Wednesday, December 4, 2013

இதுவே பிரம்மானந்தம். இதை உணரமுடியும். விளக்க முடியாது.

அவனியில்  நடக்கும் ,நியாய அநியாய செயல்கள் ,

ஆனந்தங்கள் ,துன்பங்கள் ,வேதனைகள்,
விபத்துக்கள் ,விபரீதங்கள் ,

மாளிகை வாசிகள்,குடிசைவாசிகள்,நடைபாதை வாசிகள்,

ஆண்டிகள்,அரசபோக வாசிகள்,அனாதைகள்,சந்தான பாக்கியம் இல்லாதவர்கள், அனைத்து வசதிகள் இருந்தும் அனுபவிக்க இயலாதவர்கள்,
பசியால் வாடுபவர்கள், உணவிருந்தும் பலவித நோயால் வாடுபவர்கள்,
ஏதாவதொரு  மன உளைச்சல் ,.

இவைகள் ஆன்மீக மரம்   வளர்ச்சிக்கு  ஆணிவேராக வடவிருக்ஷமாகிறது.

இதுதான் இயற்கையின்  இறைவனின் தண்டனை. இதை எந்த அரசியல் தலைவர்களாலும் ,நீதிமன்றங்களாலும் ,சட்டங்களாலும் மாற்ற முடியாது கடல் அலைகள் போல. சந்திர சூரிய ஒளி போல ,விண்மீன்கள் மின்னுவது போல.

இருப்பினும் ஊழல் ,கருப்புப்பணம் ,பேராசை,ஆணவம் ,அதிகார அநியாயங்கள்  நடந்து கொண்டே இருக்கின்றன.வாக்களிக்கப் பணபலம் உதவு கிறது.
பதவி பெற பண பலம் உதவுகிறது.

நோய்களிலிருந்து சில நாள் வாழ பண பலம் உதவுகிறது.

ஆனால் மரணம் ,இயற்கையின் சீற்றம் ,இவைகளை எந்த அதிகார பலமும் ,
பணபலமும் ,ஊழலும் கறுப்புப் பணமும் ,பதவியும் உதவாது.
இது சத்தியம். இது உள்ளவரை ஆன்மிகம் இறைபக்தி வளரும்.

அன்பே சிரத்தையே ஆண்டவன் . இதுவே பிரம்மானந்தம். இதை உணரமுடியும். விளக்க முடியாது.





No comments: