Tuesday, February 21, 2017

ராமசரிதமானஸ பாலகாண்டம் -எண்பத்திமூன்று

   ராமசரிதமானஸ பாலகாண்டம் -எண்பத்திமூன்று


         ஜானவாசம் (மாப்பிள்ளை விட்டார் தங்குமிடம் )

இடத்தில் தேவலோகத்தில் கிடைக்கும் அனைத்தும் எளிதாகக் கிடைத்தன. இப்படிப்பட்ட ஐஸ்வர்யங்கள் எப்படி
வந்தன என்ற ரகசியத்தை யாரும் அறியமுடியவில்லை.
எல்லோரும் ஜனகரின் பெருமையையே பேசினார்கள்.
  ஸ்ரீ ராமச்சந்திரர் எல்லாமே சீதையின் செயல் என அறிந்து
சீதை  தன்மேல்  வைத்துள்ள  அன்பால்  மிகவும் மகிழ்ந்தார்.
தந்தை தசரதரின் வருகை அறிந்து இரண்டு சகோதரர்களின்
இதயத்தில் ஆனந்தம் பொங்கியது.
ஆனால்  தயக்கத்தின் காரணமாக ரிஷி விஸ்வாமித்திரரிடம்
எதுவும் கூறவில்லை. ஆனால் தந்தையைப் பார்க்கவேண்டும்
என்ற ஆசை மனதில் இருந்தது.
விஷ்வாமித்திரர் இருவரின் பணிவையும் அடக்கத்தையும் பார்த்து மிகவும் மகிழ்ந்தார். மகிழ்ந்து இரண்டு சகோதரர்களையும் அன்புடன் அணைத்துக்கொண்டார்.
அவருடைய உடல் ஆனந்தமடைந்தது . கண்களில் அன்புடன் கூடிய ஆனந்தக்கண்ணீர் பெருக்கெடுத்தது.
அவர் தசரதர் தங்கியிருந்த ஜானவாசத்திற்குச் சென்றார்.
அவர் சென்றது ஏறியே தாகம் எடுத்தவனிடம் சென்றதுபோல்
இருந்தது.
மகன்களுடன் ரிஷி விஷ்வாமித்திரர் வருவதைப் பார்த்து
தசரதர் மகிழ்ச்சியுடன் எழுந்தார். சுகம் என்ற சமுத்திரத்தின் ஆழத்தை அறியச் சென்றார்.


ராமசரிதமானஸ் --பாலகாண்டம் -எண்பத்திரண்டு

 அரசர் மணமகன் வீட்டார் மகிழ ,
தங்க கலசங்களில்  பால்,சர்பத்,குளிர்ந்தநீர் .
குளிர்பானங்கள் , அமிர்தத்திற்குச் சமமான எல்லாவித
பலகாரங்கள் ,பலவித அழகான பாத்திரங்களில் அனுப்பினார். உத்தமமான பழங்கள், பலவித பொருள்களை அன்பளிப்பாக அனுப்பினார்.
நகைகள், துணிகள், பலவித விலைஉயர்ந்த ரத்தினங்கள் ,
பலவித பறவைகள், மிருகங்கள், குதிரைகள், யானைகள் , பலவித சாவாரிகள் அனுப்பிவைத்தார்.

இவைகளைத்தவிர  பலவித வாசனைப் பொருட்கள் , மங்கள திரவங்கள் அனுப்பினார்.

தயிர் ,அவுல் , பலவித பரிசுகள் காவடியில் நிரப்பி
வேலையாட்கள் கொண்டுவந்தனர்.

வரவேற்பு குழுவினருக்கு , மணமகன் வீட்டார் ஊர்வலம்
தென்பட்டதும் மிகவும் மகிழ்ந்தனர். வரவேற்பாளர்களின்
அணிவகுப்பைக்கண்டு மணமகன் வீட்டார் மகிழ்ந்தனர்.முரசுகள் முழங்கின.

