Tuesday, December 10, 2013

அந்த உணர்வில் அவன் நமக்கு ஆனந்தம் மன நிறைவு அளிக்கிறான்.

இறைவனைப்பற்றிய
  எண்ணங்கள்
இறை நாம ஜபங்கள்
சத்சங்கங்கள்
அவனியில்  உண்மையான
மன நிறைவை  தருபவை.
மன ஷாந்தி தருபவை.
மனக் கலக்கம் தீர்ப்பவை.
மனப்போராட்டம்  இன்றி
மன ஒருமைப்பாடு தருபவை.
மனஉறுதி தருபவை.
மங்களம் உண்டாக்குபவை.
மாயை தவிர்த்து தியாக எண்ணங்கள் வளர்ப்பவை.

அகிலத்தில் ஆன்மிகம் பரப்பும்
ஆன்மீகவாதிகளால்
மனிதநேயம் வளரவேண்டும்.
மனித குல ஒற்றுமை அதிகரிக்க  வேண்டும்.
அகிலம் ஒரு அன்பு நிலையமாக மாறவேண்டும்.
அறிவியல் இப்பணியை செய்யும் அளவிற்கு
ஆன்மிகம் செய்கிறதா?என்பதே இன்றைய
அவனியில் ஒரு வினா?
ஆகாய விமானங்கள் பயணத்தை
எளிதாக்கி பயண நேரத்தைக் குறைக்கின்றன.
தொலைபேசிகள்  செய்திகள் பரிமாற்றத்திற்கு
வலைத்தளங்கள் ஒளி-ஒளி மூலமாக
அகிலத்தை இணைக்கின்றன.
பரந்த உலகம் நெருக்கமாகி தொலைவுகள் தொலைந்துவிடுகின்றன.
நமது  ஷீரடி ,புட்டபர்த்தி சாய்பாபா  பஜனைகள்
மத நல்லிணக்கத்தை வளர்க்கின்றன.
புத்தரின் அன்பு ,இயேசுவின் பாப மன்னிப்பு
அல்லாவின்  மனிதர்களுக்கு தானம் வழங்கும் "ஜகாத்" என
மனிதர்களுக்கு மனிதப்பண்புகளை
மனத்தில் பதிக்க வைக்கின்றன.
ஆனால் ,அரசியல் சுயநலத்தை விட
ஆன்மீக சுயநலங்கள்  மனிதர்களைப்பிரிக்க
முயல்கின்றன.மதக்கலவரங்களை உண்டாக்கி
ரத்தம் சிந்தவைக்கின்றன.
இறைவன் ஒருவன் என்றாலும் ,
இறைவன் பல என்றாலும்,
உருவம் அருவம் என்றாலும்
அவை எல்லாம் மாயத்தோற்றங்கள்.
இறைவனை வேறுபடுத்தி மதங்களைக்கூறி
அரசியல் நடத்துவது,ஆஸ்ரமங்கள் நடத்துவது
அறிவியல் வளர்ச்சியால் ஏற்படும் வளர்ச்சிக்குத்
தடைக்கற்கள்.அகழி.
அகழியில் இருக்கும் முதலைகள்
மதம் /தர்மம் என்று பொருளீட்டி சுகபோகத்தில் வாழும்
சயநல மத வாதிகள்.
அவர்கள்  இறைவனால் சமுதாயத்தில்
அடையாளம் காட்டப்படுகின்றனர்.
ஆஸ்ரமங்களில் சேரும் பணங்கள்,
தேவனின் பெயரால் சேரும் பணங்கள்,
அல்லாவின் பெயரால் சேரும் செல்வங்கள்
அறப்பணி செய்ய ஈடுபடுத்துவோர்
ஆண்டவனால் புகழப்படுகிறார்கள்.
அவனியில் பாராட்டப்படுகிறார்கள்.
ஏழை-எளியோர்களும் அநாதைகளும் ஆதரவு பெறுகிறார்கள்.
இந்த உண்மை மதவாதிகளை
அவனியின் அறச் சிந்தனையாளர்கள்
தானம் அளித்து போற்றுகிறார்கள்.
தர்மம் தழைக்கிறது.
நல்லவர்கள்  அறம் வளர்ப்பதால் தான்
அவனியை ஆண்டவன் காக்கிறான்.
அதனால் ஆன்மிகமும் பக்தி இயக்கங்களும்
அவனியில்  அமரத்துவம் அடைகின்றன.
கபீர்   இந்த உயர் சிந்தனைகளை எளிய தோகையில்
மக்களுக்கு உணர்த்துகிறார்.
இக்பால் அவர்கள்
பாரதத்தின் "ஹிந்துஸ்தான் ஹமாரா"என்ற பாடலில்
மதங்கள்  மனிதர்களுக்குள் விரோதம்
 வளர்க்கக்  கற்றுத்தருவதில்லை என்கிறார்.
கபீர் மண் ஒன்றே,அதிலிருந்து செய்யப்படும்
பாத்திரங்கள் பலவகை.பெயர்கள் பல.
தங்கம் ஒன்றே. அதில் செய்யப்படும் ஆபரணங்கள்
பல பெயர்கள். அவ்வாறே இறைவன் ஒன்றே .
நாம் அணியும் விருப்பமுள்ள நகைகள்
உருக்கினால் சொக்கத்தங்கம்.அதில் கலப்படமின்றி
நகைகள் செய்ய முடியாது.
பக்தி விஷயத்தில் நாம் சொக்கத்தங்கமாக
எவ்விதகலப்பும்  இன்றி இறைவனை வழி படவேண்டும்.
ஆடம்பர பக்தியால் ஆண்டவன் அருள் கிடைக்கும் என்பது
மிகப்பெரிய தவறான எண்ணம். சிந்தனை.
கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் வாழ்வு தரும் இறைவன்
கருணை நிறைந்தவர்.பின்னர் ஏன் ஏழை/பணக்காரர்கள்
நோயாளிகள்/சக்திசாலிகள் என்ற வேறுபாடு?
இதற்கு எளிய விடை நாம் சொக்கத்தங்கமா?
இல்லையே.
உலக மாயையால் தவறுகள் செய்கிறோம்.
உலக பயத்தால் பாவச் செயல்களை தடுக்காமல்
ஒதுங்கிச் செல்கிறோம்.
பல பாபச் செயல்களுக்கு துணை போகிறோம்.
பாசத்தால் ,பந்தத்தால்,நட்பால்  தீயவை செய்வோரை காக்கிறோம்.
வருமானத்திற்காக  மதுக்கடைகள் நடத்துகிறோம்.
கையூட்டு கொடுப்போருக்கு வாக்களிக்கிறோம்.
இலவசங்கள் பெற்று இன்பமாக வாழ ஆசைப்படுகிறோம்.
நலவர்கள்-தீயவர்கள் யார் என்றே சிந்திக்காமல் வாக்களிக்கிறோம்.
அதன் பலன்களை அனுபவிக்கிறோம்.அவனியில் ஊழலுக்குப் பேர் பெற்ற நாடாக ,பலாத்காரத்திற்கு பெயர்பெற்ற நாடாக திகழ்கிறோம்.
லக்ஷக்கனக்கு அரசியலில் ஊழலளல்ல.கோடிகளே ஊழல் என்று 
அறிவிக்கும் அமைச்சர்களுக்கும் குற்றம்புரின்தொருக்கும் கொலைகாரர்களுக்கும்  வாக்களிக்கிறோம்.
உலக மாயை விடாததால் நாட்டின் மானத்தை பறக்கவிடுகிறோம்.
விலைவாசி உயர்வால் வேதனைப்படுகிறோம்.

