Sunday, April 30, 2017

रामचरित मानस ---ராமசரித மானஸ்--அயோத்யா காண்டம் --25

रामचरित मानस ---ராமசரித மானஸ்--அயோத்யா காண்டம் --25

                    சீதையின் மன நிலை அறிந்து,
 கிருபையுள்ள ராமர்    சீதையிடம் ,
"நீ கவலைப் படாதே. என்னுடன் காட்டிற்கு வந்து விடு. இப்பொழுது வேதனைப்படும் நேரம் அல்ல. 
 உடனே   கானகம் செல்ல   ஏற்பாடு செய். புறப்படு" என்றார்.

ஸ்ரீ ராமர் சீதைக்கு அன்புடன் அனைத்தையும்
 எடுத்துச் சொல்லி விளக்கினார்.
  பிறகு அம்மாவை வணங்கி
ஆசிகள் பெற்றார்.
 அன்னை  ராமரிடம் சீக்கிரம் வந்து
மக்களின் துன்பத்தையும் ,
அன்னைகளின்  துன்பத்தையும்
போக்கவேண்டும்  என்றார்.
  அன்னை இறைவனிடம்  வேண்டினாள்--
பகவானே!   என் இந்த நிலை மாறுமா?
என்  கண்களால்  மீண்டும்
 இந்த  அழகான ஜோடியைப் பார்ப்பேனா ?
  மகனே! உன்னை நான்  மீண்டும் பார்க்கும்
 நல்ல நேரம்  எப்பொழுது   வரும் .
நான்  உயிருடன் உன்னுடைய   நிலவு
போன்ற  முகத்தை  மறுபடியும் பார்ப்பேனா ?
என்று புலம்பினாள்.
மகனே!  செல்லமே !ரகுபதியே !ரகுவரனே!   என்று அழைத்து
அரவணைத்து    மகிழ்ச்சியுடன்   பார்ப்பேனா ?
       அம்மா அன்பின் மிகுதியால் மிகவும் கவலைப் படுகிறாள்.   அவளால் பேசவும் முடியவில்லை  என்றறிந்து   ராமர்
அம்மாவிற்கு மிகவும்  ஆறுதல் சொன்னார்.
 
  அப்பொழுது  சீதை  ,
மாமியாரின்  கால்களில் விழுந்து
 "அம்மா! நான் துர்பாக்கியசாலி.
 உங்களுக்கு பணிவிடை
செய்யும்    காலத்தில் என்னை
  இறைவன்  வனவாசம் செய்ய அனுப்பிவிட்டார்.
 என்னுடைய மன விருப்பம்  நிறைவேறவில்லை.
 அம்மா! வருத்தப் படாதீர்கள்.
 கர்மவினை மிகவும் கடினமானது .
  என்னுடைய   தவறு இதில் எதுவும்லை.
 சீதையின்  சொற்களால் கௌசல்யா தேவிக்கு
 மிகவும் கவலை.
  சீதையை  அணைத்து    தைரியமளித்து ,
 கங்கையும் யமுனையும்  வற்றாமல்  ஓடும் வரை ,
நீ சுமங்கலி யாகவே இருப்பாய்  என  ஆசிகள் வணங்கினார்.


Wednesday, April 26, 2017

रामचरित मानस --ராமசரித மானஸ்-- அயோத்யா காண்டம் --பக்கம் இருபத்திநான்கு.

रामचरित मानस --ராமசரித மானஸ்-- அயோத்யா காண்டம் --பக்கம் இருபத்திநான்கு.
*************************************
அன்பான கணவரின்   மென்மையான  அழகான சொற்களைக்  கேட்டு சீதையின் அழகான கண்களில்  
இருந்து  கண்ணீர் பெருக்கெடுத்தது. ஸ்ரீ ராமரின் இந்த குளிர்ச்சியான  உபதேசங்கள் எப்படி எரிச்சலை உண்டாக்குவதாக இருந்தது?

ஜானகிக்கு    எதுவும்    பதில்  சொல்ல  முடியவில்லை.
என்னுடைய  பவித்திரமான,    அன்புக்    கணவர் ,என்னை விட்டுவிட்டு செல்ல விரும்புகிறாரே  என்பதை
நினைத்து  கவலைப் பட்டார்.
கண்ணீரை  மிகவும் கஷ்டப்பட்டு நிறுத்தி ,
பூமியின் புத்திரியான சீதை  தன்னை தைரியப்
படுத்திக் கொண்டு , மாமியாரின் பாதங்களில்
விழுந்து  கைகூப்பி வேண்டினாள்:--
தேவி! என்னுடைய  இந்த    பயங்கர  அதிகப்பிரசங்கித்தனமான 
 வேண்டுகோளைக்  கேட்டு
மன்னித்து விடுங்கள் .
என்    பிராண பதி    எனக்கு மிகவும் நன்மை தரும்
அறிவுரை  கூறியுள்ளார்.
ஆனால் கணவனின் பிரிவைப் போல்
 உலகில் மிகப் பெரிய  துயரம் வேறெதுவும்
இல்லை  என்பதை   தெரிந்துகொண்டேன்.
என் பிராண நாதா!இரக்கத்தின் வாசமே!அழகே!
சுகம் அளிப்பவனே!   அன்பரே!
ரகுகுலம்  என்ற அல்லிமலரை
மலரச்  செய்யும்  நிலவே!
நீங்கள் இல்லாமல் எனக்கு சுவர்க்கமும்  நரகமே.

அன்னை, தந்தை , சகோதரி , அன்பு   சகோதரன் , குடும்பம் ,
நண்பர்கள் , மாமனார் , மாமியார், உற்றார்-உறவினர்கள்,
உதவியாளர்கள், அழகானவர்கள், நல்லொழுக்கமும்  அன்பும் உள்ள சந்தானங்கள் ,  எத்தனை பேர் இருந்தாலும்
கணவன் அருகில்  இல்லை  என்றால்  எல்லோருமே
சூரியனைவிட   அதிகமாக     சுட்டு எரிப்பவர்களே.
உடல், செல்வம், வீடு ,  பூமி,    நகரம் , ராஜ்ஜியம்  எல்லாமே
கணவன் இன்றி  ஒரு  பெண்ணுக்கு    சோகத்தின் கூட்டமே.

போகம் நோயிக்கு சமம்.
 நகை வீண் சுமை,
உலகமே நகரத்தின்  துன்பம் போன்றது.

பிராண நாதா! நீங்களின்றி உலகில் எனக்கு எங்குமே  எதுவுமே    சுகம் தரக்கூடியது.
உயிரற்ற உடல், நீரில்லா ஆறு,எப்படியோ அப்படியே
கணவனில்லா   மனைவி.
உங்களுடன்    இருந்து  உங்கள்   முழு நிலவு  போன்ற
முகத்தைப்   பார்ப்பதால் எனக்கு எல்லா சுகங்களும்
கிடைத்துவிடும்.
நாதா!  உங்களுடன்  இருக்கும்போது  பறவைகள் மிருகங்கள் என்னுடைய குடும்பங்கள் ஆகிவிடும். வனம் நகரமாகிவிடும்.
மரங்களின் பட்டைகள்  தூய  ஆடைகள்  ஆகிவிடும்.
 குடிசை   சுவர்கத்தின்   சுகங்களுக்கு    மூலமாகி விடும்.
 தாராள இதயமுள்ள   வனதேவிகளும்,தேவதைகளும் மாமனார்  மாமியார்  போன்று  என்னை காப்பவர்கள்
ஆகிவிடுவார்கள்.   தர்ப்பைப் புற்களும்    இலை களும்
அழகான   படுக்கை விரிப்புகளாகும்.
பிரபுவுடன்  இருப்பது  காமதேவனின்   அழகான உள்ளாடைகளாகிவிடும்.

கிழங்கு ,வேர்,பழங்களே  அமிர்தம் போன்ற ஆகாரமாகும் .
காட்டில்  உள்ள   மலைகள்  அயோத்தியாவின்  நூற்றுக்கணக்கான  அரண்மனைகளாகும்.
 ஒவ்வொரு நொடியும்   பிரபுவின்   சரண கமலங்களைப்
பார்த்து    பகலில்  சக்வா பறவைகள்     போன்று  ஆனந்தமடைவேன்.
நீங்கள்   வனத்தின்   அநேக    துன்பங்களைப்  பற்றியும்
பயங்கள்  பற்றியும் , இன்னல்கள் பற்றியும்
சொல்லியிருக்கிறீர்கள்.
ஆனால்  கிருபையின் இருப்பிடமான
 உங்களைப் பிரிந்து
இருப்பதை   நினைக்கும்போது
  அவை எல்லாம்  ஒன்றுமே இல்லை.
இதை   மனதில் அறிந்து   அன்பின் மணியான  நீங்கள்
என்னை  உடன்   அழைத்துச்  செல்லுங்கள்.
இங்கே விட்டுவிட்டு செல்லாதீர்கள்.
நான்  உங்களிடம்    அதிகமாக  எதுவும் வேண்டப்போவதில்லை.
நீங்கள் கருணாமூர்த்தி.
அனைவரைப் பற்றியும் அறிவீர்கள்.
ஏழை பங்காளர் நீங்கள். அனைவருக்கும் சுகம் அளிப்பவர்.
ஒழுக்கம் மற்றும் அன்பின்  களஞ்சியம்.
நீங்கள் பதிநான்கு  ஆண்டுகள்  அயோத்தியாவில் விட்டுவிட்டு சென்றால்   என் உயிர்   இருக்காது  என்பதை
அறிந்துகொள்ளுங்கள்.
ஒவ்வொரு நொடியும் உங்கள் பாத   கமலன்களைப்
பார்த்தாலே   எனக்கு   களைப்பு போய்விடும்.
அன்பானவரே!   நான்  தங்களுக்கு  அனைத்து  விதத்திலும்
பணிவிடை  செய்வேன்.
வழியில் நடை
பயணத்தால்     உண்டாகும் அனைத்து
 சிரமங்களையும்   போக்கிவிடுவேன்.
உங்கள் பாதங்களைக் கழுவி  ,
மரங்களின்     நிழலில்  உட்கார்ந்து
மனதில்     மகிழ்ந்து   விசிறிவிடுவேன்.
வியர்வைத் துளிகளுடன்   உங்கள் கருமேனி  கண்டு
பிராண  நாதரை  தர்சித்துக் கொண்டே
இருக்கும் போது  வருத்தப்பட  நேரமே இருக்காது.
சமதள  பூமியில்  புல்  மற்றும் மரங்களின் இலைகளைப் பரப்பி இரவு முழுவதும் உங்கள் கால்களை
பிடித்துவிட்டுக் கொண்டே   இருப்பேன்.
உங்களின் மென்மையான  உருவத்தைப்
பார்த்துக்கொண்டே   இருந்தால்  
 எனக்கு  வெப்பக்  காற்றும்     கூட  வராது.
நீங்கள் உடன்   இருக்கும் போது    என்னை  நிமிர்ந்து  பார்க்கும்   துணிச்சல் உள்ளவர்கள்  யார்  இருக்கிறார்கள்.
சிங்கத்தின்  பெண் சிங்கத்தை முயலும்  நரியும் பார்க்க  முடியுமா ?
நான் சுகுமாரி என்றால் எனது
நாதர் காட்டிற்குச் செல்ல தகுதியானவரா ?
உங்களுக்கு  தவம் உசிதமென்றால்
எனக்கு    மட்டும்    உலக  மகிழ்ச்சி தேவையா?
இப்படிப்பட்ட  கடுமையான சொற்களைக்   கேட்டும்
என்  இதயம்  வெடிக்கவில்லை  என்றால்
இந்த     அபலை   உங்கள் பிரிவின்    பயங்கர
துன்பத்தை  சகிக்குமா?
இவ்வாறு சொல்லிய  சீதை மிகவும் வருத்தப்பட்டாள்.
சீதையால்  பிரிவு என்ற  சொல்லையே தாங்கிக்கொள்ள முடியவில்லை.
அவளின்   இந்த நிலை கண்டு  ,
பிடிவாதமாக    சீதையை  விட்டுச்  சென்றால் ,
உயிரோடு இருக்கமாட்டாள் என்பதை
ராமர்    புரிந்து கொண்டார்.

Tuesday, April 25, 2017

ராம சரித மானஸ்--அயோத்யகாண்டம் --இருபத்தி மூன்று

ராம சரித மானஸ்--அயோத்யகாண்டம் --இருபத்தி மூன்று .

     அம்மாவிற்கு  எதிரில் ராமர் சீதையிடம்
பேசத் தயங்கினார்.
 மனதில் இதை நினைத்து  சொன்னார் --
ராஜகுமாரி !நான் சொல்லுவதைக் கேள் .
 மனதில் வேறு எதையும்  வேறுவிதமாக   புரிந்து கொள்ளாதே.
  உனக்கும் எனக்கும்  நல்லது நினைத்தால் ,
 நான்  சொல்லுவதைக்  கேட்டு  வீட்டில்  இரு.
பெண்ணே!
என்னுடைய    கீழ் படிந்த மனைவி யாகவும் ,
 மாமியாருக்குத்
தொண்டு செய்யவேண்டும்.
 வீட்டில் இருப்பதால் சகலவித
நன்மையையும் உண்டாகும்.

   மரியாதையுடன்   மாமியாருக்கும்,
  மாமனாருக்கும்  சேவை  செய்வதைத்
 தவிர    வேறு  அறம்  எதுவும்  கிடையாது.

அம்மாவிற்கு  எப்பொழுதெல்லாம் நினைவு வருமோ,.   அன்பு
மிகுதியால்    கவலையின்    காரணமாக  ,
அவள் தன்னையே மறந்துவிடுவாள்.
 அழகியே!  அப்பொழுதெல்லாம் , நல்ல சொற்கள் மூலம்
பழைய கதைகளைக் கூறி    அவருக்கு விளக்கவும்.

நான் உன்னை என் அம்மாவிற்காகத்தான்
  வீட்டில்   விட்டுவிட்டு செல்கிறேன்.
என் ஆணைகேட்டு   வீட்டில்  இருந்தால்,
 குரு மற்றும்   வேதத்தின்    மூலமாக  சொல்லப்படும்
 எல்லா பலன்களும்  எவ்வித துன்பமுமின்றி
உனக்குக்  கிடைத்துவிடும் .

ஆனால்  பிடிவாதத்தின் காரணமாக ,
கலாவ்  முனியும் ,  ராஜா  நஹுஷும்
  கஷ்டங்களையே   சஹிக்கின்றனர்.
 அழகான  முகமுடையவளே!
 நான்  அப்பாவின் வாக்கை
சத்தியமாக்கி சீக்கிரமாக   திரும்பிவிடுவேன்.
   நாட்கள்   வேகமாக சென்றுவிடும்.
நான் சொல்வதைக்    கேள் .
பெண்ணே! அன்பின் வசத்தால்  பிடிவாதம்    செய்தால் ,
அதன்  பலனாக   துன்பத்தை    அனுபவிப்பாய்.
 வனம் மிகவும்  பயங்கரமானது.
 கஷ்டங்கள்  அதிகமானது.

அங்கு  வெயில், குளிர்,மழை,மற்றும்    காற்று   போன்றவையும் பயங்கரமாக இருக்கும்.
 சாலையில்   தெர்பையும், கல்லும் முள்ளும்
அதிகமாக     இருக்கும்.   வழியில்  பெரிய-பெரிய
மலைகளைக்   கடக்க  வேண்டியிருக்கும்.
மலைகளில்   குகைகள், கணவாய்கள்,    நதிகள் , கால்வாய்கள் வாய்க்கால்கள் இருக்கும் .
அதைக் கடப்பது மிகவும்  கடினம்.
அவை மிக ஆழமானதாக இருக்கும்.  
கரடி,  புலி,  ஓநாய்,
சிங்கம்,யானை    போன்றவைகளின்   பயங்கர
  சத்தங்கள் இருக்கும்.  
அதைக்    கேட்டால்    தைரியம் போய் விடும் .

அங்கு  தரையில்  தூங்க    வேண்டும்.
 மரப்  பட்டை  ஆடைகள் அணியவேண்டும் .
கிழங்கு , வேர், பழங்களையே  உணவாக
சாப்பிட வேண்டியிருக்கும்.   அவைகளும்  எல்லா   நாட்களிலும்     கிடைக்காது.  அதுவும்   காலத்திற்கு      ஏற்றபடியே   கிடைக்கும்.

மனிதனையே சாப்பிடும் ராக்ஷசர்கள்
 இரவில் உலாவுவார்கள்.
 அவர்கள் கோடிக்கணக்கில் கபட    நாடகம்
நடத்துவர்.   காட்டாற்று    மழை   வெள்ளம் பெருக்கெடுக்கும்.
அங்குள்ள ஆபத்துக்கள்   அதிகம்.
 
மான்விழியாளே!

நீ   இயற்கையிலேயே  பயந்தவள்.
அன்னம் போன்று   ந டப்பவளே !  
 நீ  காட்டில்  வசிக்கத் தகுதியற்றவள்.
நீ காட்டிற்குப்  போகும்    செய்தி கேட்பவர்கள்  
  எல்லோருமே    என்னைத்  திட்டுவார்கள்.
என் புகழுக்கு   களங்கம்  உண்டாகும் .
 மானசரோவர் அமிர்தத்திற்கு ஒப்பான தண்ணீர்
 குடித்து  வளர்ந்தவள் ,
அன்னப்பறவை  போன்ற  நீ,
  உப்புநீர்  கடலில் செல்ல  முடியுமா ?
மாந்தோப்பில்      இருக்கும்   குயில்,
 கசப்பான  மரம்  உள்ள    காட்டில் அழகு  பெற  முடியுமா ?

சந்திரமுகியே!    இதயத்தில்    இதெல்லாம்  எண்ணி வீட்டிலேயே    இரு.
 வனத்தில்  மிக கஷ்டம்  அதிகம்.

இயற்கையாக  நன்மை    விரும்பும்
 குருவும் சுவாமியும்   சொல்வதை சிரமேற்கொண்டு நடக்கவேண்டும். இல்லை  எனில்   மனதில் மிகவும்  வருந்த  வேண்டியிருக்கும்.
 நிச்சயம் நன்மைக்குப் பதில்  தீங்கே உண்டாகும்.

Monday, April 24, 2017

ராமசரிதமானஸ் --அயோத்யா காண்டம் --பக்கம் இருபத்திரண்டு.

ராமசரிதமானஸ் --அயோத்யா காண்டம் 
-பக்கம் இருபத்திரண்டு.

 சீதை ராமரின்  வனவாசம்  பற்றி 
 பல விதத்தில்  சிந்தித்தார்.
 எனது பிராணநாதர் காட்டிற்குப்
 போக  விரும்புகிறார்.
 எந்த புண்ணியவான் அவருடன் செல்வார்
 என்று பார்க்கலாம்.
உடலும் உயிரும்   இரண்டும்   உடன் செல்லும்.
அல்லது உயிர் மட்டும் போகுமா ?
கடவுளின் செயல் எதுவும் 
அறிந்து கொள்ள முடியவில்லை.

சீதை  அழகான கால் நகங்களால்
  பூமியை  கீரிக்கொண்டிருந்தாள்.
 இப்படி செய்யும்   போது   கால் கொலுசுகள்    சத்தம் .   அன்பின் வசத்தால் சீதை கொலுசுகளைத் துறந்துவிடக்கூடாது என்று
சலங்கைகள் வேண்டுவது  போல்
  இருப்பதாக கவிஞர் வர்ணிக்கிறார் .

சீதையின் அழகான கண்களில் இருந்து
 கண்ணீர் பெருக்கெடுத்தது.
 அவளின் இந்நிலை   கண்டு  ஸ்ரீ ராமரின் தாயார் கௌசல்யா சொன்னாள்:---
மகனே!  சீதை மிகவும் இளம் பெண்.
 மாமியார் ,மாமனார்
மற்றும் குடும்ப உறவினர்களுக்கு
  மிகவும் அன்பானவள்.
இவருடைய  தந்தை அரசர்களுக்கு அரசர்.
மாமனார் சூரிய  குல  சூரியர்.
கணவர் சூரிய குலம  என்ற   அல்லி  மலரை
மலரச் செய்யும் நிலவு    போன்றவர்.
அழகு   மற்றும் குணக் குன்று.
  குணக்களஞ்சியம்.
நான்   அழகும் , குணமும் ,ஒழுக்கமும் நிறைந்த
அன்பான மருமகளைப் பெற்றுள்ளேன்.
இவளை  கண்ணின் மணியாகக்
 கருதி  நேசித்து  வருகிறேன்.
என்னுயிரையே இவளிடத்தில் வைத்துள்ளேன்.
இவளைக்  கற்பகக்  கொடியைப்  போல்
மிகவும் நேசித்து  அன்பு நீர் பாய்ச்சி வளர்த்திருக்கிறேன்.
இப்பொழுது இந்தக்கொடி பூத்து  குலுங்கும் நேரம்.
கடவுளின் செயல் .
அதனால்   பலன்  என்னவாக  
முடியும் என்று  தெரியவில்லை.
 சீதை  கட்டிலில் ,மடியில் , ஊஞ்சலில் ,   தான் காலடி வைத்துள்ளாள். நான் இவளை சஞ்சீவினி
மூலிகை போல்  மிக எச்சரிக்கையுடன் வளர்த்துவருகிறேன்.
பாதுகாத்துவருகிறேன். நான் விளக்கின் திரி அகற்றும்  வேலை கூட  அவளுக்குத் தருவதில்லை.
அதே சீதை  இன்று  உன்னுடன்  காட்டிற்கு வர விரும்புகிறாள்.
ரகுநாதா!  அவளுக்கு உன் ஆணை என்ன ?நிலவின் கதிரில் ஆனந்தத்தை விரும்புபவள்  ,சக்ரவாகப் பறவைபோல்  சூரியனை எப்படி   பார்க்க முடியும் ?

காட்டில்  யானை, சிங்கம் , புலி என்ற துஷ்ட மிருகங்கள் வாழ்கின்றன. நடமாடுகின்றன.
மகனே! விஷத்தின் தோட்டத்தில் ,
அழகான சஞ்சீவினி மூலிகை அழகு பெற முடியுமா ?
காட்டில் வாழ்வதற்காகவே
வேடர் குலப்  பெண்களையும்
கோல் இனப்     பெண்களையும்
 கடவுள்  படைத்துள்ளார்.

அவர்களுக்கு  கல்லில் உள்ள புழு போன்ற
கடினமான குணம் உண்டு.
 அவர்களுக்கு   காட்டில் துன்பமே    இருக்காது.

அல்லது
தபசிகளின் மனைவிமார்கள்  
வாழத்  தகுதியானவர்கள்.
அவர்கள் தவத்திற்காக எல்லா வற்றையும் தியாகம் செய்தவர்கள்.
மகனே! படத்தில் இருக்கும்  குரங்கைப்
பார்த்தே  பயப்படும்  சீதை யால்
 காட்டில் எப்படி இருக்க முடியும் .
தேவசரோவரில்  தாமரை வனத்தில் வாழ்கின்ற அன்னப்பறவை  காட்டுக்    குளங்களில்
வசிக்கத்தகுதி உண்டா?
அம்மா  சொல்கிறாள் ---
சீதை வீட்டில் இருந்தால்    எனக்கு  உதவியாக  இருப்பாள்.
ஒழுக்கமும்    அமிர்தமும்  கலந்தது   போன்ற
அம்மாவின் சொற்களைக்  கேட்டு
  அறிவுமிகுந்த  அன்பான  சொற்களால்
ராமர்   அன்னை   மகிழும்படியும் 
  
 மன நிறைவு    அடையும்   படியும்  பேசினார்.
பிறகு  காட்டின் குணங்கள் தோஷங்கள்  பற்றி
சீதைக்கு விளக்கினார்.

ராமசரித மானஸ் ---அயோத்யா காண்டம் --இருபத்தொன்று

ராமசரித மானஸ்  ---அயோத்யா காண்டம் --இருபத்தொன்று

      கௌசல்யா  ராமரிடம் சொன்னாள்--"வனவாசம் சென்றால் வன தேவதைகள் உன்னுடைய தந்தைஆவார்கள் வன தேவிகள் உன்னுடைய தாயார் ஆவார்கள். அங்குள்ள மிருகங்கள் பறவைகள் உன்னுடைய தாமரை பாதங்களுக்கு தொண்டர்கள் ஆவார்கள். அரசர்களுக்கு இறுதியில் வனவாசம் செய்வது சரியானது தான். உன் நிலைகண்டு தான் எனக்கு மனதில் வேதனையாக உள்ளது.

 நீ ரகுவம்சத்தின் திலகம். காடு மிகவும் அதிர்ஷ்டம் செய்துள்ளது. அயோத்தியா அதிர்ஷடமில்லாமல் போய் விட்டது.  நானும் உன்னுடன் வருவேன் என்றால் உனக்கு என் மேல்    சந்தேகம்  வரும். இந்த கூட வரும் சாக்கில் அம்மா என்னைத்   தடுக்க விரும்புகிறாள்.
மகனே!நீ எல்லோருக்குமே மிகவும் அன்பானவன்.
உயிருக்கே உயிரானவன் நீ ., எல்லோரின் இதயத்துக்கும்
வாழ்க்கை நீ தான்.
நீ சொல்கிறாய்-நான் காட்டிற்கு செல்கிறேன்  .  எ
நீ    சொல்வதைக்கேட்டு    நான்  வருந்துகிறேன்.
இதை நினைத்து    பொய்யான  அன்பை அதிகரித்து நான் பிடிவாதம்  செய்ய  மாட்டேன்.    நான்  உனக்கு   திருஷ்டி சுத்துகிறேன்.  அம்மாவின் உறவை ஏற்றுக்கொள்.    என்னை
மறந்துவிடாதே.
கோபாலா!எல்லா தேவர்களும் முன்னோர்களும்  கண்களை இமைகள் காப்பதுபோல்    உன்னைக் காக்கட்டும். உன்னுடைய    வனவாசம்  பதினான்கு ஆண்டுகள் தண்ணீர் என்றால் ,  உனக்கு அன்பானவர்களு ம், குடும்பத்தவர்களும்  
மீன்கள் நீ அறத்தின் அச்சு.  இரக்கத்தின் சுரங்கம்.
எல்லோரும் உயிருடன்    இருக்கும் போதே சந்திக்கும் முயற்சியில் யோசனை   செய்.
நான் உனக்காக அனைத்தும் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறேன்.   நீ சேவகர்கள்  ,  குடும்பத்தவர்கள், நகரமக்கள்  அனைவரையும்  அனாதைகளாக்கிவிட்டு, சுகமாக  வனத்திற்குச்  செல்.   இன்று அனைவரின் செய்த புண்ணியத்திற்கு  பலன்  கிடைத்து விட்டது. கடினமான காலம்    எல்லாமே நமக்கு விபரீதமாகிவிட்டது.  இவ்வாறு மிகவும்    புலம்பிவிட்டு    தன்னை  மிகவும்   துரதிர்ஷ்டசாலி என்றறிந்து ஸ்ரீ ராமரின்   கால்களைப் பற்றி சுற்றிக்கொண்டாள்.
மனதில் பயங்கரமான    துன்பம்  சூழ்ந்து கொண்டது. அந்த சமயம்    பல வித  புலம்பல் , அவைகளை  வர்ணிக்க முடியாது. ராமர் அம்மாவைத் தூக்கி , இதயத்துடன் அணைத்துக்கொண்டார்.  பிறகு மென்மையான  சொற்களால்  பேசினான்.  அதே  நேரம்  இந்த  செய்தி    கேட்டு  சீதை ஓடிவந்தாள். பிறகு மாமியாருக்கருகில்
அவர்கள்    இருவரின் பாதங்களை வந்தனம் செய்து  தலை குனிந்து அமர்ந்து  கொண்டாள். மாமியார் மென்மையான குரலில்  ஆசிகள் வழங்கினார். சீதையின்   இளமை, அழகு கண்டு  கவலை அடைந்தான். அழகின் ராசியும்  பவித்திரமான    பதியின்  மேலுள்ள அன்பையும் கொண்ட  சீதை  தலை  கவிழ்ந்து வருத்தமுடன் இருப்பதை
கௌசல்யா வால்  சகிக்க முடியவில்லை.

Friday, April 21, 2017

ராமசரிதமானஸ் --அயோத்யகாண்டம் --பக்கம் இருபது

ராமசரிதமானஸ் --அயோத்யகாண்டம் --பக்கம்   இருபது

         ரகுகுலத்தில் மேன்மையான    ஸ்ரீ ராமச்சந்திரரின்

 மிகவும் பணிவான இனிய  சொற்கள்
அன்னை கௌசல்யாவின்   இதயத்தில் அம்புகள் தைத்ததுபோல் வேதனை  அளித்தன.
 அந்த குளிர்ந்த மென்மையான ராமனின்   வேண்டுகோள்

 மழை பெய்ததும் வாடும்    ஆமணக்கு (ஜவாசா ) செடி போல கௌசல்யா    மனம்   வாடியது.

     மனவேதனைகளைச்  சொல்ல முடியாது.
  அவள் நிலை சிங்கத்தின் கர்ஜனை கேட்டு பெண்மான்       மருட்சி    அடைந்தது    போல்  இருந்தது.
கண்களில் கண்நீர்ததும்பியது.
உடல்   நடுங்கியது.
  மீன்  முதல்  மழை  நுரை சாப்பிட்டு
பெரு மூச்சு விட  கஷ்டப்படுவது போல்  அவள்  நிலை.
பிறகு மனதை திடப்படுத்தி   தைரியத்தை வரவழைத்துக்கொண்டு    மகனின் முகத்தைப்  பார்த்து

சொன்னாள்--"மகனே!  உன்  தந்தை   உன்னைத்   தன் உயிரை விட அதிகமாக  நேசிக்கிறார்.
உன் குணங்களையும்    பார்த்து

  தினமும் மிக  மகிழ்வார். அவர் தான்  உனக்கு நாட்டை  ஒப்படைக்க  நல்ல நேரத்தைக் குறிக்கச் செய்தார்.

இப்பொழுது உன்  அபராதம் என்ன ?
மகனே! எனக்கு இந்த
காரணத்தை மட்டும்  சொல்லிவிடு.
 சூரிய வம்ச மரத்தை  எரிக்கும்
 நெருப்பாக யாரானார்கள் ?
அப்பொழுது ராமரின் தயக்கத்தைக்  கண்ட
 அமைச்சரின்   மகன்  ,  எல்லாவற்றையும் விவரமாகக் கூறினான்.
அந்த நிகழ்ச்சிகளைக்  கேட்டு   கோசலை ஊமையானாள்.
அவளின் நிலையை  வர்ணிக்க இயலாது.
 அவளால் ராமனை வைத்துக்கொள்ளவும் முடியாது.,
காட்டிற்குப்போ  என்று   சொல்லவும்  முடியாது.
இரண்டு விதமாக வும்   இதயத்தில்  மிகப்பெரிய துன்பம். கடவுளின் செயல் எப்பொழுதும் எல்லோருக்குமே   வளைந்து நெளிந்துதான்  இருக்கும்.
 நிலவு என்று எழுதத் தொடங்கி ,
ராஹு என்றும்  எழுதிவிட்டார்.
அறமும் அன்பும்  கௌசல்யாவின்
 அறிவை சூழ்ந்துகொண்டது.
அவர்  தர்ம சங்கடத்தில்  இருந்தார்.
அறமும் அன்புக்கும் இடையில்  போராட்டம்.
 பிடிவாதமாக  மகனை வைத்துக்கொண்டால்
 அறம் கெட்டுவிடும் . சகோதரர்களுக்குள்  விரோதமும்  சண்டையும்   வந்துவிடும்.

ராமனை காட்டுக்கு  அனுப்பினால்
 மிகப்பெரிய   தீங்கு  வந்துவிடும்.
அறிவுள்ள  கௌசல்யா  பெண்ணின் குணம்
புரிந்து தெளிந்து    ராமனையும் பரதனையும் தன்  மகன்களாக   பாவித்து   ராமரிடம்  சொன்னாள்--
மகனே!    நான்    உனக்காக   அனைத்தையும்
 தியாகம் செய்கிறேன். நீ      நல்லதே    செய்துள்ளாய் .  அப்பாவின் கட்டளையை     ஏற்று
நடப்பதுதான்   எல்லா அறங்களிலும்
உயர்ந்த  அறம்.  
நாட்டுக்கு  அதிபதி  ஆக்குகிறேன் என்றவர் காட்டுக்கு  அனுப்புகிறார்.இதனால்    எனக்கு எதுவும்   வருத்தம்  இல்லை. நீ   இன்றி   பரதனுக்கு ,மகாராஜாவிற்கும், குடிமக்களுக்கும்

மிகவும்   வேதனையாக  இருக்கும்.  அப்பாவின்   கட்டளை தான்  என்றால்,   அம்மாவை  அப்பாவை  விட  பெரியவர் என்று நினைத்து  காட்டிற்கு செல்லாதே. அம்மா-ஆப்பா இருவரும் கட்டளையிட்டால்  நீ செல்லும்   காடு நூற்றுக்கணக்கான அயோத்தியாவிற்குச் சமம்.

   

Thursday, April 20, 2017

ராமசரிதமானஸ் ---அயோத்யாகாண்டம் -- பக்கம் --பத்தொன்பது.

ராமசரிதமானஸ்  ---அயோத்யாகாண்டம் --  
பக்கம் --பத்தொன்பது.

கௌசல்யா  ராமரிடம்   மகனே!  சொல் .
 அந்த ஆனந்தமான
லக்னம் எப்பொழுது ?
அந்த  நேரம்  எனக்கு இந்தப்
 பிறவியின் பலன்     கிடைக்கும்   நேரம்.
 என்னுடைய  ஒழுக்கம் ,
புண்ணியம் சுகத்தின் அழகான எல்லை
அந்த  நேரமே .
சாதகப் பறவைகளின்  ஜோடிகள்  குளிர்கால சுவாதி நக்ஷத்திரத்தின்  மழையை  ஆவலாக எதிர்பார்ப்பதுபோல் , 
இந்த ராஜதிலக நல்ல முஹூர்த்த நேரத்தை 
  ஆண்களும் பெண்களும்  வியாகூலத்தோடு  எதிர்பார்க்கிறார்கள் .
நான்  உனக்கு  திருஷ்டி சுத்தி போடுகிறேன்.
 நீ சீக்கிரம்  குளித்து விட்டு  ,
நீ  விரும்பும் இனிப்புகளை   சாப்பிடு .
பிறகு அப்பாவிடம் செல்.
மிகவும்   தாமதமாகி விட்டது.
அம்மாவின்  அனுகூலமான சொற்களைக்கேட்டு ,
அவை சொற்களாகத் தெரியவில்லை.
 அன்பு என்ற கற்பக  விருக்ஷத்தின்  பூக்கள்.
அதில் சுகம் என்ற மகரந்தம் நிரம்பி இருந்தது.
ராஜலக்ஷ்மியின் மூலம் தான் அவை.
இப்படிப்பட்ட சொல்லென்ற பூக்களைப் பார்த்து
ராமர் என்ற  வண்டு    ரீங்காரமிடுகிறது.

அறத்தின்  அச்சான    ராமர்        அறத்தின்   இயக்கம்
அறிந்து மிகவும்  மென்மையான குரலில்  சொன்னார்--
"அம்மா ! அப்பா,   எனக்கு வன ராஜ்யத்தைக்
கொடுத்துள்ளார்.
அங்கே என்னுடைய செயல்கள்  எல்லாமே நடக்கும்.
 நீ ங்கள்    மகிழ்ச்சியான மனதுடன்  எனக்கு  அனுமதி அளியுங்கள்.
என்னுடைய  வன -யாத்திரை ஆனந்தமாக -
நலமுடன் முடிய  ஆசி  கூறுங்கள்.
என் மீதுள்ள அன்பினால் தப்பித் தவறி   கூட
  பயப்பட வேண்டாம்.
அம்மா! உங்கள் கிருபையால்  ஆனந்தமே உண்டாகும்.  
நான்  பதினான்கு   ஆண்டுகள்
வனவாசம்     முடித்து
அப்பாவின் வாக்கைக் காப்பாற்றி
நலமுடன் திரும்பி வருவேன்.






 நீங்கள்  வருத்தப்பட  வேண்டாம். 

ராமசரித மானசம் --அயோத்தியா காண்டம் -பக்கம் -பதினெட்டு.

ராமசரித மானசம் --அயோத்தியா காண்டம் -
           பக்கம் -பதினெட்டு.

நகரக் குலப்பெண்கள்   கைகேயிக்கு  அறிவுரை வழங்கினர்.

குலப்பெண்கள் கூறிய  அறிவுரை,
  இனிமைதரக்கூடியது.நன்மை தரக்கூடியது.
ஆனால் கொடிய மனம் படைத்த கூனியின் போதனைகள்
கைகேயியை   செவிடாக்கிவிட்டது.

  துளசி தாசர்   சொல்கிறார் --
சூரியன்  இன்றி   பகல் சோபிக்காது.
உயிரின்றி உடலால்  பயனில்லை.
நிலவின்றி இரவு  சோபிக்காது.
அவ்வாறே  ராமரின்றி   அயோத்யா  கலை  
இழந்துவிடும்.
அடி பெண்ணே! நீ இதயத்தில்
 இதை எண்ணி பார்த்தால்  சரி.

கைகேயி   எந்த   பதிலும்  பேசவில்லை.
அவள்  சஹிக்கமுடியாத
 கோபத்தின்  காரணமாக ,
தன் நிலை  மறந்து   நடந்துகொண்டாள்.
அவளுடைய  பார்வை  பசியான  புலி  மான்களைப்
பார்த்துக் கொண்டிருப்பது  போல் பயங்கரமாக இருந்தது.
அப்பொழுது   தோழிகள்    தீர்க்க  முடியாத  நோய் வந்துவிட்டது எனக் கருதி  விட்டுவிட்டு சென்றுவிட்டனர்.
எல்லோரும்  அவளை முட்டாள், துரதிருஷ்டசாலி  என்று
சொல்லிக்கொண்டே சென்று விட்டனர்.
ஆட்சி  செய்யும் கைகேயியை
தெய்வம் பாழ் படுத்திவிட்டது.
இவள் செய்த இரக்கமற்ற செயலை வேறு யாரும்
செய்யமாட்டார்கள்.
நகரத்தின்  எல்லா    ஆண்களும்  பெண்களும்  அந்த  தீய  நடத்தை யுள்ள  கைகேயியை கோடிக்கணக்கான தகாத
வார்த்தைகளால்  திட்டி    புலம்பிக்கொண்டிருந்தனர்.
மக்கள் மனது பயங்கர வருத்தத்தால் எரிந்து கொண்டிருந்தது.  
ராமரின்றி  வாழும்   நம்பிக்கையே  இல்லை
என்று அனைவரும்      பெரு மூச்சு விட்டு சொல்லிக்கொண்டிருந்தனர்.
மிகப்பெரிய பிரிவு   ஏற்படும்  போது
 நீர்வாழ் பிராணிகள் தண்ணீர் வறண்ட நிலையில்  
துடிப்பதுபோல்   மக்கள்  வேதனையில்  துடித்துக் கொண்டிருந்தனர்.

ஸ்ரீ ராமச்சந்திரர்  அன்னை கௌசல்யாவிடம்  சென்றார்.
அவர்   முகம்    மிகவும்  மகிழ்ச்சியாக  இருந்தது.
மனதில் பல மடங்கு    உற்சாகம்  இருந்தது.
அவர் மனதில்  கவலை  இல்லை.
கைகேயி அன்னையின்    கட்டளை,
அப்பாவின் மௌனமான   சம்மதம்,
ராமரின் கவலை போய்விட்டது.

இப்பொழுது  ராமரின்  மனம்  புதியதாக  பிடித்த
யானையைப்  போன்றும் ,     பட்டாபிஷேகம்
அந்த யானையைக் கட்டும் முள்  சங்கிலி
 போன்றும்  இருந்தது.
காட்டிற்குச்  செல்ல வேண்டும்  என்பதைக் கேட்டு
தன்னை கட்டிலிருந்து விடுபட்டதாக  எண்ணி  ஆனந்தம்
அதிகரித்துவிட்டது.
  ரகுகுல திலகர்     ராமர்  இரு    கைகளையும்  கூப்பி
 ஆனந்தமாக அம்மாவின் சரணங்களில்     தலை
வைத்து    வணங்கினார். அம்மா அவருக்கு  ஆசிகள்  வழங்கினார் .  அன்புடன் ஆலிங்கனம் செய்தார்.
அவருக்கு  நகைகளும்  துணிகளும்  கொடுத்தார்.
அன்னை மீண்டும்  மீண்டும் ராமருக்கு முத்தமழை பொழிந்தார்.    கண்களில்  அன்புக் கண்ணீர் ஆனந்தக்கண்ணீராக  பெருக்கெடுத்தது.
அங்கம்ழுவதும் ஆனந்தமாக   இருந்தது.
அவரின்    அதீத  அன்பு     அழகான   ஸ்தனங்களில்
பால் ஊறி  ஓடத் தொடங்கியது.
அவருடைய  மகிழ்ச்சி    ஏழைக்கு குபேரன்  பதவி
கிடைத்தது போல்  இருந்தது.

Wednesday, April 19, 2017

ராமசரித மானஸ் --அயோத்யகாண்டம்--பக்க -பதினேழு .

ராமசரித மானஸ் --அயோத்யகாண்டம்--பக்கம் -பதினேழு .


               நெருப்பு அனைத்தையும் எரித்து விடும்.
   சமுத்திரத்தில் அனைத்தும்    சேர்ந்து  கலந்துவிடும்.
 அபலை    என்ற  பெண் பலத்தில்  குறைந்தவள்  இல்லை. பெண்ணினம் அனைத்தையும்  செய்ய முடியும்.
   உலகில்   எமன்  ஒருவரையும் விட மாட்டான் .
அப்படியே   தான்      பெண்ணினம்  பலம்   வாய்ந்தது.
    பகவான்   எப்படிப்பட்ட     நல்ல  செய்தி சொல்லி ,
  இப்படி  ஒரு  கெட்ட   செய்தி  சொல்லியிருக்கிறார்.    எதைக்காட்டி ,எதைக் காட்ட  விரும்புகிறார்.
ஒருவன் சொல்கிறார்  ---"அரசன்,     கெட்ட  கைகேயிக்கு  சிந்தித்து   வரம்  தரவில்லை .
 அரசன் செய்தது   சரி இல்லை."

  கைகேயியின்  பிடிவாதத்தை   ஏற்று    அரசர்
  தானே எல்லா துன்பங்களுக்கும்  ஆளாகிவிட்டார்.  மனைவியின் கட்டுப்பாட்டில் , அன்பில் ,
   அறிவையும் குணத்தையும் இழந்து  விட்டார்.
 ஆனால்  அரச  மரியாதை  அறிந்தவர்கள்  அறம் அறிந்தவர்கள்  அரசனைக் குறைகூறவில்லை.
அவர்கள்   சிபி, ததிசி , ஹரிஷ்ச்சந்திரன்  போன்றோரின்
கதைகளைக் கூறி   வம்சத்தின் சிறப்பை   வர்ணித்தனர்.
சிலர் பரதனின்  கோரிக்கையால் தான் இப்படி என்றனர்.
சிலர் வருத்தத்தால்  எதுவும்  பேசவில்லை.
சிலர் வியப்பில் காதுகளைப் பொத்திக்கொண்டு
  இந்த  செய்தி  பொய்  என்றனர்.
 இப்படி சொன்னால் உன் புண்ணியம் போய்  பாவம்  வந்துவிடும் என்றனர்.
பரதனுக்கு  தன் உயிரைவிட  ராமர்  அன்பானவர்.
நிலவு  தன்  குளிர்ச்சியை விட்டு விட்டு
  நெருப்பைக் கக்கினாலும்    கக்கலாம்.
 அமிர்தம் விஷம் போல் மாறலாம் .
ஆனால்  பரதன்  கனவிலும் ஸ்ரீ ராமருக்கு
எதிராக எதுவும்  செய்யமாட்டார்.

 அங்கு சிலர் கடவுளை  குறை கூறிக்கொண்டிருந்தனர். கடவுள்   அமிர்தத்தைக்  காட்டி ,விஷத்தைக் கொடுத்துவிட்டார்.   நகரம்  முழுவதும் குழப்பம்   ஏற்பட்டது.
எல்லோரும்  கவலையில் மூழ்கினர்.
 மனதில்   சகிக்க முடியாத எரிச்சல் ஏற்பட்டது.
ஆனந்தமும் உற்சாகும் போய்விட்டது.
  அந்தணர்களின்  மனைவிகள், குலப் பெண்களில்  வயதானவர்கள் , கைகேயிக்குப்
   பிரிய மான  வர்கள் ,அவளின் குணத்தைப் புகழ்ந்து கற்பிக்கத்  தொடங்கினர்.
 ஆனால் கைகேயிக்கு அவர்கள் சொல்வது
  அம்புகள்  தைப்பது  போல் இருந்தன.
அவர்கள்   அவளிடம் உனக்கு பரதனைவிட  ராமர் மீதுதானே
அன்பு அதிகம். உலகத்திற்கே இதெல்லாம்  தெரியும். . ஸ்ரீ ராமர்  மீது     உனக்கு  இயற்கையான அன்பு உண்டு . இப்பொழுது   அவர்     செய்த  குற்றம் என்ன?
எப்பொழுதுமே    உனக்கு   சக்களத்தி
  பொறாமை  இருந்ததில்லையே.
 நாடு  முழுவதுமே    உன் அன்பும் நம்பிக்கையும்  தெரிந்திருக்கிறது .
கௌசல்யா     உனக்கு  செய்த  கொடுமை என்ன ?
எதனால் நகரம்     முழுவதும்  இடியை   விழ வைத்தாய் ?

  சீதை  தன்  கணவனை   விட்டுவிடுவாளா ?
லக்ஷ்மணன் ராமனைப் பிரிந்து  
 இந்த அரண்மனையில்  இருக்க முடியுமா ?
பரதன்   ராமரின்றி      அயோத்தியா   நகரை   ஆளமுடியுமா ?  ராமரின்றி  ராஜா உயிருடன் இருப்பாரா?
சீதை   இங்கு இருக்கமாட்டார்.
 லக்ஷ்மணன் இருக்கமாட்டான்.
பரதன்  ஆட்சி செய்யமாட்டான்.
இதெல்லாம் எண்ணிப்பார்த்து  
 கோபத்தை விட்டுவிடு.

சோகமும்  களங்கமும்  உள்ளவளாக   ஆகிவிடாதே.
பரதனுக்கு  கட்டாயமாக இளவரசர் பதவி   கொடுத்து    விடு.
ஆனால் ராமரை காட்டிற்கு அனுப்பிவிடாதே. அவருக்கு  காட்டில்  வேலை  என்ன ? ராமருக்கு  நாடாளும்    ஆசை  இல்லை.
 ராமர்  அறத்தின் அச்சாக இருப்பவர்.
எந்தவித  பற்றும்   இல்லாதவர்.
ஆகையால்  ராமர் பரதனின்   ராஜ்ய
பரிபாலனத்திற்கு        இடையூறாக    இருக்கமாட்டார்.
இதற்கும்   உன்   மனம்  ஒப்பாவிட்டால் ,
 ராமனை  ராஜமஹலை   விட்டு  விட்டு
  குரு வீட்டில் இருக்கும்     வரத்தைக்   கேள்.
நாங்கள்   சொல்லும்படி  நடந்து   கொண்டால்
 உனக்கு  எதுவும்   தீங்கு   வராது.
  நீ   கிண்டலாகச்   சொல்லி  இருந்தால்
  வெளிப்படையாக சொல்லிவிடு.
ராமரைப்  போன்ற  மகன்
 கானகம்  செல்லும் யோக்யதை உள்ளவனா?
  இதைக்கேட்டு     மக்கள்  என்ன  சொல்லுவார்கள்.
   சீக்கிரம்   எழுந்திரு .    இந்த  சோகமும் களங்கமும்  போக்க    ஆவன  செய்.  குலத்தைக் காப்பாற்று.
ராமரை  காட்டுக்கு  அனுப்பும்  பிடிவாதத்தை   விட்டு   விடு.

Tuesday, April 18, 2017

ராமசரிதமானஸ் --அயோத்தியா காண்டம் --பக்கம் பதினாறு

ராமசரிதமானஸ் --அயோத்தியா காண்டம் --பக்கம் பதினாறு

   
ராமர் அப்பாவை   அன்பின்   கட்டுப்பாட்டில்
இருப்பதைப் பார்த்து ,கைகேயி மீண்டும் அப்பாவின் மனதை புண்படுத்தும் பேச்சுக்கள்  பேசக்கூடாது  என அறிந்து ,
தேச  ,கால  ,சந்தர்பத்திற்கு ஏற்றவாறு  எண்ணி   பணிவான சொல்லில்  சொன்னார் - அப்பா, நான் சொல்வதை அதிகப்பிரசிங்கித்தனம் என  எண்ண  வேண்டாம். நான் உசிதமில்லாமல் பேசுவதை    என்னை    பாலகன் என்று கருதி  மன்னித்துவிடுங்கள்.
இந்த சின்னஞ்சிறு   விஷயத்திற்காக  , இவ்வளவு வருத்தமா ?
இந்த விஷயத்தை     எனக்கு  முதலிலேயே  சொல்லவில்லை.
நீங்கள் இந்த நிலையில்  இருப்பதைப்  பார்த்து நான்   அம்மாவிடம்  கேட்டேன்.அவர் சொன்னதைக்  கேட்டு எனக்கு  மிகவும்  மகிழ்ச்சி. உள்ளம் மிகவும் குளிர்ந்து விட்டது.
அப்பா!  இந்த மங்களமான  நேரத்தில்  கவலையை விட்டுவிடுங்கள்.  மன மகிழ்ச்சியுடன் எனக்கு கட்டளை இடுங்கள்.  இதைக் கூறும்போதே  ராமரின் உடல் முழுவதும்  ஆனந்தமாக  இருந்தது. மகனின் நல்ல குணமும் நடத்தையும்  தந்தைக்கு மிகவும்  ஆனந்தம் தருபவை. தாய்-தந்தையை

உயிரைவிட அதிகமாக நேசிப்பவன்  நான்கு பலன் களுக்கும் உரியவன் . அறம் ,    பொருள் ,    இன்பம் , வீடு நான்குமே அவர்கள்  கைப்பிடியில் .

தந்தையே!   உங்களின்  கட்டளையை  கடைப்பிடித்து ,
இப்பிறவிப் பயனைப் பெற்று சீக்கிரம் நான்  சீக்கிரம் வந்துவிடுவேன், எனக்கு கானகம் செல்ல அனுமதி கொடுங்கள்.   நான் அம்மாவிடம் அனுமதி பெற்று வருகிறேன். பிறகு உங்கள் பாதங்களை வணங்கி
வனவாசம் செல்வேன்.
 ராமர் அங்கிருந்து சென்றுவிட்டார்.  அரசர் சோகத்தின் காரணமாக எந்த பதிலும் சொல்லவில்லை. அந்த மிகவும்
கசப்பான செய்தி , தேள்   கொட்டியதும்  உடல்  முழுவதும் விஷம்  பரவியதுபோல்   தேள் விஷம் உடல் முழுவதும் பரவுவது  போல்  நகரம் முழுவதும்  பரவியது.

  காட்டுத் தீயால்   கொடிகளும் மரங்களும் வாடியதுபோல்
ராமர்  கானகம் செல்லும் செய்தி கேட்டு நகரத்தில்  உள்ள  எல்லா  ஆண்களும்   பெண்களும்   கவலைப்பட்டனர்.
யார்   எங்கிருந்தாலும்   செய்தி கேட்டு அங்கேயே  தலையில் அடித்துக்கொண்டு அழத்தொடங்கினர். மிகவும் துன்பம் பரவியது. யாருக்குமே தைரியம் வரவில்லை.
எல்லோரின் முகமும் வாட்டமாக இருந்தது.
கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. தாளாத்துயரில் மூழ்கினர்.  கருணை ரசத்தின்  அயோத்தியாவில் முரசு கொட்டி  இறங்கியதுபோல் தோன்றியது.

 எல்லாம் சரியாக நடக்கும் போது, கடவுள் அனைத்தையும்
கெடுத்துவிட்டார்.  எல்லா  இடங்களிலும்  மக்கள் கைகேயியைத் திட்டத் தொடங்கினர்.  இந்தப் பாவி  நல்ல வீட்டில்  நெருப்புவைத்துவிட்டாளே.  அவள்  தன் கைகளாலேயே   தன் கணங்களைப் பிடுங்கி குருடாகிக்கொண்டிருக்கிறாளே.  அமிர்தத்தை எரிந்து விட்டு விஷத்தை ருசி பார்க்கரிம்புகிறாளே. இந்த கொடுமைக்காரியான  தீயபுத்தி உள்ள துரதிர்ஷ்ட சாலியான கைகேயி ரகுவம்சம் என்ற மூங்கில் வனத்தை  எரிக்கும் நெருப்பு ஆகிவிட்டாளே.
இலையில் உட்கார்ந்து மரத்தை வெட்ட   ஆரம்பித்து விட்டாள்.
சுகத்தில்   சோகம்வந்து   சூழ்ந்துவிட்டது.  ராமர் இவளுக்கு உயிரைவிட  மிக  அன்பானவர். அப்படியிருந்தும் இந்த கொடூரமான    நடத்தைக்குக்  காரணம்   தெரியவில்லையே.
பெண்ணின் குணம் எப்படிப் பார்த்தாலும் புரியமுடியாது.
பெண்ணின்  நடத்தையை அறிய முடியாது. நாம்  நிழலைகூட  பிடித்துவிடலாம்.  ஆனால்  பெண்ணின் மனம் புரிந்துகொள்ள    முடியாது.  என்று கவிஞர்கள் பாடியது சத்தியவாக்காகிறது.


Sunday, April 16, 2017

ராமசரித மானஸ்--அயோத்தியா காண்டம் -பக்கம் பதினைந்து.

ராமசரித மானஸ்--அயோத்தியா காண்டம்
 -பக்கம் பதினைந்து.

சூரிய குல சூரியன்,
ஆனந்தத்தின் இருப்பிடம்
ஸ்ரீ  ராமச்சந்திரர்   மனதில் புன்னகையுடன் ,
எந்தவித      தூஷணைகளின்றி
 சொல்லின் அணிகலன்
போல் மென்மையாகப் பேசினார்.
 அன்னையே! பெற்றோருக்கு  கீழ்படிந்து
நடக்கும் புத்திரன் மிகவும்
அதிர்ஷ்டசாலி.  
 கீழ்படிந்து  தன் பெற்றோரை
 திருப்திப் படுத்தும் மகன்  உலகில்    கிடைப்பதரிது.
 நான் வனவாசம்    சென்றால் முனிவர்களை சந்திப்பேன். எனக்கு    பல  வகையிலும்      நல்லதே  நடக்கும் .
அப்பாவின் கட்டளை நான் நிறைவேற்றுவேன்.
 உன்னுடைய   சம்மதமே  போதும்.
என்னுடைய் உயிரைவிட அன்பான
பரதன் ஆட்சி செய்வான்.
 இன்றைய சூழல் எனக்கு கடவுள்
 அனுகூலமாக இருப்பதையே காட்டுகிறது.
 இப்படிப்பட்ட
வேலைக்காக  நான்  காட்டிற்குச்  செல்லவில்லை
 எனில்
நான் முட்டாளின்  கூட்டத்தில் ஒருவனாக எண்ணப் படுவேன்.
 கற்பகமரம் இருக்க  ஆமணக்கு  மரத்திற்கு
யாராவது   பணிவிடை  செய்வார்களா ?
அமிர்தத்தை  விட்டுவிட்டு விஷத்தைப் பருகுவார்களா ?
நீ மனதில் எண்ணிப்பார்.
இந்த  வித சந்தர்பத்தை  முட்டாள் கூட விடமாட்டான்.
 எனக்கு    என் தந்தையின் நிலை கண்டுதான்
 வருத்தமாக  இருக்கிறது.
 எனக்கு தந்தையின் நிலை கண்டு
 நம்பிக்கை வரவில்லை.
மஹாராஜா  மிகவும்  பெரிய   தீரர் .
 குணங்களின் ஆழ்டல் .
எதோ நான் மிகப்பெரிய  குற்றம்  புரிந்து விட்டேன்.
அதனாலேயே அரசர் என்னிடம்  பேசவில்லை.
அம்மா! என் மேல் ஆணை .
 நீ உண்மையைச்    சொல் .
ஸ்ரீ ராமரின் நல்ல நேர்மையான
குணத்தைக் கைகேயி
தவறாகவே நினைக்கிறாள்.
தண்ணீர்    ஒரே மாதிரி   இருந்தாலும்   அட்டை கோணலாகத்தான் செல்லும்.
ராணி ராமரின்  ஏற்புடைமை  கண்டு மகிழ்ந்து      கபடத்துடன் பேசினாள்--
உன்மேல்  ஆணை.
பரதன்     மேல்   ஆணை.
எனக்கு அரசனின்   துன்பத்திற்கு  
 வேறு  எந்த  காரணமும்   தெரியவில்லை.  
மகனே !   உன்னால்   எவ்வித தவறும்  நிகழாது.
  நீ  உன்     பெற்றோர்களுக்கு சகோதரர்களுக்கும்
  நன்மையே  செய்பவன்.
 நீ சொல்வதெல்லாம் உண்மையே .
நீ தந்தையின் கட்டளை நிறைவேற்ற தயாராக இரு.
நீ உன் தந்தையின் புகழுக்கு இழுக்கு
 ஏற்படா  வண்ணம் நடந்துகொள்.
அவரை தெளிவுபடுத்து.
கடவுளின் புண்ணியத்தால் தான்
 அவருக்கு  உன் போன்ற  உத்தமன்
புத்திரனாக உள்ளாய்.
கடவுளை அவமானப்படுத்தாதே.
அன்னை கைகேயியின் வார்த்தைகள் அவருக்கு
கங்கையில் நல்லது கெட்டது   கலந்து ,
புனிதமாக அழகாக ஓடுவது  போல்  இருந்தது.
இதற்குள்  அரசனின் மயக்கம்  தெளிந்தது. அவர் ராமரை நினைத்து  "ராமா, ராமா " என்று புலம்பினார்.
புரண்டு படுத்தார். அதுதான் சமயம் என்று மந்திரி ராமர் வந்ததைச் சொன்னார்.
தசரதர்   ராமர் வந்தததைக் கேட்டு ,
தைரியத்தை வரவழைத்து
கண் களைத் திறந்தார். அமைச்சர் அவரை சரியாக உட்காரவைத்தார்.
அரசர்   தன்னை ராமர்   வணங்குவதைப்
பார்த்தார். அன்பின் மிகுதியால்  ராமரைக்
கட்டித்  தழுவினார். அரசர் ராமரைப் பார்த்துக்கொண்டே இருந்தார். அவர் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.
துன்பத்தின் மிகுதியால் அரசரால் பேச  முடியவில்லை.
அவர் அடிக்கடி ராமரைத் தழுவினார்.
மனதில் பிரம்மாவிடம் ராமர் காட்டுக்குப்
போகக் கூடாது என்று வேண்டினார்.
பிறகு மகாதேவனை
வேண்டினார்.  ஹே சதாசிவா !  நீங்கள் என் வேண்டுகோளைக் கேளுங்கள். நீங்கள் விரைவில்
மகிழ்ச்சி அடைபவர். கேட்கும் வரம் அளிப்பவர்.
என்னை எளிய சேவகனாக ஏற்று , என் துன்பத்தைப்
போகுங்கள்.  நீங்கள் ஒரு தூண்டு கோலாக
அனைவரின் இதயத்தில் இருக்கிறீர்கள்.
ராமருக்கு ஒழுக்கம்-அன்பு வாக்கு எல்லாம் விட்டுவிடும் அறிவைத்  தாருங்கள். அவன் எதையும் கேட்காமல்
வீட்டிலேயே இருக்கும்படி  செய்யுங்கள்.
உலகில் எனது புகழ் இகழ்ச்சியாக மாறினாலும் சரி,
எனக்கு அவப்பெயர் வந்தாலும்  சரியே.
எனக்கு நரகம் கிடைத்தாலும் சரியே. பூர்வ ஜன்ம புண்ணியத்தால்  ஸ்வர்கம் கிடைத்தாலும்
சரியே. நான் அனைத்து இன்னல்களையும் சகித்துக்கொள்கிறேன்.என் ராமன் என் கண்ணை விட்டு மறைத்து காட்டுக்குச் சென்று விடக் கூடாது.
அரசன் எதுவும் பேசாமல்
மனதிலேயே அனைத்தையும் அசை போட்டுக்கொண்டிருந்தார்.




















   அவர்  தைரியத்தை  








அயோத்யா காண்டம் --ராமசரிதமானஸ் --பக்கம் பதினான்கு.

அயோத்யா காண்டம் --ராமசரிதமானஸ் --பக்கம் பதினான்கு.


அரசனின் உதடுகள் காய்ந்து கொண்டிருக்கின்றன. அவர் உடல் முழுவதும் எரிச்சலாக இருந்தது. மணி இல்லாமல் பாம்பு வருந்துவதுபோல் இருந்தார். அருகிலேயே கோபத்தின் அவதாரமாக கைகேயியைப் பார்த்தார். அவள் நிற்பது நேரடியாக மரணமே அருகில் உட்கார்ந்து இருப்பதுபோல் இருந்தாள். தசரதரின் மரண நேரம்  நெருங்குவதுபோல் இருந்தது.

  ராமரின் குணம் மென்மையாகவும் கருணை  மயமாக  இருந்தது. அவர் தன் வாழ்க்கையில்  முதல் முறையாக வருத்தமான காட்சி இது. இதற்கு முன் அவருக்கு துன்பம் என்பதே தெரியாது.  இருந்தபோதிலும் மிகவும் தைரியத்தை வரவழைத்து மிக இனிய குரலில் கைகேயியிடம் கேட்டார்-"அம்மா! எனக்கு அப்பாவின் மனத்துன்பத் திற்கான காரணத்தைச் சொல்லவும். நான் அவர் துன்பத்தைப் போக்க முயல்கிறேன்.
    இதற்கெல்லாம் காரணம் உன் அப்பாவிற்கு உன்மீதுள்ள அதிக அன்பேயாகும்.
அவர் எனக்கு இரண்டு வரங்கள் கொடுப்பதாகக் வாக்களித்தார்.  எனக்குப்பிடித்த வரங்களைக் கேட்டேன்.
அதைக்கேட்டதும்
அரசரின் மனதில் கவலை ஏற்பட்டுவிட்டது. காரணம் அவர் உன்னைப் பிரிய விரும்பவில்லை.  அவருக்கு இப்பொழுது
மகனின் அன்புக்கும் எனக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றவும் முடியாமல் தர்மசங்கடத்தில் உள்ளார்.
உன்னால் முடிந்தால் அரசகட்டளையை   ஏற்று அவரின் மனத்
   துன்பத்தை போக்கிவிடு. கைகேயி கசப்பான வார்த்தைகளைப்  பேசினாள். நாக்கு வில் போன்றும்  ,சொற்கள் அம்புகளாகவும் குறி அரசர் மீதும் இருந்தது. கடுமை சிறந்த வீரனாகி  வில்வித்தை கற்றுக்கொண்டிருப்பதுபோல்  இருந்தது.  ராமரிடம் அனைத்தையும் கூறி கொடுமையே உரு எடுத்ததுபோல்
அமர்ந்திருந்தாள்.   

Sunday, April 9, 2017

ராமசரித மானஸ்---அயோத்யா காண்டம பக்கம் பதிமூன்று

ராமசரித மானஸ்---அயோத்யா காண்டம  பக்கம் பதிமூன்று

     
 அழுது புலம்பிக்கொண்டே இருக்க  விடிந்துவிட்டது.

அரண்மனை வாயிலில்  
வீணை ,புல்லாங்குழல் , சங்கு போன்ற இசைக்கருவிகள்  இசைக்கத் துவங்கின.  பாட் இன பாடகர்களும் மற்ற பாடகர்களும் பாடிக்கொண்டிருந்தனர். அரசவையில் இந்த மங்கள நிகழ்ச்சிகள்    அரசருக்கு மகிழ்வைத் தருபவை.
ராமரைப் பார்க்க  ஆவலுடனும் உற்சாகத்துடனும்
மக்கள் தூங்காமல் இருந்தனர் .

  அரண்மனைவாயிலில்    அமைச்சர்கள் மற்றும் சேவகர்கள்

கூட்டம்    கூடியது.  அனைவருக்கும்   தசரதர் ஏன்  இன்னும்  
எழுந்திருக்கவில்லை  . சூரியோதயம் ஆகிவிட்டது. அப்படி
முக்கிய காரணம் எதுவாக இருக்கும்   என்று பேச  ஆரம்பித்தனர்.
தினந்தோறும்    எழுந்துவிடும்  அரசர்  எழுந்து வராமல்
இருப்பது   எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது.

   அரசனை   எழுப்பி அழைத்துவர ஆணையிடப்பட்டது.
சுமந்திரர் அரண்மனைக்குள்  சென்றார். அனால் அரண்மனையே பயங்கர துன்ப சூழலில் மூழ்கியிருந்தது.

அச்சூழலைக்  கண்டு  அமைச்சர் பயந்துவிட்டார்.

அங்கு துன்பம்    மற்றும்  ஆபத்தின்   கூடாரம் போடப்பட்டு இருந்தது  போல் காணப்பட்டது. அங்குள்ளவர்கள்  யாரும்
பதில் சொல்லவில்லை. அவர்     கைகேயி  இருக்கும் இடத்திற்குச் சென்றார். அரசரை வணங்கிஅமர்ந்தார்.
அரசரின் நிலைகண்டு   வருந்தினார்.
அரசர் கவலையே    உருவெடுத்ததுபோல்  இருந்தார்.
முகம் வெளிறிவிட்டது. தாமரை வாடியதுபோல் வேதனையால்   வாடி  இருந்தார். பயத்தின் காரணமாக அரசர்   எதுவும்  பேசவில்லை.  அப்பொழுது தீமையால் நிறைந்த  நலமே இல்லாமல்  கைகேயி  பேசினாள்.
அரசருக்கு  இரவு  முழுவதும் தூக்கம் வரவில்லை.
கடவுளுக்குத்   தான் காரணம்  தெரியும்.
அவர் "ராம்,"ராம்" என்று     புலம்பியே   இரவைக் கழித்தார்.
விடிந்து    விட்டது.  ஆனால் இதன்   ரஹசியத்தை  அரசர் யாரிடமும்    சொல்லவில்லை.
  நீ சீக்கிரம்  ராமனை  அழைத்துவா . பிறகு விவரம் கேட்கவும்.
 மந்திரி   ராணியின் ஏதோ    சூழ்ச்சிதான் இருக்கும் என்று
அனுமானித்துக்    கொண்டே    சென்றார். மந்திரிக்கு அதிக கவலை . அவரால் சரியாக  நடக்க    முடியவில்லை.
ராமரை அழைத்து   அரசர் என்ன சொல்லப் போகிறார்?
அவர் தன்னை திடப்படுத்திக் கொண்டு   வாயிலை அடைந்தார்.   அவரை அனைவரும் மிக வேதனையோடு
வருவதைப்  பார்த்தனர் .

  எல்லோரையும்   சமாதானப்  படுத்திவிட்டு    ராமரின் இருப்பிடம்    சென்றார்.   ராமர் அவரைத் தன தந்தையாகக்
கருதி மரியாதையுடன் வரவேற்றார்.
அமைச்சர்   ராமரிடம்  அரச  கட்டளையைக்    கூறி  அழைத்துச் சென்றார்.  ராமர் செல்லும்   காட்சி    மக்களுக்கு
மிக மன  வேதனை  அளித்தது.
 ரகுவம்ச    திலகமான    அரசர் மிக மோசமான நிலையில்  இருந்தார்.    பெண்  சிங்கத்தைப்  பார்த்து   ஒரு   கிழவேழம்  பயந்து விழுந்து இருப்பதுபோல்   இருந்தார்.



Friday, April 7, 2017

ராமசரிதமானஸ் --அயோத்யகாண்டம் --பன்னிரண்டு

ராமசரிதமானஸ் --அயோத்யகாண்டம் --பன்னிரண்டு

      தசரதர் மிகவும் கவலை அடைந்தார். அவர் உடல் முழுவதும்  தளர்ந்து விட்டது. அவரின் நிலை யானை கற்பக விருக்ஷத்தை பிடுங்கி எரிந்ததுபோல் ஆயிற்று.
தொண்டை வறண்டு விட்டது. பேச முடியவில்லை. தண்ணீரின்றி  பஹினா என்ற ஒருவகை மீன் துடிப்பது போல்
துடித்தார்.
   கைகேயி மீண்டும்   கசப்பான  கடிமையான
 சொல் அம்புகளை வீசினாள்.   அவை வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சியதுபோல் இருந்தன. சொன்னாள்--"கேள்.கேள், என்று ஏன்  ? சொன்னீர்கள். இப்படித்தான் செய்யவேண்டும் என்றால்  நீங்கள் என்னிடம் வரம் கேள் என்று ஏன் சொல்லவேண்டும்?
அரசே! அட்டகாசமா சிரிப்பதும் ,திட்டுவதும் ஒன்றாகச் செய்ய முடியுமா ?
வள்ளல் என்று  சொல்ல வைப்பதும் ,கஞ்சத்தனம்  
செய்வதும்  முடியுமா  ?   போரில்   வீரமும் காட்டவேண்டும்
அடியும்    விழக்கூடாது  இரண்டும்  முடியுமா ?

ஒன்றால் நீங்கள் செய்த வாக்கை மீறுங்கள். அல்லது தைரியமாக  இருங்கள்.  இவ்வாறு உதவியில்லா பெண்கள் போல்  அழாதீர்கள்.
உண்மையை  விரதமாகக்    கொண்டவர்களுக்கு
உடல், உறவு,  மனைவி,   மகன்கள்,    செல்வம்,  பூமி  எல்லாமே   தூசி  போன்றது என்று சொல்லப் பட்டிருக்கிறது.

 கைகேயியின்   இதயத்தைத்  துளைக்கும்  பேச்சால்
அரசர் சொன்னார் -"நீ   எதை   விரும்பினாலும் ,
உன்னுடைய தவறு எதுவும் இல்லை. எனக்கு எமன் பிசாசாகிப் பிடித்துக்கொண்டான். அதனால் தான் நீ இவ்வாறெல்லாம்
பேசுகிறாய்.
 பரதன் தப்பித்தவறி கூட    அரச பதவி விரும்ப மாட்டான்.
மிகத் திறமையாக  உன்னுடைய  நாக்கில்  தீய அறிவு குடிபெயர்ந்து    விட்டது.  இதெல்லாம்  என்    பாவத்தின் பலன்.  அதனால்  கெட்ட  நேரத்தில் இறைவன் எதிராக செயல் படுகிறான்.
  நீ பாழ்  படுத்திய  அயோத்தியாவை மீண்டும் ராமர் அழகு படுத்துவார். சர்வ நற்குணங்களும் கொண்ட ஸ்ரீ ராமர் ஆட்சி செய்வார். எல்லா சகோதரர்களும் அவருக்கு தொண்டாற்றுவார்கள். மூவுலகங்களிலும்  ராமர் புகழ் பரவும்.
 ஆனால் உன் மேல்  ஏற்பட்ட   களங்கம்    என்னுடைய  வருத்தம்    இறந்தாலும் போகாது. நிலைத்துவிடும்.
 இப்பொழுது நீ விரும்பியதைச்  செய் .
என்  முன்னால்    நிற்காதே.
உன்  முகத்தைக்   காட்டாதே.
 நான் கைகூப்பி   வேண்டுகிறேன்  நான்   உயிரோடு இருக்கும்
வரை என்னிடம் பேசாதே. "
அடி துரதிர்ஷ்டசாலியே!  நீ   இறுதிவரை  வருத்தப்படுவாய் .
நீ நரம்புக்காக   பசுவை வதம் செய்கிறாய்.  நீ சர்வநாசம் செய்து கொண்டிருக்கிறாய். என்று சொல்லிக்கொண்டே
பூமியில் விழுந்துவிட்டார்.
அவள் மௌனமாக  சுடுட்டில் பிரேத மந்திரம் சொல்வதுபோல் அமர்ந்திருந்தாள்.
 தசரதர் இறக்கை   இழந்த பறவைபோல் துடித்துக் கொண்டிருந்தார். ராமா!ராமா! என்றே புலம்பிக் கொண்டிருந்தார். அவர் விடியவே கூடாது என்று என்று வேண்டினார்.  ராமரிடம் யாரும் இந்த விஷயத்தை சொல்லக்கூடாது என்றே நினைத்தார்.
   "ரகு குலத்தின் குருவே!  சூரிய பகவானே!  நீங்கள் உதிக்கவேண்டாம். அயோத்தியாவைப் பார்த்தால் உங்களுக்கு மனவேதனை ஏற்படும்.   அரசரின்   அன்பு  எல்லையையும்
கைகேயியின் கொடூரத்தின்  எல்லையையும்    படைத்து விட்டார்.

Wednesday, April 5, 2017

ராமசரிதமானஸ் --அயோத்யா காண்டம் ---பக்கம் பதினொன்று

              ராமசரிதமானஸ் --அயோத்யா காண்டம்
                               ---பக்கம் பதினொன்று


 கோபத்தில் எரிந்துகொண்டிருந்த கைகேயி எதிரில்
கோபம் என்ற உருவிய வாள்நிற்பதுபோல் நின்றாள்.
தீய அறிவு அந்த வாளின் பிடி , குரூரம் என்பது அதன் கூர்மை பதம் , கூனி மந்தரைஎன்ற சானைக் கல்லில்
 தீட்டி மிக கூறியதாக ஆக்கப்பட்டுள்ளது .

      அரசர் அது மிக கடுமையாகவும் பயங்கரமாகவும் இருந்ததைப் பார்த்தார்.  அவர் மனதில் இவள் என்னுடைய உயிரை எடுத்துவிடுவாள் என்று தோன்றியது.
அரசர் நெஞ்சம் நிமிர்த்தி மிகவும் பணிவான குரலில் பேசினார்---அன்பே!நம்பிக்கையையும் அன்பையும்
போக்கி  இப்படி  தீய வரங்களை எப்படி கேட்கிறாய்?
எனக்கு பரதனும் ராமனும்  இரண்டு கண்கள்.  இதை
நான் சங்கரரின் மீது ஆணையிட்டு  சொல்கிறேன்.
அவரே சாட்சியாக இருக்கட்டும்.
 நான் கட்டாயம் தூதர்களை அனுப்புகிறேன்.
இரண்டு சகோதரர்களும் (பரதனும் சத்துருக்கனனும் ) செய்திகேட்டதும்  வந்து விடுவார்கள்.
நல்ல நாள்   பார்த்து  எல்லா  ஏற்பாடுகளும் செய்து பரதனை  அரசனாக்குகிறேன்.
ராமனுக்கு   அரசனாகும் பேராசை கிடையாது.
அவனுக்கு பரதன் மேல் அன்பு அதிகம்.
நான் தான்   நம்  குல  வழக்கப்படி   மனதில் பெரியவன் -சின்னவன் என்று பிரித்து  மூத்த மகனுக்கு பட்டாபிஷேகம் செய்ய  ஏற்பாடு செய்தேன்.
நான் ராமன் மீது நூறுதடைவைகளுக்கு  மேல்   ஆணை இட்டு
சொல்கிறேன்  ராமனின் அம்மா என்னிடம் எதுவும் கேட்கவில்லை. ராமனுக்கு அரசபதவி வேண்டும் என்று கௌசல்யா கேட்கவில்லை. நான் தான்  உன்னிடம் கேட்காமல் இப்படி செய்தேன்.
இதனால் என் மனவிருப்பம்  நடக்க வில்லை.
 இப்பொழுது கோபத்தை விட்டு விடு. சில நாட்களுக்குப்பின்
பரதன்  யுவராஜ் ஆகிவிடுவான்.
எனக்கு ராமனுக்கு  வனவாசம்  என்பதுதான்  மிகவும்  வருத்தமாக உள்ளது.  என் இதயம்   எரிகிறது.  இது  பரிகாசமா ?  கோவமா ?உண்மையா?
கோவத்தை விட்டு விட்டு   ராமனின்   தவறைச் சொல்.
ராமன் மிகவும்  சாது என்றுதான்  அனைவரும்   சொல்கின்றனர்.
  நீயே ராமனைப் புகழ்ந்திருக்கிறாய்.  அவனிடம் மிகவும் அன்பாக இருந்திருக்கிறாய். நீ புகழ்ந்ததும் அன்பு காட்டியதும்  பொய்யா ?    மெய்யா ?
அவன் விரோதிக்கே அனுகூலமானவன் . அம்மாவிடம் அனுகூலமற்று எப்படி நடந்து கொள்வான்.
 அன்பே! சிரிப்பையும் கோவத்தையும் விட்டுவிடு.
எண்ணி சிந்தித்து வரங்களைக் கேள். அப்பொழுதான் நான்
பரதனின் ராஜ்யாபிஷேகத்தைப் பார்க்க முடியும்.

     மீன்கள் தண்ணீரின்றி இருக்க முடியும். பாம்பு மாணிக்கம்
இன்றி இருக்கமுடியும்.    ஆனால்  நான் ராமனின்றி
உயிருடன் இருக்கமுடியாது.
 அன்பே!அறிவே!என்னுடைய   வாழ்க்கையே  ராமனின் தர்சனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
 அரசரின் ஒவ்வொரு வேண்டுகோளும்  கைகேயின் குரோதாக்னியை மேலும் அதிகப்படுத்தியது.
அது   நெருப்பில் நெய்   ஊற்றியது போல் இருந்தது.
 நீங்கள் என்ன சொன்னாலும் சரி , இங்கு உங்களது சொல் எடுபடாது. நான் கேட்டதைக் கொடுங்கள்.  முடியாது என்றால்
இல்லை என்று சொல்லி இகழ்ச்சியைப் பெறுங்கள்.
ராமர், நீங்கள் ராமரின்  அன்னை அனைவரும் நல்லவர்கள்.
கௌசல்யா என்  நலம் விரும்புபவள் . நான் அதை நினைவில்நடு அதன் பலனையே அவளுக்கு கொடுத்துவிடுவேன்.   விடிந்ததுமே  முனிவேடம்  தரித்து ராமன்   வனத்திற்குச் செல்லவில்லை  என்றாள்
நான் இறந்துவிடுவேன். உங்களுக்கு இகழ்ச்சியும்
அவப்பெயரும் ஏற்படும்.
     குரோதம் என்ற நதி   கரைகடந்து ஓடுவது போல்  கைகேயி எழுந்தாள். அந்த நதி பாவம் என்ற    மலையில்  இருந்து
வெளிப்பட்டு குரோதம் என்ற நீரினால் பெருக்கெடுத்து  பொங்கி   ஓடியது. அந்த பயங்கரத்தைப்   பார்க்க முடியாது.
இரண்டு வரங்களும் அந்த    நதியின்  இரு கரைகள்.
கைகேயியின் பிடிவாதம் அந்த      நதியின் ஓட்டம் .
கூனியின் தூண்டுதல் இந்த நதியின் சுழல்.
அந்த குரோத நதி ராஜா தசரதர் என்ற மரத்தை வேரோடு சாய்த்து    ஆபத்து என்ற கடலை நோக்கி செல்கிறது.

அரசருக்கு இந்த வரங்கள் உண்மை என்று உணர்ந்ததுமே தன் மரணம் பெண்ணை சாக்காக வைத்து தலையின் மேல் நடனமாடுகிறது முடிவெடுத்தார். உடனே தசரதர் கைகேயியின் காலில் விழுந்து  அன்பே! நீ சூரிய குலம்
என்ற மரத்திற்கு கோடாலி ஆகிவிடாதே. என்றார்.
நீ என் தலையைக் கேள் தருகிறேன். என்னை ராமரின் பிரிவால் வதைத்து விடாதே. ராமனை மட்டும் வைத்துக்கொள்.இல்லை என்றால் உனக்கு இந்த ஜன்மம் முழுவதும் மன வேதனையே.
நோய்  தீராத நோய் என்று அறிந்ததுமே , மிகவும் வேதனையான குரலில்  ராமா !ராமா!ரகுநாதா! என்று
சொல்லி தரையில் விழுந்துவிட்டார். 

raamacharitha manas ராமசரித மானஸ்-அயோத்யகாண்டம் --பதினொன்று

ராமசரித மானஸ்-அயோத்யகாண்டம் -பதினொன்று

       கைகேயி  தசரதரிடம் சொன்னாள்---உயிரன்பரே !
 என்  மனதிற்குப் பிடித்த முதல் வரம்  என் மகன் பரதனுக்கு ராஜாபிஷேகம் .
இரண்டாவது வரம்  கைகூப்பி கேட்கிறேன் ,
என் மன விருப்பத்தை பூர்த்தி செய்யுங்கள்.
தவசிகள் வேடத்தில் மிக வருத்தமான நிலையில் ராமன் பதினான்கு ஆண்டுகள் வரை காட்டில் வசிக்கவேண்டும்.
கைகேயியின் வரங்களைக் கேட்டு தசரதர் மிகவும் வருந்தினார். நிலவின் ஸ்பர்சத்தால்  சக்கரவாகுப் பறவை
ஆற்றலாற்றுப்  போனது போல் அவர் நடுங்கினார்.
கழுகு காடையின்மேல் பாய்ந்த நிலையானார்.
பனைமரத்தில்     இடி விழுந்தது  போல் ஆனார்.
எரிந்த நிலையில் கருத்தது போல் அவர் நிலைமாறியது.
  கவலையே உடல்வடிவில் வந்தது போல் தலையில் கைவைத்து  இருகண்களையும்   மூடி சிந்திக்கத் தொடங்கினார்.    அவர் நினைத்தார் --என் மன விருப்பம் என்ற கற்பகமரம் பூத்துவிட்டது ஆனால் காய்த்து  பழுக்கும் முன்   கைகேயி என்ற யானை அதை வேரோடு பிரித்து எரிந்து   விட்டது.
கைகேயி அயோத்தியாவையே பாழ்படுத்தி விட்டாள்.
அழிவுக்கு திடமான அஸ்திவாரம் போட்டுவிட்டாள்.
 பெண்ணை நம்பி  மோசம் போய்விட்டேன்.
யோகிக்கு பலன்  கிடைக்கும்  போது யோகியின் தவம்
கலைத்ததுபோல் ஆகிவிட்டது.
இவ்வாறு  அரசன் மனதிற்குள்ளேயே வருந்திக்கொண்டிருந்தார்.
அரசனின் இந்த நிலை கண்டு  தீய  அறிவுள்ள  கைகேயி  மனதில்  மிகவும்   கோபம்  அடைந்தாள்.
அவள்  கேட்டாள்---பரதன் தங்கள் மகன் இல்லையா ?
நீங்கள் என்னை விலை  கொடுத்தா  வாங்கிக்கொண்டு வந்தீர்கள்?  நான் உங்களை மணந்த  மனைவி இல்லையா?
என்னுடைய சொற்கள்  உங்களுக்கு   அம்பு போல் தோன்றினால் , நீங்கள் சிந்தித்து     பேசவில்லை. ?
முடியாது என்று சொல்லிவிடுங்கள். நீங்கள்  ரகு குலத்தில்
வாக்குத் தவறாமைக்கு புகழ் பெற்றவர்.
 நீங்கள் தான் வரம்  அளிக்கிறேன் என்றீர்கள் .
இப்பொழுது தர வேண்டாம். உண்மையை விட்டு விட்டு உலகில்    அவப்   பெயர்    பெறுங்கள்.
உண்மையைப்  புகழ்ந்து வரம் தருகிறேன் என்றீர்கள் .
ராஜ  சிபி ததிசி ,பலி போன்றவர்கள்   தன்  வாக்கு   மாறக்கூடாது  என்பதற்காக உடலையும் செல்வத்தையும்
தியாகம் செய்தனர். கைகேயி மிகவும் கசப்பான கடுமையான    வார்த்தைகளை  அள்ளி வீசினாள்.
 தர்மத்தின்  அச்சு   தசரதர்   தைரியத்தை உண்டாக்கி
கண்களைத் திறந்தார்.  பிறகு     பெருமூச்சு  விட்டு
என்  நிலையை  மிகவும்  மோசமாக்கிவிட்டாய். இனிமேல்
நான்  பிழைப்பது  கடினம் என்றார்.



ராமசரிதமானஸ் --அயோத்யாகாண்டம் -பக்கம்- பத்து

ராமசரிதமானஸ் --அயோத்யாகாண்டம் -பக்கம்-பத்து

     தசரதர்   தன் மனதில் கைகேயியை நல்ல மனம் படைத்தவள்  என்று  நினைத்து அன்புடன் ஆனந்தமாக
மென்மையான அழகான சொற்களுடன்  ,"பெண்ணே!
உன்மனம்  மகிழ்ந்துவிட்டது. நகரம் முழுவதும் ஆனந்தமாக வாத்தியங்கள் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
  நான் நாளையே ராமருக்கு யுவராஜ் பதவி கொடுக்கிறேன்.
ஆகையால் நல் விழியாளே! நீ மங்களப் பொருள்களை அலங்கரி.  இதைக்கேட்டதும்   அவளுடைய   கல்மனம் உடையத் தொடங்கியது.  பழுத்த வெயில் கொப்பளம்
உடைந்து விட்டது போல் இருக்கிறது.

   ஆனால் இப்படிப்பட்ட வலியையும் கைகேயி சிரித்து  சமாளித்தாள். திருடனின் மனைவி  வெளிப்படையாக
அழமாட்டாள்.
அரசர் அவளுடைய கபடத்தையும்  கெட்டிக்கார நடிப்பையும்
புரிந்துகொள்ளவில்லை.
காரணம் கோடி கொடுமைக்காரிகளின்  தலைமை குரு
கூனியின் சிஷ்யை. அவள் சொல்லிக்கொடுத்தபாடம்.

   அரசன் நீதியில் நிபுணராக இருந்தபோதிலும்  பெண்களின்
நடத்தை மற்றும் குணத்தின் ஆழத்தை அறிவது கடினம்.
அவள் கபடம் நிறைந்த அன்பை வெளியில் காட்டி கண்களையும் முகத்தையும் திருப்பி    சிரித்துக்கொண்டே
சொன்னாள்----- பிரிய நாதா!  நீங்கள் கேள் !கேள்! என்கிறீர்கள். ஆனால்    நீங்கள்  எப்பொழுதும் எதுவும் கொடுக்கல் -வாங்கல் கிடையாது.
நீங்கள் இரண்டுவாரம் கொடுப்பதாகச் சொன்னீர்கள் . அதே கிடைப்பது சந்தேகமாக உள்ளது.
நான் இப்பொழுதுதான் நீ சொல்வதை புரிந்துகொண்டேன்.
நீ அந்தவரங்களை  என்னிடம் சேமிப்பாக கொடுத்து வைத்துள்ளாய்.  நீ அவைகளைக் கேட்கவே இல்லை. என்னுடைய மறதியால்  அந்த  நிகழ்ச்சி  எனக்கு நினைவில் இல்லை.  என்னை பொய்யானவன் என்று குறைஇல்லாதே.
 இரண்டுக்கு பதிலாக நான்கு வரங்கள் கேள்.
உயிர் போனாலும் வாக்கு தவறக்கூடாது என்பதுதான்
ரகுகுல முறை  .
பொய்  சொல்வது போன்ற பாவங்களின் கூட்டம்  வேறெதுவும் இல்லை.
கோடி  குண்டுமணிகள்  சேர்ந்தாலும் மலையாக முடியுமா?
உண்மைதான் எல்லா உத்தம நற்செயல்களுக்கும் புண்ணியத்திற்கும்   ஆணி வேர்.
மனுநீதிப்படியும் வேதங்கள் -புராணங்களிலும் இப்படியே சொல்லப் பட்டிருக்கிறது.
மேலும் ராமனின் மீது ஆணையிட்டு நான் சொல்லி இருக்கிறேன். ராமர் எனது புண்ணியம். ராமர்  எனது அன்பின் எல்லை. இவ்வாறு தான் சொன்னதை தசரதர் உறுதிப்படுத்தினார். அப்பொழுது வேட்டைக்காரி  போல் தன்னுடைய வாக்கு என்ற வேட்டைப்பறவையை விட விரும்பினாள். 

Tuesday, April 4, 2017

ராமசரித மானஸ்ப---அயோத்யகாண்டம் ---பக்கம் ஒன்பது

     ராமசரித மானஸ்ப---அயோத்யகாண்டம்
                                                                                            ---பக்கம்  ஒன்பது

    மிகவும்   பலசாலியான இந்திரனையே
  பயமில்லாமல்  அரக்கர்களிடமிருந்து  காத்தவர்  தசரதர். அனைத்து அரசர்களும் அவரை எதிர்பார்த்துக்கொண்டிருப்பர்.
அதே அரசர்  தசரதர் இன்று மிகவும் பயந்துகொண்டே தன் அன்பு  ராணி கைகேயியிடம் சென்றார். இதுதான் காமதேவனின் பிரதாபம் . மகிமை.
திரிசூலம் ,ஈட்டி, கத்தி முதலியவற்றின் காயங்களை
சகித்துக்கொள்ளும் தசரதர், இன்று ரதிநாதர்,
காமதேவனின் பூக்களால் அடிக்கப்பட்டார்.
 கைகேயியின் நிலை கண்டு அவருக்கு மிகவும் வருத்தம் ஏற்பட்டது.
  கைகேயி தரையில் படுத்திருந்தாள். பழைய தடிமனான துணி அணிந்திருந்தாள்.  உடலில் அணிந்திருந்த நகைகளை எல்லாம் கழட்டி எரிந்திருந்தாள்.
அந்த துர்மதியாள் கைகேயியின் தோற்றம்  அந்த தீய வேஷத்தில் எப்படி அழகாகத் தோன்றும் ? அவள் தோற்றம் எதிர்காலத்தின் விதவைக்  கோலத்தின்  அறிவுப்பு கொடுத்துக்கொண்டிருந்ததுபோலவே காட்சியளித்தது.
அரசர் அவளிடம் மிக மெதுவாக பாசமுடன் கேட்டாள்--என்னுயிரைவிட   அன்பானவளே!
ஏன் கோவமாக இருக்கிறாய் ?
என்று அவள் உடலைத்  தொடும்போது  தட்டிவிட்டாள்.
கோவத்தில் சீரும் நாகம்போல்  கொடூரமான பார்வை வீசினாள்.
இரண்டு வரங்கள் அந்த நாகத்தின் நாக்குகள் போலவும் இரண்டு வரங்களை வைத்திருந்தது பல் போலவும் ,
இப்பொழுது கடிப்பதற்கேற்ற இடத்தைத் தேடுவதுபோலவும் இருந்தன.
 அரசர் தன்  சாதுர்யத்தால்  இதை காமதேவனின் விளையாட்டு என்றே அறிந்தார் என துளசிதாசர் சொல்கிறார்.
அவர் மிகவும் மென்மையான அன்பான குரலில் அடிக்கடி
கோவத்தின் காரணத்தைக் கேட்கிறார்.
அழகே!அழகுவிழி யே!குயில் போன்று இனிமையாக பேசுபவளே!  யானையைப்போல் மெதுவாக ஆடி அசைந்து
நடப்பவளே! கோவத்தின் உண்மையான காரணத்தை சொல் என்றார் .
 