சிலர் பரஸ்பர சந்திப்புக்காக மிகவிரைவாக ஓடிவந்தனர்.
இரண்டு சமுத்திரங்கள் ஆனந்தமாக சந்தித்ததுபோல் இருந்தது.

தேவலோக அழகிகள் பூ மழைபொழிந்து  பாடிக்கொண்டிருந்தனர். தேவர்கள் மிக மகிழ்ந்து
முரசுகளை வாசித்தனர்.
வரவேற்புக்  குழுவினர் தாங்கள் கொண்டுவந்த பொருட்களை    தசரதருக்கு  முன்னால்  வைத்தனர். மிகவும் பணிவுடன் ஏற்றுக்கொள்ள வேண்டினர்.

அரசர் தசரதர் அன்புடன் அந்த பொருட்களை ஏற்றுக்கொண்டார்.  பிறகு அவர்களுக்கு அன்பளிப்புகள் அளித்தார். பிறகு யாசிப்பவர்களுக்கு
கொடுக்கப்பட்டது.
பிறகு பூஜை மரியாதையுடன் வரவேற்பாளர்கள் அவர்களை
திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர் .
அங்குள்ள பொருட்கள் கண்டு குபேரனே தான் தான் செல்வந்தன் என்ற கர்வத்தை விட்டுவிட்டார்.
மிக அழகான ஜானவாசம். எல்லோருக்கும் எல்லாவித வசதிகளுடன்.
சீதை  மணமகன் ஊர்வலம் ஜனகபுரிக்கு வந்தது தெரிந்ததும்
தன்னுடைய மகிமையைக் காட்டினார்.
 பிரார்த்தித்து  எல்லாவித சித்திகளையும் அழைத்து ,
அவர்களை ராஜா தசரதருக்கு விருந்து உபசார பணிவிடைகள்  செய்ய அனுப்பினார்.
சீதையின் கட்டளைபெற்றதும் , அனைத்து சித்திகளும்
மாப்பிள்ளை மற்றும் ஊர்வலத்தார்  உள்ள இடத்திற்குச் சென்றனர். அவர்கள் அனைத்துவித சம்பத்துக்களும்
இந்திரபுரியின் கேளிக்கை களையும் எடுத்துச்சென்றனர்.



Thursday, February 16, 2017

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் --எண்பத்தொன்று

        ராமசரிதமானஸ் --பாலகாண்டம் --எண்பத்தொன்று

          மணிகள் -மணி ஓசைகளை வர்ணிப்பது  இயலாது.
நடந்து செல்லும் சேவகர்கள்  உடற்பயிற்சி செய்துகொண்டே
வந்தனர் .  சிரிக்க வைப்பதில் சிறந்த  நிபுணர்களான  கோமாளிகள்  வித-விதமான வேடிக்கைகள்  காட்டிக்கொண்டிருந்தனர்.
அழகான அரசகுமாரர்கள்
மிருதங்கம் -முரசொலிகளுக்கு ஏற்ப  குதிரைய நடனமாடவைத்தனர் . தாளத்திற்கேற்றவாறு கால்கள் ஆடின. சிறந்த நட்டுவனார்கள் ஆச்சரியத்துடன் இந்த ஆட்டத்தைப்
பார்த்துக்கொண்டிருந்தனர்.
மணமகன் ஊர்வலம் வர்ணிக்கமுடியாது.
அழகான சுபம் தரும் சகுனங்கள் தென்பட்டன.
மயில் ஒருபக்கம் உணவு பொறுக்கிக் கொண்டிருந்தது.
சிலர் கீரிப்பில்லையையும் பார்த்தனர்.
மூன்றுவித காற்று( குளிர்ந்த ,மந்த,மணமுள்ள )
அனுகூலமான திசையில் இருந்து வந்துகொண்டிருந்தது.
பெண்கள் நிறைந்த பானைகள் மடியில் குழந்தைகளுடன்
வந்துகொண்டிருந்தனர்.
ஓநாய்கள் அடிக்கடி தென்பட்டன. பசுக்கள் தன் கன்று குட்டிகளுக்கு பாலூட்டிக்கொண்டிருந்தன.
மான் கூட்டம் இலதுபக்கம் சுற்றி வலது பக்கமாக வந்தது.
இவை எல்லாம் சுப சகுனங்கள்.
வெள்ளை கழுத்துள்ள பருந்து வட்டமிட்டு நல்ல சகுனத்தையும் , குயில் களும் இனிய இசை எழுப்பின .
 மங்களமான,நல்லது செய்யக்கூடிய, மனம் விரும்பிய பலன்கள்  தரக்கூடிய சகுனங்கள்  உண்மையான நிகழ்ச்சிகளுக்காக  ஒன்று சேர்ந்துள்ளன. பகவானே
புத்திரனாகப் பெற்றவர்களுக்கு சுப சகுனங்கள் எளிதுதான்.
ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி மணமகன் . சீதை மணமகள்.
ஜனகரும் தசரதரும்  புனித  சம்பந்திகள்.