ராமாவதாரத்திலும் சரி,கிருஷ்ணாவதாரத்திலும் சரி
அதர்மம் ஒழிக்க சில அதர்ம வழிகள் அவனியில் ஏற்றதாகின்றது.
அதுவே களங்கமாகிறது அந்த அவதார புருஷர்களுக்கு.
நாம் சொக்கத்தங்கமாகவே இருக்க அவனியில்
இன்னல்கள்  என்ற நெருப்பில் வெந்து வாழ வேண்டிய நிலை.
நாம் பற்றுள்ள உலகில் பற்றற்றவர்களாக
இறைவன் மீது மட்டும் பற்றுகொண்டு வாழவேண்டும்.
அதுவே "சாந்தி".இதை உணர நம் சுயநலங்களால் இன்னல்களை
அனுபவிப்பது உலக ஆசைகள்.பேராசைகள்.சுய நலங்கள்.பொய்யான போலி வாழ்க்கை.
இதை உணர்ந்து வாழ்ந்தால்  ஆனந்த மளிக்கும் ஆண்டவன் அருள்.
அதுவே பிரம்மானந்தம். அதை அனுபவிக்க முடியும்.
எப்படி நாம் காற்றை உணர்கிறோமோ அப்படி.
அதைக்காண முடியாது. உணர முடியும்.
அந்த உணர்வில் அவன் நமக்கு ஆனந்தம் மன நிறைவு அளிக்கிறான்.



No comments: