் அடிப்படை. இந்த பணம் உடனடித்தேவை.ஆன்மீகத்தில் ஆண்டிகளாக இருந்தவர்களின் ஞானபூர்வ் அனுபவ சேவைகளின் ஆதாரமாகவைத்து
பொருளாசை அற்ற துறவிகளின் சீடர்கள் ஆலயப்பனிகள்,அறப்பணிகள் செய்ய பணம் தேவைப்படும்பொழுது கிடைத்தது.தர்ம கைகரியங்கள்
செய்யப்பட்டு வந்தன.
ஆனால் இன்றைய துறவிகளைப்பார்க்க,ஆசிபெற,தீக்ஷை பெற,ஆலய தரிசனம் செய்ய என கோடிக்கணக்கில் பொருள் சேர்கிறது.
அன்னதானம் மட்டும் நடக்கிறது, கல்வி தானம் நடப்பதில்லை.
கல்விக்கூடங்கள் இலவசமாக நடத்துவது என்பது ஒரு மிகப்பெரிய வேள்வி.
நமது பாரத தேசத்தில் இன்றைய ஆன்மீகப்பணி இதுவே.
இதில் ஈடுபடுபவர்களுக்கும் ஆடம்பரங்கள் தேவைப்படுகின்றன.
கரதல பிக்ஷா,தரு தல வாசா என்ற கல்வி நிலை காலத்திற்கு ஒவ்வாது.
கணினி,பரிசோதனைக்கூடம்,மன,பண,அறிவு நிறை உள்ள ஆசிரியர்கள் தேவை.
ஆசிரியர்கள் கவலை இன்றி அறிவளர்ச்சி செய்துகொண்டே தங்கள் அறிவை புதுப்பித்து பெருக்கிக் கொண்டே இருக்கவேண்டும்.அதற்கு ஏற்ற ஊதியம் அளிக்கப்படவேண்டும். ஆசிரியர்களைமட்டும் தியாகம் செய்யவேண்டும் என்று குடிலில் தங்கவைத்தால் மாணவர்கள் மதியா நிலைதான் ஏற்படும்.
பொறியியல் கல்லூரி விரிவுரையாளர்கள் மாதம் ௧௫ ஆயிரம் பெற்று சேவை செய்கிறார்கள்.அவர்களின் தரம் உயர வேண்டுமா?வேண்டாமா?
நிரந்தரமாக மன நிறைவுடன் ஆசிரியர் பணி ஏற்ற அனைவரும் ஈடுபட சமுதாயத்தில் மிக உயர்ந்த மரியாதை குரு ஸ்தானம்.குரு தெய்வத்திற்கு சமம்.
ஆனால் இன்றைய பாரதத்தில் ஆசிரியர் நிலை பரிதாபம்.
இந்த நிலை மாறினால் ஞான நிலைமேம்பட்டு மனித சமுதாயம் பண்புநிலைக்கு மாறும். இந்நாளுக்காக பிரார்த்திப்போம்.அதுவே ஆன்மிக அருள் பெற வழி. அதுவே சாந்தி தரும்.
No comments:
Post a Comment