 
  இப்படிப்பட்ட  திருமணம் கேட்டு சுப சகுனங்கள் எல்லாம் நடனமாடின. இவ்வாறு முரசுகள் முழங்க  ஊர்வலம் புறப்பட்டது .
  சூரிய வம்சத்தின் கொடிபோன்ற தசரதர் வருவதைப் பார்த்து  ஜனகர் நதியில் பாலம் கட்டினார்.
வழியில் தங்குவதற்கு அழகான கூடாரங்கள் அமைத்தார்.
அதில் தேவலோகம் போன்றே அனைத்தையும் ஏற்பாடு  செய்தார்.
அனைவருக்கும்  தங்கள் மன விரும்பியபடியான
உயர்ந்த சாப்பாடு, படுக்கை ,ஆடைகள் கிடைத்தன.
அங்கு மணமகன் வீட்டாருக்கு செய்த மரியாதையால்
அனைவரும் தன் தன் வீடுகளை மறந்துவிட்டனர்.
மிகவும் ஓசையுடன் அடித்த முரசொலி கேட்டு ,
மணமகன் ஊர்வலத்தை வரவேற்க யானை,குதிரை, தேர் ,
காலாட்படைகளின் அணிவகுப்பு நடந்தது.


Wednesday, February 15, 2017

ராமசரிதமானஸ் -பாலகாண்டம் -எண்பது

ராமசரிதமானஸ் -பாலகாண்டம் -எண்பது

     தசரத மகாரா மாப்பிள்ளை ஊர்வலம் அனைவரையும்

வியக்க வைத்தது. குதிரைகள், ரதங்கள், யானைகள் ஒவ்வொன்றும் மிக தெய்வீக அழகுபெற்று விளங்கின.

