Friday, December 16, 2016

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் --பகுதி ஒன்பது.-9

ராமசரிதமானஸ்  --பாலகாண்டம் --பகுதி ஒன்பது.-9

    இறைவனின்  நான்கு வித  பக்தர்களுக்கும்
  இறைநாமமே   அனுக்ரஹத்திற்கு    ஆதாரமானது.
இந்த நான்கு   வகை   பக்தர்களில்
 ஞானமுள்ள  பக்தர்கள்  மீது  தான் இறைவனுக்கு
அன்பு  அதிகம்.
எந்தவித  ஆசையுமின்றி   ராம பக்தியில்
 ஈடுபட்டவர்கள் பக்தி ரசத்தில்  மூழ்குவர்.
இறையன்பு  என்ற அமிர்த   ஏரியில்   தன்
மனதை  மீனாக்கி வாழ்வார்கள். ஒரு நிமிடம் கூட
பிரிய   விரும்ப மாட்டார்கள்.

இறைவனின்  வடிவங்கள்  இரண்டு.
ஒன்று  உருவமற்றவை . மற்றொன்று  உருவமுள்ளவை.
இந்த  இரண்டுமே  வர்ணிக்க முடியாத,
ஆழமான, அநாதியானது ,அபூர்வமானது.
இந்த இருமுறையான  பக்தியில்  நாம ஜெபமே  மேலானது.
இந்த நாம ஜப  வலிமையால் துளசிதாசர்
இருவகை  பக்தியையும்
தன்  வசத்தில்  வைத்திருக்கிறார்.

நல்லவர்கள்  துளசிதாஸின்  இந்த   கூற்றை
அதிகப் பிரசங்கத் தனமாகவோ ,
காவ்யத்தின் ஒரு யுக்தியாகவோ
நினைக்கவேண்டாம்.
துளசிதாசர்  தன் நம்பிக்கையை, அன்பை,
தன் விருப்பத்தைக்  கூறுகிறார்.
நிர்குண ,சகுண பக்திகள்  இரண்டுமே அக்னிக்கு சமமானது.

நிர்குணம்  என்பது நீருபூத்த நெருப்பு போன்றது.
தென்படுவதில்லை.
சகுண  பக்தி எரியும் அக்னிபோன்றது .
வெளிப்படையாக  தெரிகிறது.
இரண்டு வித பக்தியும் ஒன்றே.
வெளிப்படும் தன்மையால்  வேறுபடுகிறது.
இரண்டுமே  அறிந்து கொள்வதில்   மிகக்  கடினமானது.
ஆனால்  நாம ஜபத்தால்  இருவித பக்தியும் எளிதாகிறது.
அதனால்  துளசிதாசர்  இறைவனின்  நாமத்தை
இருவித  பக்தியை  விட மிக  உயர்வானது என்றே கருதுகிறார்.
 (உருவமற்ற ,உருவமுள்ள)
இறைவன்  எல்லா  இடங்களிலும்  வியாபித்துள்ளார்.
இறைவன் ஒருவரே.
நிலையானவர்.
அதிகாரம், ஞானம் ,ஆனந்தம்  ஆகியவைகளின்
பரந்த  நிதியாக விளங்குகிறார்.

ஸ்ரீ ராம்சச்சந்திர மூர்த்தி  மனிதனாக  அவதரித்து
பலவித  கஷ்டங்களை  சஹித்துக்கொண்டு
சாதுக்களுக்கு   நன்மை  அளித்தார்.
ஆனால்  பக்தர்கள்  ,அன்புடன் பெயரை  ஜபித்து மிக
எளிதாக ஆனந்தத்தையும் நலத்தையும்  அடைகிறார்கள்.
 ஸ்ரீ ராமர்  நேரடியாக  கௌதமரின் மனைவி  அஹல்யாவைத்தான்
முக்தி  தந்தார். ஆனால் இறைவனின்  நாமம் கோடிக் கணக்கான
தீயவர்களின்  புத்தியைத் திருத்தியது.
ஸ்ரீ  ராமச்சந்திரன்  விஷ்வாமித்திர  முனிவரின்
நன்மைக்காக ஒரு சுகேது யக்ஷனின் மகள் தாடகையை
அவள்  குடும்பத்துடன்   வதம் செய்தார் ,
ஆனால்  பக்தர்களின்  குறைகளை, துன்பங்களை ,
 துராசைகளை சூரியன் இரவைப் போக்கி
  பிரகாசத்தைத்  தருவதுபோல்
  போக்குவது  நாம ஜபம்.
ஸ்ரீ ராமர்  தானே  சிவ தனுஷை முறித்தார்.
ஆனால் நாம மகிமை  உலகில் உள்ள அனைவரின்
அச்சத்தைப் போக்கி  ஆனந்தம் அளிக்கக்  கூடியது.

ஸ்ரீ ராமர்  தண்டகாரன்யத்தை மகிழ்வித்தார்.
ஆனால்  ராமநாமம்   எண்ணிக்கையில் அடங்கா,
மனங்களை  பவித்திரமாக்கும் திறன் கொண்டது.
ஸ்ரீ  ராமர்  அரக்கர்களின்  கூட்டத்தை ஒழித்தார்.
ஆனால்  ராமநாமம்  கலியுகத்தின்  பாவங்களைப்
போக்கக் கூடிய ஆற்றல் கொண்டது.
ஸ்ரீ ராமர் சபரி, ஜடாயு   போன்ற  உத்தம சேவகர்களுக்கு
முக்தி அளித்ததார். ஆனால்  அவர்  நாமம் எண்ணிக்கையில் அடங்கா
துஷ்டர்களை நல்லவர்களாக  உயர்த்தியது.
இறைவனின்  நாம  மகிமைக் கதைகள்  வேதங்களில் புகழ் பெற்றது.

  ராமர்  சுக்ரீவன், விபீஷணன்  இருவருக்குத்  தான்
  அடைக்கலம் கொடுத்து
தன்  அருகில்  வைத்துக்கொண்டார்.
இது அனைவரும்  அறிந்த ஒன்று.
ஆனால் நாம ஜபம் அநேக ஏழைகளை அருள் பாலித்துக் காக்கிறது.
வேதங்களில் சிறப்பாக  ராமநாமத்தின்  மகிமையை அழகாகச்
சித்தரிக்கப் பட்டுள்ளது. 
Post a Comment