 அன்பானவளே! உனக்கு யார் தீங்கு செய்தார்கள் ?
யாருக்கு இரண்டு தலைகள் உள்ளன?யமன் யாரைத் தன் உலகத்திற்கு அழைத்துச் செல்ல விரும்புகிறார்?
 நீ சொன்னால் ஏழையை  அரசன் ஆக்குவேன். அரசனை நாட்டை விட்டு வெளியேற்றுவேன் .
 உன்னுடைய விரோதி  தேவதையாக இருந்தாலும் சொல் ,
அவனைக் கொன்றுவிடுவேன். அப்பாவி மனிதர்களாக இருந்தால் புழு பூச்சி போன்று நசுக்கிவிடுவேன்.
அழகியே! உனக்கு நன்றாகத்தெரியும் ,என்னுடைய மனம் உன்னுடைய முகம் என்ற நிலவின் சக்கரவாஹப் பறவை.
அன்பானவளே!என்னுடைய நாட்டு மக்கள், குடும்பம் ,சர்வ சம்பத்துக்கள் மட்டுமல்ல என் உயிரும் உன் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. நான் உன்னிடம் எதுவும் கபடமோ ஏமாற்றமோ செய்யவில்லை . இது ராமன் மீது ஆணை.

   நீ சிரித்து உன் மனம் விரும்புவதைக் கேள்.   உன் அழகான அங்கங்களை நகைகளால் அலங்கரித்துக்கொள். மனதில் நல்லது கெட்டதை  சிந்தித்துப்பார். அன்பே! சீக்கிரம் இந்த  தீய வேஷத்தை மாற்றிக்கொள்,
 இதைக்கேட்டதும் துர்மதியாள்  கைகேயி சிரித்துக்கொண்டே எழுந்தாள்.  நகைகள் அணிந்து கொண்டாள். அவள் நடவடிக்கை வேட்டைக்காரி மானைப் பார்த்து வலை தயாரிப்பதுபோல் இருந்தது.
   

ராமசரிதமானஸ் --அயோத்யாகாண்டம் -பக்கம் எட்டு

ராமசரிதமானஸ் --அயோத்யாகாண்டம் -பக்கம்  எட்டு


            மிகவும் ஆனந்தமாக  நகரத்தின் எல்லா ஆண்களும் பெண்களும் நல்லொழுக்கமாக அனைத்தையும் அலங்கரித்துக்கொண்டிருந்தனர். அரண்மனை நுழைவாயிலில் கூட்டம் கூடியது. சிலர் உள்ளே சென்றனர். சிலவெளியே வந்தனர். அனைவரின் முகத்திலும் மட்டற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது.
  ராமரின் பால்ய சிநேகிதர்கள் ராஜதிலக செய்தி கேட்டு மகிழ்ச்சியுடன் ராமரை சந்திக்க வந்தனர்.
அவர்களின் அன்பை அறிந்து ராமர் அவர்களுக்கு தக்க மரியாதை செய்தார்.  மென்மையான குரலில் நலம் விசாரித்தார்.

தன் அன்புத்தோழன் ராமரின் அனுமதி பெற்று  ,
தங்களுக்குள் ராமரின் பெருமையை கூறிக்கொண்டே வீட்டிற்குத் திரும்பினர்.
இவ்வுலகில் ராமர் போல் ஒழுக்கமுள்ளவர்கள் .அன்பாகப் பழகுபவர்கள்  யாருமே இல்லை என்றனர்.
நாம் எவ்வகையில்  எத்தனை பிறவிகள் எடுத்தாலும்
நமக்கும் ராமருக்கும் இறக்கும் உறவு  நிலைத்து இருக்கவேண்டும்.
நகரத்தில் உள்ள அனைவரின் ஆசைகளும் அதே.
ஆனால் கைகேயி மனதில் எரிந்து கொண்டிருந்தாள்.
தீயவர்களின் சேர்க்கையால் ஒருவரும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. தாழ்ந்த புத்தி உள்ளவர்கள் சொல்படி நடந்தால்
அறிவு மழுங்கிவிடும்.
  மாலை நேரம் ராஜா தசரதர் கைகேயியின் மனைக்கு வந்தார்.  அவர்வருகை  அன்பே உருவெடுத்து
கொடுமையிடம் வந்ததுபோல் இருந்தது.

 கோப பவனம் என்ற பெயரைக்கேட்டதுமே ராஜா பயந்துவிட்டார். அச்சத்தால் அவர் கால்கள் நகரவில்லை. 

Monday, April 3, 2017

ராமசரித மானஸ்--அயோத்யா காண்டம் --பக்கம்-ஏழு

ராமசரித மானஸ்--அயோத்யா காண்டம் --பக்கம்-ஆறு

      கூனி  கைகேயியை பலிகடா ஆக்கிய பின்  தன்  கபடம் என்ற  கத்தியை மீண்டும் கூர்மை ஆக்கினாள்.
ராணி கைகேயி உடனே வரக்கூடிய கஷ்டங்களை சகிக்க தயாராக இல்லை.  மான்குட்டி பசுமையான   புல்லை அச்சமின்றி மேய்வதுபோல் தனக்கு வரும் ஆபத்தை  உணராததுபோல்  கைகேயியும் கூனியின் பேச்சில்
மயங்கி தன் விபத்தை உணரவில்லை.

 கூனியின் பேச்சுக்கள் ,  கேட்பதில் மென்மையானவை.
ஆனால் அதன்  விளைவுகள்  பயங்கரமானவை .
விஷம்  கலந்த  தேன்  போல்    அவளது கபட நாடகம்.
 கூனி சொன்னாள்---அம்மா! நீ எனக்கு ஒரு கதை சொன்னாய்.  நினைவு இருக்கிறதா ?

   உன்னுடைய இரண்டு வரங்கள் அரசரிடம்  சேமிப்பாக உள்ளது.  இன்று அந்த வரங்களைக்  கேட்டு  உன் என்னத்தை நிறைவேற்றிக்கொள்.  ஒருவரத்தால் மகனுக்கு பட்டாபிஷேகமும் , ஒருவரத்தால் ராமனுக்கு வனவாசம் கேள்.
சக்களத்தியின் எல்லா ஆனந்தத்தையும் நீயே அடைந்து கொள்.

   முதலில் ராமனின் மீது சத்தியம் வாங்கிய பின் வரங்களைக்  கேள். அப்பொழுதுதான் அவர் சொன்ன வாக்கை மீறமாட்டார் .  இன்று இரவுக்குள் முடிக்கவில்லை என்றால்
வேலை கெட்டுவிடும்.
நான் சொல்லுவதை உயிரைவிட மேலானதாகக் கருதவேண்டும்.
பாவி கூனி மேலும் சொன்னாள்--
 கோவமான பவனத்திற்கு செல்லுங்கள்.
எல்லா வேலையையும் மிகவும் எச்சரிக்கையுடன் செய்யவும்.
அரசரை உடனே  நம்ப வேண்டாம். அவர் சொல்வதைக் கேட்க வேண்டாம்.  ராணி கூனியை  உயிர் போன்ற பிரியமானவள் என்று நினைத்து அடிக்கடி  அவளை புகழ்ந்தாள்.
 உலகில் உன்னைப்போன்ற என்னுடைய நலம் விரும்பி யாரும் இல்லை. மூழ்குபவளுக்கு நீ உதவியாக வந்துள்ளாய்.

நாளை கடவுள் என்னுடைய மன விருப்பத்தைப் பூர்த்தி செய்தால்   உன்னை நான் என் கண்மணிபாப்பா ஆக்கிக்கொள்வேன்.
இவ்வாறு அடிமையை  புகழ்ந்து விட்டு கைகேயி  கோவபவனுக்குச் சென்றாள்.
கலஹம்  விதை. கூனி  மழைகாலம். கைகேயியின் தீய அறிவு
நிலமாகிவிட்டது. அதில் கபடம் என்ற  நீர் ஊற்றி ,
முளை கிளம்பிவிட்டது. இரண்டுவரங்கள்   அந்த முளை கிளம்புதலில்   இரண்டுவரங்கள் இரட்டை இலைகள்.முடிவில் இதில் துன்பம் என்ற பழம் உண்டாகும்.
 கைகேயி  கோபத்தின் எல்லா உருவமாகி  தூங்கினாள்.
அவளுக்கு ஆட்சி  துஷ்ட புத்தி யால் நஷ்டமாகி விட்டது.
அரண்மனையும் நகரமும் ஆடம்பரமாக இருந்தது.
இந்த தீய சூழ்ச்சியை யாரும் அறியவில்லை.

Sunday, April 2, 2017

ராமசரிதமானஸ் --அயோத்யாகாண்டம் --பக்கம் -ஆறு

ராமசரிதமானஸ் --அயோத்யாகாண்டம் --பக்கம் -ஆறு

  கைகேயி மந்தரையிடம் மீண்டும் சத்தியம் செய்து சொல்லும்படி கேட்க,  கூனி  என்ன கேட்கிறாய்?
மிருகங்களுக்குக் கூட தனது நல்லது  கேட்டது தெரியும்.உனக்கு இப்பொழுதும் புரியவில்லையா ?

    பதினைந்து நாட்கள் ஆகிவிட்டன. ஏற்பாடுகள் அலங்காரங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.
இன்று என்னால் தான் இந்த செய்தி உனக்குத் தெரிந்துள்ளது.
நான் உன்னுடைய ராஜ்யத்தில் உணவு உண்டு வளர்ந்துள்ளேன். உண்மை சொல்வதால் தவறு இல்லை.

நானாக கெடுப்பதற்காக ஏதாவது செய்தால் கடவுள் எனக்கு தண்டனை அளிப்பார்.  நாளை ராமனுக்கு ராஜதிலகம் நடந்துவிட்டால்  கடவுள் உனக்கு விபத்தின் விதையை விதைத்து விட்டார்.
 நான் கோடுபோட்டு  உறுதியாகச் சொல்கிறேன் --நீ இப்பொழுது பாலில் விழுந்த ஈ ஆகிவிட்டாய். பாலில் ஈ விழுந்தால் ஈயை எடுத்து எரிந்து விடுவார்கள்.
அப்படியே உன்னை விட்டிலிருந்து வெளியேற்றிவிடுவார்கள்.
நீ மகனுடன் வேலைக்காரி ஆகிவிட்டால் வீட்டில் இருக்க முடியுமா ?   வீட்டில் இருக்க வேறு வழி இல்லை. கத்ரு வினதாவிற்கு துன்பம் அளித்தாள். உனக்கு கௌசல்யா துன்பம் தருவாள். பரதன் சிறைக்குச் செல்வான். லக்ஷ்மணன்
ராமனுக்கு உதவியாளனாவான்.
கூனியின் கசப்பான விஷம் நிறைந்த வார்த்தைகளைக்கேட்டு  கைகேயி மிக பயந்துவிட்டாள்.
உடல் வியர்த்து நடுங்கியது. அப்பொழுது கூனிக்கு பயம் வந்து விட்டது. கைகேயி இதயத்துடிப்பு நின்றுவிட்டால் ?!
எதிர்மாறாக நடந்துவிடும்.
கூனி  கபடக்கதை களைக் கூறி கைகேயியை தைரியமாக இருக்கச்சொன்னாள்.
கைகேயிக்கு இந்த கூனியின் கபடநாடகம் பிடித்துவிட்டது.
அவள் கொக்கை அன்னமாக எண்ணி  அவளைப் புகழ்ந்தாள்.
மந்தரையே!நீ சொல்வது சத்தியமே.எனது இடதுகண் தினந்தோறும் துடிக்கிறது. நான் இரவும் பகலும் தீய கனவுகளைக் காண்கிறேன். ஆனால் என் அறியாமையால் உன்னிடம் சொல்லவில்லை. இன்றுவரை நான் யாருக்கும் கெடுதல் செய்யவில்லை. ஏன் எனக்கு கடவுள் சஹிக்கமுடியாத துன்பத்தைத் தருகிறார்?
நான் தாய்வீட்டில் சென்று வாழ்வேன். நான் உயிருள்ளவரை சக்களத்திக்கு அடிமை வேலை செய்யமாட்டேன். கடவுளே விரோதிக்கு அடிமை ஆக்கினால், அவர்களுக்கு வாழ்வதைவிட இறப்பதே மேல்.
என்று கைகேயி ப்லாம்பியதும் கூனி மீண்டும் கபட நாடகத்தைத் தொடர்ந்தாள்.
  நீ  ஏன்  வீணாகப் புலம்புகிறாய்.உன்னுடைய நலன்  அதிகமாகும். உனக்கு தீங்கு இழைத்தவர்களுக்கு தீங்கே உண்டாகும். நான் இந்த தீய்தைக்கேட்டதிளிருந்து  பகலில் பசியில்லை. இரவில் தூக்கம் வரவில்லை.
நான் ஜோதிடர்களிடம் கேட்டேன். அவர்கள் கணக்கிட்டு பரதன் தான் அரசன் ஆவான் என்று சொன்னார்கள். இது சத்தியம்.  நான் உனக்கு வழி சொல்கிறேன். ராஜா உன் பணிவிடையால் உன் வசத்தில் இருக்கிறார்.  கேள். என்று கூனி சொன்னாள்.
  கைகேயி சொன்னாள்--மந்தரை! நீ சொன்னால் நான் கிணற்றிலும் குதிப்பேன். மகனையும் கணவனையும் கூட விட்டுவிடுவேன். நீ என் துன்பத்தை அறிந்து அதிலிருந்து விடுபட  என் நன்மைக்காகச் சொன்னால், நான் கட்டாயம் செய்வேன்.