அழகான யானைகளின் மேல் அம்பாரிகள் இருந்தன,   ஆவணி மாத  மேகக்கூட்டங்கள்  செல்வதுபோல்
மணி ஓசைகளுடன் சென்றன.
அழகான பல்லாக்குகள், சுகமாக அமர இருக்கைகள்
இவைகளில் உயர்ந்த அந்தணர்கள் செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன . வேதங்களின் பாடல்களே வடிவம் எடுத்ததுபோல் இருந்தன.
பாடகர்கள், இசைப்பவர்கள் ,கவிகள் தங்கள் தகுதிக்கான சவாரியில் சென்றனர்.
பல இனத்தைச் சேர்ந்த கோவேறிக்கழுதைகள்,
ஒட்டகங்கள் ,காளைமாடுகள்  ஆகியவற்றில்
எண்ணிக்கையிலடங்கா பொருட்கள் ஏற்றப்பட்டிருந்தன.
வேலைக்காரர்கள் காவடிகளில் பல பொருள்கள் எடுத்துச் சென்றனர். எல்லோரும் தன் தன் சமூகத்துடன் சென்றனர்.
  எல்லோருடைய இதயத்திலும் அளவில்லா ஆனந்தம் .
எல்லோருக்கும் நீண்ட நாட்களாகாக் காணாத ராம-லக்ஷ்மன்னரை பார்க்கவேண்டும் என்ற ஆசை. பார்க்கப்பூகிறோம் என்ற மகிழ்ச்சியில் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது.
யானைகளின் பிளிறல்,அவைகள் கழுத்திலுள்ள மணிகளின் ஓசை ,நாலாபக்கங்களிலும் தேரோடும் கட-கட சத்தம் ,
குதிரைகளின் கனைப்பு ஒலிகள், முரசொலிகள் மிக ஆனந்தமாக இருந்தன. எங்குமே வேற்றுமை    காணவில்லை .
 மகாராஜா தசரதரின் வாயிலில் அதிகக் கூட்டம் .
அதில் கல் எறிந்தால் அது அறைக்கப்ப்ட்டுவிடும்.
மாடியில் ஏறிய பெண்கள் மங்கள தாம்பாளத்தில்  ஆரத்தி
எடுத்துக்கொண்டிருந்தனர்.
 பலவிதமான மனங்கவரும் பாடல்கள் பாடிக்கொண்டிருந்தனர்.
அப்பொழுது மந்திரிகள் இரண்டு தேர்கள் அலங்கரித்து
சூரியனின் குதிரைகளையே தோற்கடிக்கும்
குதிரைகளைப் பூட்டினர்.
இரண்டு தேர்களையும் அரசரிடம் கொண்டுவந்தனர். ஒரு தேரில் அரசாங்கப்போருட்கள் ஏற்றப்பட்டன.
அடுத்தது சக்தியின் உருப்பெற்று மிக அழகாக இருந்தது.
அந்த அழகான தேரில்  ராஜா குரு வசிஷ்டரை மகிழ்வுடன் அமரவைத்து சிவன்,பார்வதி, கணேஷ் ,குரு அனைவரையும்
நினைத்து வணங்கி தேரில் ஏறி அமர்ந்தார்.

வசிஷ்டருடன்  மகாராஜா அமர்ந்திருக்கும் அழகு தேவகுரு
ப்ரஹஸ்பதியுடன் இந்திரன் அமர்ந்திருந்ததுபோல் இருந்தது.
 வேதங்களின் முறைப்படி குழப் பழக்க வழக்கப்படி எல்லா காரியங்களும் செய்துவிட்டு , எல்லோரும் எல்லாவிதத்திலும்
அலங்கரித்து வருவதைப் பார்த்து ,
ஸ்ரீ ராமச்சந்திரரை ஸ்மரித்து  ,குருவின் அனுமதி பெற்று
பூமிபதி தசரதர் சங்கு முழங்கினார். அந்த மாப்பிள்ளை ஊர்வலம் பார்த்து தேவர்கள் மகிழ்ந்தனர்.
அழகான மங்களம் தரும் மலர்கள் எடுத்துத் தூவினர்.
 குதிரைகள் கனைத்தன. யானைகள் பிளிறின .
ஆகாயத்திலும் ஊர்வலத்திலும் இசைக்கருவிகள் வாசிக்கப்பட்டன,
தேவலோகத்துப்  பெண்களும் பூலோகப் பெண்களும் அழகான மங்களம் தரும் பாடல்கள் பாடினர். இனிமையான ரகத்தில்  சஹானாய் வாத்தியம் வாசிக்கத் தொடங்கினர்.

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் --எழுபத்தொன்பது


      ராமசரிதமானஸ் --பாலகாண்டம் --எழுபத்தொன்பது 

 அரசர் பரதனை அழைத்து , குதிரை ,யானை ,தேர் முதலியவைகளை அலங்கரிக்கும்படி கூறினார்.
 பரதன் மகிழ்ச்சியுடன் சென்று  குதிரை  லாயத்தின் தலைவரைக் கூப்பிட்டு  குதிரைகளை அலங்கரித்து
அழைத்துவர ஆணையிட்டான்.
பலவண்ணங்களில் உத்தமமான
 குதிரைகள் அழகாக காட்சி அளித்தன.
அனைத்துகுதிரைகளும்  மிகவும் அழகாகவும் ,
கம்பீரமாகவும் காட்சியளித்தன.
அவைகள் கால்கள் எரியும் இரும்பில்  மிதித்து
எழுவதுபோல் சஞ்சலமாக இருந்தன.
அவைகள் காற்றைவிட வேகமாக ஓடக்கூடியன.

அந்த குதிரைகளில் பரதனுக்கு ஒத்த வயதுடைய மிக அழகான அரசகுமாரர்கள் சவாரி செய்தனர்.
அவர்கள் கைகளில் பாணமும்வில்லும் இருந்தன.
இடுப்பில் மிகப்பெரிய
அம்பராத்தூண் கட்டப்பட்டிருந்தது.
எல்லோருமே தேர்ந்தெடுக்கப்பட்ட ,
மிக அழகான திறமைவாய்ந்த இளைஞர்கள் .
வீரனின் ஆடைகள் அணிந்து கொண்டு
போர்வீரர்கள்  காலாட்படைகள் ,
அனைவரும் அணிவகுத்து
நின்றனர்.
அனைவருமே வாட்போரில் நிபுணர்கள்.
அனைவரின் அணிவகுப்பும்
முரசுகளும் போர்முரசுகளும் ஒலித்தன.
தேரோட்டிக்கள் தேர்களை கோடி, தோரணம் ,பதாகைகள்
கொண்டு மிகவும்  லக்ஷணமாக அலங்கரித்திருந்தனர்.
அதில் அழகான சாமரங்களும் இருந்தன.
அதில் கட்டப்பட்டிருந்த மணிகள்
மிக இனிமையாக ஒலித்தன.
 
அந்த ரதங்களின் அழகு  சூரியதேவனின் ரத அழகை
பறித்துக்கொண்டதுபோல் இருந்தன.
அந்த தேர்களின் மிக அழகான
 கருப்பு நிறக் குதிரைகள்   பூட்டப்பட்டிருந்தன.
அந்த அலங்கரிக்கப்பட்ட தேர்கள்
முனிவர்களின் மனத்திலும்
ஆசைகளை உண்டாக்கின.




Tuesday, February 14, 2017

ராமசரித மானஸ்--பாலகாண்டம் --எழுபத்தெட்டு.

ராமசரித மானஸ்--பாலகாண்டம் --எழுபத்தெட்டு.
 
   அந்தப்புரத்துப் பெண்கள் ஜனகரின்
கடிதத்தைக் கையில் எடுத்து     மார்புடன் அணைத்து
தங்கள் மகிழ்ச்சியே வெளிப்படுத்தினர்.
அரசர்களில் மென்மையான தசரதர் ராம-லக்ஷ்மனர்களின்
புகழையும் செயல்களையும் அடிக்கடி வர்ணித்துக்கொண்டிருந்தார்.

 இதெல்லாம் விஷ்வாமித்திர முனிவரின் செயலே என்றனர்.

ராணிகள் அந்தணர்களை அழைத்து தானங்கள் கொடுத்தனர்.
அனைத்து அந்தணர்களும் ஆசிகள் வழங்கினர்.
பிறகு பிக்ஷுக்களை அழைத்து தானங்கள் வழங்கப்பட்டன.
"சக்கரவர்த்தித்  திருமகன்கள் நால்வரும் சிரஞ்சீவியாக இருக்கட்டும்" என வாழ்த்தி அழகான ஆடைகளை அணிந்து கொண்டு சென்றனர்.
ஆனந்தமாக பெரிய பெரிய முரசுகளை வாசித்தனர்.
எல்லோரும் இந்த செய்தியைக்கேட்டு தங்கள் வீடுகளை அலங்கரித்தனர்.
ராமரின் ஜன்மபூமி அயோத்யா அழகான நகரம்.
அன்பான நகரத்தில் அன்பு கூடியதால் மேலும் மெருகு கூடியது.
கொடிகள்,பதாகைகள்,திரைகள்,அழகான சாமரங்கள்
கடைத்தெருவில் அதிகமாகக் காணப்பட்டன.
தங்க கலசம், தோரணங்கள், மணிகள் கட்டிய அலங்காரத் திரைசீலைகள் ,மஞ்சள், துபங்கள் ,தயிர் ,அக்ஷதைகள் ,
மாலைகள் முதலியவைகளால்  வீடுகள் அலங்கரிக்கப்பட்டு
மங்களமயமாக்கப்பட்டன.
சந்தனம் , கஸ்தூரி,கேசர், கற்பூரம் கலந்த நான்கு ரசப்பொருளால்  தெருக்கள் மணந்தன.
    மின்னல் போன்று ஒளிமிக்க ,
 நிலவுமுகம் கொண்ட ,
மான்குட்டிகளின் விழிகள்  கொண்ட ,
தன்  அதிக அழகால்
மன்மதனின் மனைவியே நாணம்
 அடையும்படியான அழகு  மிக்க
சுமங்கலிகள் ஒன்று சேர்ந்து மங்களப் பாடல்கள் பாடினர்.

அரண்மனை அழகு உலகமே மோகிக்கும் அளவுக்கு இருந்தது.
அனேகவித அழகான மங்கலப் பொருட்கள்  அழகை
அதிகப்படுத்திக்கொண்டிருந்தன.
அநேக முரசுகள் முழங்கப்பட்டன.
பாட் பாடகர்கள் குலப்பெருமைக்கான பாடல்கள் பாடினர்.
அந்தணர்கள் வேதங்களை முழங்கினர்.
அழகான பெண்கள் ரமாருடைய சீதையினுடைய அழகையும்
குணத்தையும் புகழ்ந்து பாடினர்.
அங்கு நாலாபக்கங்களிலும்  ஆனந்தம் பெருக்கெடுத்தது.
  தேவர்களின் சிரோமணியான
 ராமர் அவதாரமெடுத்த
அந்த தசரதரின்  அரண்மனை அழகை
  வர்ணிக்க முடியுமா ?

ராமசரித மானஸ் --பாலகாண்டம் -பகுதி எழுபத்தேழு

 ராமசரித மானஸ் --பாலகாண்டம் -பகுதி  எழுபத்தேழு

               ஜனகரின் தூதர்கள் ஸ்ரீ ராமச்சந்திரரின் பவித்திர நகரமான   அயோத்தியாவை அடைந்தனர். அழகான நகரைப் பார்த்து மகிழ்ந்தனர். அரண்மனை நுழைவாயில் சென்று தாங்கள் வந்த செய்தியை அனுப்பினர், அரசர் கேட்டு உடனே அவரை அழைத்துவரச் சொன்னார்.
          தூதர்கள் வணங்கி கடிதத்தைக்  கொடுத்தனர்.
மகிழ்ச்சி அடைந்து அரசர் கடிதத்தைத் தாமே வாங்கினார்.
கடிதத்தைப் பிரிக்கும் போதே அவர்களில் அன்பும் ஆனந்தக்கண்ணீரும் பெருக்கெடுத்தன.
உடல் மகிழ்ந்தது.
 உள்ளம் மகிழ்ச்சியால் குதுகூலம் அடைந்தது.
இதயத்தில் ராமர் -லக்ஷ்மணர் இருவரும் .
கையில் அழகான கடிதம் ,  இனிப்பு -புளிப்பாக எதுவும் சொல்லமுடியவில்லை. பிறகு தைரியத்தை வரவழைத்து
தைரியமாக கடிதத்தைப் படித்தார். அந்த செய்தி கேட்டு அரசவையில் இருந்த அனைவரும் மகிழ்ச்சி ஆராவாரம் செய்தனர்.
கடிதம் மூலம் வந்த செய்தி அறிந்து  பரதனும். சத்துருக்கனனும்  மகிழ்ந்தனர்,
 விளையாடிக்கொண்டிருந்த பரதனும் லக்ஷ்மணரும்  அங்கே வந்தனர்.
 அப்பாவிடம் , "கடிதம் எங்கிருந்துவந்துள்ளது?இரண்டு சகோதரர்களும் நலமா ?எந்த நாட்டில் உள்ளனர்?
 இந்த அன்புநிறைந்த வினாக்களைக் கேட்டு
தசரதர் மீண்டும் ஒருமுறை கடிதத்தைப் படித்தார்.
   இதைக்கேட்டு பரதனின் அளவில்லா மகிழ்ச்சியால்

சபையே மிக ஆனந்தமடைந்தது .

  அரசர் ராஜதூதர்களை அருகில் அமரவைத்து ,
" சொல்லுங்கள் ! இரண்டு குழந்தைகளும் நலமா ?
நீங்கள் உங்கள் கண்களாலேயே பார்த்தீர்களா ?
அவர்களில் ஒருவர் கருப்பு , மற்றவர் சிவப்பு.
தனுஷும் வில்லும் கையில் வைத்திருப்பார்கள்.
அம்பராத்தூண் முதகில் இருக்கும்.
முனி விஷ்வாமித்தரருடன் சென்றனர்.
நீங்கள் அவர்களை அறிந்திருந்தால் சொல்லுங்கள்.
அவர்கள் சென்று நீண்ட நாட்களுக்குப் பிறகு
இன்றுதான்  நல்ல செய்தி கொண்டுவந்திருக்கிறீர்கள்.
மகாராஜா ஜனகருக்கு  அவர்களுடைய அறிமுகம் எப்படி ?
யாரால் நடந்தது. ?
ஜனகர் அவர்களிடம் எப்படி நடந்துகொள்கிறார்?

ஜனகரின் இந்த அன்பான விசாரணையால் ,
தூதர்கள் மகிழ்ந்து    , அரசர்களின்   மகுடமணியே! உங்களுடைய புத்திரர்கள் இருவரும் உலகின் ஆபூஷன்கள்.
ராம-லக்ஷ்மணனைப்போல  புத்திரர்களைப் பெற்றதால்,
நீங்கள் பாக்யவான் . உங்களுடைய பையன்கள் ஆண் சிங்கங்கள். மூவுலகிலும் பிரகாஷிப்பவர்கள்.
அவர்களின் புகழுக்கு முன் நிலவி
மங்கிகாணப் படுகிறது.
அவர்களின் திறமை ,மகிமைக்கு முன்னாள் சூரியன் குளிர்ந்து    தோன்றுகிறது .
அரசே !அவர்களை எப்படி அறிந்தீர்கள் ?
என்று வினவுகிறீர்கள்.
சூரியனை விளக்குவைத்தா பார்ப்பார்கள் ?
சீதையின்  சுயம் வரத்திற்கு அநேக அரசர்களும் ,
ஒருவரைவிட ஒருவர்  சிறந்த வீரர்களும் வந்திருந்தனர்.

ஆனால் யாராலும் சிவதனுஷை
நகற்றக்கூடமுடியவில்லை.
அதிக பலமுள்ள வீரர்களும் தோற்றுவிட்டனர்.
மூவுலகத்திலும் , வீரத்திற்குப் புகழ்பெற்ற அகங்காரிகளும் ,
சிவதனுஷின் சக்திக்கு முன் தோற்றுவிட்டனர்.

     சுமேரு மலையையே தூக்கும் சக்திகொண்ட ,
பானாசூரனும் தோற்று வில்லை சுற்றிவந்தான்.
விளையாட்டாக கைலாசத்தையே தூக்கிய ,
ராவணனும் தொல்வியடைந்துவிட்டான்.

ஆனால் மகாராஜா! தங்கள் ரகுவம்ச சிரோமணி ராமச்சந்திரன்  முயற்சியே இன்றி  ,
யானை தாமரைதண்டை முறிப்பதுபோல்
சிவனின் வில்லை
 முறித்தே விட்டான்.
வில்லை முறித்த செய்தி கேட்டு
பரசுராமர் அதிக கோபத்துடன் வந்தார்.
பல விதத்தில்  தன்  கோபத்தை வெளியிட்டார்.
இறுதியில் ராமரின் வலிமை அறிந்து தன்
வில்லையே ராமருக்கு அளித்துவிட்டார்.
 உங்கள் இரண்டு பாலகர்களையும்  பார்த்த பிறகு ,
பார்த்தவர்கள் கண்களை  இமைக்கவில்லை.

அன்பும் ,பெருமையும் வீரமும் உள்ள புதல்வர்களின்
 ஆற்றலைக்கேட்டு  எல்லோருக்கும்
 மிகவும்  மகிழ்ச்சியாக இருந்தது.
தூதர்களை அனுப்பும்  மரியாதைகண்டு
தூதர்கள்  இது நீதிக்குப் புறம்பானது.
என்ற தர்மமான பேச்சைக் கேட்டு
எல்லோரும் மகிழ்ந்தனர்.
 பின்னர் அரசர் வசிஷ்டரைப் பார்த்து
அந்த கடிதத்தைக் கொடுத்தார்.
மரியாதையுடன்  சொன்னார்
 எல்லா செய்தியும்  சொன்னார்.
எல்லா கதையையும் கேட்டு குரு சொன்னார் --"புண்ணியாத்மாக்களுக்கு
 பூமி சுகம் நிறைந்து காணப்படுகிறது.
நதிகள் சமுத்திரத்தை நோக்கி ஓடுகிறது.
ஆனால்  சமுத்திரத்திற்கு , நதியின் மேல் எந்த ஆசையும் இல்லை.
 அப்படியே   தர்மாத்மாக்களுக்கு  புகழும் செல்வமும்   இயற்கையாகத்  தானாகவே வந்துவிடும் .
 நீ எப்படி குரு , அந்தணர்கள், பசுக்கள் மற்றும் தேவதைகளுக்குச் சேவை  செய்கிறாயோ ,
அப்படியே கௌசல்யா தேவியும்   சேவை செய்கிறார்.

உன்னைப்போன்ற   புண்ணிய  ஆத்மாக்கள் இருந்ததில்லை ;
இப்பொழுது இல்லை , எதிர்காலத்திலும்  இருக்கமாட்டார்கள்.  ராமனைப் போன்ற மகனைப்பெற்ற புண்ணிய ஆத்மா தங்களைத்தவிர வேறு யார் இருக்கிறார்கள் ?
உங்களுடைய  நான்கு பாலகர்களும் வீரர்கள் ,
குண முள்ளவர்கள், பணிவானவர்கள் , தர்மத்தை விரதமாகக்
கொண்டவர்கள்,குணக்கடல். உனக்கு எல்லா காலங்களிலும்
நன்மை அளிப்பவர்கள். அதனால் இப்பொழுது மாப்பிள்ளை ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய். சீக்கிரமாகச் செல்.
 குருவின் வார்தகளைக்கேட்டு  வணங்கி அப்படியே ஆகட்டும் என்றார்.
  அந்தப்புரம் சென்று ராணிகளுக்கு ஜனகரின்  கடிதச்செய்தியை அரசர் சொன்னார் .
ராணி கள்   மயில்கள்  கருமேகம் கண்டு  ,
மேக கர்ஜனை  கேட்டு மகிழ்வதுபோல்  மகிழ்ந்தனர்.
வயனா பெண்கள் ஆசிகள் வழங்கினர்.